Loading

பாகம் – 50

விக்ரம் ஒன்றும் புரியாமல் ராஜேந்திரனை பார்த்து, “என்ன நடிக்கிறீங்களா?‌. நீங்க இன்னொரு லேடி கூட அபக்க்ஷன் வச்சிருக்கீங்க என்று நான் கண்டு பிடித்திட்டேன் என்று”.

“என்னோட சொந்த அப்பா பெயரை யூஸ் பண்ணி நீங்க தப்பிக்க பாக்குறீங்களா?” என்று யோசிக்காமல் வார்த்தையை விட்டு விட்டான். 

கோபமாக ராஜலட்சுமி, “விக்ரம் என்ன பேசிக்கிட்டு இருக்க? யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லுற” என்றார். 

கிச்சனில் இருந்து நிலா அவசரமாக விக்ரமை நோக்கி சென்றாள். 

நிலா, “விக்ரம் நீங்க பேசுற வார்த்தை ரொம்ப பெரிய தப்பு. இன்னைக்கு காலையில் நானும் ராஜேந்திரன் மாமாவை ஃபாலோ பண்ணிட்டு போனேன்”. 

“ஃபர்ஸ்ட் அவங்க ஒரு காபி ஷாப்க்கு தான் போனாங்க நானும் நீங்க சொல்றது சரி என்று தான் சந்தேகப்பட்டேன்”.

“ஆனால், அதுக்கு அப்புறம் அவங்க நேராக கோர்ட்டுக்கு தான் போனாங்க. கோர்ட்டில் இருந்து நேரா ஆஃபீஸ்க்கு போய்ட்டாங்க. நடுவில் வேறு எங்கேயுமே அவங்க போக வில்லை”.

“எனக்கு இதுல வேறு ஏதோ ஒன்னு இருக்கு என்று அப்போவே தோணுச்சு”. 

“எனக்கு தெரிஞ்சு மாமா சொல்றதும் அத்தை சொல்றதும் முழுக்க முழுக்க உண்மை. நீங்க நம்புங்க பிலிஸ்” என்றாள். 

விக்ரம் கோபமாக, “இல்ல நிலா உனக்கு புரியாது. இவங்க சொல்றது உண்மையா இருந்து இருந்தால். இதை இவங்க என்கிட்ட எப்படியோ சொல்லி இருக்கலாம்”.

“பத்து வருஷத்துக்கு முன்னாடியே சொல்லி இருக்கலாம். ஆனால் அப்போ எல்லாம் சொல்லாதவங்க நேத்து நீ லட்சுமி அம்மா கிட்ட இந்த விஷயத்தை பத்தி பேசினதும் இன்னைக்கு வந்து சொல்றாங்க”.

“இதிலேயே தெரியலையா இது எல்லாமே ஏதோ ஒரு டிராமா மாதிரி தான் எனக்கு தோணுது” என்றான். 

ஒரு பெருமூச்சு விட்ட படி ராஜேந்திரன், “விக்ரம் நீ சொல்றது சரி தான் பா. உன்னோட யோசனையும் சரிதான்”. 

“நான் பத்து வருஷத்துக்கு முன்னாடியே இந்த விஷயத்தை பத்தி உன்கிட்ட சொல்லி இருக்கலாம்”. 

“ஆனா நான் அப்போ சொல்லி இருந்தால் கட்டாயம் உன்னோட படிப்பு வீணாகி இருக்கும்”. 

“நீ உங்க அப்பாவை சாவடிச்சது யாரு? என்ன என்று கேட்டு அவங்களை நீ திருப்பி சாவடிக்க போறேன் என்று கிளம்பி இருப்ப”.

“உன் வாழ்க்கையை நாங்க எப்படி வீணாக்குவோம். உன்னை நாங்க எங்களோட பிள்ளையா தான் நினைச்சோம்”. 

“அதனால் தான் உன்னை கெட்ட வழியில் போக விடக்கூடாது என்று நினைச்சு நாங்களே அந்த பிரச்சனையை முடிச்சிட்டு உன்கிட்ட சொல்ல வேண்டும் என்று காத்துகிட்டு இருந்தோம்”.

“ஆனால் அந்த பிரச்சனை முடிய இத்தனை வருஷம் ஆகிடுச்சு பா” என்றார். 

விக்ரம், “இது உண்மையாக இருந்தாலும் நீங்க என்கிட்ட மறைச்சது ரொம்ப பெரிய தப்பு” என்றான்.

ராஜேந்திரன், “இறந்து போனது உன்னோட அப்பா நியாயப்படி நாங்க இதை உன்கிட்ட சொல்லி தான் இருக்கணும். அதுக்காக என்னை மன்னிச்சிடுப்பா”.

“உன் அப்பா எப்படி இறந்து போனார் என்றால் அவரோட க்ளோஸ் ஃப்ரெண்ட் கூட ஒரு பிசினஸ் டீலிங் ல கொஞ்சம் பிரச்சனை ஆகிடுச்சு. அது கொஞ்சம் கொஞ்சமா பெருசாக ஆரம்பிச்சிது”. 

“அந்த கோபத்துல அவரோட க்ளோஸ் பிரண்டு தான் அவரை ஆக்சிடென்ட் பண்ணி சாவடிச்சது. இது ஆரம்பத்துல எனக்கே தெரியாது”. 

“ஆனால் எனக்கு அந்த ஆக்சிடென்டில் மட்டும் டவுட் இருந்துட்டே இருந்துச்சு”. 

“அதனால் தான் டிடெக்டிவ் மூலியமா விசாரிச்சுக்கிட்டே இருந்தேன். சில வருஷத்துக்கு அப்புறம் தான் அது ஆக்சிடென்ட் இல்ல மர்டர் என்று கேஸ் ஆச்சு”. 

“அப்போத்தில் இருந்து இந்த கேசில் நானும் அந்த லேடி லாயரும் ரொம்பவே போராடினோம். இப்போ தான் அதுக்கு ஒரு முடிவு வந்துச்சு” என்றார்.

நிலா, “துருவ் என்ன இப்படி அமைதியாவே இருக்கீங்க. அவங்க இவ்வளவு தூரம் சொல்றாங்க இல்ல உங்களுக்கு இன்னுமா நம்பிக்கை வரலை”.  

“என்னாலேயே அவங்க சொல்றதை புரிஞ்சுக்க முடியுது. உங்களால முடியலையா” என்றாள்.

விக்ரம், “சரி இந்த விஷயத்தை என்னால் புரிஞ்சுக்க முடியுது. நான் ஒத்துக்குறேன். ஆனால் இதுக்கு முன்னாடி இன்னொரு விஷயம் நடந்துச்சு அது?” என்றான் கேள்வியாக. 

அனைவரும் புரியாமல் விக்ரமையே பார்த்தார்கள். விக்ரம், “இந்த விஷயம் எல்லாம் எப்போ தெரியும் அம்மாவுக்கு” என்றான்.

ராஜலட்சுமி, “ஒரு நாள் உங்க அப்பா ரொம்ப சோகமா இருந்தாரு. அப்போ நான் என்னன்னு கேட்கும் போது என்கிட்ட இந்த எல்லா விஷயத்தை பற்றியும் சொன்னாங்க”. 

“ஆரம்பத்தில் எனக்குமே இது எதுவுமே தெரியாது. ஆனால் என்கிட்ட சொல்லிட்டு இதை பற்றி விக்ரம் கிட்ட எதுவுமே சொல்ல கூடாது எந்த ஒரு சூழ்நிலையிலும் என்று சொல்லிட்டாங்க”. 

“அப்போ நானும் சொன்னேன் உங்க அப்பா கிட்ட. விக்ரம் உங்களை இதுபோல் தப்பாக நினைத்துக் கொண்டு இருக்கான். என்னால் அவனுக்கு புரிய வைக்க முடியலை”. 

“உங்க மேல் அவன் கோவமாக இருக்கான். நீங்க ஏதோ ஒரு அஃபர்ல இருக்கிறதா தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கான் என்று”.

“அதனால் இதை அவனிடம் சொன்னால் தான் அவனுக்கு தெரியும் நீங்க தப்பு பண்ண வில்லை என்று”. 

“நான் சொன்னதுக்கு உங்க அப்பா ஒரே ஒரு பதில் தான் சொன்னாரு. விக்ரம் என்னை பற்றி தப்பா நினைக்கிறதில் எனக்கு கவலை இல்லை”. 

“இந்த உண்மையை சொல்லி அவன் வாழ்க்கையே வீணாக போச்சு என்றால் அப்போ உனக்கு சந்தோஷமா? அப்படின்னு கேட்டார்”. 

“அதுக்கு மேல் என்னால் அவரிடம் எதுவுமே பேச முடிய வில்லை. நானும் இந்த உண்மையை கஷ்டப்பட்டு விக்ரம் கிட்ட இருந்து மறைச்சுட்டேன்” என்றார். 

விக்ரம், “நான் அப்பாவை பற்றி சொன்னது தப்பு தான் நான் ஒத்துக்குறேன். ஆனால் அப்போ நான் சொல்லும் போது உங்களுக்கு இந்த விஷயத்தை பற்றி எதுவுமே தெரியாது”. 

“ஆனா நீங்க நான் சொன்ன விஷயத்தை ஏன் நம்பவே இல்லை. அப்போ நீங்க என்னை உங்க பிள்ளையாக நினைக்க வில்லை என்று தானே அர்த்தம்”.

“இதுவே என் இடத்தில் ஆதித்யா வந்த சொல்லி இருந்தால் நீங்க கட்டாயம் அதை நம்பி இருப்பீங்க இல்ல”. 

“அதை பற்றி அப்பா கிட்ட ஒரு வார்த்தை ஆச்சு கேட்டு இருப்பிங்க இல்ல” என்றான் கண்கள் கலங்கியபடி. 

ராஜலட்சுமி, “இல்ல அந்த இடத்தில் நீ இருந்தாலும் சரி. ஆதித்யா இருந்தாலும் சரி மித்ரா இருந்திருந்தாலும் சரி”.

“நான் மூணு பேரையும் ஒரே மாதிரி தான் நடத்தி இருப்பேன். அன்றைக்கு நீ சொல்லும் போது உன்னை நான் அடிச்சிட்டேன்”. 

“அதேபோல் அந்த இடத்தில் யார் இருந்து இருந்தாலும் சரி அவங்களையும் நான் அடிச்சு தான் இருப்பேன்” என்றார். 

நிலா, “ஏன் துருவ் உனக்கு இன்னும் புரியலையா. அவங்க உன் மேல் வச்சிருக்க பாசம் உண்மை தான் அவங்க உன்னை பிள்ளையாக நினைக்கிறதும் உண்மை தான்”. 

“ஆனால் அதைவிட அதிகமா அவங்க புருஷன் மேல் அவங்களுக்கு காதல் அதிகமாக இருக்கு”. 

“அதனால் தான் ஒரு சின்ன சந்தேகம் கூட அவங்களுக்கு வரவே இல்லை”.

“நீ சொல்லும் போது அவங்களுக்கு கோவம் வந்ததற்கான காரணம். நீ சொந்தப் பையன் இல்லை என்பது கிடையாது”. 

“அவங்க புருஷன் மேல் அவங்களுக்கு இருக்கின்ற அதிகமான காதல். அதுதான் அவங்களுக்கு கோபத்தை உண்டாக்கியது”.

“இவ்வளவு ஏன் துருவ் இன்னும் 30 வருஷத்துக்கு அப்புறம் நமக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தை வந்து உன்னை பத்தி தப்பா சொன்னால். நான் எப்படி பிஹேவ் பண்ணுவேன்”. 

“அப்படியா என்றா? நான் கேட்பேன். ஓங்கி ஒன்னு கன்னத்தில் வைக்க மாட்டேன். எப்படிடா என் புருஷனை பற்றி நீ தப்பா சொல்லுவ என்று”. 

“இப்போ உங்க அம்மாவும் அதை தானே பண்ணி இருக்காங்க. அப்போ உங்க அம்மா பண்ணதும் சரி தானே” என்றாள். 

பிறகு விக்ரம், ஒரு வழியாக நிலா கடைசியாக கூறிய எக்ஸாம்பிளிள் எல்லாத்தையும் புரிந்துக் கொண்டு சரண் அடைந்து விட்டான். 

விக்ரம் ஓடி சென்று ராஜேந்திரனை கட்டி அணைத்து “ஐ அம் சாரி அப்பா இத்தனை வருஷமா நான் உங்களை தப்பா நினைச்சுட்டேன் என்னை மன்னிச்சிடுங்க”. 

“நீங்க எனக்காக இவ்வளவு தூரம் யோசிச்சு இருக்கீங்க. ஆனால் நான் உங்களை பற்றி தப்பாவே நினைச்சுக்கிட்டு இருந்துட்டேன்” என்றான். 

ராஜேந்திரன், “அவன் முதுகில் தட்டிக் கொடுத்த படி என்னைக்குமே நீ என் பிள்ளை தான்”. 

“என்னைக்கு நான் உன் கையை பிடித்து இங்க கூட்டிட்டு வந்தேனோ அன்னையில் இருந்து நான் உன்னை என்னோட பிள்ளையாக தான் நினைக்கிறேன்” என்றார். 

ராஜலட்சுமி, “இனிமே அம்மாகிட்ட பேசுவியா? விக்ரம்” என்றார் கவலையான குரலுடன். 

விக்ரம் கண்கள் கலங்க அவரைப் பார்த்தவன் “நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க அம்மா உங்களையும் நான் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்” என்றான். 

ராஜலட்சுமி, “அவனை கட்டி அணைத்து எல்லாம் நிலா இந்த வீட்டுக்கு வந்த நல்ல நேரம். எல்லாமே நல்லதா நடக்குது. நம்ம குடும்பமே ஒன்னு சேர்ந்துடுச்சு” என்றார் சந்தோஷமாக.

நிலா, “இங்க பாருங்க துருவ் நீங்களும் என் மேல் உங்க அப்பாவை போல் காதலோடு இருக்கணும்”. 

“நம்ம இத்தனை பேர் வீட்டில் இருக்கும் பொழுதும் உங்க அப்பா எப்படி எல்லார் முன்னாடியும் உங்க அம்மாவை இந்த வயசுலயும் தூக்கி சுத்துனாரு பாத்தீங்களா”.

“இது போல் நீங்களும் என் மேல் எப்பயுமே காதலோடவே இருக்கணும்” என்று மாமனாரை கேலி செய்தாள்.

ராஜேந்திரன், “என்னை போல் இருக்கணும் என்று சொல்லு. ஆனால் அது என்ன மா இந்த வயசுலயும் அப்படின்னு சொல்ற. எங்களுக்கு அப்படி என்ன வயசு ஆகிடுச்சு ஜஸ்ட் 50 + அவ்வளவு தான்” என்றார்.

ராஜலட்சுமி, “வெட்கத்துடன் சும்மா இருங்க சின்ன பசங்க கிட்ட எப்படி பேசணும் என்றே தெரியாது உங்களுக்கு” என்றார்.

நிலா வேண்டும் என்றே, “இங்க பாருங்களேன் அத்தை எப்படி வெட்கப்படுறாங்க” என்று கேலி செய்து சிரித்தாள்.

பல வருடத்திற்கு பிறகு அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்தார்கள்.

பாகம் – 51

சக்தி பார்த்து பார்த்து சுஜிதாவுக்கு ஆசை ஆசையாக ஒரு கோல்டன் ரிங் ஒன்று வாங்கினான். 

அந்த ரிங் ஹார்டின் வடிவத்திலும், சுண்டிவிரலில் போடக் கூடியதாகவும் இருந்தது. 

இரண்டு மோதிரம் சேர்ந்தால் தான் ஹார்ட்டின் வடிவம் வரூம். தனி தனி மோதிரமாக பார்க்கும் போது அவர்கள் பெயரின் முதல் எழுத்து யெஸ் வடிவம் போல் தெரியும்.

கடை கடையாக அலைந்து திரிந்து அவளிடம் தன் காதலை எப்படி எல்லாம் சொல்ல வேண்டும் என்று பல யோசனைகளை செய்து பார்த்தான்.

பிறகு இந்த டிசைன் மோதிரத்தை தேடிப் பிடித்து ஒரு வழியாக வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி சென்றான். 

சக்தி வீடு முழுக்க சுஜிதாவை தேடி வந்தான். ஆனால் அவன் கண்களுக்கு சுஜிதா மட்டும் தென்படவில்லை.  

பிறகு கண்ணம்மாவிடம் விசாரித்தான் சுஜிதா எங்கே? என்று. 

கண்ணம்மா, “நீங்க காலையில் வெளியே போகும் போது சுஜிதா அம்மாவும் வெளியே போய்ட்டாங்க. இன்னும் அவங்க வீட்டுக்கு வரவில்லை” என்றார்.

சக்தி காலையில் இருந்து ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை. சாயங்காலம் ஆயிடுச்சு எங்க போய் இருந்தாலும் இந்நேரம் வந்து இருக்கணுமே என்று யோசித்தபடி அவள் போனுக்கு தொடர்பு கொண்டான். 

அது சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. வீட்டு வாசலுக்கு சென்று பார்க்க மேகமூட்டத்துடன் காற்றும் மழையும் ஆரம்பம் ஆகப்போவது போல் தெரிந்தது. 

அரை மணி நேரத்திற்கு பிறகு வீட்டை வந்தடைந்தால் சுஜிதா. 

சுஜிதா வீட்டுக்குள் நுழையும் போதே சக்தி, “எங்க போயிட்டு வர? சொல்லிட்டு போக மாட்டியா? இவ்வளவு லேட் ஆயிடுச்சு நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா”. 

“வெளியே மழை வர மாதிரி இருக்கு இந்த டைம்ல போயிட்டு ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வருது” என்று படபடவென கத்தினான்.

சுஜிதா, “உங்களுக்கு சர்ப்ரைஸ் தரதாக நான் சொன்னேன் இல்ல அதை வாங்க தான் போயிருந்தேன்” என்றாள்.

சக்தி சட்டென்று அமைதி ஆகிவிட்டான் மெல்லிய குரலில், “மழை வர மாதிரி இருக்கு வீட்டுக்கு வந்துட்டு அப்புறமா சென்று வாங்கிக்கிறது”. 

“அப்படி என்ன உனக்கு அவசரம் இப்பவே வாங்கணும் என்று” சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான். 

சக்தி சற்று நேரம் கழித்து மறுபடியும் சுஜிதா அருகில் வந்தவன், “சரி சர்ப்ரைஸ் தரேன் என்று சொன்னியே எப்ப தருவ?” என்றான் ஆவலாக. 

சுஜிதா, “நான் பிரஷ் ஆகிட்டு வந்து தரேன்” என்று சொல்லிவிட்டு குளியல் அறைக்குள் சென்று விட்டாள். 

சக்தி அவள் பிரஷ் ஆகி வரும் பத்து நிமிடத்திற்குள் பத்தாயிரம் தடவை அந்த ஹாலையே வலம் வந்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த சுஜிதா, “சக்தி எங்கே இருக்க?” என்று குரல் கொடுத்த படி வந்தாள். 

சக்தி அவள் குரலை கேட்டவுடன் சோபாவில் அமர்ந்து கொண்டு ஏதோ முக்கியமாக ஃபோனில் பார்ப்பது போல் பாவனை செய்தான். 

சுஜிதா அவன் அருகில் வந்து, “இங்க தான் இருக்கீங்களா” என்று அவன் கையை பிடித்து கொள்ளைப் புறம் கூட்டிச் சென்றாள்.

சுஜிதா, “சரி இப்போ நான் என்ன சர்ப்ரைஸ்னு சொல்லிடவா?” என்றாள் சிரித்த முகமாக. 

சக்தி ஆவளாக, “சரி எனக்கு ரொம்ப படபடப்பா இருக்கு. என்ன தர போற அப்படின்னு பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு சீக்கிரம் கொடு” என்றான். 

சுஜிதா பேக்கில் இருந்து சில பேப்பர்களை எடுத்து சக்தி எதிரில் நீட்டினாள். 

சக்த, “இப்போ எதுக்கு இது எல்லாம் முதல்ல சர்ப்ரைஸ் கொடு அதற்கு அப்புறம் இது என்ன வென்று சொல்லு” என்றான். 

சுஜிதா, “இது தான் உங்களுக்காக நான் அலைஞ்சு திரிஞ்சு வாங்கின சர்ப்ரைஸ்” என்றாள். 

சக்தி ஒன்றும் புரியாமல், “என்ன சொல்ற நீ. இது என்ன பேப்பர்?” என்று கையில் வாங்கிக் கொண்டான்.

அவனுக்கு முழுமையாக படிக்கத் தெரியா விட்டாலும் ஓரளவுக்கு எழுத்து கூட்டி படித்ததில் அது டைவர்ஸ் பத்திரம் என்று தெரிந்து கொண்டான்.

அதை பார்த்தவன் சக்தி ஒரு புறம் கோபமும் ஒரு புறம் கவலையும் ஆக என்ன செய்வது என்று தெரியாமல் மௌனமாக தவித்தான். 

சுஜிதா முகத்தை நிமிர்த்து பார்த்தான். அவள் சிரித்த முகத்துடனே இருந்தாள். ஆனால் அது பொய்யான சிரிப்பு என்று அவனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. 

சுஜிதா, “என்ன சக்தி என்னோட சர்ப்ரைஸை பார்த்து ரொம்ப வாய் அடைத்து போயிட்டீங்க போலயே” என்று தன் அழுகையை அடக்கிய படி கேட்டால்.

சக்தி, “கனவிலும் இது போல் ஒரு சர்ப்ரைஸை நீ தருவ என்று நான் நினைக்கவே இல்லை” என்றான்.

சுஜிதா, “அப்படியா உனக்கு பிடிச்சிருக்கா?” என்றாள் மனதுக்குள் பிடிக்க வில்லை என்று சொல்லிவிடு என்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக சொல்லு ப்ளீஸ் என்று அழுதால். 

ஆனால் வெளியே சிரித்தபடி, “உனக்கு பிடித்திருக்கும் என்று எனக்கு தெரியும்” என்றாள்.

சக்தி என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் உதட்டோரம் மெல்லிய புன்னகையை மட்டும் சிந்தினான்.

சுஜிதா, “சரி சீக்கிரம் அதுல சைன் போட்டு கொடுங்க. நம்ம அப்ளை பண்ணிடலாம்” என்றாள். 

சக்தி, “நீ நல்லா யோசிச்சு தான் முடிவு எடுத்து இருக்கியா?” என்றான். சுஜிதா அவன் கேட்ட வார்த்தையில் சற்று தடுமாறி போனால். 

இவர்கள் ஹனிமூன் போன இடத்தில் நடந்த ஒரு சம்பவம் அவள் நினைவுக்கு வந்து சென்றது.

ஹனிமூனில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட பொழுது பிளைட்டில் இவள் சக்தியை எவ்வளவு காதலிக்கிறேன்?. 

எந்த அளவுக்கு காதலிக்கிறேன்? எப்போதில் இருந்து காதலிக்கிறேன்?. 

இப்படி அனைத்தையும் கூறியும் சக்தி எந்த ஒரு பதிலும் இல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான். 

அவனை உலுக்கி என்ன சக்தி பதில் சொல்லுங்க என்னும்போது. நான் அப்புறம் சொல்கிறேன் என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான். 

அத்துடன் இரண்டு மாதம் ஆகியும் இன்னும் அவனிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை”. 

“அதிலேயே அவனுக்கு தன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று நினைத்து கொண்டு அவனை விட்டு பிரிய நினைத்து விட்டாள்”. 

ஆனால் அவள் அறியாத உண்மை அன்றும் அவன் சிலையை போல் அமர்ந்து இருந்ததற்கான காரணம்.

இவள் மீது அவனுக்கு முதல் முறையாக ஏற்பட்ட காதல் ஃபீலிங் பற்றி அன்று யோசித்துக் கொண்டிருந்தது. 

அன்று இப்பொழுது எல்லாம் எனக்கு சுஜிதாவை மிகவும் பிடித்து இருக்கு என்று இவளை பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தான். 

இவள் கூறிய எதையும் அவன் காதில் வாங்காமல் போய்விட்டான். 

அது அவன் செய்த தவறா? அல்லது இவள் புரிந்து கொண்ட தவறா? என்று கடவுளுக்கு தான் தெரியும். 

சுஜிதா சக்தியின் பதிலுக்கு கூட எதிர் பார்க்காமல் அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். 

சக்தி, “ஒரு நிமிஷம் நீ எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்துட்ட. ஆனால், நான் உனக்கு திரும்ப சர்ப்ரைஸ் தரேன்னு சொல்லி இருந்தேனே மறந்துட்டியா?” என்றான். 

சட்டென்று அப்படியே நின்ற சுஜிதா திரும்பி அவனை நிமிர்ந்து பார்த்தால். இதை விட பெரிதாக என்ன கொடுத்திடப் போகிறான் என்ற என்னத்துடன். 

சக்தி அந்த இடத்திலே முட்டி போட்ட படி தன் பாக்கெட்டில் இருந்து அந்த கோல்ட் ஹார்ட் வடிவ ரிங்கை எடுத்து சுஜிதாவிடம் நீட்டினான். 

சக்தி “நான் உன்னை முழுமனதாக காதலிக்கிறேன். இதுவரைக்கும் எந்த ஒரு பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காத நான் முதல் முறையாக உன்னை பார்த்தேன்”. 

“உன்னை கல்யாணம் செய்யும் பொழுது என் மனதில் காதல் இல்லாமல் இருந்திருக்கலாம்”. 

“ஆனால், அதன் பிறகு எப்படி என் மனதில் நீ நுழைந்தாய் என்று எனக்கே தெரியவில்லை”. 

“ஆனால், என் உயிருக்கும் மேலாக உன்னை மட்டுமே நான் இப்பொழுது நினைக்கிறேன்”. 

“உனக்கும் என்னை பிடித்திருக்கும் என்ற எண்ணத்துடனே இந்த மோதிரத்தை நான் வாங்கினேன்”. 

“ஆனால், உனக்கு என்னை பிடிக்கவில்லை என்பது இப்பொழுது தான் நான் தெரிந்து கொண்டேன்”. 

“உன்னை என் இஷ்டப்படி திருமணம் செய்து உன் வாழ்க்கையில் நீ எடுக்க வேண்டிய முக்கியமான முடிவை கூட நானே எடுத்து விட்டேன். அதுக்காக முதலில் நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்”.

“கவலைப்படாதே உன்னை என்னுடன் சேர்ந்து வாழு என்று கஷ்டப்படுத்த மாட்டேன். இந்த முடிவு உன்னோடது தான்”. 

“நீ விருப்பப்பட்டால் இந்த மோதிரத்தை வாங்கிக்கலாம்” என்று அவன் மனதில் இருப்பதை கூறிக்கொண்டு இருந்தான்.

சுஜிதா இவ்வளவு நேரமாக சக்தி முன்பு அழுக கூடாது என்று அடக்கி வைத்திருந்த கண்ணீர் மொத்தமும் துளி துளியாக வெளி வர ஆரம்பித்தது. 

அதே சமயம் மழை அதிகமாக பேயத் தொடங்கியது. இருவரும் மழையில் நனைந்து கொண்டு இருப்பதையே அறியாமல் நின்றிருந்தார்கள்.

சுஜிதா சந்தோஷத்தில் சக்தி என்று சொல்ல வாய் எடுக்கும் பொழுதே “சுஜிதா” என்று ஆக்ரோஷமான ஒரு குரல் வந்தடைந்தது. 

சக்தி மற்றும் சுஜிதா இருவரும் ஒரு சேர திரும்பி வாசல் பக்கம் பார்க்க அங்கு ஒரு பெரிய காரில் நான்கு பேர் நின்றிருந்தார்கள். 

அவர்களைப் பார்த்த நொடி சுஜிதா, “அப்பா” என்றால் பதட்டமான குரலில். சக்தி ஒன்றும் புரியாமல் “அப்பா வா?” என்றான்.

அதற்க்குள் மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்த நான்கு பெயரில் ஒருவர் சுஜிதாவின் கையைப் பிடித்து வாசலை நோக்கி அழைத்துச் சென்றார்.

சுஜிதா கலங்கிய விழிகளுடன் சக்தியை திரும்பி பார்த்தாள். சக்தி அதிர்ச்சியோடு இங்கே என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் சுஜிதாவை பார்த்துக் கொண்டிருந்தான். 

அவள் எந்த ஒரு தடையும் சொல்லாமல் அவர்களுடன் சென்று கொண்டிருந்தாள்.

அவர்களில் ஒருவன் சக்தி, சுஜிதாவை பார்த்துக் கொண்டு இருந்த வண்ணம் தலையின் பின்புறம் கட்டையால் அடித்துவிட்டு சென்றான். 

அடுத்த நொடி சக்தி அங்கேயே மயங்கி விட்டான். சுஜிதா அந்த காட்சியை பார்த்தவள் சக்தி என்று கத்தி அழுதாள். சக்தியிடம் ஓடி செல்ல முயற்சித்தால். 

ஆனால், அந்த நான்கு பெயரில் ஒருவர் சுஜிதாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்து அவள் தலை முடியை பிடித்து இழுத்து காரினுள் தள்ளினார். 

வேகமாக அந்த கார் ஆந்திராவை நோக்கி பயணித்தது. 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்