அதிகாலை ஆதவன் தீட்சண்யமாக உதித்து தன் வேலையை காட்ட தொடங்கினான். கண்விழித்த “கவிநயா” வழக்கம் போல் தன் வேலையை முடித்துவிட்டு இன்று விடுமுறை என்பதால் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு புறப்பட்டாள். நேர்த்தியான ஆடையில் பெண்ணுக்குரிய பதுமையில் ஆனாலும் முகத்தில் பொழிவு இல்லை
ஏன்… ? என்றால்.
மன அழுத்தமே காரணம். பாவம் பாவை.” இருபத்தி ஏழு” வயது முடிவடையும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று சிலரின் பார்வையாலும்,பேச்சாலும் வடிய பூவாய் காட்சி அளித்தாள்.
அவளை பார்த்து வீட்டில் இருப்பவர்களும் மனதால் உருகி கொண்டு இருந்தனார்.
அம்மா கோவிக்கு போய்ட்டு வரேன்.
நல்ல சாமி கூம்பிட்டு வாமா. தலையை மட்டும் ஆட்டி விடைபெற்று சென்றாள்.
தாய்யின் வேதனை மனதில்
இவளுக்கு என்ன குறை .நல்ல குணவதி, நல்ல படிப்பு ஆசிரியர் வேலை,என்ன கருமையான நிறம் அதற்காக பலர் அவளை கேலி பேச்சில் நோகடிப்பதை தாங்கி கொள்ள முடியவில்லை கடவுளே.
அவள் எண்ணம் போல வாழ வேண்டும். என்று கண்ணீரை துடைத்தார்.
எண்ணமோ மகளின் பல நாட்களாக நடக்கும் நிகழ்வு மனத்திரையில்
ஓடியது. பக்கத்து வீட்டு பரிமளா கூறிய
வார்த்தை ….” இப்படி கருப்பா இருந்த எவன் கட்டுவான் ” என்று பிறரிடம் கூறி
சிரித்துவிட்டு எங்களிடம் உறவாடி அனுதபாம் பெற்றுக் கொண்டாள் அந்த விசித்திரகாரி.
நண்பர்கள் புகைப்படம் எடுக்கும் போது பாசத்தால் அழைக்காமல் நீ பக்கத்தில் இருந்த நான் அழகாக இருப்பேன் என்று கூறியதாக மகள் அழுத காட்சி.
யாரும் பேசமால் ஒதுக்கம், சக ஊழியர்களின் ஏலான பேச்சு என்ற கேலி வார்த்தைகளால் , பலரால் பல விதங்களில் காயப்பட்டு விட்டாள் அந்த பாவை.
உறவினர்களின் ஓதுக்கம் .எங்க நல்ல பேசுனா தன் மகனை கேப்பாங்கலோ என்று யாரும் பேசுவதில்லை. நான் ஏன் வெளியே இருப்பவர்கள்.
சொல்லுவதற்கு எல்லாம் நோகனும். என் அண்ணியே என் மகளைப் பார்த்து “காக்கா” என்று அனைவரும் இருக்கும் இடத்தில் சத்தமாக கூறி அழைத்தது.
அவளை மனதளவில் பாதித்தது. தவறே செய்யமால் கூனி கூறுகிபேனாள் கவிநாய. பாலபோன நிறத்திற்காக ஒதிங்கி நிற்க வேண்டி இருக்கு அம்மா. என்று அழுது மாய்ந்தது இன்னும் கண்ணைவிட்டு அகல வில்லை பெற்ற தாய்க்கு .
பெண்ணு பார்க்க வந்த சிலபேர் அவளின் முன்னே ‘ கறுப்பு ‘ என்று
கூறி சென்றது.
படித்து திறமை இருந்தும், கையில்
நல்ல வேலை கிடைத்தும். அக அழகை பார்க்கமால் புர அழகை மட்டும் பார்த்து பேசும் விசித்திரமான மனிதர்கள் உண்டு.
அதுக்கு எல்லாம் feel பண்ண கூடாது.. கோயில்ல இருக்க கருவறை சிலையே கருப்புத்தான் அத தான சாமியா கும்பிடுறோம்.. கருப்பு எல்லாம் மேட்டரே இல்ல
மிகவும் அருமை. வாழ்த்துகள்
நிறத்தையும் உருவத்தையும் கேலி பேசுபவர்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்..நாம்தான் அதையெல்லாம் கடந்துசெல்லவேண்டும்..நைஸ் சிஸ்
அருமை