Loading

ஆட்சியர் கனவு 40 💞

செம்பரியோன் தன் பரிகளில் ஏறி கார்முகில்தனில் வலம்வர துவங்க, அவனின் வருகையை அறிந்த வெண்ணிலவவள் மெல்ல தன்னை விடுவித்துக் கொண்டு கதிரவனின் பணிக்கு வழிவிட்டாள்.

அதிகாலை பொழுதினில் தன் மஞ்சத்தில் தஞ்சம் கொண்டிருந்த தன்னவளின் வதனத்தை நோக்கியவாறே அந்நாளின் விடியல் ஆணவனிற்கு.

தன் கைவளைவுக்குள் சிறு பிள்ளை போல் திவி இருக்க, அவளை அணு அணுவாய் ரசித்து கொண்டே மனையாளின் பிறை நுதலில் தன் முத்திரையைப் பதிக்கப் போகையில், சரியாக அவனின் அலைபேசி அலற, கடுப்புடன் அதனை பார்த்தவன் திரையில் விழுந்த பெயரால் புருவம் சுருக்கினான்.

திவியை தலையணையில் அவள் தூக்கம் களையாதவாறு படுக்க வைக்க, அமைதியான முகம், கை கால்களை சுருக்கி, மழலையாய் மயங்கி கிடக்கும் தன் மனம் கவர்ந்தவளின் மென்மையை ரசித்து கொண்டே அலைபேசியின் இணைப்பை இணைத்தான்.

ஆதி “சொல்லு சக்தி. வீட்லயே இருந்துட்டு கால் பண்ற.? என்ன டா.? ஏதாவது பிரச்சினையா?”

சக்தி “டேய் பேசணும்டா.. நீ ஜாகிங் கிளம்பிட்டியா..?”

ஆதி “ஒரு 10 மினிட்ஸ் டா.. பிரஸ் ஆகிட்டு வரேன்.”

சக்தி “ம்ம்.” என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

திவிக்கு தன்னவனின் அருகாமை சென்றதும் விழிப்பு தட்டிட, அவன் ஜாகிங்கிற்கு தயாராகி நிற்பதை பார்த்தவள், மூரலோடு அவனருகில் சென்றாள்.

பின்னிலிருந்து தன் கைகளை அவன் கழுத்திற்கு மாலையாக்கிட, அவன் சிரித்துக்கொண்டே, அவளை பின்னிலிருந்து முன்னே இழுத்தான். அதில் சிறிது தடுமாறி, ஆணவனின் பார்வையில் மொத்தமும் தடுமாறி தன்னவனின் நெஞ்சத்தில் தஞ்சமடைந்தாள்.

திவி “ஜாகிங் ஆ?”

ஆதி “ம்ம்ம்.. “

திவி “கால்ல அடி பட்டு இருக்கு.. ஏன் ஸ்ட்ரைன் பண்ணிக்குற..?”

ஆதி “ஏய், லூசு. ஜஸ்ட் சின்ன அடி தான்… நான் பாத்துக்குறேன்… நீ” என்று நிறுத்தி அவளை முழுதாய் ஆராய்ந்தான்.

ஆதி அவளை விலக்கி, கலைந்த கூந்தலோடு, இரவு உடையில் இருக்கும் தன்னவளை ரசிக்க, அக்கலைந்த கூந்தல் இவளின் முகத்தில் தென்றலின் உதவியால் மோதியது.

அவளை புன்னகையோடு ரசித்தவன், அவளின் இடை இறுக்கி நெருங்கினான். பெண்ணவள் மேனி சிலிர்த்திட “ஆ.. ஆதி… என்..என்ன பண்ற..?” என்று தட்டுதடுமாறி வார்த்தைகளை மொழிந்தாள்.

பதில் ஏதும் கூறாமல், அவள் நெற்றியில் படர்ந்திருந்த முடிக்கற்றைகளை காதோரம் ஒதுக்கி விட, ஆணவனின் தீண்டலில் சிலிர்த்துப் போனாள்.

இருவரின் அம்பகங்களும் கவி பாட, அவன் தன் விரல்களால் அவள் மெல்லிடையில் வீணை மீட்டிக்கொண்டு மேலும் நெருங்கினான். இவனின் நெருக்கத்தில் தன் மிழிகளுக்கு காணும் செயலை தடைவிதித்து மூடிக்கொண்டவள், அவன் மேல் சட்டையை மேலும் இறுகப்பற்றி கொண்டாள்.

அலரின் பிறை நெற்றியில் தன் இதழை பதித்தவன்,அதை கண்களிலும் செயல்படுத்தினான். மேலும் முன்னேறி, அவள் இதழ் தாகம் அடக்க குனிந்தவன், இதழைப் பருகும் நேரம்தனில் மீண்டும் அலைபேசி அலறியது. (அட நம்ம சக்தி தாங்க…) அவ்வொலியில் தன்னிலை பெற்றவர்கள் உடனே

பிரிந்திட, திவி ஆதியின் முகத்தை காண இயலாமல் தன் கன்னச்சிவப்பை மறைத்து கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

போனை எடுக்காமல், ஏக்கத்துடன் அவன் அறையை ஒரு முறை பார்த்துவிட்டு கடுப்புடன் வெளியில் சென்றான் ஆதி. சென்ற வேகத்தில் அவனை மொத்தி எடுத்து விட்டான்.

சக்தி “அயோ… அம்மா.. டேய்.. என்னன்னு சொல்லிட்டு அடி டா..” என்று கதற,

ஆதி “எனக்குன்னு எங்க இருந்து டா வரீங்க.. கரடி.. கரடி.. “

சக்தி மனதினுள் ‘ஏன் இவன்  இவ்ளோ டென்ஷன் ஆகுறான்.? ஒரு வேளை தப்பான டைம்ல போன் பண்ணிட்டோமோ.?’ என்று எண்ணி.. “டேய், நீ சொல்றத வச்சு பாத்தா.. நான் ராங் ஆன டைம்ல கால் பண்ணிட்டேன் போல ஆதி.?” என்று இழுக்க,

ஆதி “தெரியுதுலடா என் வென்று.. எரும..” என்று அவனை திட்டி விட்டு, தன் பின்னந்தலையை அழுந்த கோதி தன்னவளின் நினைவை சமன்படுத்தி கொண்டான்.

இருவரும் தங்கள் ஓட்டத்தை ஆரம்பித்தனர்.

முதல் நாள் இரவே தேவ் தெய்வானையிடம் அதிகாலையில் திவியிடம் கணிதம் கேட்க வேண்டும் என்று கூறி இருக்க, தெய்வானை நானே காலையில் அவளை அழைப்பதாக கூறி இருந்தார்.

தன் மருமகளுக்காக தேநீரை எடுத்து கொண்டு அவள் அறைக்கு சென்றார். சரியாக திவியும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வர, தெய்வானையை பார்த்ததும் “என்ன அத்தை நீங்க, நானே கீழ வந்து இருப்பேன்ல.? நீங்க ஏன் மேல வந்தீங்க.?” என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.

தெய்வானை “பரவால்ல திவி மா. இதுல என்ன இருக்கு…” என்று போர்வையை மடித்து வைக்க சென்றார்..

அதில் பதறிய திவி “அச்சோ அத்தை என்ன செய்றீங்க..? வைங்க பர்ஸ்ட்..”

என்று அதட்ட,

தெய்வானை “இதுல என்ன டி இருக்கு.?” என்று கூறி, கலைந்து இருந்த படுக்கையினை பார்த்து தன் சந்ததிகளின் வாழ்வு சிறப்பாக அமைந்து இருக்கிறது என்று மனமார்ந்த நிம்மதி கொண்டார்.

திவி அவரின் கழுத்தை கட்டிக்கொண்டே “அத்தை… இன்னைக்கு என்ன சமையல்.?” என்று கேட்க,

தெய்வானை “உனக்கு என்ன வேணும்னு சொல்லு டி.. இன்னைக்கு சண்டே தான.. உனக்கு வேணுங்குறதா செஞ்சிட்டா போச்சு..” என்று அவளிடம் கூறினாள்.

திவி யோசனையாக பாவனை செய்ய, தெய்வானை “நீ பொறுமையா யோசி டி.. இப்போ தேவ் ஏதோ படிக்குறதுல டௌப்ட்ன்னு சொன்னா.. அவன் உங்க ரூம்க்கு இனிமே வர வேண்டாம்..நீ கொஞ்சம் அங்க போய் சொல்லி கொடுக்குறீயா.?” என்று தயங்கி கேட்க,

திவி “இதுக்கு ஏன் தெய்வம் என்கிட்ட இப்டி தயங்குற.? இதை செய்டின்னா செய்ய போறேன்.. அப்ரோம் தேவ் யாரு என் பையன் மாதிரி. என் அத்தை இப்டி கேட்குறது எனக்கு பிடிக்கல” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

தெய்வானை “சரி சரி.. திவி மா… உனக்கு சரியா கோவப்படக்கூட வரல டி.. போ போய் அவனுக்கு சீக்கிரம் சொல்லி கொடு. இப்போ தான் அவன  எழுப்பி விட்டு வந்தேன்.. சீக்கிரம் போலன்னா அவன் மறுபடியும் பெட்சீட்குள்ள புகுந்துக்குவான்” என்று அவளை தேவ் அறைக்கு அனுப்பினார்.

அவர் கூறிய படியே தேவ் போர்வையை தலையோடு போர்த்தி கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தான்.

திவி அவனை எழுப்பிட, “மா.. கொஞ்ச நேரம்மா.. பர்ஸ்ட் நீ அண்ணிய வர சொல்லு. சரியான தூங்கு மூஞ்சு.. நீ காட்டு கத்து கத்தினா தான் மேடம் கண்ணையே முழிப்பாங்க” என்றிட, திவி கொலைவெறியானாள்.

பதில் ஏதும் கூறாமல், அங்கு இருந்த போத்தலிலிருக்கும் நீரை எடுத்து அவன் முகத்தில் ஊற்றினாள்.

“அயோ.. மழை.. மழை.. அம்மா” என்று அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்.

திவி வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள். ” ஹாஹா ஹாஹா.. அயோ அம்மா.. டேய்.. இன்னும் நீ மழைக்கு பயப்படுறத விடலயா.. ஹயோ.. ஹா ஹா ஹா.. அம்மா.. “

தேவ் “என்ன அண்ணி, நீங்களும் வர வர அந்த முட்டக்கண்ணி மாதிரி கிண்டல் பண்றீங்க.? போங்க அண்ணி..” என்று சிலுப்பி கொண்டான்.

திவி “அச்சோ… சாரி டா.. சரி சரி.. போய் பிரஸ் ஆகிட்டு வா.. சம்ஸ் பாக்கலாம்.. ” என்று கூற, தேவ்வும் குளியறைக்குள் சென்றான்.

திவி அவனின் படுக்கையை சரி செய்து, புத்தகங்களை எடுத்து வைத்தாள். அப்போது அதில் இருந்து ஒரு காகிதம் விழ, யோசனையுடன் அதை எடுத்தாள்.

அதில் தேவ் தன் கைகளில் ரோஜா கொத்துகளுடன் இருக்க, மறு பக்கம் இருக்கும் பெண் வெட்கத்தால் திரும்பி இருக்குமாறு ஓவியம் தீட்டப்பட்டு இருந்தது. அதன் கீழ் மித்து – ரதி என்று இருக்க, திவியின் முகத்தில் யோசனை முடிச்சுகள்.

குளியறையில் இருந்து வெளியில் வந்த தேவ் அவள் கையில் இருக்கும் காகிதத்தை பார்த்து விட்டு அவசர அவசரமாக அவளருகில் சென்றான்.

தேவ் அதை அவளிடம் இருந்து வாங்க போக, திவி அதை தன் கையில் இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

தேவ் “அண்ணி.. ப்ளீஸ் அண்ணி.. தாங்க அண்ணி.. ” என்றிட,

திவி “என்ன தேவ் இது?.. சார் யாருக்கு ப்ரபோஸ் பண்ண போறீங்க..? என்ன டா இது..?”

தேவ் தலையை குனிந்து காலின் பெரு விரலை தரையில் தேய்க்க, “டேய் என்ன டா பண்ற.. பாக்க சகிக்கல..” என்றாள் சிரித்து கொண்டே…

தேவ் “அண்ணி… ” என்று சிணுங்கி, “ப்ளீஸ் அண்ணி.. யார்கிட்டயும் சொல்லாதீங்க..” என்று மன்றாடினான்.

திவி “நீ பர்ஸ்ட் யாருன்னு சொல்லு.. இன்னும் பன்னெண்டாவது கூட முடிக்கல.. அதுக்குள்ள சார்க்கு லவ், ஹான்..?”

தேவ் “நானாவது இப்போ.. நீங்கலாம் எட்டாவதுல இருந்தேன்னு எனக்கு தெரியும் திவி மா” என்றிட,

திவி “ஹிஹிஹி.. அதுலாம் அப்டி தான் டா.. நீ டாப்பிக்க மாத்தாதா.. ஒழுங்கா சொல்லு யாரு அந்த அப்பாவி ஜீவன்?” என்று கேட்டாள்.

தேவ் கதவை சாத்திவிட்டு, திவியின் கைகளை பிடித்து கொண்டு “நீங்க தான் என்னோட பர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் பிரண்ட். என் லவ்வ இன்னும் அவ கிட்டயே சொல்லல. உங்க கிட்ட தான் சொல்றேன். எனக்கு நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.. ப்ளீஸ் அண்ணி..”

திவி சிரித்து கொண்டே “சார் ரொம்ப பீடிகை போடுறீங்க.. அந்த பொண்ணு அவ்ளோ பெரிய ஆளா.?”

தேவ் “ஹ்ம்.. ஆமா.. அவள எனக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும்.. நீங்க தான் அவகிட்ட பேசி அவ மனசுல என்ன இருக்குன்னு கேட்டு சொல்லணும்.. எனக்கு தெரியும் அண்ணி.. இந்த வயசுல இதுல கவனம் போக கூடாது.. அதான் நான் இன்னும் அவ கிட்ட கூட சொல்லல.. அப்ரோம் இன்னொரு விஷயம்..நான் சொன்ன உடனே நீங்க வில்லியா மாற கூடாது சரியா.. நான் உங்க செல்ல தேவ் தான.. எனக்காக நீங்க இத செஞ்சி தான் ஆகணும் அண்ணி” என்றான். 

திவி “நீ முதல சொல்லு டா.. ” என்றாள் அவனின் தலையை கோதி கொண்டே..

தேவ் “அண்ணி.. நான்.. நான்..”

திவி “நீ தான் டா.. சொல்லு.. ஹு இஸ் தி லக்கி கேள்.?”

தேவ் “அண்ணி.. நான் பாரதிய தான் அண்ணி லவ் பன்றேன்.. “என்றதில் திவி அதிர்ந்தாலும் முகத்தில் காட்டாது அவனையே கூர்ந்து நோக்கினாள்.

தேவ் அவள் முகம் பாராது “எப்போன்னு தெரியல அண்ணி. ஆனா அவன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவள சீண்டுறதுல இருந்து அவள சமாதானம் செய்றது வரை.. இது ஈர்ப்புன்னு எனக்கு தோணும் அண்ணி.. அதான் நான் பெருசா எடுத்துக்கல.. ஆனா அவள பாக்குற ஒவ்வொரு நிமிசமும் எனக்கு என்னமோ பண்ணுது அண்ணி.. எப்டி சொல்றது..

பசிக்கும் ஆனா சாப்பிட முடியாது.. தூக்கம் வரும் ஆனா தூங்க முடியாது.. இப்போ டி.வி.ல நமக்கு ரொம்ப புடிச்ச பாட்டு ஒடிட்டு இருக்கும்.. அப்போ ஓஓன்னு கத்தி ஆடனும் போல இருக்கும்.. ஆனா ஆட முடியாது.. நம்மள சுத்தி ஆள் இருப்பாங்கன்னு ஒரு மாதிரி இருக்கும்ல.. அப்டி இருக்கும் அண்ணி அவள பாக்குறப்போ..

இன்னும் சொல்லனும்னா.. சரக்கு அடிச்சா வாந்தி வர மாதிரி இருக்கும் ஆனா வராது.. ” என்று கூறிட,

திவி பக்கென சிரித்து “உனக்கு சரக்கு அடிக்குற பழக்கம் கூட இருக்கா டா. சொல்லவே இல்லை..” என்றதில், தேவ்க்கு தான் ஏதோ வெட்கம் சூழ்ந்து கொண்டது.

தேவ் “அண்ணி.. உங்களுக்கு இதுல சம்மதம் தானே..? ” என்று அவளை ஏக்கமாக பார்த்தான்.

திவி அவன் சிகையை கோதி “எனக்கு உன்னை பத்தியும் தெரியும்.. அவள பத்தியும் தெரியும் தேவ்.. நான் இருக்க வீட்லயே அவளும் இருந்தா எனக்கு சந்தோசம் தான்.. ஆனா ரெண்டு பேரும் முதல்ல படிப்பை முடிங்க.. அப்ரோம் நானே வீட்ல இத பத்தி பேசுறேன் சரியா…? “என்று அவனுக்கு எடுத்துரைத்தாள்.

தேவ் “கண்டிப்பா அண்ணி… ரொம்ப தேங்க்ஸ் அண்ணி… ” என்று கூற,

திவி “இப்போ தான் பெஸ்ட் பிரண்ட்ன்னு ரீல்லாம் விட்ட.. தேங்க்ஸ் சொல்ற.. ஹான்.?”

தேவ் “ஈஈஈ…அண்ணி கவிதை கூட வருது தெரியுமா.. ” என்று தன் விரல்களை கடித்து கொண்டே கூற,

திவி “சார் இப்போ என்ன பண்றீங்க.?”

தேவ் “அச்சோ.. அண்ணி.. எனக்கு வெட்கம் வெட்கமா வருதே..” என்று அவள் மடியில் முகம் புதைக்க,

திவி “அட ச்சீ.. எருமை.. எந்திரிச்சு போ டா.. சம் சொல்லி குடுத்துட்டு நான் அடுத்த வேலைய பாக்க வேண்டாம்.. என் பேபி வேற கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு..”என்று நொடித்து கொண்டாள்.

தேவ் “சரி சரி. தெய்வமே நானா சொல்ற வரை யார்கிட்டயும் ப்ளீஸ் உளறி வைக்காதீங்க அண்ணி.. ” என்று கெஞ்சினான்.

திவி “சரி டா… இப்போ கொஞ்சம் கணக்கு பிக் அப் பண்லாமா..?”

தேவ் “அந்த கருமாந்திரம் தான் வர மாட்டிங்குது.. நான் வேணா பாரதிய பிக் அப் பன்னவா..?”

திவி “விட்டா நீ என்ன மாமா வேலை பாக்க வைக்காம விட மாட்ட.. சேட்டை..  வா ஒழுங்கா கவனி..” என்று அவனிற்கு கணிதம் சொல்லி கொடுத்தாள். இரண்டு மணி நேரம் இவள் கணிதம் சொல்லி கொடுத்து கொண்டு இருந்தாள்.

ஆதி “சொல்லு டா.. என்ன பேசணும்..?”

சக்தி “என்ன நீ நம்புற தான டா.?”

ஆதி “இது என்ன டா கேள்வி.. லூசு.. உன்னை நம்பாம வேற யாரை நம்ப போறேன்… என்ன விஷயம் சொல்லு..”

சக்தி “நான் ஏன் கேரளா போனேன்னு நீ கேட்கவே இல்ல டா..” என்றான் வருந்திய குரலில்..

ஆதி “சொல்ற விஷயமா இருந்தா நீயே சொல்லி இருப்ப டா.. சரி கேட்குறேன்.. எதுக்கு போன.?”

சக்தி “மதி விஷயமா..”

ஆதி புருவம் சுருக்கி..” எந்த மதிய சொல்ற?”

சக்தி “நம்ம இன்னிசைமதி டா.. இன்னும் அவன் மேல கோவமா டா..?”

ஆதி “வேற ஏதாவது பேசு.. “

சக்தி “நான் சொல்றத கொஞ்சம் கேளு டா.. அவன் பாவம்..”

ஆதி “ஓ. சரிங்க சார்.. சொல்லுங்க கேட்குறேன்” என்றான் பவ்வியமாக..

சக்தி “ப்ச்.. டேய். விளையாடாத டா..”

ஆதி “நான் சீரியஸ்சா தான் கேட்குறேன்.. சொல்லு..”

சக்தி “மதி ஒரு பொண்ண லவ் பண்ணான்ல.. அந்த பொண்ண சந்தனாவும் ராஜரத்தினமும் எங்கேயோ கடத்தி வச்சி இருக்காங்க டா.. வெளிய அவ இறந்துட்டதா நம்ப வச்சி இருக்காங்க..”

ஆதி “சரி.. இது அண்ணன் தங்கச்சி, அப்பன் பையன்னுக்குள்ள இருக்க பிரச்சனை டா.. அதுக்கு என்னை என்ன செய்ய சொல்ற..?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

சக்தி “டேய் மச்சான்.. அந்த ஆளு அவனோட அப்பாவ இருந்தாலும் மதிக்கு அவங்க செய்றது எதுவும் பிடிக்காது டா.. அது மட்டும் இல்ல.. அவன் ஆசிரமத்துல தான வளந்தான்.. புரிஞ்சிக்கோ ஆதி.. “

ஆதி “என்ன டா புரிஞ்சிக்க சொல்ற.. என்னைக்காவது உங்க ரெண்டு பேர் கிட்டயும் நான் ஏதாவது மறைச்சு இருக்கேனா..? அவன் மட்டும் ஏன் டா.. இல்ல நீயும் அவன மாதிரி எல்லா விஷயமும் மறைச்சி தான் வச்சி இருக்கியா..?” என்று கடிந்தான்.

கைகளை மடக்கி தன் ஆத்திரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், “இதுக்கும் கேரளா நீ போனதுக்கும் என்ன சம்பந்தம்..?”

சக்தி அங்கு நடந்தவற்றை விவரித்து, “எனக்கு அவங்க என்னமோ தப்பு செய்றாங்கன்னு தோணுது டா.. அதுவும் ரொம்ப பெரிய தப்பு.. “

ஆதி “இப்போ அந்த பைத்தியம் எங்க இருக்கான்.?”

சக்தி அவன் கூற்றில் சிரித்து “அவன் இப்போ நாசிக் போய்ட்டு இருக்கான்.. ரத்தினம் கவிய அங்க தான் வச்சி இருக்கான்னு கேரளால அந்த தடியன் சொன்னான் டா..”

ஆதி “தனியாவா போய் இருக்கான்.. “

சக்தி “ம்ம்ம்.. ஆமா… “

ஆதி “போன் பண்ணு..”

சக்தி அவனை அழைக்க, இரண்டாவது அழைப்பில் எடுத்தவன் “ஆஆ.. சொல்லு சக்தி.. “

ஆதி “நான் ஆதி.. உடனே கிளம்பி வா” என்று மட்டும் சொல்லி விட்டு வைத்து விட்டான்.

மதிக்கோ மதி நிறையும் அளவு மகிழ்ச்சி.. ஐந்து வருடம் பேசாத தன் நண்பன் இன்று நண்பன் என்ற உரிமையோடு பேசிவிட்டான் என்று.. உடனே அடுத்த ஸ்டேஷனில் இறங்கி பிறந்தகம் திரும்பினான் மதி.

பாரதி தன் அன்னையிடம் அடம்பிடித்து அவளை பார்க்க வந்து விட்டாள்.

தெய்வானை “வாடி வாயாடி.. எங்க நீ மட்டும் தான் வந்தீயா..?”

பாரதி “ஆமா.. அத்தை… அக்காக்கும் மாமாவுக்கும் எப்டி இருக்கு. எங்க ரெண்டு பேரும்..?.”

செல்வி “திவி.. தேவ்க்கு சொல்லி கொடுத்துட்டு இருக்கா.. ஆதியும் சக்தியும் ஜாகிங் போய் இருக்காங்க டா.. “

பாரதி “அது சரி.. அந்த நொண்டி கால வச்சிக்கிட்டு உங்க பிள்ளைக்கு ஜாகிங்லாம் தேவையா..?” என்று வம்பிழுக்க,

தெய்வானை “ஏய்… வாய மூடு டி.. என்ன பேச்சு பேசுற.. என் பையன் நொண்டின்னு நீ பாத்தியாக்கும்” என்று அவளை அதட்ட,

பாரதி “ஈஈஈ.. சும்மா தெய்வம்.. இதுக்கலாம் போய் சீரியஸ் ஆகலாமா.. சில் தெய்வம்..”

செல்வி “இப்டி ஐஸ் வச்சே தப்பிச்சிக்குற..”

பாரதி “அப்ரோம் நம்ம வண்டி ஓடணும்ல மா.. சரி சரி.. நீங்க எங்க கிளம்பிட்டீங்க..?” என்று கேட்டாள்.

செல்வி “வீட்ல இனிமே யாருக்கும் எதுவும் ஆக கூடாதுன்னு கோவிலுக்கு போய்ட்டு வரேன் மா.. நீ சாப்பிடு.. நான் வந்துடுறேன்.. அண்ணி நான் போய்ட்டு வரேன்.. ” என்று கிளம்பினார்.

தெய்வானை தான் இவர் எந்த முறையில் அண்ணி என்று அழைத்தார் என்று குழம்பி போனார்.

பாரதி “அத்தை… தேவ் எங்க..?”

தெய்வானை “அவன் தான் படிச்சிட்டு இருக்கான்ல.. இப்போ என்ன அவன கூப்பிட்டு வம்பு பண்ணலன்னா உனக்கு தூக்கம் வராதே..”

பாரதி “ஆமா ஆமா.. உங்க பையன் ரொம்ப தான் படிக்குறான்…  ரொம்ப படிக்க வைக்காதீங்க அத்தை.. அப்ரோம் கல்யாணம் ஆகிட்டா உங்களை முதியோர் இல்லத்துல சேத்திட போறான்… ” என்று கூற,

தெய்வானை “ஹான்.. அதுலாம் என் பையன் பண்ண மாட்டான்.. உனக்கு ஏன் டி இப்டி ஒரு ஆசை..”

பாரதி “சும்மா தான் தெய்வம்.. உன் பையன் செய்ய மாட்டான்.. வரவ அப்டி இருக்க மாட்டாள்ள.. “

தெய்வானை “தேவ்க்கு அருமையான பொண்ணு அமையும் பாரு…”என்று பெருமையாக பேசிட..

பாரதி “எல்லாரும் என் அக்கா மாதிரி இருக்க மாட்டாங்க தெய்வம்.. நீ எதுக்கும் உன் ரெண்டாவது பையன் கிட்ட ஜாக்கிரதையா இரு..” என்று அறிவுரை கூறினாள்.

தெய்வானை “இவ்ளோ பேசுரியே நீயே அவன கட்டிக்கிறது..”

பாரதி “எதே… உன் பையனையா? நானா..? அவன கட்டிக்குறதுக்கு நான் சாமியாரா போய்டலாம்.. அவன் சும்மா சும்மா என்னை சீண்டிக்கிட்டே இருப்பான்.. போண்டா மூக்கா..” என்று சலித்து கொண்டாள்.

அவளின் பதிலில் சிரித்தவர் “வாய்.. வாய்.. வாய்..” என்று அவளின் தலையில் அடித்தார்.

அப்போது அங்கு மகிழுந்து வரும் சப்தம் கேட்க, பாரதி “இருங்க இருங்க.. நான் போய் பாக்குறேன்.. ” என்று கூறி வந்து பார்க்க,

ராஜரத்தினத்தின் குடும்பம் தான் வந்திருந்தது..

இதில் பாரதி உறைந்து நிற்க, சக்தியோ அவர்களின் கூற்றில் அதிர்ந்து போனான்….

கனவு தொடரும்🌺🌺🌺🌺🌺

 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்