அந்நகரமே பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தது. சூரியனும் சுட்டெரிக்கும் தம் பணியை செவ்வனே செய்துக் கொண்டிருந்தது. மக்கள் யாவரும் காலில் சக்கரத்தைக் கட்டிவிட்டாற்போல் ஓடிக் கொண்டிருந்தார். வயதான ஒருவர் ஒவ்வொரு கடையாக தாம் பார்த்து பார்த்து வாங்கிய பொருட்களை கையில் சுமக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார். நரைத்த முடியும், சுருங்கிய தோல்களும் அவர் 65 வயதை தாண்டி இருப்பார் என காட்டிக் கொடுத்தது.
அவர் நடந்து வந்து கொண்டிருக்கும் போதே சித்திரை வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். அவரது கையில் வைத்திருந்த பைகள் கீழே விழுந்தன. அந்த வழியாக போவோர் வருவோர் எல்லாரும் அவ்வயதானவரை கண்டு சென்றனரே தவிர யாரும் உதவ முன்வரவில்லை. சிலர் அந்தோ பாவம்! என்றனர் , வேறு சிலரோ நமக்கு என்ன வந்தது என்பதை போல கடந்து சென்றனர். அப்போது அங்கே வந்த ஒரு பிச்சைக்காரர் அவ்வயதானவரை தண்ணீர் தெளித்து எழுப்பினார். கிழிந்த சட்டை , சிறிது நரைத்த இருந்த தாடி என ஐம்பதுகளை நெருங்கி இருப்பவர் அவர் .யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன?அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்போ காலி ஆகும் என இருக்கும் இச்சமூகத்தில் மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட அப்பிச்சைக்காரர் விசித்திரமானவராகவே தெரிந்தார் அந்நகர மாந்தர்களுக்கு.
Nice
நன்றி
மாற்றம் நிரந்தரமானது என்று சமூகம் சொல்கிறது, ஆனால் மாற்றம் நேர்மறையான விளைவைக் கொண்டுவருகிறதா இல்லையா என்று அவர்கள் நினைக்கவில்லை
-இன்றைய சமூகம்
👌🏻
Super 👌👌
நன்றி சகி
மிகவும் அருமை. வாழ்த்துகள்
மிக்க நன்றி😍
அருமையான கதை..மனிதாபினம் எல்லா மனிதர்களிடமும் அழியவில்லை..இன்னும் ஒரு சில விசித்திர மனிதர்களின் இதயத்தில் இருக்கின்றது என்பதை காட்டிய படைப்பு.. வாழ்த்துக்கள் 💐💐
நன்றி🤩