Loading

தள்ளாடிக்கொண்டே தளராது ஊசலாடும் உயிரினைத் தாங்கியப்படி வந்திட அவரின் தோரணையே உணர்த்தியது அவர் யாரென்பதை…

இன்றும் அப்படித்தான் வீடு வீடாய் சென்று உணவிற்கு பதில் நீரினை மட்டுமே சேகரித்து ஊரின் எல்லையை வந்தடைந்தார் ஊர் பிச்சைக்காரன் பித்தன்…

தினமும், இவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்பதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டிருந்த சில சிறுவர்கள் இன்றும் தொடர்ந்துக்கொண்டிருந்தனர் அதே சலசலப்போடு…

உடலனைத்தும் மங்கிய பிறகு செவிமட்டும் என்ன செய்திடும்…தொடர்பவர்களை உணராதப்படி தன்னைத்தாண்டி உயர்ந்து நின்றுக்கொண்டிருந்த இலை கூட்டங்களிடம் பேசத்தொடங்கினார் பித்தன்…

என்னதான் என்னை பைத்தியம்னு இந்த ஊரே பேசினாலும் எதோ என்னால முடிஞ்சளவு இந்த ஊரை செழிப்பாக்க நான் பண்ண முயற்சில இந்த ஊர்க்காரங்களோட பங்கும் இருக்கு அதனால நீங்க தான் இந்த ஊரை நல்லா பாத்துக்கணும்…

இயற்கையே கை விட்டாலும் நான் உங்கள கைவிட்டதில்லை…

ஆனால், காலத்திற்கேற்ப இப்போ நானும் போக வேண்டிய நேரம் வந்துடுச்சு… ஒருவேளை நான் போன அடுத்த நொடியே கூட நீங்களும் உங்க மரணத்தை சந்திக்கலாம்… ஏன்னா உங்கள வளர்த்த எனக்கே சில சமயம் தோணியிருக்கு… இதுநாள் வரைக்கும் வேணாம்னு சொன்னவங்க இனியாவது உங்கள ஏத்துப்பாங்களானு தெரியல…

ஏன்னா நம் மனிதர்களின் மனம் அவ்வளவு விசித்திரமானது – இனி உங்களை நீங்கதான் காப்பாத்திக்கணும் என்று சொல்லி முடித்தவர் கைகளில் இலையிலிருந்து விழுந்த மழைத்துளியினைத் தாங்கியவாறு அந்த இடத்திலேயே மயங்கி உயிர் துறந்தவர் இயற்கையோடு இயற்கையாக கலந்தார் இயற்கையின் காப்பாளனாக.

– பா.மாரிமுத்து…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. வாவ்..செம்ம..பித்தன் ஊர் மக்களின் பங்கையும் அவர் பண்ண முயற்சில சேர்த்திட்டாங்க..இயற்கையிடம் நாம் காட்டும் அலட்சியம் விசித்திரமானதுதான்…ரொம்ப அழகான படைப்பு