Loading

“ஏய்!!! எவ்ளோ தைரியம் இருந்தா என்னை உதைச்சிருப்ப?”

“உன்னை உதைச்சிருக்க கூடாது டா. கொன்னுருக்கனும்…” என்று பதிலுக்கு எகிறினாள்‌.

மென்மொழி! (மென்மை பெயரில் மட்டுமே)

அவள் எகிறியதில் சற்று அமைதியனவன், தன் தடுமாற்றத்தை மறைத்து(அவசரத்துல கவுன்டர் வரல அவனுக்கு) கெத்தை மெயின்டேன் பண்ண, பேன்ட் பாக்கெட்டில் இருகைகளையும் ஸ்டைலாக புதைத்து,
அவளைத் தவிர
அவன் பல வருடம் வாழ்ந்து வளர்ந்து வந்த அறையை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் விடும் மூச்சு மட்டும் ‘கோபமாக இருக்கிறாராம்’ என்பதை வலியுறுத்தியது.

இந்த கொடுமையை சகிக்க முடியாதவள்,
‘முழிக்கிறத பாரு, திருவிழால காணாம் போன புள்ள மாதிரி’ என்று முணுமுணுத்துவிட்டு “அப்பிடி என்ன குடிமுழுகிச்சு னு இப்பிடி வந்து இருக்க? ம்ம்?”என்று மீண்டும் எகிறினாள்.

“அ…அதை எதுக்கு நான் உன்கிட்ட சொல்லனும்? சும்மா சும்மா என் விஷயத்துல மூக்கை நுழைக்காத. என்னை பாத்துக்க எனக்கு தெரியும்” என்று சிறு பிள்ளை போல ஏசி விட்டு முகத்தை திருப்பியவனைக் கண்டு சிரிப்பு வந்தாலும் அதை காட்டாமல்
“ஏன் சொல்ல மாட்ட? உனக்காக அந்த வயசு போன மனுஷன். உனக்கு என்னாச்சோ ஏதாச்சோ னு பதறி போய் இருக்காரு.” என்று அவள் சொல்லி முடிக்க முன்

“யாரு‌ அவரா? அவரை போய் அந்த பணத்தையே கட்டிட்டு அழ சொல்லு. அதுவும் அவர் சொன்ன தால தானே வந்த. இல்லாட்டி ஏன்‌ வரப்போற?” விரக்தியாக பதிலளித்தவன், கடைசி வாக்கியத்தை மட்டும் வாய்க்குள் முணுமுணுத்தான்.

அதை சரியாக கேட்டவளோ “ அவர் சொல்லாட்டியும் நான் வந்துருப்பேன். ஒரு நல்ல கசின் னா”

இதற்கு அவன்‌ புருவத்தை தூக்கி நக்கலாக பார்க்க, மீண்டும் எழுந்த கோபத்தில் “ இவ்ளோ பேசுறியே. அத்தனை தடவ கால் பண்ணமே எடுத்தியா? என்னையும் உன் அப்பாவையும் விடு, உன் செல்ல அத்தை கால் பண்ணாங்களே அதையாவது எடுத்தியா?”

யார் என்ன சொன்னாலும் தன்னை மகனைப் போல் பார்க்கும் அத்தைக்கு செவிசாய்க்காமல் போன குற்றவுணர்வு தாக்கியதாலோ என்னவோ அமைதியாக இருந்தான்.

நிதானத்தை கையிலெடுத்தவள் “என்னாச்சு?” என்க

“அ..அது…இனியாக்கு இன்னைக்கு கல்யாணம்” என்று உரைத்து விட்டு மீண்டும் அமைதியானான்.

“அதுக்கு!!! உன்னை இப்பிடி வந்து யாராவது இருக்க சொன்னாங்களா?”

‘ப்ச், இப்போ என்னை பண்ணனும் னு சொல்ற?”

“ம்ம்…! கி‌‍ஃப்ட் ட கைல குடுத்து. நீ என் லைஃப் ல இருந்து போனதுக்கு தேங்க்ஸ் னு சொல்லி இருக்கனும்.”

அவன் சற்று அதிர்ந்து பார்க்க

“என்ன முழிக்கிற? அப்பிடி தைரியமா செஞ்சுட்டு வந்துருந்தா நானே உன்கிட்ட வந்து ஆட்டோகிராப் கூட வாங்கிருப்பேன். அதை விட்டுட்டு டைம் பாஸ்கு பழகுனவளுக்காக சோக பாட்டு பாடிட்டு இருக்கான். மாக்கான்!”

அவள் சொன்னதை கேட்டவன்,ஒருநிமிடம் அப்படி செய்திருக்காலாமோ என்று யோசித்ததை கூட வெளிக்காட்டாமல் “ எல்லாம் எனக்கு தெரியும். நீ மொத வெளிய போ. எனக்கு தலை வலிக்குது”

‘இராத்திரி நேரம் னு கூட பாக்காம வந்தேன் பாரு. என்னை சொல்லனும்’ என்று முணுமுணுத்து விட்டு “இங்க பாரு இப்போ நீ கீழிறங்கி வரியோ இல்லையோ, நான் கீழ போய் உங்க அத்தை செஞ்ச மீன் குழம்ப போய் சாப்ட போறேன். உனக்கும் வேணும்னா வந்து சாப்டு. இல்லையா இப்பவே சொல்லு. உன் பங்கையும் சேர்த்தே சாப்பிடுறேன். இருக்குற பசில மொத்த சட்டிய காலி பண்ணாலும் தெரியாது” என்றுவிட்டு கீழிறங்கினாள்.

அவனோ,அவள் சென்ற திசையைப் பார்த்து,” இவ லாம் என்ன ஜீவராசியோ தெரில”

சிறிது நேரத்தில்” உண்மையிலேயே காலி பண்ணிருவாளோ. ச்சே ச்சே இவ பண்ணாலும் அத்தை அப்பிடி பண்ண மாட்டாங்க. இருந்தாலும் இவள நம்ப முடியாது” என்று தனக்குள்ளே பேசிவிட்டு முகத்தை கழுவி வந்து வேகமாக படிகளில் இறங்கி சாப்பாட்டு மேசைக்கு அருகில் இருக்கும் படியில் மட்டும் மெதுவாக இறங்கினான்‌.

வந்தவனை மென்மொழி ஒரு பார்வை பார்த்து விட்டு கடமையே கண்ணாக மீன் குழம்பை பிசைந்து ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தாள்.

‘திங்குறத பாரு’ என்று ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கு அவனையே கவலையாக பார்த்துக் கொண்டிருக்கும் அத்தையை நோக்கி சென்று “சாரி அத்தை. ஃபோனை சைலண்ட் ல போட்டுட்டு தூங்கிட்டேன். மொழி எழுப்பாட்டி எனக்கு தெரிஞ்சிருக்காது. பசிக்குது அத்தை. சாப்பாடை போடுறியா? மீன் குழம்பு வாசம் தூக்குது.”

“உட்காருடா கண்ணா அத்தை பரிமாறுறேன்” என்று அவனை அமர வைத்தார்.

என்றும் இல்லாத அமைதியாய் சாப்பாடை மட்டும் பார்த்து சாப்பிடும் இருவரையும் அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தனர். மற்ற இருவரும்.

மென்மொழி சாப்பிட்டவாறே நிமிர்ந்து அவனைப் பார்த்து
“ எல்லாம் மனுஷ ஜீவ ராசி தான்.” என்க
அவனோ புரியாமல் பார்த்தான்.

“முதல்ல உனக்கந்த டவுட் வந்துச்சில்ல அதான்”

‘ப்பா! யானை காது!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்தவள் இடதுகையால் ஒரு கார்டை அவனை நோக்கி நகர்த்தி “நாளைக்கு அவளோட ரிசப்ஷன். கிராண்டா செய்றாங்கலாம். நாம போறோம்” என்றவுடன்

“நீ எதுக்கு வர்ற?”

“எனக்கும் ஒரு பழைய கணக்கு இருக்கு.” என்றவளை சம்மதமாக தலையசைத்தான். தனியாக மாட்டி தெரியாத கூட்டத்தில் முழிப்பதை விட தெரிந்த பேயை கூட்டிச் சென்று சமாளிப்பது பரவாயில்லை என்று மனதில் நினைத்து விட்டு தான் சம்மதித்தான்.

இவர்களின் உரையாடலை கேட்ட மகிழின் தந்தை சிவநேசன் ஆளுயரத்துக்கு இராணுவ உடையில் கம்பீரமாக இருந்த பெண்மணியின் படத்தைப் பார்த்து
“இதுக ரெண்டும் கிளம்புதுக. என்ன ரகலை பண்ண போறானுங்களோ தெரில மா” என்று மனதில் நினைத்து கொண்டார்.

“அம்மா நான் வீட்டுக்கு போறேன். நீ வேணும்னா இருந்துட்டு வா” என்று விட்டு
படத்தைப் பார்த்து” அத்தை வரேன்”, சிவநேசனைப் பார்த்து” மாமா வரேன்”
பின் சாவகாசமாக அவனைப் பார்த்து திரும்பி “கோண மூக்கா வரேன்” என்று அவள் சொல்லி முடித்து மகிழ் “ஏய்!! “ என்று அடிக்க வரும் முன் எதிரே உள்ள தன் வீட்டிற்கு ஓடி விட்டிருந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்