Loading

ஹாய் டியர் பிரெண்ட்ஸ்… பிரதிலிபி சிறந்த எழுத்தாளர் 8 போட்டிக்கு இந்த கதையை எழுதுறேன். ஆல்ரெடி டீஸர் போட்ட கதைக்கு கொஞ்சம் டைம் தேவைப்படுது. சோ இதை முடிச்சுட்டு அதை ஸ்டார்ட் பண்றேன். இந்த கதையில் பெருசா twist and turns இருக்காது. முழுக்க முழுக்க ரொமான்ஸ், காதல், நட்பு, காமெடி, குடும்பம், கொஞ்சம் அழுத்தம் கலந்த நாவல் தான். என்ஜாய் ரீடிங். படிச்சுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க drs… போட்டிக் கதைனாள subscription poidum. Epi yum சின்னதா இருக்கும். சோ முடிஞ்சா ரெண்டா பிரிச்சு போடுறேன் . Thanks for ur valuable supports and comments ratings stickers subscription 💖💖💖🥰🥰🥰🥰🤩🤩🤩

Episode 1:

அமர காவியம்
அரங்கேற
அகத்திலே வேண்டும்
அன்பு நீரூற்று!

– காதலுடன் தேவஸ்மிதா

கையொப்பமிட வேண்டிய கோப்பைத் திறந்தவனுக்கு கண்ணில் அகப்பட்டது இந்த கவிதைத்தாள். நொடியில் அழுத்த விழிகள் சிவப்பேற, ஆறடி ஆண்மகனின் மேனி விறைத்தது.

‘எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் காதல் கவிதையை எழுதி தன்னுடைய மேஜையிலேயே வைப்பாள்’ என்ற சீறல் உற்பத்தியாக, இன்டர்காம் மூலம் அவளைத் தொடர்பு கொண்டான், அமர மகரந்தன்.

‘அமர் பர்னிச்சர்ஸ் அண்ட் மேனுஃபாக்ச்சரிங்’ கம்பெனியின் உரிமையாளன். உழைப்பே பிரதானமாக வாழ்பவன். அன்னை சிந்தியா, தந்தை நெறிவாணன், தங்கை மிருணாளினி என்ற சிறிய வட்டத்திற்குள் தன்னை அடக்கிக்கொண்டவன்.

நெறிவாணன் அடிப்படையாய் தொடங்கி இருந்த தொழில் தான் மரப்பொருட்கள் செய்வது. பீரோல் கட்டில் போன்ற மரப் பொருட்களை உருவாக்கி மொத்தக்கடைகளுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

அமர மகரந்தன் பொறுப்பேற்றுக் கொண்ட இந்த எட்டு வருடங்களில் பலவித மாற்றம் கண்டு தொழில் விருத்தியடைந்தது.

அவனே ‘ஷோரூம்’ ஒன்றைத் தொடங்கி, அவர்கள் செய்யும் மரப்பொருட்களுக்கு நியாயமான விலையை நிறுவி தரமாகவும் தந்திட, சிறிது சிறிதாக ப்ராண்ட்டான மரப்பொருட்கள் என்றால் அது அமர் பர்னிச்சர்ஸ் தான் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்திருந்தான்.

பல தோல்விகளுக்குப் பிறகு கிடைத்த பெரும் வெற்றியில் அவனது குடும்பமே திக்குமுக்காடி இருக்க, பூகம்பமாய் அவர்களை ஆட்டுவித்தது விதி!

காதல் என்ற பெயரைக் கூட அவன் காதலுடன் பார்த்தது கிடையாது. இப்போது இந்த காதல் கவிதை அவனைக் கடும் எரிச்சலுக்குட்படுத்தியது.

“எஸ்கியூஸ்மீ சார்…” அடக்கமென்றால் அதற்கு மறுபெயர் அவள் தான் என்ற ரீதியில் அமரின் முன் வந்து நின்றாள் தேவஸ்மிதா.

உண்மையில் அப்பாவித்தனத்தை டஜன் டஜனாக வழிய விடும் முகம். ஆகாய நீல நிற சல்வாருக்குள் தன்னைப் புகுத்தி இருந்தவளின் விழிகள் குழப்பத்தை ஏந்தி தனது முதலாளியைப் பார்த்திருந்தது.

அவனோ கோபத்தை அப்பட்டமாக முகத்தில் காட்டி இருந்தான்.

“ஒரு வாரத்துக்கு முன்னாடி தான நீ இங்க அக்கவுண்டண்ட்டா ஜாயின் பண்ணுன?”

“எஸ் சார்! எனி ப்ராப்ளம் சார்!” கண்ணைச் சிமிட்டி அவள் கேட்க,

“செய்றதையும் செஞ்சுட்டு என்ன ப்ராப்ளம்ன்னு என்கிட்டயே கேட்குற இடியட்” பாரபட்சமின்றி அவளைக் கடிந்தான்.

அவளோ விழித்தபடி நிற்க, “வாட் இஸ் திஸ்?” என அவள் எழுதிய கவிதையைக் காட்ட, அதனை வாங்கி உற்றுப் பார்த்தவள்,

“எண்ட குருவாயூரப்பா. இது தமிழ் போலையான்னு. பக்ஷே அர்த்தம் மனசிலாக்குனில்லா சார். என்ன எழுதி இருக்கு இதுல… கடைசியா என் பேர் வேற போட்டு இருக்கு. எனக்கு சொந்த ஸ்தலம் கேரளா. மலையாளம் மட்டும் அறியும். தமிழ் எழுத படிக்க கொறைச்சு கொறைச்சு அறியும் சாரே.” என மலையாளமும் தமிழும் கலந்து பேசியதில் இப்போது விழிக்கும் முறை அவனது ஆனது.

புருவ மத்தியில் ஏற்பட்ட முடிச்சுடன், “ஆர் யூ சியூர்? இதை நீ எழுதலையா?” இன்னும் நம்பாமல் அமர் கேட்க,

“எனக்கு இது என்னன்னே தெரியல சார். என்ன எழுதி இருக்கு” என அவனிடமே கொடுத்துக் கேட்க, சற்றே தடுமாறினாலும் வெளியில் காட்டிகொள்ளாதவன்,

“நத்திங் இம்பார்ட்டண்ட் கோ பேக் டூ வொர்க்!” என அதிகாரத்துடன் கூறியவன், அந்தத் தாளை நான்கு துண்டாகக் கிழித்துப் போட்டான்.

*****

“ஐயோ ஐயோ ஐயோ! அந்த நாலு வரியை நாலு நாளா குப்புறப் படுத்து யோசிச்சு நாலு மணி நேரமா எழுதுனேன்டா. அதை நாலே செகண்ட்ல கிழிச்சுப் போட்டுட்டானே!” என நெஞ்சில் குத்திக் கொண்டு வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள் தேவஸ்மிதா.

மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்து, தனது இரட்டை சகோதரியை கன்னத்தில் கை வைத்து பரிதாபமாகப் பார்த்திருந்தான் தயானந்தன்.

“தேவா, தயா ரெண்டு பேரும் சாப்பிட வாங்க…” இரவு உணவிற்கு அன்னை அழைத்ததில், “சாப்பிட்டுட்டு கண்டின்யூ பண்ணுவோமா தேவா” எனக் கேட்டான் அவளது சகோதரன்.

தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தவள், “நான் இவ்ளோ ஃபீல் பண்ணி பேசிட்டு இருக்கேன். இப்போ உனக்கு சோறு கேட்குதா?” என மூச்சிரைத்தாள்.

“சோறு இல்லடி, அம்மா இன்னைக்கு பூரி பண்ணிருக்காங்க”

“நிஜமாவா… சரி வா சாப்பிட்டு வருவோம்.” என விறுவிறுவென டைனிங் ஹால் நோக்கிச் சென்றவளைக் கண்டு சிரித்துக் கொண்டான்.

“மம்மி! வாட் ஸ்பெஷல் டுடே.” கேட்டபடி பூரியை விழுங்கியவளை முறைத்தபடி இன்னொரு பூரியை அவளது தட்டில் வைத்தார் துர்கா.

“என்ன மம்மி பூரி மட்டுமில்லாம நீயும் சூடா இருக்க. வாட் இஸ் த மேட்டர்?” எனக் கேட்கும் போதே, மற்ற குடும்ப உறுப்பினர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

தேவஸ்மிதாவின் நாற்காலியை இடித்தபடி, அவள் தட்டிலிருந்த பூரியை எடுத்து உண்ட தயானந்தன், “பார்த்தா தெரியல அம்மா உன்மேல கோபமா இருக்காங்களாம்.” என்றான்.

“என் பொண்ணு என்ன பண்ணுனா துர்கா?” எனக் கேட்டபடி தேவாவிற்கு எதிரில் பூபாலன் அமர, அவருக்கு அருகில் நிறை மாத வயிற்றைப் பற்றியபடி அமர்ந்தாள் தேவா, தயாவின் தமக்கை திவ்யஸ்ரீ.

அவளுக்கு தட்டில் பூரியை எடுத்து வைத்து பிய்த்து ஊட்டினான் அவளது காதல் கணவன் மகேஷ். அவளுக்கு சொந்த அத்தை மகன்.

திவ்யஶ்ரீ ஆதங்கத்துடன் “அவள் என்ன தான் பண்ணலப்பா. கஷ்டப்பட்டு சிஏ படிச்சு, பெரிய பெரிய ஆளுங்களுக்கு ஆடிட்டிங் ஒர்க் பார்த்து லட்சக்கணக்குல சம்பாதிச்சுட்டு இருந்தா. இப்போ அதெல்லாம் விட்டுட்டு ஷோ ரூம்ல அக்கவுண்டண்ட்டா வேலை பார்த்துட்டு இருக்கா. புத்தி பிசகிப் போச்சாப்பா இவளுக்கு” என்றாள்.

தேவாவோ வெட்கம் கொண்ட பாவனையுடன், “புத்திப் பிசகி தான் போச்சுக்கா. தட் அமர மகரந்தன் கிட்ட…” என நெளிய,

அவளைக் குடும்பமே ஒரு மார்க்கமாகப் பார்த்தது.

“வாட் அ ஸ்வீட் நேம்ல …” இத்துடன் இந்த வசனத்தை முந்நூறாவது தடவையாகக் கூறி விட்டாள்.

பூபாலன் சிரிப்பை அடக்கியபடி உணவில் கவனத்தைப் பதிக்க, துர்கா அவரிடம் இருந்து தட்டைப் பிடுங்கினார்.

“உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்காங்க. இவள் இப்படி காதல் மண்ணாங்கட்டின்னு பினாத்திட்டு கேரியரை ஸ்பாயில் பண்ணிட்டு இருக்கா. அவளை கொஞ்சமாவது கண்டிங்க”

அவரோ கண்ணில் சில்மிஷத்துடன், “நம்ம பொண்ணு நம்மளை மாதிரி தானம்மா இருப்பா. நீ கூட தான், நம்ம லவ் பண்ணுன டைம்ல பாய்ஸ் ஹாஸ்டன்னு கூட பார்க்காம, என்னைப் பார்க்க வந்த…” என்று கேலி புரிய, துர்காவிற்கு இப்போதும் முகம் சிவந்தது.

“ஊஊ…” இளையவர்கள் நால்வரும் கத்தி துர்காவை கிண்டலடித்ததில்,

“சும்மா இருங்க. கண்ட கதையை சொல்லி அவளை ஏத்தி விடாதீங்க. நான் வந்தேன்னா, நீங்களும் என்னை விரும்புனீங்க. அதனால எதை பத்தியும் யோசிக்கல. ஆனா இவள் விஷயத்துல அப்படியா?

அந்தப் பையனுக்கு இவளை யாருன்னு கூட தெரியாதுங்க. இதெல்லாம் எங்க போய் முடியுமோன்னு எனக்குப் பயமா இருக்கு” என்றவரின் குரலில் தாய்க்குரிய கவலை அப்பட்டமாகத் தெரிந்தது.

“டோன்ட் வொரி மம்மி… இது கல்யாணத்துல தான் முடியும்.” இதற்கும் இடக்காக பதிலளித்த தேவஸ்மிதாவை துர்கா முறைத்தார்.

“சும்மா முறைக்காத மம்மி. நான் பாட்டுக்கு செவனேன்னு தான இருந்தேன். நீங்க தான் கல்யாணம் பண்ணனும் மாப்பிள்ளை பாக்குறேன்னு தட் அமர காவியத்தோட போட்டோவை காட்டி ஓகே வான்னு கேட்டீங்க. நானும் ஒரே போட்டோல அவனைப் பார்த்து பிளாட் ஆகிட்டேன். அவன் என்னடான்னா, பொசுக்கு வேணாம்ன்னு சொல்லிட்டான்.” என உதட்டைக் குவிக்க,

“அதை தான் வாண்டு நாங்களும் கேட்குறோம். உன்னை வேண்டாம்ன்னு சொன்னவன் பின்னாடி ஏன் சுத்துற?” அத்தனை நேரம் மனைவிக்கு பக்குவமாக ஊட்டிய மகேஷ் முறைப்புடன் கேட்க,

“திருத்தம். கல்யாணம் வேணாம்ன்னு மறுத்ததா தான் தரகர் அங்கிள் கூட சொன்னாரு. எனக்கு தெரிஞ்சு அவன் என் போட்டோவைக் கூட பார்த்திருக்க மாட்டான். அப்படி அவன் என் போட்டோவைப் பார்த்து ரிஜெக்ட் பண்ணிருந்தா, ஆபிஸ்ல என்னைப் பார்த்தப்ப ஷாக் ரியாக்ஷனாவது குடுத்து இருப்பான். சோ, அவன் வேணாம்ன்னு சொல்ல வேற ஏதோ காரணம் இருக்கு. அதைக் கண்டுபிடிக்கிறேன். அவனை கரெக்ட் பண்றேன் டாட்!” என்று வெகு தீர்மானமாகக் கூறியவளிடம்,

“கொஞ்சமாவது அப்பா இருக்கேன்ற மரியாதை எல்லாம் இல்ல” என்று தலையில் அடித்துக் கொண்டார் பூபாலன்.

அசட்டுச் சிரிப்பொன்றை உதித்தவள், இன்னும் தாயின் முகம் தெளியாத்தைக் கண்டு, “மம்மி… நீ பீல் பண்ற அளவு இது பெரிய விஷயம் இல்ல மம்மி. கல்யாணத்தை ரிஜெக்ட் பண்றதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்க ட்ரை பண்ணுவேன். அதுக்கு இடைல அவனும் என்னை லவ் பண்ணுனா, மேல ப்ரொசீட் பண்ணுவேன். இல்லனா அவன் வேலைக்கு ஒரு கும்புடு போட்டுட்டு திரும்ப வந்துடுவேன் அவ்ளோ தான். பிடிச்ச விஷயம் கிடைக்கிறதுக்காக நானும் கொஞ்சம் ட்ரை பண்ணுனேன்ற நிறைவு எனக்கு இருக்கும். அதுக்கு மேல அவன் கிடைக்கலைன்னா, அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லன்னு நினைச்சுக்க வேண்டியது தான்…” அதையும் விளையாட்டாகவே கூறி தனது முதிர்ச்சியைக் காட்டிய மகளை எண்ணி இன்னுமே வருத்தம் நிறைந்தது.

தயானந்தன் இது எதையும் சட்டை செய்யவில்லை. அவனுக்கு சகோதரியைப் பற்றி நன்கு தெரியும்.

அவளுக்குப் பிடித்த விஷயத்தை அடைவதற்கு தேவையான முயற்சிகளை யாருடைய மனமும் கோணாதவாறு எடுப்பாள். ஒருவேளை அது கிடைக்காது என்று தெரிந்து விட்டால், அதன் பிறகு அதனை உதறி தள்ளி விட்டு, அடுத்த வேலையைக் காண சென்று விடுவாள்.

அது போல இந்த காதலும், கிடைத்தால் சந்தோசம் கிடைக்கவில்லை என்றால் அவளொன்றும் உடைந்து போகப் போவதில்லை என்று ஆணித்தரமாக நம்பியதாலேயே, அவளது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தான். அவன் மட்டுமல்ல அவளது குடும்பத்தாரும் தான்.

காதல் என்ன செய்து விடும்! காதல் கொண்ட மனதை இமயமலை எல்லைக்கும் இழுத்துச் சென்று நிறுத்தும் வல்லமை கொண்டது என்ற உண்மை காதலித்து திருமணம் செய்த பூபாலன் துர்கா தம்பதியருக்குக் கூட உறைக்காமல் போனதே அதிசயம்!

*****

அடுத்து என்னப் பண்ண போற தேவா…?” மறுநாள் காலையில் அலுவலகம் செல்லத் தயாரானவளை நிறுத்திக் கேட்டான் தயானந்தன்.

“ஒரு வாரமா அவனை அப்சர்வ் பண்ணேன்… இனிமே தான் அப்ரோச் பண்ண போறேன். ஆனா எப்படின்னு தான் தெரியல.”

“அப்சர்வ் பண்ணதுல என்ன தெரிஞ்சுக்கிட்ட”

“ஒரு மண்ணும் தெரியலடா. ரோபோவுக்கு டூப் போட அவனை அனுப்புனா அச்சுப் பிசகாம நடிப்பான் தயா. பேர் தான் கவித்துவமா இருக்கு. ஆனா கவிதை எழுதிக் குடுத்தா மூஞ்சில வீசுறான். ரசனை கெட்டவன்…” என்றவள் உதட்டைப் பிதுக்கினாள்.

இதழ் மடித்து சிரிப்பை அடக்கிய தயா, “அது சரி… உனக்கு எப்படி மலையாளம் தெரியும்?” எனக் கேட்டான்.

“யாருக்குத் தெரியும். நான் பார்த்த நாலு மலையாள படத்துல வர்ற வார்த்தையை எல்லாம் ஒண்ணா போட்டு உளறிக்கொட்டுனேன். அவனுக்கு அந்த நாலு வார்த்தைக் கூட தெரியாது போல. நான் பேசுனது மலையாளம்ன்னு நம்பிட்டான். இப்படியே மெயின்டெய்ன் பண்ண வேண்டியது தான்.” எனக் சுடிதார் காலரைத் தூக்கி விட,

“அவன்கிட்ட சிக்கும் போது இருக்கு உனக்கு” எனக் கண்டித்தான் தயானந்தன்.

“அட போடா… ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்ன்னு சொல்வாங்க. நான் இப்போதைக்கு ஒரு பொய் தான சொல்லிருக்கேன். இன்னும் தொள்ளாயிரத்து தொண்ணுத்து ஒன்பது பேலன்ஸ் இருக்கு தயா.” என்றவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டான்.

இந்தப் பொய்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து  நாயகனிடம் தர்ம வசவுகள் வாங்கப் போவது அறியாமல் உல்லாசமாக அலுவலகம் கிளம்பினாள்.

உயிர் வளரும்
மேகா💞

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்