Loading

ரூபிணி மெடோனைவை வெளியேற்றியதை பார்த்து விட்டு, “போயிட்டா.. தொல்லை” என்று சிரித்தாள்.

உதயா ஒன்றும் சொல்லாமல் போக, “ஆனா.. இதுவும் நல்லது தான? முதல் தடவ உன்னை என் பாய் ஃப்ரண்ட்னு அவ கிட்ட சொல்லிருக்கேன் பாரு.. டார்கட் அச்சீவ் பண்ணியாச்சு. உனக்கு ஹாப்பியா இருக்குமே?” என்று கேட்டாள்.

“ஹாப்பியா? மூட் அவுட் பண்ணிட்டு போயிட்டா.. பைத்தியம்” என்றவன் ரூபிணி கையிலிருந்த செருப்பை வாங்கி விட்டு வேறு ஒன்றை கொடுத்தான்.

ரூபிணி அதை மாட்டி பார்த்து விட்டு, “ஓகே.. இந்த பேக். இந்த செருப்பு. போதும்” என்று முடிவு செய்தாள்.

அதையும் உதயாவே வாங்கிக் கொடுத்து விட்டு வெளியே வந்தான்.

“சாப்பிடனும்.. பசிக்குது..”

“காலையில சாப்பிடலயா?”

“இல்ல.. சைன் பண்ணப்போற சந்தோசத்துல கிளம்பி வந்துட்டேன்”

“ரெஸ்டாரண்ட் போவோமா? இல்ல இங்கயே சாப்பிடுறியா?”

“ரெண்டும் வேணாம்.. வீட்டுக்கு தான் போகனும்.. அதுக்கு முன்னாடி அங்க சாக்லேட்ஸ் வாங்கனும்.. எனக்கு அந்த பிராண்ட் சாக்லேட்ஸ் ரொம்ப பிடிக்கும்..”

“நீ டயட்ல இல்ல?”

“பர்ஃபெக்ட் சைஸ்ல தான இருக்கேன்? அதுனால பிரச்சனையே இல்ல.. வா” என்றவள் முன்னால் நடக்க, பையை தூக்கிக் கொண்டு சலிப்போடு உதயா பின்னால் சென்றான்.

விதவிதமான சாக்லேட்கள் நிறைந்திருந்து. குழந்தை போல் துள்ளிக் கொண்டு உள்ளே சென்றவள் பிடித்ததை எடுத்துக் கொண்டாள்.

“அவ்வளவு தானா?”

“புது ஃப்ளேவர் ட்ரை பண்ணாம போனா எப்படி?” என்றவள் புதிய ஃப்ளேவர்களை தேடி நடந்தாள்.

உதயாவும் சில சாக்லேட்டுகளை பார்த்துக் கொண்டிருந்தான். ரூபிணி இரண்டை தூக்கிக் கொண்டு ஓடி வந்து காட்டினாள்.

“இது ஓகேவா? உனக்கு வேணுமா?” என்று கேட்க, உதயா இரண்டையும் பார்த்து விட்டு மறுப்பாக தலையசைத்தான்.

“எனக்கு ரெண்டு ஃப்ளேவரும் பிடிக்காது”

“அப்ப நான் வச்சுக்கிறேன்” என்று கார்ட்டில் போட்டு விட, உதயா முறைத்து வைத்தான்.

“இவ்வளவும் சாப்பிட்டு சுகர் வந்து சாகப்போற”

கார்ட்டை பிடித்துக் கொண்டு அவன் பக்கம் குனிந்தவள், “ஒரு ஸ்வீட்டுக்கே எப்படி சுகர் வரும் பேப்?” என்று கேட்டு கண்ணடிக்க கோபத்துக்கு பதில் சிரிப்பு வந்தது அவனுக்கு.

“இரு வேற பார்த்துட்டு வர்ரேன்..” என்று மீண்டும் மற்ற பக்கம் ஓடி விட்டாள்.

உதயா சிரிப்பு மாறாமலே சாக்லேட்டுகளை பார்த்து எடுத்துக் கொண்டிருக்க, “பேப்.. இது?” என்று கண் முன்னால் சாக்லேட் நீட்டப்பட்டது.

“உன் கூட டேட்டிங் வந்தேன் பாரு.. என்ன சொல்லனும்” என்று சலிப்போடு திரும்ப, அதிர்வோடு அவனருகே வேறு ஒருவன் நின்றிருந்தான்.

அவன் தான் சாக்லேட்டை நீட்டிக் கொண்டிருந்தான்.

சாக்லேட்டுகளை பார்த்துக் கொண்டே நடந்து வந்த உதயா, அருகே நின்றவனை கவனிக்கவில்லை. “பேப்” என்றதும் ரூபிணி பேசுகிறாள் என்று நினைத்து விட்டான்.

இரண்டு ஆண்களும் அதிர்ந்து நிற்க, அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த பாட்டி வயது பெண்மணி இருவரையும் கேவலமாக ஒரு பார்வை பார்த்தார்.

“இந்த காலத்துல எப்படித்தான் பிள்ளைங்க வளருதுங்களோ.. ஆம்பளையும் ஆம்பளையும் லவ் பண்ணிட்டு நாட்ட கெடுக்குதுங்க” என்று விட்டு அவர் நகர, இருவரும் மேலும் அதிர்ந்து அவசரமாக பிரிந்தனர்.

திடீரென பின்னாலிருந்து சிரிப்பு சத்தம் கேட்டது. ரூபிணி உதயாவின் முகத்தையும் பாட்டி சொன்னதையும் கேட்டு அடக்க மாட்டாமல் சிரித்து விட, மற்றவன் உடனே தன் காதலியை தேடி ஓடி விட்டான்.

“எல்லாம் உன்னால.. நீனு நினைச்சு பேசிட்டேன்.. அந்தம்மா அப்படி பார்த்துட்டு போகுது” என்றவனை கண்டு ரூபிணி மேலும் பொங்கி சிரிக்க, அவசரமாக அவள் வாயை மூடினான்.

“சிரிக்காத.. கொன்னுடுவேன்..”

கையை எடுத்து விட்டவள், “அவன் பக்கத்துல போய் அவ்வளவு கிட்ட நிக்கிற? பார்த்தா எனக்கே டவுட் வந்துடும்” என்று மீண்டும் சிரித்தாள்.

“வாய்ல அடிப்பேன்.. நீ சாக்லேட் வாங்குனது போதும் வந்து தொலை” என்று முன்னால் நடக்க, “இருடா.. இன்னும் இருக்கு” என்று கூறி சிரித்துக் கொண்டே பின்னால் நடந்தாள்.

“இருந்தா எடுத்துட்டு வா.. நான் பில்லுக்கு நிக்கிறேன்.. இவ்வளவும் சாப்பிட்டு பல்லு மொத்தமும் கொட்ட போகுது” என்று மிரட்டி விட்டு நிற்காமல் சென்று விட்டான்.

ரூபிணி சிரிப்பை அடக்கிக் கொண்டு மற்றதை எடுத்தாள்.

பில் போடும் இடத்தில் மீண்டும் ஒரு முறை உதயா அவன் பின்னால் நிற்க வேண்டி வர, பாட்டி இருவரையும் கேவலமாக பார்த்துக் கொண்டு தன் பேரனை இழுத்துக் கொண்டு வெளியேறினார்.

உதயாவுக்கு தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போல் இருக்க, ரூபிணி மீண்டும் அடக்கிய சிரிப்போடு அருகே வந்தாள்.

“மறுபடியும் அந்த பாட்டி பார்த்துட்டாங்க போல?” என்று கேட்டதும் முறைத்தவன், “நீயே வாங்கிட்டு வா.. நான் வெளிய போறேன்” என்று ஓடி விட்டான்.

மற்றவனுக்கு அப்படி ஓடக்கூட வழியில்லை. காதலி வெளியே சென்று விட்டாள்.

ரூபிணி பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு பில் போட்டு பையோடு வெளியே வந்தாள். உதயா கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு மற்ற பைகளோடு சென்று விட, ரூபிணியும் சென்றாள்.

உதயாவின் முகத்தை பார்த்ததும் மீண்டும் சிரிப்பு வந்தது. அடக்காமல் அவள் சிரிக்க, ஒரு கையால் அவள் வாயை மூடியவன் மறு கையால் கார் கதவை திறந்தான்.

“ஒழுங்கு மரியாதையா சிரிக்கிறத நிறுத்திடு.. இல்ல…”

“இல்ல? ஆனா செம்ம சீன் தெரியுமா? சாக் ஆகி நின்ன பாரு.. ஹா ஹா.. நீ ஏன் ஒரு பாய்ஃப்ரண்ட ட்ரை பண்ண கூடாது?”

“நீ இன்னைக்கு சாகப்போற பாரு… உட்காரு உள்ள” என்று அதட்டி விட்டு தானும் ஏறிக் கொண்டான்.

ரூபிணி ஒரு வழியாக சிரித்து ஓய்ந்து விட்டு ஒரு சாக்லேட்டை எடுத்து பிரித்தாள்.

“பசிக்குதுன? இத ஏன் சாப்பிடுற?”

“இது வேற டிப்பார்ட்மண்ட் பேப்” என்றவள் ஒன்றை உடைத்து அவன் வாயிலும் போட்டு விட்டாள்.

உதயா உள்ளே அதிர்ந்தாலும் வெளியே சாதாரணமாக காட்டிக் கொண்டு சாக்லேட்டை விழுங்கி காரை எடுத்தான்.

“இப்படி தான் அவனும் பேப்னு சொன்னான்.. நீனு நினைச்சு பேசிட்டேன்” என்று எரிச்சலாக சொல்ல, “உனக்கு என் வாய்ஸுக்கும் அடுத்தவன் வாய்ஸ்க்கும் வித்தியாசம் தெரியலயா? என்ன பாய் ஃப்ரண்ட் நீ? வெரி பேட்” என்றாள்.

“அவன் வாய்ஸ் லைட்டா வித்தியாசமா தான் இருந்தது. என் தப்பில்ல”

“உடனே பழிய அவன் மேல போடுற?”

“இப்ப இது முக்கியமா? வீட்டுல ட்ராப் பண்ணவா? ஆஃபிஸ்ல போய் உன் கார எடுத்துக்கிறியா?”

உடனே தன் கைப்பையில் இருந்த சாவியை எடுத்து வைத்தான்.

“கார நீயே கொண்டு வந்து என் வீட்டுல விடுற.. சாப்பிங் வந்ததால நீ பண்ணத நான் மறந்துட்டேன்னு நினைக்காத..”

“ஆனா நீ ஆசைப்பட்டது நடந்ததுல?”

“உனக்கும் தான் நடந்தது. மெடோனா கிட்ட நேராவே உன்னை என் பாய் ஃப்ரண்ட்னு சொல்லிட்டேன். இன்னேரம் அவ செத்துட்டு இருப்பா.. ஆனா உனக்கே நீ பண்ணுறது சில்லியா இல்ல?”

“எது?”

“இந்த பொறாமை பட வைக்கிறது. அவள பொறாமை பட வைக்கனுங்குறதுக்காக என்னை யூஸ் பண்ணிக்கிறியே.. பட் இதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது தெரியுமா? இப்ப விஷால் எதாவது ஒரு பொண்ணு கூட பழகுனா.. ஐயோ பாவம் அந்த பொண்ணுனு கண்டுக்காம போயிட்டே இருப்பேன். எக்ஸ்காக பொறாமை படுறது எல்லாம் இப்ப இருக்க பொண்ணுங்களுக்கு வராது.”

“முதல்ல உனக்கு மெடோனாவ பத்தி தெரியாது. அவ உன்னை மாதிரி கிடையாது. எனக்கு அவள பத்தி நல்லாவே தெரியும். ரெண்டாவது இது வெறும் பொறாமை பட வைக்கிறதுக்கு மட்டும் இல்ல. அதையும் தாண்டி நிறைய இருக்கு”

“என்ன பண்ண போற?”

“பண்ணி முடிச்சப்புறம் சொல்லுறேன்”

“இப்பவே சொன்னா என்னவாம்?”

“சொன்னா உனக்கு புரியாது. முடிஞ்சதும் பாரு.. போதும்”

“விஷாலுக்கு பண்ணதே எனக்கு செம்ம சாக்.. என்னை விட்டுருந்தா நாலு அடி வச்சு.. இல்ல ஆள் வச்சு அடிக்க வச்சு ஹாஸ்பிடல்ல போட்டுருப்பேன். அவ்வளவு தான். நீ அவன தலை காட்ட விடாம பண்ணிட்ட.. உனக்கும் அறிவிருக்கு பேப்”

“முதல்ல இந்த பேப்-அ விடு.. சகிக்கல”

“யூஸ்வலா பாய் ஃப்ரண்ட்ட கூப்பிடுற வார்த்தை தான?”

“ஏன் அந்த விஷால அப்படி தான் கூப்பிடுவியா?”

“இல்ல.. பேபினு கூப்பிடுவேன்.. நீ?”

“நான் ஏன் அவன பேபினு கூப்பிடப்போறேன்?” என்று கேட்க, ஒரு நொடி அதிர்ச்சிக்குப்பிறகு ரூபிணி சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“லூசு.. நீ மெடோனாவ எப்படி கூப்பிடுவனு கேட்டேன்.. ஹா ஹா.. அந்த பாட்டி பேசுனப்புறம் உனக்கு மூளை குழம்பிடுச்சு போல?”

“அத பத்தி பேசாத.. பிச்சுடுவேன்” என்று மிரட்டி விட்டு காரை ரூபிணியின் வீட்டுப் பக்கம் திருப்பினான்.

“நீ அசிங்கப்பட்டத அவ்வளவு சீக்கிரம் விடுவனா? பட் அத விடு.. பேப் பேபி வேணாம்னா.. வேற என்ன சொல்லுறது? எல்லார மாதிரியும் உதயானு கூப்பிட்டா ரொம்ப சில்லியா இருக்கும்.. அப்புறம் நம்ம டிராமாவ கண்டு பிடிச்சுடுவாங்க”

“வேற எதாவது ஒன்னு சொல்லு”

“அரகன்ட் ஓகே வா?”

“நானும் இடியட்னு கூப்பிடுவேன் பரவாயில்லயா?”

“உன்னை கொன்னுடுவேன்”

“அப்ப ஒழுங்கா யோசி..”

ரூபிணி அமைதியாக யோசிக்க, கார் அவள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட் முன்னால் வந்து நின்றது.

“என் கார நீ தான் கொண்டு வரனும்” என்று மீண்டும் ஒரு முறை சொல்லி விட்டு, கதவை திறந்து இறங்கினாள்.

பைகள் அனைத்தையும் தூக்கிக் கொண்டவள், கையில் பாதியாக இருந்த சாக்லேட்டை அவனிடம் கொடுத்து விட்டாள்.

“நல்லா இருக்கும் சாப்பிடு” என்றவள் பையை தூக்கிக் கொண்டு திரும்பினாள். பிறகு உடனே நின்று, “உனக்கு பேரு வச்சுட்டேன்… சாக்கோ.. ” என்றவள் கண்ணடித்து வைத்தாள்.

சாக்லேட்டை வாயில் வைத்தவன் ஒரு நொடி அசையாமல் நின்று விட்டு, “அப்ப நீ சுகரா?” என்று கேட்டான்.

“அதுவும் நல்லா தான் இருக்கு.. கார கொண்டு வந்து விட்டுரு.. பை…” என்றவள் சிரிப்போடு உள்ளே சென்று விட்டாள்.

உதயா கையில் இருந்த சாக்லேட்டை பார்த்து புன்னகைத்து விட்டு, சாப்பிட்டுக் கொண்டே காரில் ஏறி கிளம்பி விட்டான்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 19

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
15
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்