Loading

மௌனம் 18

இரண்டு மணிக்கு இவர்களது வழக்கு விசாரணைக்கு வந்தது. மலர் சாட்சி கூற அவர்கள் தரப்பு வக்கீல் மலர் சம்பவ இடத்தில் இருந்ததற்கான வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பிக்க அனைத்தையும் கருத்தில் கொண்டு நீதிபதி,

“ஆக காவல்துறை தரப்பில் அளிக்கப்பட்ட வீடியோவில் இருப்பது இங்கே நிற்கும் செல்வி மலர்நிதி என்றும் அவர் சம்பவத்தை நேரில் கண்டுள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. அதன்மூலம் குற்றவாளி அசோக் தான் இதனை செய்துள்ளார் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. எனவே இ.பி.கோ. பிரிவு 354இன் படி பெண்களைப் பலவந்தமாக கடத்த முயற்சித்த குற்றத்திற்காக குற்றவாளிக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் நீதிமன்றத்திற்கு அபராதமும் வழங்குபடி இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.” என தீர்ப்பளித்தார்.

அவைக் கலைந்து வெளியே அனைவரும் வர, மினிஸ்டரோ முறைப்புடனும் அதே சமயம் குழப்பத்துடனும் ரௌத்திரனைப் பார்த்தார்.

“என்ன மினிஸ்டர் சார். ட்ரான்ஸ்பர் பண்ணியும் இவன் அடங்காம இப்படி பண்ணிட்டானேன்னு கோவம் வருதா? தப்பு செஞ்சதுக்கு தண்டனைக் கிடைச்சே தீரும். இந்த ரௌத்திரன் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது.” எனக் கூறிக்கொண்டு மூவரும் வெளியே சென்றனர்.

காரில் மூவரும் ஏற நேராக ஓர் உணவகத்தில் நிறுத்தினான் ரௌத்திரன். மூவரும் சாப்பிட அமர்ந்ததும்,

“மச்சான் என்ன தான் டா நடந்துச்சு? இப்போவாச்சு சொல்லு.” என ராஜா கேட்க, ரௌத்திரன் நடந்த அனைத்தையும் கூறினான்.

“அந்த ஆயுஷ் தான் இதுக்கெல்லாம் காரணமா? அப்போ கண்டிப்பா அவன் இதுக்கும் மேல ஏதாவது பண்ணிட்டு இருக்கான். அப்படி தான.” என ராஜா கேட்க,

“எஸ் யூ ஆர் கரெக்ட். அதனால தான் இப்போ அந்த எவ்விடென்ஸ் எதுவும் நான் கோர்ட்ல சப்மிட் பண்ணல. இதை வேற மாதிரி கொண்டு போய் அவன் தப்பிக்க வாய்ப்பு இருக்கு. அவன் அவ்ளோ சாதாரணமானவன் இல்ல. அண்ட் இப்போ அவன் தமிழ்நாடு வர என்ன காரணமா இருக்கும்? இதெல்லாம் நான் வெறும் இன்ஸ்பெக்டரா மட்டும் இருந்து என்னால கண்டுபிடிக்க முடியாது.” என யோசித்தபடி ரௌத்திரன் கூற,

“ஆமா மச்சான். நம்ம இதைப் பத்தி கமிஷனர் ராஜசேகர் கிட்ட பேசுவோம். அவர் கண்டிப்பா நமக்கு ஏதாவது உதவி பண்ண வாய்ப்பு இருக்கு.” என ராஜா கூற,

“ஹ்ம்ம் பொறுத்து இருந்து பாப்போம்.” என கூறிவிட்டு மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அங்கே அந்த மினிஸ்டரோ ஆயுஷை சந்திக்க சென்றார். ஆயுஷ் தான் இருக்கும் இடத்தை மிகவும் பாதுகாப்பாய் வைத்திருப்பான். அவன் இருக்கும் இடத்தில் எந்த ஒரு ட்ராக்கிங் கருவியும் வேலை செய்யாதபடிக்கு ஜாமெர்(jammer) வைத்திருப்பான். அதாவது உள்ளே நுழையும் போது அவர்களின் உடம்பிலோ உடையிலோ கேமரா, ட்ராக்கிங் கருவி போன்றவற்றை இருந்தால் சிக்னல் கொடுத்து காண்பித்துக் கொடுத்துவிடும்.

அதே போல் மினிஸ்டர் உள்ளே நுழையும் போது சிக்னல் கொடுத்தது அந்த ஜாமெர். ஆயுஷின் செக்யூரிட்டி ஒருவன் மினிஸ்டரை சோதனை கருவி மூலம் சோதனை செய்ய அது அவரின் கழுத்தில் இருந்த செயின் பக்கம் கொண்டு செல்லும் போது சத்தம் கொடுத்தது. ஆயுஷ் அதனை என்னவென்று பார்க்கும்படி உத்தரவிட அதனை சோதித்து பார்த்து,

“சார். இது ஒரு ஆல்ட்றா மாடர்ன் ட்ராக்கிங் டிவைஸ் சார்.” என செக்யூரிட்டி கூற அதிர்ச்சியடைந்த மினிஸ்டரை ஆயுஷ் தீயாய் முறைத்தான்.

“வாட் தி ஹெல் இஸ் திஸ் மருதநாயகம்?” என கடுமையாக ஆயுஷ் கேட்க மினிஸ்டரோ,

“சார் சார் மன்னிச்சுருங்க. நிஜமா எனக்கு அது எப்படி என் செயின்க்குள்ள வந்துச்சுன்னு தெரியலை. என்னை நம்புங்க சார்.” என மினிஸ்டர் கெஞ்ச,

“சோ உங்களுக்கு எப்படி வந்ததுன்னு தெரியாது அப்படி தான. உங்க செயின் குள்ள அதை வைக்குற வர நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க. என்னோட தப்பு தான். போயும் போயும் உங்களை நம்பி என்னோட பொறுப்பை ஒப்படைச்சது. ஷேர் மட்டும் மறக்காம வாங்க தெரியுதுல. உங்ககூட கால் பண்ணி பேசுற அளவு தொடர்பு வைக்காததுனால இவ்ளோ நாள் என்னை பத்தி தெரியல அந்த ரௌத்திரனுக்கு.

ஆனால் இந்த பிசினெஸ் விஷயமா எல்லா எவிடென்ஸ் கலெக்ட் பண்ணது உங்க மூலமா. இந்த ட்ராக்கிங் டிவைஸ் மூலமா எங்க போறீங்க யார்கிட்ட பேசுறீங்க எல்லாம் கவனிச்சுருக்கான். சரி இப்போ இதுக்கு ஒரு முடிவு தெரியணும். ஏதோ வயசுல பெரியவங்களா போய்ட்டீங்களேன்னு இவ்ளோ நேரம் மரியாதை கொடுத்து பேசிட்டு இருக்கேன். அதனால நீங்க என்ன பண்றீங்க இதை வச்சு உங்கள நீங்களே சுட்டுக்கோங்க.” என சாதாரணமாக கூறியவன் தன் துப்பாக்கியை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு கால்மேல் கால் போட்டபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தான் ஆயுஷ்.

“சார் இந்த ஒரு வாட்டி என்னை மன்னிச்சுருங்க. இனிமே இப்படி நடக்காம நான் பார்த்துக்குறேன்.” என மினிஸ்டர் கெஞ்ச,

“ஓ காட். இங்க பாருங்க மிஸ்டர் மருது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தான். ஒரு சின்ன தப்பு நடந்தா கூட என்னோட ரியாக்சன் வேற மாதிரி இருக்கும்ன்னு நல்லாவே தெரியும். இப்போ நான் அஞ்சு வரை கௌண்ட் பண்ணுவேனாம். நீங்க அதுக்குள்ள உங்களை சுட்டுக்கணுமாம். அப்படி இல்லனா ஜெயிலுக்குள்ளயே உன் பையன நான் போட்டு தள்ளிருவேனாம். எப்படி வசதி?” என அசால்டாக கேட்க மினிஸ்டரோ பீதியில் உறைந்து நின்றார்.

“மை கௌன்டவுன் ஸ்டார்ட்ஸ். ஒன் … டூ … த்ரீ… போர்… பைவ்… யுவர் டைம்ஸ் அப்.” என கூறிக்கொண்டு மொபைலை எடுத்து அவர் பையனைக் கொலை செய்ய சொல்ல அலைபேசியை எடுத்த சமயம் டமார் என சத்தம். ஆம் மினிஸ்டர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். நடந்தவற்றை அவனின் அடியாள் ஒருவன் வீடியோ எடுத்திருந்தான். அவன் அதை ஆயுஷிடம் கொடுக்க அதனைக் கண்ட ஆயுஷோ,

“வெரி பிட்டி” என அனுதாபமாக பார்த்துக்கூறிவிட்டு, “லெட்ஸ் கோ கைஸ்” என ஆணையிட்டபடி காரில் ஏறி சென்றான். செல்லும் வழியில் ரௌத்திரனுக்கு அழைத்தான். அங்கே சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு அழைப்பு வர,

‘என்ன புது நம்பரா இருக்கு?’ என மனதில் நினைத்தபடி அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

“ஹலோ மிஸ்டர் ரௌத்திரன்.” என கம்பீரமாக குரல் கேட்க, குரலை வைத்தே அது ஆயுஷ் தான் என யூகித்த ரௌத்திரனோ,

“எஸ் சொல்லுங்க தி கிரேட் பிசினஸ்மேன்” என்றான் மிடுக்காய்.

“பரவாயில்ல. ஸ்மார்ட் மூவ். இப்போ எவிடென்ஸ் சப்மிட் பண்ணாம என்னை மொத்தமா கையும் களவுமா பிடிச்சுட்டு அப்புறம் அந்த மினிஸ்டரையும் என்கூட சேர்த்து கூண்டுல ஏத்தலாம்னு பிளான் போட்டுருக்க. ஐ வில் அப்ரிசியேட் யுவர் கோன்பிடென்ஸ்.” என ஆயுஷ் அவனைப் பாராட்டுவது போல் கூற,

“எஸ். தேங்க் யூ. அண்ட் இப்போ விடுறேன் என்னோட சவாலை. உன்ன கையும் களவுமா நான் பிடிச்சு காட்டுறேன். ஐ சேலஞ் யூ” என திமிராக ரௌத்திரன் கூறினான்.

“வெரி குட். இதை இதை தான் நான் எதிர் பார்த்தேன். அண்ட் யூ நோ ஒன் திங். இந்த ஆயுஷ் ஆல்ரெடி கேம் ஸ்டார்ட் பண்ணிட்டான். கோ அண்ட் சி தி பிரேக்கிங் நியூஸ் ட்யுட் (dude).” என கூறிவிட்டு ஆயுஷ் அழைப்பை துண்டிக்க, சட்டென தன் அலைபேசியில் செய்திகள் ஒளிபரப்பாகும் சேனலைப் பார்க்க அதில்,

“மதியம் மூன்றரை மணியளவில் மதுரை அமைச்சர் மருதநாயகம் தன் மகன் சிறை சென்ற அவமானம் தாங்க முடியாமல் மதுரை மாநகரின் ஒதுக்கு புறமாக இருக்கும் ஓர் கட்டிடத்தில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.” என பிரேக்கிங் நியூஸ் வர அதனைக் கண்டு மூவரும் அதிர்ந்தனர்.

“மச்சான் என்ன டா இது? மினிஸ்டர் ஏன் சூசைட் பண்ணனும்?” என அதிர்ந்து கேட்க,

“இல்ல மச்சான். இவன் தான் சூசைட் பண்ண வச்சிருக்கான்.” என ரௌத்திரன் யோசித்தபடியே கூற,

“என்ன தீரா சொல்றீங்க?” என மலரும் புரியாமல் கேட்க,

“ஹ்ம்ம் ஆமா. என் கெஸ் சரியா இருந்தா இந்நேரம் நான் அந்த மினிஸ்டர் செயின்ல வச்ச ட்ராக்கிங் சிப் அவன் கண்டுபிடிச்சுருப்பான். அந்த மினிஸ்டர் கேர்லெஸா இருந்ததுனால தான் அவன் மாட்டிக்கிட்டான்னு மினிஸ்டரை மிரட்டி சூசைட் பண்ண வச்சுருப்பான். ” என ரௌத்திரன் தன் யூகத்தைக் கூற மலரோ,

“அந்த மினிஸ்டர் ஏன் அவனுக்கு பயப்படணும்?” என புரியாமல் கேட்க,

“வேற என்ன இருக்க போகுது? அவன் பையன் அசோக்க கொன்றுவேன்னு மிரட்டியிருப்பான்.” என ராஜா கூற,

“எஸ் கரெக்ட். அவன் கூட பாட்னெர்ஷிப் போட்டவங்க யாராவது ஏதாவது சின்ன தப்பு செஞ்சா கூட போட்டு தள்ளிருவான். அவன் அமைதி காக்குற ஒரு விஷயம் சேலஞ் மட்டும் தான்.” என ரௌத்திரன் ஆயுஷைப் பற்றி கூற,

“எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு போலீஸ்கிட்டயே நான் தான் கொலை பண்ணேன்னு திமிரா சொல்லுவான். இதை வச்சு அவனை எதுவும் பண்ண முடியாதா தீரா?” என மலர் ஆதங்கமாய் கேட்க,

“இல்ல முடியாது. ஒன்னு அந்த மினிஸ்டர் சைட்ல இருந்து யாராவது கம்பளைண்ட் கொடுக்கணும். இதை சூசைட்னு வேற நம்ப வச்சிட்டான். நம்ம ஏதாவது பெருசா பிளான் பண்ணனும்.” என யோசித்துக்கொண்டே கூறினான் ரௌத்திரன்.

“நான் நாளைக்கே கமிஷ்னர் கிட்ட நான் பேசுறேன். நீங்க ரெண்டு பேரும் முதல்ல கிளம்புங்க. தங்கச்சிய பத்திரமா கூட்டிட்டு போ.” என ராஜா கூற,

“சரி டா. நாங்க இப்போ கிளம்புறோம். முடிஞ்சா நாளைக்கே நான் மறுபடியும் வரேன். ரெண்டு பெரும் கமிஷனர்கிட்ட பேசுவோம். அதுக்கு முன்னாடி அவன் எங்க பிசினெஸ் பண்ண போறான்னு கண்டுபிடிக்கனும்.” என கூறிக்கொண்டே கிளம்பினான். மலரும்,

“சரிங்க ணா. நீங்களும் ஜாக்கிரதையா இருங்க.” என கூறிவிட்டு அவளும் ரௌத்திரனுடன் சென்றாள். ரௌத்திரன் காரைக் கிளப்ப இருவரும் திருநெல்வேலி நோக்கி பயணமாயினர்.

ரௌத்திரனின் சிந்தையிலோ ஏகப்பட்ட யோசனைகள் ஓட இவ்வாறே யோசித்துக்கொண்டே கார் ஓட்டினால் நல்லதல்ல என எண்ணியவன் தன் மனநிலையை மாற்ற எண்ணி அவனே மலரிடம் பேச்சு கொடுக்கலாம் என எண்ணி அவளிடம் திரும்ப அவளோ வேறு ஏதோ யோசித்தபடி வெளியே வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

‘நமக்கு தான் யோசிக்க நிறைய இருக்கு. இந்த குட்டி பிசாசு என்ன யோசிக்குது?’ என நினைத்தபடி,

“மேடம்க்கு அப்படி என்ன சிந்தனை?” என ரௌத்திரன் சாலையில் கவனம் செலுத்தியபடி அவளிடம் வினவ அவளோ,

‘என்ன இது ஈபிள் டவர் பேசுச்சா. ஒருவேளை பிரம்மையோ.’ என நினைத்துவிட்டு ரௌத்திரனை சந்தேகமாக பார்க்க, அவனோ சாலையில் கவனம் கொண்டிருந்தான். ‘ச்ச ச்ச இதுவாது நம்மகிட்ட பேசுறதாவது.’ என நினைத்துவிட்டு மீண்டும் யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

‘என்ன இவ நம்மள தான இப்போ பார்த்தா. மறுபடியும் ஒன்னும் சொல்லாம யோசிக்குறா.’ என நினைத்துவிட்டு, “உன்ன தான் கேட்டேன் காதுல விழுகலையா?” என மறுபடியும் ரௌத்திரன் கேட்க,

“நிஜமாவே நீங்க தான் பேசுனீங்களா அப்போ? பிரம்மை இல்லையா?” என கேட்டுவிட்டு தன் கைகளைக் கிள்ள வலியெடுக்கவும் ஆ என கத்திகொண்டே தேய்த்துக்கொண்டாள்.

“ஏய் என்ன பண்ற நீ? பிரம்மையாங்குற. நீயே கிள்ளிட்டு நீயே கத்துற.” என ரௌத்திரன் புரியாமல் கேட்க,

“இப்போ தான் தீரா நினைச்சேன். என்னடா மேகம் எல்லாம் இருட்டி போய் இருக்குதே மழை வருமோன்னு. இப்போ தெரிஞ்சுட்டு கண்டிப்பா மழை பெய்ய போகுது.” என மலர் அவனைப் பார்த்து சிரித்தபடி கூற,

“நீ எப்போவுமே கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே மாட்டியா? அதைவிட்டுட்டு மத்த எல்லாம் பேசுற” என கடுப்பாக கேட்டான்.

“வேற என்ன பண்றது மிஸ்டர் ஈபிள் டவர். நடக்கக் கூடாத அதிசயம் எல்லாம் நடந்தா எப்படி அதை சட்டுனு நம்ப. நான் பேசுனாலே தயவு செஞ்சு வாய மூடிட்டு வான்னு திட்டுவீங்க. என்னைக்கும் இல்லாத அதிசயமா நானே இன்னைக்கு அமைதியா வரேன். நீங்களா என்கிட்ட பேசுறீங்க. அதான் உண்மையா இல்லையான்னு செக் பண்ணேன்.” என மலர் கூறிமுடிக்க,

‘கேட்காமையே இருந்துருக்கலாமோ?’ என ரௌத்திரன் நினைக்க அதையும் கண்டுக்கொண்டவள்,

“சரி சரி கேட்காமையே இருந்துருக்கலாம்னு நீங்க நினைக்குறது தெரியுது. சரி சொல்றேன். என்ன கேட்டீங்க? என்ன யோசனைன்னு தான? அது வேற ஒண்ணுமில்ல. அந்த ஆயுஷ் பத்தி தான் யோசிச்சுட்டே வந்தேன்.” என மலர் கூற அவனோ,

“அவனை பத்தி நீ ஏன் யோசிக்கணும்? புரியல.” என புருவம் சுருக்கி கேட்க,

“அது வேற ஒண்ணுமில்ல. பொதுவா ரவுடினா நாப்பது அம்பது வயசுல பெரிய பெரிய செயினெல்லாம் போட்டுக்கிட்டு இருப்பாங்க. இவன் என்னடானா வயசு கம்மியா இருக்கான். பாரின் போய் படிச்சுருப்பான் போல. இந்த வயசுல எஸ்பிரியென்ஸ் இல்லாம இவ்ளோ பெரிய இடத்துக்கு வர முடியுமா? அது எப்படி சாத்தியம்னு யோசிச்சுட்டு இருக்கேன். கண்டிப்பா இவனுக்கு பின்னாடி பெரிய பேக்ரௌண்ட் இருக்கு.” என மலர் கூற,

“எப்படி சொல்ற?” என ஆர்வமாய் ரௌத்திரன் கேட்ட்டான்.

“ஆமா தீரா. ஒருத்தன் திடுதிப்புன்னுலான் நம்ம நாட்டுல பணக்காரனா ஆகிற முடியுமா என்ன? கண்டிப்பா அவனுக்கு பின்னாடி ஏதோ இருக்கு. அவன் அப்பா தாத்தா யாராவது பணக்காரங்களா இருந்துருப்பாங்க.” என மலர் கூற,

“தெரியல அவன் அவனோட டீடெயில்ஸ் எல்லாம் ரொம்ப கான்பிடென்ஷியலா வச்சுருப்பான். அவன் பேமிலி பத்தி இதுவரை எந்த டீடையிலும் யாருக்கும் தெரியாது. அவன் என்ன பிசினஸ் பண்றான்னு கூட கண்டுபிடிக்க முடியல. அவன்கிட்ட வேலை பார்க்குற ஆளுங்க எல்லாம் அவனுக்கு ரொம்ப விசுவாசம். கொலையே பண்ணா கூட அவனைப் பத்தி எதுவும் சொல்ல மாட்டாங்க. எதையும் ரொம்ப யோசிச்சு ஸ்மார்ட்டா பண்ணுவான்.” என ரௌத்திரன் அவனைப் பற்றி தெரிந்தவற்றை அவளிடம் கூறினான்.

“அடப்பாவி. இப்படி சீக்ரட்டா பண்ற அளவுக்கு என்ன பண்றான்? சரி என்னவோ.” என கூறியபடி ஜன்னல் பக்கம் திரும்ப “காஃபி கார்னர்” என பெயர் பலகைப் பொறிக்கப்பட்டு ஒரு காபி கடை கண்ணில் பட்டது. அதனைப் பார்த்தவுடனே மலருக்கு காபி குடிக்க வேண்டும் எனும் ஆவல் மனதினுள் எழ அதனையே ஏக்கமாய் பார்த்தாள். ரௌத்திரனிடம் கேட்க தயங்கி கேட்காமல் இருந்துவிட்டாள். கார் அந்த கடையைக் கடந்து சென்றது. பெருமூச்சிவிட்டபடி திரும்ப அதனைக் கண்டுக்கொண்ட ரௌத்திரனோ காரை யூ டர்ன் போட்டு திருப்பினான்.

“என்னாச்சு தீரா? எதுக்கு காரைத் திருப்புறீங்க? நேரா தான போகணும்.” என மலர் புரியாமல் அவனிடம் கூற அவனோ நேராக அந்த காஃபி கார்னர் முன் காரை நிறுத்தினான். அவளோ ஆச்சர்யமாக அவனைப் பார்க்க அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல்,

“ஏதாவது குடிச்சுட்டு போலாம். டயர்டா இருக்கு” என கூறியபடி காரைவிட்டு இறங்கினான்.

‘நமக்காக நிறுத்தினாரா? இல்ல அவருக்கும் காபி குடிக்கணும்னு தோணுச்சான்னு தெரிலேயே. எப்படியோ நமக்கு காபி கன்பார்ம்’ என மகிழ்ச்சியாய் உள்ளே சென்றாள். இருவரும் எதிரெதிரே அமர்ந்தனர். வெய்ட்டர் வந்து ஆர்டர் கேட்க மலர் காஃபி என்று சொல்ல ரௌத்திரனுக்கு காபி என்றாலே பிடிக்காது. டீ மட்டுமே குடிப்பான். இங்கே டீ கிடைக்காது என தெரிந்திருந்தும் அவளுக்காக வந்தோம் என்ற உண்மை தெரியக்கூடாது என நினைத்துவிட்டு வேண்டுமென்றே,

“ஒரு டீ ஒரு காஃபி” என ஆர்டர் கொடுக்க வெயிட்டரோ,

“சாரி சார். இது காஃபி கார்னர். டீ இங்க கிடைக்காது. ஒன்லி காஃபி” என கூற,

“ஓ அப்படியா. சரி அப்போ ஒரு காஃபி மட்டும்” என மலருக்கு மட்டும் ஆர்டர் கொடுக்க அவளோ,

“ஏன் தீரா உங்களுக்கு காஃபி பிடிக்காதா?” என கேட்க,

“சுத்தமா பிடிக்காது. டீ மட்டும் தான் குடிப்பேன். அதுவும் எப்போயாச்சு தான்.” என கூற மலரோ நம்பாமல் சந்தேகமாக,

“அப்போ நிஜமா இங்க காஃபி மட்டும் தான் கிடைக்கும். டீ கிடைக்காதுன்னு உங்களுக்கு தெரியாது. அப்படி தான? எனக்காக ஒன்னும் வரல. அதானே?” என சிரிப்பை அடக்கியபடி கேட்க,

“ஏய் என்ன பேசுற நீ? இதுல எதுக்கு நான் பொய் சொல்லணும். உனக்கு காஃபி பிடிக்கும்னே இப்போ நீ சொல்லி தான் தெரியும். நான் வரும் போது கடை பேரை எல்லாம் பார்க்கல.” என எங்கோ பார்த்தபடி கூற மலரோ நக்கலாக சிரித்தாள்.

பிறகு வெய்ட்டர் காபி கொண்டு வர மலர் ரசித்து ருசித்து குடித்தாள். அவள் ஒவ்வொரு மிடறு மிடறும் போது சத்தம் வர பக்கத்துக்கு டேபிளில் இருந்தவர்கள் ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிவிட்டனர். அதனைக் கண்ட ரௌத்திரனோ,

“என்ன பண்ற? சத்தம் போடாம குடி. எல்லாரும் பார்க்குறாங்க.” என அவன் கண்டிக்க,

“அட போங்க தீரா. இப்படி உறுஞ்சி உறுஞ்சி குடிச்சா தான் நல்ல இருக்கும். யார் பார்த்தா எனக்கென்ன. எனக்கு பிடிச்சுருக்கு நான் பண்றேன். காபி குடிக்கிறதெல்லாம் ஒரு கலை தெரியுமா. அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போது” என கூறிவிட்டு மீண்டும் காபியை உறிந்து குடிக்க ஆரம்பித்தாள். ஏனோ அந்த செயல் ரௌத்திரனை ரசிக்க செய்தது.

பின் ‘என்ன டா பிடிக்கலைன்னு சொல்லிட்டு ரசிக்குற’ என அவனின் மனசாட்சி கேள்வி கேட்க வேறு பக்கம் திரும்பி கொண்டான். பின் அவளிடம்,

“அவ்ளோ பிடிக்குமா காஃபினா? அப்படி என்ன இருக்கு அதுல?” என சலித்தபடி கேட்க,

“அப்படி என்ன இருக்குதா? போங்க தீரா நீங்க வேற. டிகாஷன் கொஞ்சம் அதிகமா சுகர் கொஞ்சம் கம்மியா போட்டு கசப்பா குடிக்க தான் ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு போதை. எனக்கு காபில போதை. யூ க்னோ ஒன் திங்க். காஃபியைப் பத்தி ஒரு கவிதை கூட எழுதிருக்கேன். சொல்லவா?” எனக் கேட்டுவிட்டு அவன் பதில் கூறும் முன்னமே கவிதை கூற ஆரம்பித்தாள்.

காபி!
என்னை புதுப்பிக்கும்
புத்துணர்ச்சியே!
அதிகாலையும் உன்னுடன்.
அந்திமாலையும் உன்னுடன்.
சோர்வை நீக்கி
இளைப்பாறச் செய்யும்
இனிய பானமே!
உன் நறுமணத்தால் சிக்குண்டு
காத்திருக்கிறேன்!
உன்னை சுவைக்கும்
தருணத்தை எதிர்பார்த்து…

இப்படிக்கு,
காபியின் காதலி!

என ரசனையாக கூறிமுடிக்க அவனும் அதனை ரசிக்க தான் செய்தான் ஆனால் மனதினுள். அதைக் கேட்டு ஏதாவது நம்மை பாராட்டுவான் என மலர் எதிர்பார்க்க அவனோ,

“அது சரி. ஆனால் காஃபி ரொம்ப குடிக்க கூடாது. ஹெல்த்துக்கு நல்லது இல்ல.” என அவன் கூற,

‘சரியான மாங்கா. ஏதாவது அப்ரிசியேட் பண்ணுதா பாரு’ என மனதினுள் அவனை அர்ச்சித்து விட்டு வெளியே,

“ஹான் ஹான் அதெல்லாம் தெரியும். ஆனாலும் டேஸ்ட் கண்ட நாக்கு விட மாட்டிக்கு. நான் இப்படி தான். எனக்கு ஒன்னு பிடிச்சுருச்சுனா அவ்ளோ சீக்கிரம் விட்டுற மாட்டேன்.” என இரு பொருள்பட கூற அதனைக் கேட்டவன்,

“நான் அப்படி இல்ல. ஒரு தடவ வேணாம்னு முடிவு பண்ணிட்டா. அதை மறுபடியும் ஏத்துக்க மாட்டேன். டைம் ஆயிருச்சு. கிளம்பலாம்” என கூறிக்கொண்டே பில் பே பண்ணிவிட்டு வெளியே வந்தான். மலர் காரினுள் ஏற மீண்டும் பயணம் ஆரம்பித்தது. சென்று கொண்டிருந்த சிறிது தூரத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது.

மலரோ ஜன்னல் வழியே மழையை ரசித்துக்கொண்டே வந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் பொழியும் மழையில் கார் ஓட்ட சிரமமாக இருந்ததால் காரை ஓரமாக நிறுத்தினான். அது ஒரு கிராமம் போலும். பச்சை பசேலென்று வயல்வெளியும், ஒரு குடிசை வீடும் அதன் வெளியே அந்த வீட்டு பெண்மணி ஒருவர் தன் அழும் குழந்தையை வெளியே வேடிக்கைக் காட்டிக் கொண்டே சமாதானம் செய்துக் கொண்டிருந்தார். ஒரு சின்ன டீ கடையும் இருந்தது. கிராமத்து சிறுவர்கள் மழையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்ததும் மலருக்கும் மழையில் நனைய வேண்டும் என்ற ஆவல் எழும்ப காரைவிட்டு வெளியே இறங்கினாள்.

“ஏய் எதுக்கு இறங்குற?” என ரௌத்திரன் கேட்க,

“தீரா ப்ளீஸ் தீரா. எனக்கும் மழையில நனையனும்னு ஆசையா இருக்கு ப்ளீஸ்.” என கூறியவாறே இறங்கி சென்றுவிட்டாள் அச்சிறுவர்கள் ஆடும் இடம் நோக்கி. ரௌத்திரனோ,

‘சொன்னா மட்டும் கேட்கவா போறா. இன்னும் சின்ன பிள்ளை மாதிரி பண்ணிட்டு இருக்கா.’ என மனதில் நினைத்துவிட்டு இவனும் இறங்கி விறுவிறுவென மழையில் நனையாதபடிக்கு ஓடி டீ கடையில் நின்றான். அவளோ மிக்க மகிழ்ச்சியாய் மழையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். குழந்தை அழுது கொண்டே இருக்கவும் விளையாட்டு காட்டினாள். அப்படியும் அது அழுகையை நிறுத்தாததனால் பாட்டு பாட ஆரம்பித்தாள்.

சின்ன சின்ன மழை துளிகள்
சேர்த்து வைப்பேனோ
நான் மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ

சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாக பறவையாவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுதை பிடித்து விண்ணில் சேர்வேனோ

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு கொடி காட்டியாரும்
குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும்
திரும்பி கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய
ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில்
ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில்
ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்
கண்கள் மூடி கரையும் போது
மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்

சக்கரவாகமோ மழையை அருந்துமாம் நான் சக்கரவாக பறவையாவேனோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள் விழுதை பிடித்து விண்ணில் சேர்வேனோ

என அவளுக்கு மிகவும் பிடித்த என் சுவாசக்காற்றே படத்தில் அரவிந்த்சாமி பாடும் அந்த பாடலை மழையை ரசித்துக்கொண்டே பாடினாள்.

குழந்தை கூட தன் அழுகையை நிறுத்திவிட்டு அவளை ரசித்து சிரித்தது. நம் ரௌத்திரன் மட்டும் விதி விலக்கா என்ன. அவனும் டீ குடித்தவாறே அவளை ரசிக்க தான் செய்தான்.

பாட்டின் இடையிடையே மலரும் தன்னவனை ரசிக்காமல் இல்லை. அவளும் அவள் பணியை செவ்வனே செய்தாள். அவ்வாறே பாடி முடிக்க சிறுவர்கள் அனைவரும் கைத்தட்டினர். பிறகு ஓரளவு மழை வெறித்திருக்க ரௌத்திரன் கிளம்பலாம் என கூற மலரோ,

“டாடா பாய் குட்டிஸ்” என சிறுவர்களுக்கு டாடா காண்பித்து கொண்டே காரில் வந்து ஏறினாள். ரௌத்திரன் காரைக் கிளப்ப தயாராக அந்நேரம் மலரோ,

“தீரா எனக்கு தலை சுத்துது. மயக்கமா வருது” என கூறிக்கொண்டே காருக்குள் மயங்கி சரிந்தாள்.

மௌனம் எரியும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்