Loading

1 – வலுசாறு இடையினில் .. 

 

விடியாத இரவுகள் என்று எதுவும் இல்லை… அஸ்தமித்த சூரியன் மீண்டும் கிழக்கில் உதித்தே ஆக வேண்டும். 

 

உறங்கிய நாமும் காலையில் விழித்தே ஆக வேண்டும். பூமியில் விழி திறக்காத பொழுது, நமக்கு மற்றொரு வகையான விடியல் வேறு ஒரு உலகத்தில் ஏற்பட்டிருக்கும்..

 

கடந்த நொடிகளை நினையாதே…. இனி கடக்க வேண்டிய நொடிகளை மட்டும் மனதில் கொள்…. 

 

இப்படி பல பல வாசக படங்களை அறையின் சுவர் முழுக்க ஒட்டி வைக்கப்பட்டிருந்தது. 

 

“எருமை மாடே… எந்திரி…. மணி ஏழு ஆச்சி… உன் அப்பா வரதுக்குள்ள எந்திரிச்சி குளிச்சிடு… “, என அர்ச்சித்து விட்டு அவளின் அம்மா சென்றார். 

 

“மாம்…. ஒன் டீ…”, போர்வையை விலக்காமலே முனகும் சத்தத்துடன் கேட்டாள். 

 

“நீ குளிக்காம உனக்கு பச்சை தண்ணி கூட கிடையாது… எந்திரிச்சி குளிச்சிட்டு வா”, என பதிலளித்துவிட்டு, தன் தினசரி முக்கியமான வேலையை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். 

 

“மாம்….. இட்ஸ் நாட் ஃபேர்”, என சிணுங்கியபடி எழுந்து கண்ணை தேய்த்துக்கொண்டு சமையலறை சென்றாள். 

 

அங்கு காலை உணவை மணக்க மணக்க தயாரித்தபடி இருந்தார் அவளின் அம்மா காமாட்சி.

 

“வாவ்…. சூப்பர் டீ…. “, என வாசனையை முகர்ந்தபடி அங்கிருந்த  டீ கப்பை எடுத்து உறிஞ்சத்தொடங்கினாள். 

 

“ஏய்….  ஏய்…. வை டி… அது தம்பிக்கு போட்டு வச்சிருக்கேன்”, என அவள் டீ குடிப்பதை பார்த்து திட்டினார் காமாட்சி. 

 

“அவன் அதுக்குள்ள குளிச்சிட்டானா என்ன?”, என கேட்டபடி டீயை முழுதாக குடித்துவிட்டு கப்பை சிங்கிள் போட்டாள். 

 

“இல்ல… அவன இனிமே தான் எழுப்பணும்.. டீ இல்லாம அவன எழுப்பினா அவ்வளவு தான்”, என பேசியபடி மீண்டும் அவனுக்கு டீ போட்டார். 

 

“இது எந்த ஊரு நியாயம் மாம்… என்னையும் ஒரு டீயோட எழுப்பினா என்ன?”, என கோபத்துடன் கேட்டாள். 

 

“அவன் ஆம்பள புள்ள டி…. அவன அப்படி தான் எழுப்பணும்”

 

“அப்படி எந்த சட்டத்துல எழுதி இருக்கு? “, முகத்தை இறுக்கியபடி கேட்டாள். 

 

“வீட்டு சட்டத்துல எழுதி இருக்கு. வீட்ல எப்பவும் ஆம்பளைக்கு அப்பறம் தான் பொம்பளை…. அத புரிஞ்சிக்க முதல்ல.. நாலு எழுத்து படிச்சிட்டா நம்ம குடும்ப வழக்கத்த மறப்பியா?”, என அவளிடம் சிடுசிடுத்துவிட்டு அவள் தம்பியின் அறைக்கு  சென்று அவனை மடியில் படுக்க வைக்காத குறையாக கொஞ்சி எழுப்பினார்..

 

“ஐயா… ராசா… எழுந்திரி டா…. இந்தா டீ கொண்டாந்திருக்கேன்… குடிச்சிட்டு தூங்கு.. நான் டிபன் ரெடி பண்ணிட்டு எழுப்பறேன். சூடா சாப்டுவியாம்”, என அவனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தார். 

 

இதை வெளியில் இருந்து பார்த்தவள் எப்போதும் போல மனதில் வெறுமையும் , கோபமும் எழ அங்கிருந்து நகர்ந்தாள். 

 

இருபது ஆண்டுகளாக அவள் பார்த்து, பழகி , சகித்து வரும் நிகழ்வுகள் தான் தினமும் இவள் இல்லத்தில் நடந்தேறி வருகிறது. 

 

அவள் இருக்கும் ஊர் இன்னும் முழுதாக கிராமமாக இல்லாமலும் , டவுனாக மாறாமலும் இடையில் நின்று குழம்பி, அங்கிருப்பவர்களையும் குழப்பிக்கொண்டு உள்ளது.  

 

அங்குள்ளவர்கள் எந்த கால கட்டத்தில் எந்த  வகையான வழக்கத்தில் விழுந்தார்களோ தெரியாது. பெண்ணை பெண்ணாக மதிக்க கூட  இன்றும் யோசிக்கிறார்கள். 

 

ஆண் என்பவன் ஆள்பவன். பெண் என்பவள் அவர்களுக்கு சேவகம் செய்ய பிறந்தவர்கள் என்ற எண்ணம் இரத்தத்தில் ஊறி இன்னும் தலைமுறைகள் கடந்தும் பயணிக்கிறது. 

 

அப்படியான வழமை போக்குவாதிகள் மத்தியில் அவ்வப்போது தோன்றும் செந்தாமரையாக ஒரு சிலர் தோன்றி , என்ன பேசினாலும் மீண்டும் அதே பாலாய் போன வழக்கத்தில் அவர்களை திணிக்க முயற்சிப்பார்கள். இல்லையேல் பல நாடகங்கள் அரங்கேற்றி அவளை ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு அனுப்பி விடுவார்கள். 

 

பதினெட்டு இருபது வருடமாக பழக்கபட்ட சிறையிலேயே ஒன்றும் புரிந்தும் புரியாத நிலையில், ஒரு புதிய சிறையில் அவள் மீண்டும் அடைக்கப்படும் போது அவள்  சிந்தனை திறன் வெகுவாக பாதிக்க படுகிறது . அந்த பாதிப்பை பயன்படுத்தி முற்றிலும் சுயசிந்தனை அற்றவளாக மாற்ற சுற்றி இருக்கும் உற்ற சுற்றங்களே போதும். 

 

வழக்கமான வழக்கத்தில் அப்பெண்ணும் புதைந்து மறைந்து விடுவாள். 

இப்படியாக தான் இன்றும் பல இடங்களில் பெண்களின் நிலை இருக்கிறது . 

 

படிப்பு என்பதும் கூட மாப்பிள்ளை படித்த பெண் வேண்டும் என்று கேட்பதால் தான் பெற்றவர்களும் படிக்க வைக்கிறார்கள் . 

 

ஆக பெண் என்பவள் ஆணுக்கு ஏற்ற சேவகியாக , அடிமையாக மட்டுமே வாழ வேண்டும் என்று அவள் பிறந்தத்தில் இருந்தே சொல்லி சொல்லி வளர்க்கப்  படுகிறாள். 

 

இந்த அமைப்பில் பெண்களை இந்த நிலைக்கு தயார் படுத்துவதும் பெண்கள் என்பது தான் முக்கியமான ஒன்று . 

 

உலகில் வாழும் எந்த உயிரினம் தன் சக பாலினத்தவரிடம் அடியாக மட்டுமே வாழ பயிற்சி கொடுக்கிறது ??? 

 

இந்த கேள்விகள் நம்மில் பெரும்பான்மையானவர்கள் கேட்டு கொண்டு இருப்பீர்கள் .. உங்களை அடிமையாக, தரக்குறைவாக நடத்தும் சமயம் இது போன்ற எண்ணங்கள் உங்களுக்கு வரவில்லை எனில் நீங்கள்  அவர்களின் மிக சிறந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்று இருக்கிறீர்கள் என்றே அர்த்தம் . 

 

தனக்கு தானே பேசி மனதை சமன் படுத்திக் கொண்டு , குளித்து விட்டு கல்லூரி செல்லத் தயாராக ஆரம்பித்தாள் நம் முத்தமிழ் நங்கை . 

 

“அம்மா .. எனக்கு இன்னிக்கி ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு .. நான் கெளம்பறேன்.. “, என கூறி விட்டு வெளியே வந்தாள் . 

 

“எங்க அதுக்குள்ள கெளம்பிட்ட ?”, தந்தை ஏகாம்பரம் செய்திதாள் படித்த படி கேட்டார் . 

 

“இன்னிக்கி ஸ்பெஷல் கிளாஸ் இருக்குங்க  பா.. சீக்கிரம் போகணும் .. சாயந்தரமும் லேட் ஆகும் .. நான் வினிதா கூட வந்துடறேன் “, என அவள் கூறி முடிக்கும் முன் வினிதா அவளை அழைத்தபடி வாசல் அருகில் வந்தாள் . 

 

“ம்ம் .. ரெண்டு பெரும் ஒழுங்கா போயிட்டு வாங்க .. பொட்ட புள்ளைங்கற நெனைப்பு  மனசுல இருக்கட்டும் .. இதானே கடைசி வருஷம் ?”, முகத்தை 

சிடுசிடுவென வைத்த படி கேட்டார் . 

 

“ஆமாங்க அப்பா .. போயிட்டு வரேன் பா “, என அவளும் அமைதியாக பதில் கூறிவிட்டு வினிதாவுடன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

 

“ஏன் டி நம்ம அப்பாங்க இப்படி இருக்காங்க ? எரிச்சலா வருது .. உங்கப்பா மருந்துக்கு கூட சிரிக்க மாட்டாரு போல .. எங்கப்பா என் மூஞ்ச கூட பாக்கறது இல்ல .. ஏன் தான் இந்த ஊருல பொறந்தோம் ன்னு இருக்கு .. “, வினிதா வழக்கம் போல தன் மன குமுரலை கொட்டியபடி வந்தாள். 

 

“இங்க பொறந்துட்டோம் வினி .. இனிமே இங்க நம்ம என்ன செஞ்ச நமக்கு அடுத்து வர தலைமுறை நல்லா இருப்பாங்க ன்னு தான் யோசிக்கணும் .. நிஜத்த ஏத்துக்கணும் . அப்ப தான் இந்த சூழ்நிலைய சமாளிக்க முடியும் . வா .. எப்படியாவது இந்த இன்டர்வியூ ல செலக்ட் ஆகிடணும்”, என கூறிய படி வினிதாவையும் நேர்காணலில் கலந்து கொள்ள கூறினாள் . 

 

“நான் எதுக்கு நங்கை ? எனை இந்த டிகிரி படிக்க வைக்கறதே அந்த கூமுட்ட மாமனுக்கு கட்டி   குடுக்க தான் .. அந்த வெளக்குமாத்துக்கு படிப்பும் ஏறல , கணக்கு வழக்கும் ஏறலன்னு தான் என்னை காமர்ஸ் படிக்க வைக்கறாங்க .. நீ போய் அட்டென்ட் பண்ணு .. உன்கூடவே நானும் இருக்கேன் . ஒண்ணா வீட்டுக்கு போய்க்கலாம்” 

 

“சரி வினி .. நான் போய்ட்டு வரேன் .. நீ எங்க உக்காந்துட்டு இருப்ப ?”

 

“நான் ஆடிட்டோரியம்ல இருக்கேன் நங்கை .. ஆல் தி பெஸ்ட் “, நேர்காணல் நடக்கும் கட்டிடத்தின் வாயில் வரை வந்து அனுப்பிவிட்டு வினிதா ஆடிட்டோரியம் நோக்கிச் சென்றாள். 

 

இங்கே நங்கையின் வீட்டில் , “ உன் பொண்ணு போக்கு சரி இல்ல .. இவ படிக்கற படிப்புக்கு என்ன ஸ்பெஷல் கிளாஸ் வைக்க போறாங்க ?”, என மனைவியிடம் வந்து சிடுசிடுத்தார் . 

 

“நம்ம பொண்ணு தாங்க காலேஜ்ல சேர்ந்ததுல இருந்து மொத மார்க் வாங்கறா .. அவ நேத்து நடு ராத்திரி வரைக்கும் படிச்சிட்டு தான் இருந்தா .. “, என மகளுக்காக பேசினார் காமாட்சி . 

 

“ஏதோ ஒரு டிகிரி இருந்தா தான் மாப்பிளை பாக்க முடியும்ன்னு தான் படிக்க வைக்கறேன் .. மெத்த படிச்சி என்ன கிழிக்க போறா ? இந்த வாரம் இருந்து மாப்பிளை பாக்க போறேன் .. அவகிட்ட சொல்லி ஒடம்ப ஒழுங்கா பாத்துக்க சொல்லு .. நான் தரகர் வீட்டுக்கு போய்ட்டு வரேன் .. “, என கூறி விட்டு தயாராக சென்றார் . 

 

அவள் தம்பி ராஜன் , “ அம்மா .. டிபன் ரெடியா இல்லயா ?”, என கேட்டபடி வெளியே வந்தான் . 

 

“வந்துட்டேன் கண்ணு .. ரெண்டு நிமிஷம் .. சூடா இட்லி எடுக்கறேன்… “, என கூறியபடி சமையல் அறைக்கு ஓடினார் . 

 

“இந்த ரெகார்ட் நோட்ல அவள நேத்து எழுத சொன்னேன்ல இத பண்ணாம அவ நேத்து என்னத்த கிழிச்சிட்டு இருந்தா ?”, ஆணவமாக கேட்டான் . 

 

“அக்காவுக்கு ஏதோ பரிட்சை போல கண்ணு .. அவ படிச்சிட்டு இருந்தா .. “, என காமாட்சி அவனுக்கு இட்லியை பரிமாறியபடி கூறினார் . 

 

“அவ என்ன படிச்சி என்ன கழட்ட போறா ? பாத்தரம் தானே வெளக்க போறா அதுக்கு எதுக்கு அவ இவ்ளோ கஷ்டபட்டு படிக்கணும் ? இன்னிக்கி இந்த நோட் நான் கிளாஸ்ல வச்சே ஆகணும் .. இப்போ நான் என்ன பண்ணறது ?”, என பொலம்பியபடி இருந்தான் . 

 

“இன்னிக்கி லீவு போட்டுக்க ராஜா .. அவ சாயந்தரம் வந்ததும் உனக்கு எழுதி குடுக்க சொல்றேன் “, என கூறியபடி ஏகாம்பரம் வந்து சாப்பிட அமர்ந்தார் . 

 

“சரிப்பா .. எனக்கு பணம் குடுங்க நான் படத்துக்கு போய்ட்டு வரேன் .. “, என அவன் கேட்டு முடிக்கும் முன் அவனுக்கு இரண்டு ஆயிரம் ரூபாய் எடுத்து கொடுத்தார். 

 

“கண்ணு சாப்பிட வீட்டுக்கு வந்துருப்பா .. “

 

“இல்லம்மா .. நான் வெளிய சாப்டுக்கறேன்.. “, என கூறி விட்டு பைக் எடுத்து கொண்டு பறந்தான் பதினோராம் வகுப்பு படிக்கும் ராஜன் . 

 

“என்னங்க ரெண்டாயிரம் தான் குடுத்தீங்க .. அது போதுமா அவன் செலவுக்கு ?”, காமாட்சி யோசனையுடன் கேட்டார் . 

 

“அவன் பத்தலண்ணா கடைக்கு வந்து எடுத்துட்டு போவான் டி .. நீ உன் பொண்ணு போட்டோ நல்லதா ஏதாவது இருந்தா எடுத்து குடு “

 

“போட்டோ எதுவும் இல்லைங்க .. எடுத்தா தான் .. நகை எல்லாம் எடுக்கணும்ல ..”

 

“ஆமா எடுக்கணும் .. இந்த வாரம் போய் எடுத்துட்டு வரலாம் “

 

“எவ்ளோ போடறீங்க ?”

 

“அம்பது சவரன் போடறேன் .. அப்போ தான் எனக்கு கௌரவம் .. சரி நகை எடுத்தா அப்பறம் போட்டோ எடுத்துக்கலாம் .. “

 

“ஜாதகம் ?”

 

“அந்த கழுதை என்னத்துக்கு ?”, கோபமாக கேட்டார். 

 

“இல்லைங்க மாப்ள வீட்ல கேப்பாங்க .. நாமளும் ஒரு தடவை பத்துட்டா அதுக்கு தகுந்தமாறி தேடலாம் “, தயங்கி தயங்கி கூறினார் . 

 

“சரி.. குளிச்சி ரெடி ஆகு .. ஜோசியரையும் பாத்துட்டு வந்துடலாம் .. “, என கூறி விட்டு தன் சூப்பர் மார்க்கெட் சென்றார் . 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
2
+1
1

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  26 Comments

  1. Archana

   இது போங்காலே இருக்கு அவன் ரெக்கார்டே வெட்டி ஆபீசர் அவன் எழுத மாட்டாராம், பரீட்சைக்கு படிக்குறே அவளே தான் எழுத சொல்லுவானாம்😤😤😤😤😤😤.

  2. Janu Croos

   அட…அட…அட…என்னவொரு தங்கமான அம்மா அப்பா😠😠😠….பொண்ணுக்கு ஒரு நியயம் பையனுக்கு ஒரு நியாயமா😤😤😤…

   அந்த பய வெட்டியா தண்டமா தூங்கிட்டு இருப்பான்😴😴😴….நங்கை அவனுக்கு நோட்ஸ் எழுதி குடுக்கனுமா🤨🤨🤨🤨….
   டேய் தீவெட்டி தலையா…அவள் போற வீட்டுல பாத்திரம் வெளக்குறாள்…இல்ல என்னவோ பண்றாள்…அதைப்பத்தி உனக்கென்னடா கவலை🧐🧐🧐….உன் நோட்ஸ் எழுத வக்கில்லாத தண்டம் நீ அவள பேசுறியா😡😡😡….

   நங்கை….உங்க அம்மா பேசாறாங்கனு எல்லாம் சும்மா இருக்காம…ஒரு நாள் நல்ல கொதிக்க கொதிக்க சுடுதண்ணிய♨️♨️♨️கொண்டு போய்…அந்த தண்டத்து மேல ஊத்தி விட்டீனா அன்னையோட அடங்குவான் அவன்😤😤😤…
   ஆளையும் மூஞ்சியையும் பாரு😠😠😠…லீவ் போட்டு எழுதுவோம்னு இல்ல…அதையும் அவள் வந்து எழுதனுமாமுல😡😡😡…
   நல்ல நியாயம்யா உங்கள்து🤨🤨🤨🤨….

  3. இந்த மாதிரி ஆணுக்கொரு நியாயம் பெண்ணுக்கு ஒரு நியாயம்னு சொல்லுறவங்கனால தான் பெண்களின் திறமைகள் பலருக்கு தெரியாமலேயே போகுது.

  4. kutti sairan

   அடச்சை முதல் ல இந்த காமாட்சி அம்மாவை வெளுக்கணும்… எம்மோய் நீயும் ஒரு பண்ணு தானே… 😤😤
   அந்தப் புள்ளைய போட்டு படுத்துற…
   தமிழ் நீ வேற லெவல் தங்கமே.. ஹம்ம்… என் ரெக்கார்ட் எஸ்பெஷலி zoology கடைசி பிராக்டிகல் எக்ஸாம் வரை கரெக்ஷன் பேர் ல ஊரு ஊரா சுத்திட்டுத் திரிஞ்சேன் 😌😌
   எனக்கு என் அண்ணன் தான் மெயின் ஒர்க்கரே 😜😜
   இங்க எல்லாம் தலைகீழா இல்ல இருக்கு 😲😲

   யோவ் அவனை லீவ் எடுக்கச்சொல்லுற.. 😲😲
   நான்லாம் லீவு போட்டா என் வீட்டுல தோலை உரிச்சுடுவாங்க 😤😤
   மச்சக்காரன்டா…

   எதே 2000 ரூபா போதுமாவா… 😲😲😲… எங்க வீட்ல எனக்கு மட்டும் என்ன அண்ணனுக்குமே 20 ரூபாய் தாண்டி தர மாட்டாங்க. … இதுலாம் போங்கு சொல்லிப்புட்டேன்…

   கதை ஆரம்பம் வேற லெவல்…
   ஒரு ரிக்வெஸ்ட். . தினமும் கதையைப் போடுங்களேன் 😁😁😁

  5. Viji Ramachandran

   Enna da ithu ponnukku oru niyayam paiyanukku oru niyayamaaa

   11th padikkura paiyan avanga akka veyee mathikkalana eppadi maththa ponnungala mathippan

   ithula avana solli kuththamilla avanga amma appa sollanum

   intha vaiyasula avan silavukku 2000 pothumanu vera kekkukuthu avanga amma

   Enna amma appa ivanga rendu perum

  6. ஆரம்பமே அசத்தல் சிஸ்.. இன்னும் நாம பல இடங்கள்ல பிற்போக்குவாதியா தான் இருக்கோம்.. இல்லைனா பிற்போக்குவாதிக்கு துணையா இருக்கோம்.. ஆம்பளை பையன் பிறந்தா வரவு, பொம்பளை புள்ளை பிறந்தா செலவுனு..

   சில நூறு வருசமா இல்லை இல்லை ஆதி காலம் தொட்டே பெண்கள் சேவகம் செய்ய தான் பொறந்துருக்காங்கனு மைன்ட் செட்.. இதுல வருத்தம் என்னனா நீங்க சொன்ன மாதிரி இதுக்கு ஒருவகைல காரணமும் பெண்கள் தான்.. தன்னோட மகள் இப்படி தான் இருக்கனும்னு ஒரு வரையறை வெச்சுட்டு தான் பிள்ளைகளை வளத்துறாங்க.. பையன்னா ஒரு மாதிரி.. பொண்ணுனா ஒரு மாதிரி..

   இந்த மாதிரி வரையறை தாண்டி சாதுச்ச பெண்கள் சொற்பம்.. வரையறைக்குள்ள சிறைபட்டு ஒடிந்து போன பெண்கள் பலர்..

   இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுல இன்னமும் இந்த சோகம் நிகழ்ந்துட்டு இருக்குங்குறது தான் வருத்தமான உண்மை… என்னதான் ஆண்களுக்கு நிகரா பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறிட்டு இருந்தாலும் அதெல்லாம் வெறும் பத்து பர்சன்ட் தான்.. இன்னும் அடுப்படிலையும், வீட்டை விட்டு வெளியே வராம இருக்குற தொண்ணூறு சதவீதம் பெண்கள் இருந்துட்டு தான் இருக்காங்க..

   வருங்காலத்துலயாவது எல்லாம் மாறட்டும்.. நங்கை அதுக்கு ஒரு எடுத்துக்காட்டா இருப்பானு நினைக்கிறேன்.. இல்லை இல்லை நம்புகிறேன்…

   சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க..
   இரண்டாவது அப்டேட் வந்ததும் மறக்காம டேக் பண்ணுங்க..

  7. என்னது ரெண்டாயிரம் பத்தலயா? ஏம்மா உன் தாலிய வைச்சு குடு உன்பையன் நல்லா வருவான்.
   😡😡செம காண்டாகுது. சாருக்கு கைல சுழுகாே? இவ வந்து தான் எழுதி தரணுமாம். சார் படம் பாப்பாராம்.

   இதில கெளவரவத்துக்காக நகை பாேடுவாராம்.
   யாேவ்….. உன் மண்டை மேல பாறாங்கல்லு விழுக.

   பாெண்ணுங்க என்ன கிள்ளு கீரையா?
   புடிங்க சார் புடிச்சு இந்த குடும்பத்தையே ஜெயில்லோடுங்க சார்.

  8. Meenakshi Subburaman

   💞😳😳😳 டேய் என்னடா நடக்குது இங்க

   💞கட்டில்ல காஃபி, சூடான இட்லி , படத்துக்கு ரெண்டாயிரம் பணம், இதுல இது பத்தாதுன்னு கவலை படும் அம்மா, என்ன கொடுமை டா இது

   💞இந்த இன்டர்வியூ தான் அவளுக்கு ஏதோ திருப்பத்தை ஏற்படுத்தும் போலவே

  9. Che intha mari oorula irukurathuku Ponnunga vera engayavathu pirakalam intha mari irukura alugaluku veetu Vela seiya thumi tovachu poda kulantha pethuka mattum ponnunga venumam ana avangalkana mariyathai mattum ivanga thara matangalam ithu yenna niyayam athuliyum Avan thambi parthellqm sema gandu varuthu ivan padikanumna ivanthana eluthanum ithuku pethavangalum ithu othuranga yen naliuku ivanuku pathila avala vanthu parichai eluthuva Ada pavigala ooru sootha poravanuku 2000 ruba selavu ithula pathuma pathathanu vera kelvi ana nangaita padika vaikamattum ivangaluky kasakuthu yennatha solla

  10. Sangusakkara vedi

   Kadupingsa iruku sis intha mathiri gents ah pakum pothu….. Knjm kooda manasathichiye ilathavanga…..ponna mathikathavan vazha thaguthi ilathavan …. Super sis…. Keep it up

  11. ஷாலினி ( Shalini )

   பல இல்லங்களில் நிகழும் இம்மாதிரியான சட்டங்களைக் கண்கூடாக இன்றும் காண முடிகிறது.

   வாழ்த்துகள் சகி 🎉🎊

  12. Nancy Mary

   அருமையான உணர்வுபூர்வமான ஆரம்பம் சூப்பர்🙂
   ஐந்தறிவு ஜீவனான மரங்கள் கூட தனக்கு அடுத்த சந்ததியா விதையை தான் விதைக்குது ஆனா மனிசங்க நாம தான் விஷத்தை விதைச்சு அழிவு பாதைக்கு போறோம் ஒரு சின்ன பையனுக்கு இத்தனை ஆணவ பேச்சை பேசுற தைரியத்தை குடுத்தது விதைச்ச பெற்றோரும் வளர்த்த சமூகமும் தானே மண் நாம எப்படி பிடிச்சு செதுக்குறோமோ அதானே சிலையாகும் இங்க அந்த மண்ணு வெறும் களிமண்ணா இருக்குது இதோட தாக்கம் எந்த சிற்பத்தை சிதைக்குமோ இதெல்லாம் சிந்திக்கிறதுக்குள்ள சிலையா தன்னையே செதுக்குனவ சிதைஞ்சிடுவாளோற பதட்டமும் வருது பெண்ணை வெறும் பொருளா பார்க்குற மனநிலை மாறுமா இல்லனா அது மாறும்ற மனநிலையோட நாம ஏமாறணுமா இந்த தேடலோடயே மங்கையோட வாழ்க்கை முடிஞ்சிடுமா இல்ல தேடலே புது வாழ்க்கையை அமைச்சு தருமா பொறுத்திருந்து பார்ப்போம்👏👏👏

  13. அடே ரெக்கார்ட் நீ எழுத மாட்டியா..அக்கானு மரியாதை இருக்கா..அதுசரி அம்மா அப்பா அப்படி இருக்கும்போது அதை பார்த்து வளர்ந்தா உனக்கு ஆம்பளங்கற திமிரு இப்பவே வந்திருச்சாக்கும்🙂🙂🙂🙂…..2000 பத்தாது ஆமா🤦🤦🤦🤦..மாப்பிள்ளை படிச்ச பொண்ணு கேட்கறதால தான் படிக்க வைக்கறாங்களாம்..என்னடா கொடுமை இதெல்லாம்..நங்கை நிலைமை இப்படின்னா இந்த வினி நிலைமை அதுக்கும்மேல