Loading

விதியை மதிப்பவன் விசித்திரன்.

“டேய் வினோ ஓடும்போதே இறங்கிறுடா லேட்டாச்சு வேகமா போய் பிராஜக்ட் சம்மிட் பண்ணனும்”

” அதெல்லாம் நான் பண்ண மாட்டன் மதி ட்ரெயின் நின்னதும் இறங்கிக்குறன் லேட்டாகுதுனா நீ முன்னாடியே கிளம்பிருக்கனும்.

“அய்யோ படுத்தாத லேட் ஆகுது டா”

“அதான் லேட்டா போறதுன்னு முடிவாகிடுச்சில பொறுமையா லேட்டாவே போய்க்கலாம்”

என்றவன் அவன் கைப்பிடித்து ஓடும் ரயிலிருந்து இறங்கவிடாமல் செய்தான்.

ரயில் நடைமேடையருகே நின்றதும் மதி இறங்கி

” வேமா வாடா” என்று ஓடினான்.

“இருடா பொறுமையாதான பாத்து வரமுடியும் ”

“நீ பாத்து பொறுமையா வா நான் முன்னாடி சீக்கிரம் போறன்”

என்றவன் வேகமாய் படியில் செல்லாமல் தண்டவாளத்தின் இருபுறமும் பார்க்காமல் கடக்க கல் தடுக்கி கீழேவிழ அவன் பை கம்பியில் மாட்டிவிட வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் அவனை வேகமாய் தூக்கியடித்து வேகமாய் கூட்டிச் சென்றது எமலோகத்திற்கு.

வினோத் ஸ்தம்பித்துபோனான்.

நாட்கள் உருண்டோடியது……

வினோவின் நண்பர்கள் இருவர் ஓடும் ரயில் இருந்து இறங்கி தண்டவாளத்தை தாண்டி ஓடிட வினோ படிக்கெட்டு ஏறி வந்தான்.

நண்பன் சொன்னான் இவன் ஒரு விசித்திரம் டா எல்லா ரூல்ஸயும் ஃபாலோ பண்ணுவான் சாம்ராணி.

வினோ நினைத்துக் கொண்டான் உசுரு முக்கியம்டா முருகேசா….

இந்த காலத்துல விதிய மதிச்சா கூட விசித்திரமாத்தான்யா பாக்குறாங்க. உண்மைக்கதை மக்களே.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. உண்மை தான் அக்கா . இந்த காலத்தில் விதியை மதிச்சா அவனை பழம் , சாம்பிராணி னு பல பெயர் வைக்கிறாங்க ‌‌. விதியை மதிக்காதவங்களை ஒருகாலத்தில் விசித்திரமா பாக்குறோம். இப்போ மதிச்சா விசித்திரமான பாக்குறோம் . என்ன உலகம் டா சாமி 🤧😐😐

  2. நல்ல அருமையான அக்கறை கலந்த கதை.. சமூக விழிப்புணர்வு கொடுக்கும் கதை என்று கூட சொல்லலாம்.

    வார்த்தை பிழைகளை தவிர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள் மா..

  3. ரொம்பவே உண்மையான விஷயம்!!!.. எல்லாத்துலையும் அலட்சியமும், வேகமும்!!!.. இழப்புகள் பெருசா இருந்தாதான் நிறையா விஷயத்தை புரிஞ்சுக்கிறாங்க, உணர்ந்துகிறாங்க!!!.. அருமையான படைப்பு!!!.. வாழ்த்துகள் சிஸ்💖

  4. மதியோட அவசரமும் வேகமும் அவன் உயிரையே பறிச்சிருச்சு…நிதானம் ரொம்பவே முக்கியம்..
    கருத்துடன் கூடிய பதிவு..அருமை சிஸ்