Loading

” அன்பு சிறை ”

 

அக்கா ! என்று கூப்பிட்டபடி வேலைக்கு வந்த பஞ்சவர்ணத்தை கண்டு அதிர்ந்து போனேன்.

இட பக்க கண்கள் பாதிமூடிய நிலையில் நீலம் பாய்ந்து கறுத்து கன்றி இருந்த கன்னத்தை பார்த்தவுடன் புரிந்தது அவளின் கணவனின் வேலை என்று.

உழைப்பிற்கு தகுந்த உணவில்லாமல் எலும்புகள் துருத்தி கொண்டிருந்தன.

” மனுஷனா அவன் !!!.உன் புருஷனை ஒரு நாள் உள்ள வச்சு முட்டிக்கு முட்டி தட்டினா தான் சரிபட்டு வருவான்.”

” அது நல்ல ஆளுதான் க்கா..குடிச்சா மட்டும் தான் அதுக்கு பயித்தியம் பிடிச்சு போகுது. அப்பத்தான் இப்படி கண்ணு மண்ணு தெரியாம அடிக்கும்.”

” உன் காசில் வயிறு வளர்த்து கொண்டு உன்னையே இப்படி மாட்டை அடிப்பது போல அடிக்கிறான்.அப்படி அடியும் உதையும் வாங்கி அவன் கூட வாழனும் என்று என்ன தலையெழுத்து உனக்கு.நீ தனியா இருந்தா கூட மூணு வேலை சாப்பிட்டு நிம்மதியா இருக்கலாம்.அந்த சனியனை பேசாம தலைமுழுகு.”

“அதுக்கு அம்மா அப்பா இல்ல அக்கா. நானும் போயிட்டா அனாதையாக சாப்பாட்டுக்கு வழி இல்லாம சுத்தும்.”

“அதுக்கு இப்படி அடி வாங்கி கொண்டே இருக்க போறியா?”

” பரவால்ல க்கா..எனக்கு பழகி போச்சு.”

“என்ன விசித்திரமான அன்பு இது !”

‘தன்னைத்தானே அன்பெனும் கூண்டில் சிறை வைத்துக்கொள்ளும் பெண்கள் இருக்கும் வரை பஞ்சுவின் கணவன் போன்ற ஆட்கள் திருந்த வழி இல்லை’ என்று தோன்றியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

14 Comments

  1. இது என்னவோ உண்மை தான் அக்கா 🐼 . அன்பு எதையும் தாங்கும் னு எங்க அம்மா சொல்லுவாங்க . அது இதுதான் போல 😔 . நாம அன்பு னு நினைச்சு அவங்களுக்கு இன்னும் தெம்பேத்தி குடுத்து வா ராசா வந்து கொஞ்சம் கூட அடி னு வாலண்டியரா போறோம் . ஆனா அதை அன்பு னு சொல்லிட்டு திரியுறோம் 😤😤😐😐

    அருமையான கதை அக்கா 😼😼🏃‍♀️🏃‍♀️

  2. சாரா மோகன்

    பஞ்சு போன்ற பெண்கள் தானே இங்கு அதிகம். இவர்களை போன்றவர்கள் இருக்கும் வரை பஞ்சுவின் கணவர் போன்றோர் திருந்தவே வாய்ப்பில்லை. அருமையான கதைக்களம். போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ❤

  3. இந்த பஞ்சுவின் அன்பு விசித்திரமான வியப்பிற்குள்ளான அன்புதான்..கணவன் குடிகாரனா இல்லனா இன்னும் எவ்ளோ அன்பு வைப்பாளோ…சிறந்த படைப்பு சிஸ்