முகத்தில் தெளிக்கப்பட்ட நீரினால் மூச்சு முட்டிட.. வேகமாய்த் தலையைச் சிலுப்பித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு சுற்றி இருப்போரிடம் பார்வையால் இறைஞ்சினான் மணியன். எவரும் மனம் இறங்குவதாய்த் தெரியவில்லை.
‘மனம் இருந்தால் தானே இறங்கும்?’ என்று அவனுள் கேள்வி எழ, அனைவரையும் இயலாமையுடன் நோக்கினான்.
“ஹேய்..” என்ற கூச்சலுடன் ஓங்கப்பட்ட அரிவாள்.. அவனின் பார்வையில் இருந்து வெகுதூரம் விலகிச் செல்ல, ‘நாம் பிழைத்துவிட்டோம்!’ என்று எண்ணிய அடுத்த நொடி, ‘உனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை!’ என்று உரைக்கும் படியாய் மீண்டும் அவனை நோக்கி வந்தது.
எதிரே நின்றிருந்த லட்சுமி, முகத்தில் கலக்கத்தோடு அவனையே பார்த்திருந்தாள். இரு கைகளையும் கூப்பியபடி, முகமெங்கும் பதற்றத்தில் சிவந்து.. பயத்தோடு அங்கு நடக்கும் நிகழ்வைப் பார்த்திருந்தாள்.
வேகமாய் வந்த அரிவாள் மணியனின் கழுத்தைத் துண்டாக்கித் தூக்கி வீசிவிட்டு, அதன் குருதியில் குளித்துச் செந்நிறத்தில் மிளிர்ந்தது. லட்சுமியின் முகம் பயம் தொலைத்து, மகிழ்ச்சியில் மலர்ந்தது.
தரையில் உருண்ட மணியனின் கண்கள் அவளையே வெறித்திருக்க.. இரண்டு மாதங்களுக்கு முன் பக்கத்துத் தோட்டத்தில் மேய்ந்ததற்காக, நிலத்தின் உரிமையாளன் அவனைக் குச்சியால் அடித்து விரட்டிய பொழுது.. “என்னோட மணியை ஏன்டா அடிச்ச..?” என்று அவனிடம் சண்டையிட்டு, ஏற்படாத காயத்திற்குக் கனிவுடன் மருந்திட்டுக் கவனித்துக் கொண்ட லட்சுமியின் முகம் மின்னி மறைந்தது, அவனின் உயிர் தொலைத்த கண்களில்!
“ஏய்.. தொங்கல் இல்லாம ஆட்டோட தலை துண்டாகிடுச்சு, சாமி உன்னோட காணிக்கையை ஏத்துக்கிச்சு லட்சுமி!” என்று கூக்குரலிட்டார் பூசாரி.
எல்லாமே ஒரு தேவைக்குத் தான் போல … 😤 . விலங்குகள் வதைத்தல் எல்லாம் என்று தான் மாறுமோ தெரியல 😔😐😐
உண்மை தான் சிஸ். மிக்க நன்றி..
Oru nimidam
Oru nodi
Uyir bayam
Ella uyirum ondrey
Konnaaa paavam thinnaaa pochchuuu
Itha padikkum pothu yeno yeppothum oru vali varum!!!
Pali koduththal – marana thandanai, kadavulin peyaril!!!!
உண்மைதான் சிஸ்.. இந்த அனுபவம் எனக்கு பதினாலு வயசுல ஏற்பட்டது. இத்தனைக்கும் நான் பலி கொடுத்ததைத் பார்க்கல. அந்த இடத்துல ரெத்தத்தைப் பார்த்தே அழுகை வந்திடுச்சு. அதோட தாக்கம் தான் இந்த குறுங்கதை.
Thank you so much sis for your valuable words..❤️❤️
வலி எல்லா உயிர்களுக்கும் ஒன்று தான். அதை புரிந்து நடக்கும் மனசு தான் யாருக்கும் இருப்பதில்லை. 👌👌👌💐💐
உண்மை தான். Thank you so much prabha ma..❤️❤️
இப்படி ஒரு anglea எதிர்பாக்கல அக்கா.. 🙊
ஆழமாக மனதை வருடிய கதை. குறுகிய வார்த்தைகளை பயன்படுத்தி நிறைவான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள்
அருமையான கற்பனை. வாழ்த்துகள் சகி ❤
பலி கொடுக்கத்தான் மணிகிட்ட அவ்ளோ கனிவா நடந்துகிட்டியா லட்சுமி🙂🙂..சுத்தி இருக்கவங்கள பார்வையால இறைஞ்சியது😭..நல்ல படைப்பு சிஸ்
ஆழமாக மனதை வருடிய கதை. குறுகிய வார்த்தைகளை பயன்படுத்தி நிறைவான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள்