ஹாய் டியர்ஸ்… 😍😍 எல்லாரும் எப்படி இருக்கீங்க. நான் நலம். எல்லாரையும் ரொம்பவே மிஸ் பண்ணேன். ஐ ஆம் பேக் அப்டின்னு சொல்லி தினமும் யூடி போட முடியாது 🤭 ஒரு நாள் விட்டு ஒரு நாள் யூடி போடுறேன் drs…. 😍 தஷ்வா ❤️ பத்ரா
அத்தியாயம் 1
ஹைதராபாத்தின் மையப் பகுதியில் வீற்றிருந்தது, அந்த மாபெரும் நவீன பங்களா. நுழைவாயில் கதவில் இருந்து பங்களாவை நோக்கி செல்லும் வழி எங்கும், பல வண்ணங்கள் கொண்ட மலர் தோட்டம், நாசியில் ஒரு நறுமணத்தையும் இதத்தையும் பரப்ப தவறாது. ஒரு நொடி அதன் அழகை நின்று ரசித்து விட்டே, யாராகினும் அதனை கடக்க இயலும்.
ஆனால், அப்படி ரசித்து விட்டு, வீட்டு வாயிலுக்கு வரும் எவரும் அதிர்ச்சியில் விழி பிதுங்காமல் வெளியில் சென்றதில்லை. எல்லாம் அவ்வீட்டு தலைவனும், ஹைதராபாதின் பல இடங்களை தன் ரௌடிசத்தால் ஆட்சி செய்யும் ஹர்மேந்திரனின் கொலைவெறி செயல்களால் தான்.
அன்பும் பாசமும் நிறைந்திருப்பதை விட, நித்தம் பத்து பேரின் கை கால்கள் துண்டாக்கப்படும் பாவம் நிறைந்த வீடு அது. அவ்வப்பொழுது, கொலைகளும் பாரபட்சமின்றி நிகழ்வதுண்டு. ஐம்பதின் தொடக்கத்தை பிரதிபலிக்காத முரட்டு உடல்வாகு கொண்ட ஹர்மேந்திரனின் சாம்ராஜ்யம் அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை.
அதே போல இன்றும், ஹார்மேந்திரனின் வழியில் குறுக்கிட்ட ஒரு பத்திரிக்கை காரனின், கரங்கள் முறுக்கப்பட்டு, அரிவாளால் வெட்ட தயாராகிக் கொண்டிருந்தது.
“லேது ஐயா! தயசேஸி லேது ஐயா. நன்னு சமின்ச்சண்டி. லேது… லேது…” என அச்சத்தில் மன்னிப்பு கேட்டு, அரண்ட அந்த அப்பாவியின் குரல் சிறிதும் அவரைப் பாதிக்கவில்லை என்பது போல, கோபத்துடன் அவனது கைகளை துண்டாக்கினார் ஹர்மேந்திரன்.
“ஆ” வென்ற அலறல் எல்லாம் அவரின் அடியாட்களின் செவிகளுக்கு இதமாக இருந்தது போலும். அதனை அசட்டையாக ஒதுக்கியவர்கள், அவனை அப்புறப்படுத்த முயல, இவற்றை எல்லாம் மாடி அறையின் பால்கனியில் இருந்து சாவகாசமாக பார்த்திருந்து ஒரு ஜோடி விழிகள்.
பயம் என்ற உணர்வு சிறிதும் இல்லாத கண்கள். பயம் மட்டுமா… அதில் யாரைப் பற்றியும் கவலை இல்லை. நேசம் இல்லை. திமிரும், அகம்பாவமும் மட்டுமே வழிந்தோடியது. அவள் வளர்ந்த விதமும் அது தானே! அவள் வளர்ந்த விதமே, காலையில் அங்கு நிகழும் அரக்க சம்பவத்தை கூட, இயல்பாக கையில் இருக்கும் தேநீரை ரசித்து விழுங்கிய படி பார்க்க வைத்தது.
ஏன், அவளே கூட கல்லூரியில் தன்னுடன் பயிலும் சக மாணவனின் கையை முறித்து உடைத்து ரகளை செய்துள்ளாள். ஆனால், இது முதன்முறை இல்லை. எத்தனை முறை என்றாலும் கூட, கல்லூரி நிர்வாகத்தினால் அவள் மீது சிறு நடவடிக்கை கூட எடுக்க இயலாத நிலை. அதனால் பல்லைக்கடித்து பொறுத்து தான் போகவேண்டியது இருந்தது.
மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயிலும் பெண்ணவளின் கருங்கூந்தல் காற்றில் பறக்க, அதனை எடுத்து தோளில் பரவ விட்டவளின், அலைபேசி அழைத்தது.
அதனை எடுத்து சிவந்த செவியில் பொருத்தியவள், “செப்பண்டி” என்க,
எதிர்முனையில், அவளது தோழன் அமிஷ், லொக்கு லொக்குவென இருமினான்.
“ஏமி ஜரிகண்டி டா?” எனக் கேட்க, அவனோ பதில் கூறாமல் இருமலை தொடர்ந்தான்.
தெலுங்கில் கெட்ட வார்த்தைகளை அள்ளி வீசிய மஹாபத்ரா, மேலும் அதே மொழியில் தொடர்ந்தாள்.
“உன்ன தாண்டா கேட்குறேன். வாட் ஹேப்பண்ட்?” என மீண்டும் வினவ, “ஒரே இருமல் மஹூ. இன்னைக்கு பர்ஸ்ட் டே போஸ்டிங் வேற இருக்கு.” என்றவன் மூக்கை உறிஞ்சினான்.
“அதுக்கு நான் என்ன பண்ண?” நேரடியாக விஷயத்திற்கு வந்தவளின், பூ முகத்தை முன்னால் வெட்டப்பட்டிருந்த சிறு முடிகள் மறைக்க, அதனை காதோரம் சொருகியபடி, “போஸ்டிங் – அ கேன்சல் பண்ணிடுவோமா?” எனக் கேட்டாள் இயல்பாக.
அமிஷ் தான் விழி விரித்து, “முடியுமா மஹூ!” எனக் கத்தி விட,
“சோ, இன்னைக்கு நீயும் போஸ்டிங் போக கூடாது. நானும் போக கூடாது. அதான உன் பிளானு?” போனிலேயே முறைப்பைக் காட்ட,
மறுமுனை அமிஷின் நமுட்டு சிரிப்பு கேட்டது.
“அமி?” அதட்டலாக வந்த தோழியின் குரலில், “இன்னைக்கு ஃபர்ஸ்ட் இயர் ஸ்டூடண்ட் எல்லாரும் ஃபர்ஸ்ட் டே க்ளாஸ்க்கு வராங்க மஹூ. இன்னைக்கு காலேஜ் கலை கட்டி இருக்க வேணாம். இதுக்கு தான் சொன்னேன். மெடிசின் படிக்க வேணாம். எஞ்சினியரிங் போலாம்ன்னு நீ கேட்டா தான.” என புலம்பினான்.
“எஞ்சினியரிங் போனா, காலேஜ் கலை கட்டும்ன்னு உனக்கு யாருடா சொன்னது? சரி, இப்ப என்ன இன்னைக்கு ராக்கிங் பண்ணனும். அவ்ளோ தான பண்ணிடலாம்.” என்றவளின் விழிகள், கீழே கைகள் வெட்டப்பட்ட ஆடவனை இரத்தம் சிந்த அவளது ஆட்கள் இழுத்துக் கொண்டு செல்வதை இயல்புடன் வேடிக்கை பார்த்தது.
அமிஷிடம் பேசி விட்டு, கல்லூரிக்கு கிளம்பி வந்தவளை அத்தனை நேரம் இறுக்கத்துடன் இருந்த ஹர்மேந்திரன் புன்னகையுடன் ஏறிட்டார்.
“என்னமா கிளம்பியாச்சா?” என்றவரின் குரலில் அத்தனை இனிமை.
“ம்ம் நானா. கிளம்பிட்டேன். இன்னைக்கு என்ன காலைலயே ரொம்ப சூடா இருந்தீங்க போல.” எனக் கேட்டபடி, டைனிங் டேபிளில் அமர, அவரும் அவளின் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.
அதை விடுமா. “காலேஜ்ல என்ன பிரச்சனை? நான் நம்ம ஆளுங்களை விட்டு பாக்க சொல்லவா?” என்று கூர்மையாக பார்க்க,
“ப்ச். அப்போ நான் எதுக்கு இருக்கேன் நானா?” என்று முறைத்தவள், “என்கிட்ட ஒருத்தன் லவ் லெட்டர் குடுத்து ப்ரொபோஸ் பண்ணுனான். சோ கையை உடைச்சுட்டேன். அது கொஞ்சம் ப்ராப்லம் ஆகிடுச்சு அவ்ளோ தான். அதை நான் டீல் பண்ணிக்கிறேன் நானா, உங்க பொண்ணுக்கிட்ட எவனாவது நெருங்க முடியுமா? அதுலையும் லவ்வு மண்ணாங்கட்டின்னு எவனாவது என் பக்கத்துல தான் வர முடியுமா?” எனக் கண் சிமிட்டிட, வாய் விட்டு சிரித்தார் மகளின் பேச்சில்.
“அதுவும் சரி தான் மஹாம்மா. நீ தான் என் குட்டி ரௌடி பொண்ணு ஆச்சே. உன் நானா பாக்குற பையனை தான கல்யாணம் பண்ணிப்ப.” என பிட்டை போட, அவரை பார்த்து வாய் விட்டு சிரித்தாள் இளையவள்.
“ஆனாலும் உங்களுக்கு குசும்பு நானா. லவ் பண்ண மாட்டேன்னு சொன்னேன். அதுக்காக நீங்க பாக்குற மாப்பிளையை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னேனா. ப்ச். எனக்கு இந்த கமிட்மென்ட்லலாம் சுத்தமா இன்டரஸ்ட் இல்ல. இப்ப லிவ் இன் ரிலேஷன்ஷிப் பிளா பிளான்னு உலகம் எங்கயோ போயிட்டு இருக்கு நானா!” என்றபடி உணவை உண்டவளிடம், மேலும் பேசும் முன், அவர்களின் பேச்சு வார்த்தையை கலைத்தது மற்றொரு குரல்.
“ரொம்ப நல்லா இருக்கு அப்பாவும் மகளும் பேசிக்கிறது.” என சலித்தபடி அவர்கள் எதிரில் அமர்ந்தார் ஹர்மேந்திரனின் என்றும் நம்பிக்கைக்குரிய நண்பரும், அவரது இடது கையுமான கேசவன்.
“ஹாய் அங்கிள். என்ன இன்னைக்கு லேட்?” எனக் கேட்டபடி எழுந்தவள், நேரத்தை பார்த்தபடி “டைம் ஆச்சு அங்கிள். சீ யூ!” என அங்கிருந்து செல்ல, அவளை தான் யோசனையுடன் பார்த்தார் கேசவன்.
“என்ன கேசவா இப்ப தான் புதுசா பாக்குற மாதிரி பாக்குற என் பொண்ணை” எனப் பெருமையுடன் அவள் சென்ற திசையை நோக்க, “அவளை கொஞ்சம் நல்லா வளத்துருக்கலாம் ஹர்மா!” என்றார் நேரடியாக.
இதையே வேறு யாரேனும் கூறி இருந்தால், அங்கு கொலை நிச்சயம். ஆனால், அவரது கண்டிப்பிற்கும், அன்பிற்கும் ஏனோ இரு முரட்டு உள்ளங்களும் அடங்கி தான் போகும்.
ஹர்மேந்திரனின் முறைப்பில், “பின்ன என்னடா. நம்ம தான் அடிதடி கொலைன்னு வாழ்க்கையை நிலையில்லாம ஓட்டிட்டு இருக்கோம். அவள் பிறந்ததுக்கு அப்பறமாவது கொஞ்சம் எல்லாத்தையும் விட்டிருக்கலாம். ஆனா அவள் நம்மளை பார்த்து பார்த்து, வாழ்க்கையை பத்தின எந்த கவலையும் இல்லாம, தான் தோன்றி தனமா இருக்கா.
நினைச்சா காலேஜ் போறா. இல்லன்னா, அதுவும் இல்ல. யார் என்னன்னு பார்க்காம, நம்ம பண்ற ரௌடிசத்த அவளும் குறையாம பண்றா. இப்போ என்னனா, லிவ் இன் அது இதுன்னு என்னென்னமோ பேசுறா. அவள் வாழ்க்கை என்னாகும்ன்ற பயம் அவளுக்கும் இல்ல உனக்கும் இல்ல ஹர்மா.” என்றார் சற்று கண்டிப்புடன்.
“அவளுக்கு தெரியும் எது சரி எது தப்புன்னு. நீ ரொம்ப அலட்டிக்காத கேசவா.” என தன் மகளின் மேல் கொண்ட கர்வத்தில் புன்னகைத்தார்.
“ஹாஸ்டல் வசதியா இருக்கா தம்பி?” மகனை விட்டுப் பிரிந்த துயரத்தில் கேட்டார் சகுந்தலா.
“வசதியா இருந்தா அதுக்கு பேர் ஹாஸ்டலே இல்லம்மா.” எனக் குறும்பு மின்ன கூறிய தஷ்வந்தின் கூற்றில் கடுப்பானார்.
“உனக்கு என் கவலை காமெடியா இருக்கா தஷு? சென்னைல இல்லாத மெடிக்கல் காலேஜா. அவ்ளோ தூரம் படிக்க போகணுமா என்ன…?” தாய்க்கு உண்டான பரிதவிப்பில் கேட்க, தஷ்வந்தோ கன்னக்குழி ஆழம் பதிய அழகாய் புன்னகைத்தான்.
“நான் என்ன சின்ன பையனாம்மா.” எனக் கேட்டு முடிக்கும் முன்னே, “எனக்கு இன்னும் நீ குழந்தை தான்” என்றார் சிணுங்களாக.
அதற்குள், அவனது தமக்கை மஞ்சுளா, அவரிடம் இருந்து போனை பிடுங்கி, “குழந்தையாம்ல குழந்தை. விட்டா செரலாக் குடுப்பீங்க போல.”
என திட்டிக் கொண்டே, “என்னங்க சார் ஹைதராபாத் ஃபிகர்ஸ்லாம் எப்படி இருக்கு” எனக் கேட்டாள் கிண்டலாக.
“நீ அடங்கவே மாட்ட. நான் இங்க சைட் அடிக்க வரல. படிக்க வந்துருக்கேன்” என்றான் கடமையே கண்ணாக.
தலையில் அடித்துக் கொண்ட மஞ்சு, “காலேஜ்ல சேரும் போது சாமியார் மாதிரி பேசுவீங்கடா. அதே காலேஜ் முடிச்சு வெளிய வரும்போது கமிட் ஆகி வருவீங்க. எனக்கு தெரியாதாடா தம்பூ!” என்றதில்,
“என்னை என்ன உன்ன மாதிரி நினைச்சியா மஞ்சு” என்று வாரினான் இளையவன்.
அதில் சட்டென சிவந்தாள். அடிக்குரலில் “டேய். அப்பாவும் பக்கத்துல தான் இருக்காங்க வாய மூடு.” என்றவள், சில நாட்களுக்கு முன்பு தான் காதலில் விழுந்திருந்தாள். காதலுக்கு எப்போதும் போர்க்கொடி தூக்கும் அவர்களது தந்தை கதிரேசனுக்கு இன்னும் இவ்விஷயம் தெரியாது. தெரிந்தால், நிச்சயம் அங்கு ஒரு பூகம்பம் வெடிக்கும்! என அவளது சிந்தை தந்தையை சுற்றி பயணிக்க,
தஷ்வந்த் தான், “ஹெலோ மேடம். என்ன மாம்ஸ் கூட கனவு காண போய்ட்டீங்களா?” என்று வாரியதில், நிகழ்வு உணர்ந்தவள், “பயமா இருக்குடா தஷு” என்றாள் மீண்டும் அடிக்குரலில்.
“அதெல்லாம் லவ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும் மஞ்சு. அப்பா பத்தி தெரிஞ்சும் மாம்ஸ்க்கு ஓகே சொன்னது உன் தப்பு”
என்றவனின் கூற்றில், “மகனே… ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீயும் இதே மாதிரி வந்து நிப்படா” என சாபம் கொடுக்க,
மென்னிதழ்களை பிரித்து முறுவலித்த தஷ்வந்த், “சே சே வாய்ப்பே இல்ல. நான்லாம் ப்யூர்லி அரேஞ்ச் மேரேஜ் தான் பண்ணுவேனாக்கும்” என்றான் உறுதியாக.
அதற்கு அவள் பதில் பேசும் முன், அவளிடம் இருந்து போனை பறித்த கதிரேசன், “அக்காவும் தம்பியும் எங்க காதுல விழுகாத அளவு அப்படி என்ன ரகசியம் பேசுறீங்க?” என போலியாய் கடிந்தவாறே, மகனிடம் நலம் விசாரிக்க, மேலும் மூவரிடமும் பேச்சு வார்த்தையை முடித்து அழைப்பை துண்டித்தான் தஷ்வந்த்.
தினமும், அக்காவிடமும் அம்மாவிடமும் வம்பு வளர்த்து பழக்கப்பட்டவன். இப்போதோ தனியாக பாஷை தெரியாத ஊரில் படிக்க வந்திருப்பதில் மனம் சுணங்கியது. ஆனால், இக்கல்லூரியில் படிப்பது அவனது வாழ்நாள் லட்சியம் ஆகிற்றே. கடினப்பட்டு படித்து, நினைத்ததை சாதித்தும் விட்டான். இப்போது, சிறந்த மருத்துவராகும் இலட்சியத்தை நோக்கி, அவன் காலெடுத்து வைக்க, இலட்சியமாவது மண்ணாவது என அதனை ஊதி தள்ளியபடி, கல்லூரிக்கு வந்து சேர்ந்தாள் மஹாபத்ரா.
நிர்வாகம் விதித்திருக்கும் விதிமுறைகள் ஒன்றை கூட சட்டை செய்யாதவள். இவள் மருத்துவம் படித்து, என்ன சாதிக்க போகிறாள் என அங்கிருக்கும் அத்தனை பேராசிரியர்களையும் ஒரு நொடி எண்ண வைத்து விடுவாள். அதனை அவளிடம் கூறி, பகையை வளர்த்துக் கொள்ள யாரும் விரும்பவில்லை. அக்கல்லூரியின் ஒரு பார்ட்னர் அவளது தந்தை ஹர்மேந்திரனும் தான் என்பதாலோ என்னவோ, இங்கிருக்கும் எந்த விதிமுறைகளும் தனக்கு அல்ல என்பது போன்றே வலம் வருவாள்.
ஹைதராபாதில் அமைந்திருக்கும் ஷாலிபண்டாவில் வீற்றிருந்தது அந்த புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரி.
முதல் வருடத்திற்கான வகுப்புகள் அன்றிலிருந்து தொடங்க, நிறைய புதுமுகங்களை கல்லூரி ஏற்றது.
அப்புதுமுகங்களை கலங்கடிக்கவென்றே, ராக்கிங் செய்யத் தயாராகினர் சீனியர் மாணவ மாணவியர்கள்.
ராக்கிங் செய்பவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு என்று கல்லூரி நிர்வாகம் கடும் கட்டளை விதிக்க, அதில் மற்ற வகுப்பு மாணவர்கள் பின் வாங்கினாலும், இரண்டாம் வகுப்பு மாணவர்கள் துளியும் அசரவில்லை.
‘தண்டனையை தக்காளி ரசமா குடிச்சுப்போம்’ என எகத்தாளம் புரிந்தவர்களுக்கு தைரியம் அவள் ஒருவளே!
அப்படி தான் அன்று, அவளின் தோழன் அமிஷிற்காக க்ளினிகல் போஸ்டிங்கை கட் அடித்து விட்டு, காலையிலேயே கல்லூரிக்கு வந்து நண்பர்கள் செய்யும் ராக்கிங்கில் கலந்து கொண்டாள். அவர்கள் குழுவில் மொத்தம் எட்டு பேர் இருந்தும், அமிஷ், ஆஷா தவிர வேறு யாரும் நெருக்கம் கிடையாது அவளுக்கு. இருவருமே பள்ளி பருவம் முதல் அவளுக்கு நண்பர்கள் ஆனதால், மஹா சொல்வது தான் அவர்களுக்கு வேதவாக்கு.
அமிஷும், வரும் முதல் வருட ஜுனியர் பெண்களை ஆர்வத்துடன் வரவழைத்து, அவர்களை சைட் அடித்தபடி, ஆளுக்கொரு டாஸ்க் கொடுக்க, அப்படி அவனிடம் சிக்கியவள் தான், மந்த்ரா.
நடுங்கும் கைகளை இறுக்கி மூடியபடி, விழிகளில் அப்பட்டமான பயத்தை ஏந்தியபடி வந்தவளையும் அவர்கள் விடவில்லை.
“வாட் இஸ் யுவர் நேம்?” என அவளை மேலும் கீழும் பார்த்தபடி அமிஷ் விசாரிக்க,
எச்சிலை பயத்தில் விழுங்கியபடி, “ம…மந்த்ரா.” என்றவள் அடுத்த கேள்வி கேட்டால் நிச்சயம் அழுது விடுவாள்.
“ஹேய். நான் உங்கிட்ட பேர் தான கேட்டேன். ஏதோ கிஸ் கேட்ட மாதிரி முழிக்கிற?” அமிஷ் நக்கலாக தெலுங்கில் கேட்க, அவளுக்கோ கண்ணில் நீரே வந்து விட்டது.
அவள் கண்ணீரைக் கண்டு எரிச்சலான மஹா தான், “ஏய்… கிளம்பு! காலைலயே இரிடேட் பண்ணிக்கிட்டு.” என்று கிளப்பி விட, வேகமாக மண்டையை ஆட்டியவள், வகுப்பு நோக்கி செல்லப் போக, அவளை மஹா தடுத்தாள்.
“எங்க போற?” அழுத்தமாக அவள் கேட்டதில், “கிளாசுக்கு தான் சீனியர்.” என்றிட,
“நான் உன்னை வீட்டுக்கு கிளம்ப சொன்னேன். நாளைக்கு வரும் போது அழுகாம வா. உன்னை ராக்கிங் பண்ணிட்டு கிளாசுக்கு விடுறோம்” என சாவகாசமாக கூறிட, அவளோ அதிர்ந்தாள்.
அமிஷ் தான், ‘அப்பாடா நான் கூட இவள் திருந்திட்டாளோன்னு நினைச்சேன். அப்போ நாளைக்கும் மந்து கூட பேசலாம்.’ என ஜொள்ளு விட ஆரம்பிக்க, அவனது எண்ணத்தை புரிந்த மஹா தான், காரி துப்பாத குறையாக முறைத்தாள்.
“ப்ளீஸ் அக்கா. நான் கிளாசுக்கு போகணும்.” என அவள் கெஞ்ச, “அப்போ அழுகையை நிப்பாட்டிட்டு, குடுக்குற டாஸ்கை பண்ணிட்டு போ!” என்று அமிஷ் தோளைக் குலுக்கி கூற, வேகமாக கண்ணீரைத் துடைத்தவள், “என் என்ன பண்ணனும்.” என்றாள்.
“குட்.” என்ற அமிஷ், ஏதோ யோசித்து ரொமான்டிக் ஆக கூற வரும்போதே, ஆஷா, “நீ ரட்சகன் படம் பார்த்து இருக்கியா?” எனக் கேட்க, “ம்ம்” என தலையை உருட்டினாள்.
“ஹா… அப்போ அதுல ஹீரோ ஹீரோயின தூக்குற மாதிரி நீ இவனை தூக்கு” என்று அமிஷை கண் காட்ட, அவளுக்கு விழி பிதுங்கி விட்டது.
ஓரளவு வளர்த்தியாக இருக்கும் மந்த்ராவே நிமிர்ந்து பார்த்து தான் பேச முடியும் என்ற அளவு வளர்ந்தவன். ‘இவனை தூக்குனா வெயிட் தாங்காம நான் செத்துருவேன்.’ என வாய்க்குள் முணுமுணுத்தவள், “நான் வீட்டுக்கே போறேன்” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
அவள் தன்னை தூக்குவதற்கு பதிலாக அவளை தூக்கினால் எப்படி இருக்கும் என்ற கனவில் அவளுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தவன், ஆஷாவிடம் கிசுகிசுப்பாக, “ஏண்டி, நான் வேணும்ன்னா அவளை தூக்கி டாஸ்கை கம்ப்ளீட் பண்ணவா?” என்றான் ஆர்வமாக.
“ஒரு டேஷும் வேணாம். மூடிட்டு இரு.” என்றவளை முறைத்தவன் இப்போது மஹாவைப் பார்க்க, அவளோ சிரிப்பை அடக்கிக் கொண்டு, “நீ மட்டும் ஜுனியர் ஃபிகர்ஸ்ஸை சைட் அடிப்ப. நாங்க மட்டும் உனக்கு தேவுடு காக்கணுமா டாக். இனிமே அவள் உன்னை பார்த்தாலே பயந்து ஓடிடுவா.” என்றாள் கேலியாக.
“அடிப்பாவிங்களா! நான் உங்களை சைட் அடிக்க வேணாம்ன்னா சொன்னேன். நீங்க வேணும்ன்னா சீனியர்ஸை சைட் அடிங்க. அதை விட்டுட்டு என் வாழ்க்கைல ஏண்டி விளையாடுறீங்க?” என நொந்தவன், “கம் ஆன், லிஃப்ட் மீ.” என இரு கையையும் மேலே தூக்கிட, அவளோ மிரண்டாள்.
“இல்ல இல்ல. நான் வீட்டுக்கு போறேன். ப்ளீஸ் என்னால இவரை தூக்கவே முடியாது.” என்று அழத் தொடங்கியவளை, ஆஷா தான் சாக்லேட் கொடுத்து சமன் செய்ய வேண்டியதாக போயிற்று.
ஆனாலும், அவனைத் தூக்கும் டாஸ்கை மட்டும் பெண்கள் இருவரும் விடாமல் இருக்க, அவனை தூக்கி டாஸ்கை நிறைவு செய்யும் வரை, காலையில் இரு முறை கல்லூரி வளாகத்தை சுற்றி நடக்க வேண்டும் என்றும், அதனை வீடியோ எடுத்து தினமும் அவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தீர்மானமானது.
மந்த்ராவோ அதற்கும் அதிர்ந்தாள். ஒரு முறை கல்லூரி வளாகத்தினுள் சுற்றி வரவே, மதியம் ஆகி விடும். இதில் இருமுறையா? என நொந்தவள், அவனை தூக்குவதற்கு இதுவே பரவாயில்லை என்று எண்ணி, உடனே ஒப்புக்கொண்டு அங்கிருந்து ஓடியே விட்டாள்.
‘ஒரு பொண்ணுக்கிட்டயாவது ரொமான்ஸ் பண்ண விடுதுங்களா?’ என்ற ரீதியில் அமிஷ் கடியாகி இருக்க, அந்நேரம் அங்கு வந்து சேர்ந்தான் தஷ்வந்த்.
முதல் வருடத்தின் முதல் நாள் நன்றாக அமைய வேண்டும் என அனைத்து கடவுள்களின் மீதும் பாரத்தைப் போட்டபடி நடந்து வந்தவனின் அகன்ற நெற்றி நடுவில் திருநீறு கோடாக பதிந்திருக்க, சட்டையை டக் – இன் செய்திருந்தான்.
முகத்தில் அப்பாவித்தனம் நிரம்பி வழிந்தாலும், மற்றவர்களை வார்த்தையால் கூட காயப்படுத்த எண்ணாத சாதுவானவன்.
உள்ளே வந்த முதல் வருட மாணவர்களை எல்லாம் மஹாபத்ராவின் குழு கலங்கடிக்க, அவனையும் தெலுங்கில் அழைத்தான் அமிஷ்.
தெலுங்கு புரியாத காரணத்தால் யாரையோ அழைக்கிறார்கள் என்றெண்ணியவன், கண்டுகொள்ளாதது போல நடக்க, அமிஷோ மஹாபத்ராவிடம் ஏதோ ஓதினான்.
அடர் கூந்தலை யூ கட் செய்து, போனி டெய்லில் அடக்கி இருந்த பெண்ணவள் அணிந்திருந்த செக்ட் ஷர்ட்டும், ஜீன்சும் அவள் மேனிக்கு பாந்தமாக பொருந்திருந்தது.
புல்லட்டின் மீது அமர்ந்திருந்தவள், கையை சொடுக்கெடுத்தவாறு, “ஹே மனிசி இக்கடிக்கி ரா” (ஹே மேன் கம் ஹியர்) என்று தஷ்வந்தை அழைத்தாள்.
அப்போதும் புரியாதவனாய் பின்னால் திரும்பி பார்த்து, ‘யாரோ மானிசின்னு ஒரு பொண்ணை கூப்புடுறாங்க போல’ என எண்ணிக் கொண்டு அவளைத் தாண்டி செல்ல விழைய,
அவன் முன் அடிப்பது போல நின்றவள், “நூவு அஹங்காரிவா?” ( உனக்கு என்ன திமிரா?) என்றாள் ஒரு புருவத்தை உயர்த்தி.
“ஐயோ இது தெலுங்கா, ஹிந்தியான்னு கூட தெரியலையே” என வாய்க்குள் முணுமுணுத்தவன், “யூ கால்ட் மீ?’ எனக் கேட்டான்.
அவன் பேசியது அவளுக்கும் கேட்டதில், “நீ தமிழா?” என்றாள் மேலும் கீழும் ஆராய்ந்தபடி.
ஒரு பெண் தமிழ் பேசியதில் முகம் மலர்ந்தவன், “அட நீங்களும் தமிழாங்க. நான் தஷ்வந்த். சென்னைல இருந்து வந்துருக்கேன்.” என்று கன்னத்தில் குழி விழுக புன்னகைத்தான்.
இப்போது பாவையின் இரு புருவங்களும் வில்லாக வளைந்திட, “எக்ஸ்பிரஸ்ஸிவ் ஃபேஸ்…!” என்று அவள் இதழ்கள் முனகியது.
“என்னது?” என அவன் புரியாமல் பார்க்க, “ம்ம்… அகத்தின் அழகு முகத்தில தெரியுதுன்னு சொன்னேன்” என அழுத்தமாக கூற,
“வாவ், உங்களுக்கு பழமொழி பேசுற அளவு தமிழ் தெரியுமா?” என்றான் வியந்து.
“ப்ச்… கற்கால தமிழ் பேசுற அளவுக்கு தெரியும் மேன். அதை விடு. சீனியர்ஸ் கூப்பிட்டா கண்டுக்காம போற. என்ன கொழுப்பா?” என இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
அவள் மிரட்டலில் தஷ்வந்த் விழித்தபடி நிற்க, அவளது தோழமைகள் அவனை கடுமையாக ராக்கிங் செய்யும்படி வற்புறுத்தினர்.
அவன் விழித்த விதத்தை தன் லேசர் கண்களில் படம் பிடித்தவள், “தமிழா போய்ட்ட. அதுனால உன்னை ரொம்ப கஷ்டப்படுத்த விரும்பல. சோ நீ என்ன பண்ற, ஏதாச்சும் ஒரு பொண்ணுக்கிட்ட போய் ரொமான்டிக் – ஆ ப்ரபோஸ் பண்ணிட்டு கிளம்பு.” என்றவள் மீண்டும் புல்லட்டின் மீது அமர்ந்து கொண்டாள்.
‘ப்ரபோஸ் பண்ணனுமா’ என்று தலையை சொரிந்தவன், “யாரு கிட்ட?” என்று வினவ,
“உன் விஷ்!” என தோளை குலுக்கியவள், பப்பில் கம்மை வாயில் போட்டுக் கொண்டாள்.
சில நிமிடங்கள் சுற்றி முற்றிப் பார்த்தவனுக்கு, ‘யாராவது செருப்ப கழட்டி அடிச்சுட்டா என்ன பண்றது’ என்றிருந்தது.
அதில் ஒரு முடிவுக்கு வந்தவன், “உங்க பேர் என்ன?” என வினவ, ஆஷாவோ, “அவள் பேர் உனக்கு எதுக்கு. சீனியர்ன்னு மரியாதையா கூப்டு” என்று ஆங்கிலத்தில் அதட்டினாள்.
என்ன நினைத்தாளோ, “மஹாபத்ரா” என அவள் பெயரைக் கூற, அவளருகில் மெல்ல வந்தவன்,
அவள் கண்களோடு தன் கண்களை கலந்து, “என் லைஃப்ல இந்த ஒரு நாள் திரும்ப வருமான்னு தெரியாது. ஆனா, வந்த இந்த நாளை விட எனக்கு மனசில்லை. சோ, நான் சொல்ல வேண்டியதை சொல்லிடுறேன். உன்னை பார்த்ததும் லவ் பண்ணணும்ன்னு தோணல, ஆனா வாழ்க்கை முழுக்க பார்த்து பார்த்து லவ் பண்ணனும்ன்னு தோணுது. ஐ லவ் யூ பத்ரா…” என்று கூறி முடிக்க, அங்கு கடும் அமைதி நிலவியது.
முந்தைய நாள் தான், தனக்கு காதல் கடிதம் கொடுத்த ஒருவனின் கையை உடைத்திருந்தாள்.
அது தெரியாமல் அவன் உளறி வைக்க, அவளுக்கு கோபம் பெருகியது.
கையை இறுக்கி மூடி முகத்திலேயே குத்த வரும் முன், “சாரி சீனியர். எனக்கு உங்களை தவிர இங்க வேற யாரையும் தெரியல. நீங்க தமிழ் வேறயா… அதான் என்னை புருஞ்சுப்பீங்கன்னு உங்ககிட்டயே ப்ரபோஸ் பண்ணிட்டேன். பிளீஸ் சீனியர்….வேற பொண்ணுகிட்ட சொன்னா கண்டிப்பா அடி விழும்.” என கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவன் பேசிய விதத்தை, கோபம் மறந்து ரசித்திருந்தது அவள் விழிகள்.
“ம்ம்க்கும் மத்த பொண்ணுகிட்ட சொன்னா அடி விழும்ன்னு தெரியிற இவனுக்கு, இவள்கிட்ட சொன்னா கொலை விழும்ன்னு தெரியாம போச்சே ஆஷா.” என நமுட்டு சிரிப்பு சிரித்த அமிஷ் அங்கு ஒரு சண்டை காட்சியை காண ஆர்வமானான்.
மேலிருந்து கீழ் வர, ஆடவனை ஆராய்ந்த பாவையின் பார்வை தஷ்வந்த்தை லேசாக நெளிய வைத்தது.
“சீனியர்… நான் போகட்டா.” எனத் தயங்கியபடி அவன் கேட்க, “போ! பட் இன்னொரு தடவை என் கண்ணு முன்னாடி வர கூடாது.” குரலில் ஏகத்துக்கும் கண்டிப்பை ஏற்றி விரல் நீட்டி எச்சரித்தாள்.
அவனோ புருவம் சுருக்கி, “வந்தா?” எனப் புரியாமல் கேட்க, அமிஷும் ஆஷாவும் தலையில் அடித்துக் கொண்டனர்.
“வந்தா…” என ராகமாய் இழுத்த மஹாபத்ரா, “நமக்கு டெட் பாடியை வச்சு க்ளாஸ் எடுக்க, பாடி இல்லையாம். உன்னை பாடியாக்கி அனுப்பிடுவேன். பீ கேர்புல்!” என்று எச்சரித்தவள், கூலர்ஸை மாட்டிக்கொண்டு, அசட்டையாக அவனைத் தாண்டி செல்ல, தஷ்வந்த் தான் உறைந்த நிலையில் நின்றிருந்தான்.
காயங்கள் தீரும்!
மேகா…