இருமல் சத்தத்தில் சாஹித்ரா திரும்ப, விசித்திரன் பேச்சை ஆரம்பித்தான். “நான் விசித்திரன். உன் கேள்விக்கான பதில் சொல்றேன்” என்றவன் விடயங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.
விசித்திரன் அந்த ஏரியாவில் இன்ஸ்பெக்டர். ரெட்லைட் ஏரியாவில் பெண்கள் கடத்தப்பட்டு விபசாரம் நடப்பதாகத் தகவல் கிடைத்தது.
அவர்களை மீட்க, கஷ்டமராக முகவுறையுடன் நுழைந்தவன், பயந்து நடுங்கி நின்றிருந்த சாஹித்ராவை அழைத்துக்கொண்டு அறையில் சென்று அவளுக்கு ஒரு தூக்க மாத்திரையை போதை மாத்திரை என்ற பெயரில் கொடுத்துவிட்டு அவளை அணைத்தபடி தூங்க ஆரம்பித்தான். அவனது முகவுறை விடயம் சாஹித்ராவிற்கும் தெரியாதிருந்தது.
நாட்கள் செல்ல, அவளின்றி தூக்கமில்லாதிருந்தது. ஒருநாள் அங்கு சென்றபோது கல்யாண மற்றும் வெற்றுத்தாளில் கையொப்பமிட வைத்தவன், வழக்கம்போல அணைத்தபடி தூங்கினான். அடுத்தநாளே முறைப்படி கல்யாணம் பதிப்பிக்கப்பட்டு, மனைவி கடத்தப்பட்டாள் என்று வழக்கு பதிவிடப்பட்டு ரெய்ட் நடத்த, பல பெண்கள் அதிலிருந்து மீட்கப்பட்டனர் என்று விசித்திரன் அனைத்தையும் கூறிமுடித்ததோடு அவன் வழக்கமாக போடும் முகவுறையையும் கழட்டிக்காட்ட, சாஹித்ரா ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டாள்.
பெற்ற தகப்பனே வெறும் சதையெனக் கருதி அங்கு சேர்க்க, ஐவருக்கு விருந்தாகியவள், ஆறாவதாக அவனிடம் அனுப்பப்பட்டாள். ஆடை விலகினாலே காமமாய்ப் பார்ப்போரிடையே விலைமாதுவாக அனுப்பப்பட்டும் விலகியிருந்ததோடு, மனைவியாகவே எண்ணியவன் சாஹித்ராவிற்கு விசித்திரமாகவே தெரிந்தான்.
காமமாய் நோக்குவோரை விசித்திரமாக பார்த்த நாம், இன்று காம நோக்கற்றோரை விசித்திரமாகப் பார்க்கிறோம். என்று மாறுமோ இந்நிலை…
கருத்துள்ள பதிவு …வாழ்த்துக்கள் டா
நன்றி பங்கு
மிக அருமையான கதை கரு
நன்றி அக்கா ☺️🙃
வாவ்! குறைந்த வரிகளில் அழுத்தமான பதிவு டா பேபி❤️🔥கீப் ராக்கிங்… போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் பேபி மா❤️💯
நன்றி மஹி அக்கா 🙈 .
அழுத்தமான கதை. அழகான கதையை தந்தமைக்கு வாழ்த்துகள்
விசித்திரன்-பெயருக்கேற்ப விசித்திரமானவன் தான்..ரொம்ப பிடித்தது சிஸ்..நல்ல கருத்தான படைப்பு..
அருமையான கதை