Loading

மௌனம் 12

“இங்க இருந்து எப்படி டா.” என குழம்பியபடி கேட்டான் ராஜா.

(கீழ்கண்ட அனைத்தும் கற்பனையே..)

“அதுவா டா. இங்க பாரு. இது ஒரு ட்ராக்கிங் டிவைஸ். என்னோட காலேஜ் மேட் கண்டுபிடிச்சான்.” என தன் லேப்டாப்பில் அரிசி அளவில் இருக்கும் அதன் படத்தைக் காண்பித்துவிட்டு,

“ஆனால் இது மத்த டிவைஸ் மாதிரி கிடையாது. இது அல்ட்ரா மாடர்ன் வெர்ஷன். இது ஒருத்தங்க கிட்ட இருந்தா அவங்க பேசுறது, எங்க போறாங்க, எங்க வராங்கங்குற லொக்கேஷன், அப்புறம் அவங்க மொபைல்ல பேசுனா கூட அதை ரெக்கார்ட் பண்ணி அனுப்பும். அண்ட் இன்னொரு முக்கியமான சிறப்பான விஷயம் என்னன்னா இதுல கேமராக்கு யூஸ் பண்ற எலெக்ட்ரோமேக்னட்டிக் ரேஸ் இருக்கு. சோ இது இருக்குற லொக்கேஷனுக்கு அப்போசிட்ல வொயிட் கலர்ல ஸ்க்ரீனோ சுவரோ இருந்துச்சுன்னா இதுல இருக்குற எலெக்ட்ரோமேக்னடிக் ரேஸ் ரிஃப்ளெக்ட் (reflect ) ஆகி தன்னோட சைடுல நடக்குறத விடியோவா ரெக்கார்ட் பண்ணும். இதை வச்சு தான் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணேன்.” என அசால்டாக கூற ராஜாவோ,

“தம்மாதுண்டு இருக்குற இது இம்புட்டு வேலை பாக்குதா. அடேய் இதெல்லாம் எப்படி டா யோசிக்குற. சரி அப்படியேனாலும் இதை எங்க வச்சுருக்க. மினிஸ்டர் வீட்டுலயா. அங்க எப்படி போன? எப்போ போன?” என குழப்பத்தில் கேள்வியாய் கேட்க,

“டேய் மெதுவா கேட்டுத் தொலை டா. வரிசையா இத்தனை கேள்வி கேட்டா நான் எப்படி பதில் சொல்லுவேன்.” என முறைத்தவாறு கூற,

“சரி சரி பதில் சொல்லு.” என கூற,

“நான் மினிஸ்டர் பண்ற தப்பை எல்லாம் கண்டுபிடிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாளுக்கு முன்னாடி வழில பழக்கமான ஒருத்தரை சந்திச்சேன். பேசிட்டு இருக்கும் போது தான் தெரிஞ்சுது. அவர் அந்த மினிஸ்டர் வீட்டுல தான் வேலை பார்க்குறாருன்னு. அப்போ தான் ரெண்டு நாளுக்கு முன்னாடி என் பிரண்ட் வேற இந்த ட்ராக்கிங் டிவைஸ் பத்தி என்கிட்ட சொல்லிருந்தான். அப்படியே பேச்சு வாக்குல அவர்கிட்ட மருதநாயகத்தைப் பத்தி விசாரிச்சேன். அவர்,

‘அத ஏன் தம்பி கேட்குறீங்க அவர் பண்ற விஷயம் எல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது. ஏகப்பட்ட கெட்ட விஷயம் பண்றாரு தம்பி. நான் வேலையை விட்டு நின்னுறலாம்னு பார்த்தேன். ஆனால் எனக்கு அவரைப் பத்தின விஷயம் தெரியும்னு சொல்லி மிரட்டி அவர்கிட்ட வேலைப் பார்க்க வச்சுட்டாரு.’ அப்படின்னு சொல்லி புலம்பிட்டு இருந்தாரு. அப்போ நான் போலீஸ்னு அவருக்கு தெரியாது. அதுக்கு அப்புறம் தான் நான் போலீஸ்னு சொன்னேன். அவர் உடனே பதறி ‘ப்ளீஸ் தம்பி நான் தான் சொன்னேன்னு யாருக்கும் சொல்லிறாதீங்க. நான் கிளம்புறேன்’னு சொல்லி அவசரமா போக பார்த்தாரு. அப்புறம் அவரை கூப்பிட்டு வச்சு பொறுமையா பேசுனேன்.

சார் எனக்கு உங்களோட உதவி தேவைப்படுது சார். நீங்க பண்ற இந்த உதவினால நிறைய குடும்பம் நல்லா இருக்கும். நீங்க தானே சொன்னிங்க. அவன் ஏகப்பட்ட கெட்ட விஷயம் பண்றான்னு. இவ்ளோ நாள் அவன்கூட நீங்க இருந்ததே பாவம் தான். இந்த உதவி பண்ணி புண்ணியத்தைத் தேடிக்கோங்கன்னு சொன்னேன். அவரும் கொஞ்சம் நேரம் யோசிச்சு,

“சரி தம்பி. எப்படியும் வயசான காலத்துல சாக தான் செய்யணும். உங்களுக்கு உதவி பண்ணிட்டு சாவுறேன். புண்ணியமாவது சேரும். சொல்லுங்க என்ன பண்ணனும்.” னு கேட்டாரு. அந்த மினிஸ்டர் என்ன கேடி வேலை எல்லாம் பார்க்குறான்னு அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டேன். அப்புறம் மறுநாள் என்னோட பிரண்ட் கிட்ட அந்த ட்ராக்கிங் டிவைஸ் வாங்கி அவர்கிட்ட கொடுத்தேன். ஆனால் எங்க அதை வைக்கிறதுன்னு தெரில. அப்புறம் தான் அன்னைக்கு அவன் பையன அரெஸ்ட் பண்ண அப்போ அவனை வெளிய எடுக்க அவன் வந்துருந்தான்ல அப்போ என்னை கூப்பிட்டு வச்சு தனியா மிரட்டுனான். அப்போ அவனோட செயினை பார்த்தது ஞாபகம் வந்துச்சு. அது ஒரு ஓபன் டாலர் மாடல். இந்த டிவைஸ் சின்னதா இருக்கறதுனால தாராளமா அதுக்குள்ள போகும்னு தோணுச்சு. அவர்கிட்ட இதை கொடுத்து அவர் செயின் டாலர்ல இதை எப்படியாது வைங்கன்னு சொன்னேன். அவரும் கொஞ்சம் நேரம் யோசிச்சுட்டு “தம்பி அவரு நைட் தூக்க மாத்திரை போட்டு தான் தூங்குவாரு. அப்போ இடியே விழுந்தா கூட ஏந்திக்க மாட்டாரு. அந்த நேரம் நான் இதை வச்சுருறேன்”னு சொன்னாரு.” என ரௌத்திரன் கூறிக் கொண்டிருக்கையில் ராஜாவோ,

“இப்படி எல்லா கேடி தனத்தையும் பார்த்தா எப்படி நிம்மதியான தூக்கம் வரும். அவனுக்கெல்லாம் சாவு கூட நிம்மதியான சாவு வரக்கூடாது.” என கொதித்து கூற,

“ஆமா டா. சிக்கிட்டான்ல. இனிமே சின்னாபின்னாமாக்கிருவோம்.” என ரௌத்திரனும் அனல் கக்க கூற,

“சரி டா மேல சொல்லு.” என ராஜா ஆர்வமாய் கேட்க,

“அப்புறம் அவர் கிட்ட அதை கொடுத்து அவன் செயின்ல வைக்க சொன்னேன். அவன் எப்போவும் இந்த மாதிரி கேடி பிசினஸ் விஷயத்தை எல்லாம் எங்க உட்காந்து பேசுவான்னு கேட்டேன். அதுக்கு ஒரு ரூம் இருக்காமாம். அந்த ரூம்ல அந்த மினிஸ்டர் உக்காருற இடத்துக்கு எதிர்த்தாப்புல வெள்ளை ஸ்க்றீன் போடுங்கன்னு சொன்னேன். ஆனா அந்த மினிஸ்டர் நமக்கு வேலை வைக்காம சுவருக்கு வெள்ளை பெயிண்ட் தான் அடிச்சுருக்கான். அப்புறம் அந்த டிவைஸ என்னோட லேப்டோப்புக்கு கனெக்ட் பண்ணிட்டேன். அது மூலமா தான் இதெல்லாம் கிடைச்சுது. இதுல அந்த மாங்கா மடையன் எல்லா டீடைல்ஸையும் மொபைல்ல வச்சிருக்கான். அப்போ தான் எல்லாம் அவன் கூடயே இருக்குமாம். அது எனக்கு இன்னும் வசதியா போச்சு. ஒரு மெயில் அனுப்பி அவனோட மொபைல்ல உள்ள எல்லாம் ஹேக் பண்ணிட்டேன். அதனால உட்காந்த இடத்துல இருந்து எல்லாம் முடிச்சுட்டேன். சிம்பிள்.” என தோளை குலுக்கி சாதாரணமாக சொல்ல ராஜாவோ அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

“என்ன டா? என்னை ஏன் அப்படி பார்க்குற?” என ரௌத்திரன் கேட்க ராஜாவோ,

“நான் ஏன் டா பொண்ணா பிறக்கல.” என சம்மந்தமில்லாமல் கேட்டான்.

“என்ன டா உளறுற?” என ரௌத்திரன் புரியாமல் கேட்க அவனோ,

“நான் மட்டும் பொண்ணா பொறந்துருந்தா உன்ன தான் டா கல்யாணம் பண்ணிப்பேன்.” என கூறிக்கொண்டு அவனின் கன்னத்தை வருட அதில் கடுப்பான ரௌத்திரனோ,

“அட ச்சீ கருமம் புடிச்சவனே கையை எடுடா. ஏதாவது அசிங்கமா திட்டிற போறேன்.” என முறைத்தபடி கூற,

“ஈஈஈ சும்மா சொன்னேன். அப்போ நீ வச்ச பொறி இது தானா. எலியும் வசமா சிக்கிறுச்சு. மச்சான் செமயா பிளான் பண்ணி எல்லாம் கலெக்ட் பண்ணிட்ட. இன்னும் அந்த பொண்ணுங்க கடத்துறத பத்தி மட்டும் தான் நமக்கு தெரியணும். அதுவும் தெரிஞ்சுடுச்சுனா எலியை கூண்டுல அடைச்சுறலாம். அப்படி தான மச்சான்.” என ராஜா கேட்க,

“ஆமா டா. அது மட்டுமில்ல. இதுல ஒரு சிக்கல் இருக்கு.” என்றான்.

“என்ன சிக்கல்னு புரியுது மச்சான். திடிர்னு இப்போ இதெல்லாம் கோர்ட்ல சப்மிட் பண்ண முடியாது. கம்பளைண்ட் கொடுத்து கேஸ் கோர்ட்டுக்கு வர எப்படியும் ரெண்டு வாரமாவது ஆகும். அதுக்குள்ள இந்த மினிஸ்டர் ஏதாவது பண்ணி எவிடென்ஸ் எல்லாம் அழிக்க தான் பார்ப்பான். அது தான மச்சான் அந்த சிக்கல்.” என ராஜா தனது யுகத்தைக் கூற,

“பரவாயில்லையே நீயும் நல்ல யோசிக்குற.” என்றான் ரௌத்திரன்.

“நானும் ஒரு போலீஸ்னு நீங்க மறந்துடீங்க மிஸ்டர் ரௌத்திரன்.” என கெத்தாக ராஜா கூற,

“ஆஹான் சரி சரி இதுக்கு ஒரு ஐடியா சொல்லு. அப்புறம் ஒத்துக்குறேன். உனக்கும் மூளை இருக்குன்னு.” என நக்கலாக சிரித்தபடி ரௌத்திரன் கூற,

“என்ன டா கிண்டலா.” சட்டென, “ஹேய் இரு இரு. என்ன நீ கிண்டல் எல்லாம் பண்ற? இப்படி நக்கலா எல்லாம் நீ பேச மாட்டியே மச்சான். யார்கிட்ட இருந்து பழகுன.” என ராஜா கேட்க அப்பொழுது தான் தான் பேசிய விதத்தை ரௌத்திரன் யோசித்தான்.

‘ஆமா நம்ம எப்போ இந்த கிண்டல் நக்கல் எல்லாம் பேச ஆரம்பிச்சோம். நமக்கு இதெல்லாம் பிடிக்காதே. திடிர்னு எப்படி?’ என தனக்குள்ளேயே ரௌத்திரன் யோசிக்க ராஜாவிற்கு தெரிந்துவிட்டது இவனின் மாற்றத்திற்கு காரணம் மலரே என. ராஜாவிற்கு அவனை பார்த்து சிரிப்பு வர அதனைக் கண்ட ரௌத்திரனோ,

“இப்போ எதுக்கு சிரிக்குற நீ.” என மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையாக முறைப்பை வரவழைத்து ராஜாவிடம் கேட்க,

“ஒண்ணுமில்லையே ஒண்ணுமே இல்ல” என சிரிப்பை அடக்கியபடி கூறினான்.

“மூடிட்டு ஐடியா சொல்றியா.” என ரௌத்திரன் கடுப்பாக கேட்க,

“நான் வேணும்னா ஐடியா சொல்லவா.” என ரௌத்திரன் அறை வாசலில் இருந்து ஒரு குரல் கேட்டதும் அதிர்ந்து பார்த்தனர்.

“என்ன பா. ஏன் இப்படி ஷாக் ஆகுறீங்க ரெண்டு பேரும்?” என மலர் கேட்க,

“அட நீ தானா. நான் கூட வேற யாரும் கேட்டுட்டாங்களோன்னு பயந்துட்டேன்.” என ராஜா கூற ரௌத்திரனோ,

“ஹே நீ எதுக்கு இப்போ மேல வந்த. நாங்க முக்கியமா பேசிட்டு இருக்கோம். கீழ போ முதல்ல.” என கடுகடுவென கூறினான்.

“அட எல்லாம் நானும் கேட்டேன் மிஸ்டர் ரௌத்திரன். ப்ப்பா செம பிளான். நீங்களா இவ்ளோ அறிவாளியா யோசிச்சுருக்கீங்க. நம்ப முடியலையே.” என அவனை வம்பிழுக்க,

“டேய் ராஜா அவளை வெளிய போக சொல்லு. எனக்கு கோவமா வருது. அப்புறம் ஏதாவது திட்டிட போறேன்.” என ரௌத்திரன் கோவமாக சொல்ல,

“அதை என்கிட்ட சொல்லுங்க. எதுக்கு அண்ணாவைத் திட்டுறீங்க. என்கிட்ட சொல்ல பயமா?” என மேலும் வெறுப்பேத்த அவளை திட்டவும் முடியாமல் தீயாய் முறைத்தான்.

“சரி சரி கூல். எனக்கொரு ஐடியா தோணுது. அதை சொல்றேன். சரியா வராதுன்னா நான் போயிடுறேன். ஓகே வா.” என மலர் கேட்க ராஜாவோ,

“டேய் அவ தான் ஐடியா சொல்றேன்னு சொல்றால. என்னன்னு தான் கேட்போமே.” என ராஜாவும் அவளுக்கு ஆதரவாக பேச தன் கோபத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தியவன்,

“சரி சொல்லு. என்ன ஐடியா?” எனவும் மலரோ தன்னை பெரிய அதிகாரி போல நினைத்துக்கொண்டு நிமிர்ந்து நின்றவள்,

“காய்ஸ் நான் இப்போ சொல்ல போறது ரொம்ப முக்கியமான விஷயம்” என துப்பாக்கி பட விஜய் என்கௌண்டர் சீனில் பேசுவது போல பேச அதனை அறிந்த ராஜாவோ சிரிக்க ரௌத்திரனோ மீண்டும் முறைக்கிறான்.

“அட என்ன பா. முதல் தடவ போலீஸ்கே ஐடியா கொடுக்க போறேன். கொஞ்சம் பெர்பாமன்ஸ் பண்ண விடுறீங்களா?” என பாவமாக முகத்தை வைக்க,

‘ஏதாவது மொக்கையா மட்டும் ஐடியா கொடுத்த அப்புறம் இருக்கு உனக்கு’ என மனதில் நினைத்துவிட்டு ரௌத்திரன் மலரை பார்க்க அதனை தெரிந்து கொண்டவளோ, ‘அடியே மலரு. ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கோம். பார்ட்டி வேற ரொம்ப டென்ஷனா பார்க்குது. மூடிட்டு மேட்டர சொல்லு” என தனக்கு தானே கூறிக்கொண்டவள் ஐடியாவை கூறினாள்.

“சரி சொல்றேன். மினிஸ்டர் பையன் அசோக் மேல இன்னும் கேஸ் பெண்டிங்ல இருக்கு அப்படி தான. அதை மறுபடியும் ரீஓப்பன் பண்ணுங்க. சாட்சி சொல்ல ஆள் கிடைச்சுருக்குன்னு சொல்லி கோர்ட்டுக்கு கேஸ் வர மாதிரி செஞ்சுருங்க. கோர்ட்டுக்கு கேஸ் வரும் போது எப்படியும் அந்த மினிஸ்டர் கோர்ட்டுக்கு வருவான். நீங்க இருக்குற எவிடென்ஸ் வச்சு அர்ரெஸ்ட் வாரண்ட் வாங்கிட்டா அவன் பையன் கேஸ் கோர்ட்டுக்கு வரும் போதே இந்த எவிடென்ஸ் எல்லாம் அங்க சப்மிட் பண்ணி உடனே அந்த மினிஸ்டர உள்ள தள்ளிருவோம். மினிஸ்டர் மேட்டரும் ஓவர் அவன் பையன் மேட்டரும் ஓவர்.” என மலர் கூறி முடிக்க நிஜமாகவே அவளது யோசனையை நினைத்து பிரமித்து பார்த்தான் ரௌத்திரன்.

“ஹே இந்த ஐடியாவும் நல்ல இருக்கே” என ராஜா கூற,

“டேய் நீயும் என்ன புரியாம பேசுற? ஐடியா நல்ல தான் இருக்கு. பட் சாட்சிக்கு எங்க போக? சாட்சி கிடைக்காம தான கேஸ் பெண்டிங்ல இருக்கு.” என ரௌத்திரன் கூற,

“அட ஆமா ல” என ராஜா முழித்தான்.

“சாட்சி தான் நான் இருக்கேனே. நான் சாட்சி சொல்றேன்.” என மலர் சாதாரணமாக கூற இருவரும் திகைத்துவிட்டனர்.

“என்ன மா சொல்ற நீ?” என ராஜா கேட்க அன்று மலர் மதுரை வந்தது பற்றி ரௌத்திரன் ராஜாவிடம் கூறினான்.

“ஓ அது நீ தானா?” என ராஜா கேட்க அவளும் ஆம் என்றாள்.

“இல்ல வேணாம். நீ சாட்சி எல்லாம் சொல்ல வேணாம். அந்த மினிஸ்டர் ரொம்ப மோசமான ஆளு. எங்க பிரச்சனைக்கு ஹெல்ப் பண்றேன் னு
சொல்லி உன்ன பிரச்சனைல இழுத்து விட விரும்பல. நாங்களே பார்த்துக்குறோம் கிளம்பு.” என ரௌத்திரன் கூற,

“அட இதுல என்ன இருக்கு. உங்களுக்காக இதைக் கூட பண்ண மாட்டானா.” என மலர் ரௌத்திரனை பார்த்து காதலாக கூற ரௌத்திரனோ, ‘இவ சொல்றதே சரி இல்லையே.’ என மனதில் நினைத்துவிட்டு,

“என்ன எனக்காகவா?” என புரியாமல் கேட்க பின் சுதாரித்தவளோ,

“அது .. அது… ஹான் என் ஃபிரண்டோட அண்ணா நீங்க. இதைக் கூட பண்ண மாட்டேனான்னு கேட்டேன்.” என மலர் கூற இருந்தும் ரௌத்திரனின் மனதுக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது.

“இல்ல வேணாம்.” என மறுபடியும் கூற,

“அதான் என்னை பாதுகாக்க நீங்க இருக்கீங்களே. உங்களை மீறி எவன் என்னை என்ன பண்ணிட போறான். நீங்களே என்னை கூட்டிட்டு போய் நீங்களே கூட்டிட்டு வந்து விடுங்க.” என மலர் கூற, ராஜாவோ ‘ஆஹா தங்கச்சி ஏதோ பிளான் பண்ணிட்டா.’ என சிரித்தபடி மனதினுள் நினைத்துக் கொண்டான். ரௌத்திரனோ இன்னும் யோசித்தபடியே நிற்க மலர் ராஜாவை தனக்கு ஆதரவாக பேச சொல்லி கண்ணைக் காமிக்க,

“மச்சான். தங்கச்சி சொல்றதும் கரெக்ட் தான். நமக்கும் இதை விட்டா வேற வழி இல்ல டா. அதான் நீ இருக்கல. உன்னை மீறி தங்கச்சிக்கு என்ன ஆபத்து வர போகுது.” என ராஜாவும் கூற ரௌத்திரன் யோசித்தபடியே நிற்க மலரோ,

“அட அண்ணா மௌனம் சம்மதம்னு அர்த்தம் இது புரியலையா. சாட்சி சொல்றோம் கேஸை முடிக்குறோம்.” என ராஜாவிடம் கை நீட்ட இருவரும் கை குலுக்கி விட்டு மலர் ரௌத்திரனிடம் கை நீட்ட அவனோ கொடுக்க மறுக்க வலுக்கட்டாயமாக அவனின் கையை எடுத்து பிடித்து குலுக்கி விட்டு அவன் சுதாரிக்கும் முன் வேகமாக சென்றுவிட்டாள் மலர். ரௌத்திரனின் மனதிலோ,

‘இவ எதுக்கு என்னை இவ்ளோ நம்புறா.” என்ற கேள்வி மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது. அவள் சென்ற திசையைப் பார்த்தபடி யோசிக்க அதனை கண்ட ராஜாவோ, ‘ பையன் ஃபிளாட் ஆயிட்டானோ.’ என நினைத்துவிட்டு அவனை உலுக்க,

“என்ன மச்சான் என்னாச்சு?” என ராஜா கேட்க ரௌத்திரனுக்கு ஏனோ மனது உறுத்த,

“ஒண்ணுமில்ல டா. இது சரியா வருமா?” என ரௌத்திரன் கேட்க,

“சரியா வரும் மச்சான். அது சரி மலர் மேல அம்புட்டு அக்கறையா டா.” என வேண்டுமென்றே ராஜா கேட்க,

“மலர் மேலன்னு இல்ல. எந்த பொண்ணா இருந்தாலும் யோசிச்சுருப்பேன்.” என ரௌத்திரன் கூற,

“ஓ அப்படியா. அன்னைக்கு சிசிடிவில செக் பண்ணி சாட்சி சொல்ல அந்த பொண்ணைக் கூட்டிட்டு வான்னு நீ தான சொன்ன. யாருன்னு தெரியாத அப்போ இருந்த தைரியம் இப்போ மலர் தான் அதுன்னு தெரிஞ்ச அப்புறம் எங்க போச்சு.” என ராஜா கேட்க பதில் கூற தெரியாமல் நின்றான் ரௌத்திரன். பாட்டி சாப்பிட கூப்பிட ராஜா சென்றுவிட ரௌத்திரனோ,

‘என்ன இது. ராஜா சொல்றதும் சரி தான். அன்னைக்கு நான் தானே சாட்சிக்கு கூட்டிட்டு வர சொன்னேன். இன்னைக்கு வேணாம்னு சொல்றேன். என்னாச்சு எனக்கு.’ என தனக்குத்தானே சிந்திப்பவனுக்கோ அவனை அறியாமல் அவனின் மனதில் மலரின் காதல் சாயம் ஒட்டிக்கொண்டது என தெரியவில்லை. அது வெறும் சாயம் அல்ல ஓர் காதல் ஓவியம் என ரௌத்திரன் அறிந்தால் மலரின் நிலை…?

ராஜா கீழே செல்லும் நேரம் சரியாக ஹர்ஷு இருவரையும் சாப்பிட அழைக்க மேலே வர வேகமாக வந்தவளோ ராஜா வருவதைப் பார்த்து சட்டென்று நிற்கவும் கால் இடறி படிகளில் விழ போக அதனைக் கண்ட ராஜாவோ உணர்ச்சிவசப்பட்டு,

“ஹே ஹனி பார்த்து” என கத்திவிட்டு அவளை பிடிக்க போக பிடிமானம் இல்லாமல் இருவரும் படிகளில் உருண்டுவிட்டனர். உருளும் போது கூட அவளின் தலையில் அடிபட்டுவிடக் கூடாது என அக்கறையாய் அவளின் தலையில் கைத் தாங்கி பிடித்துக் கொண்டான். சுதாரித்து எழுந்தவனோ அவளையும் கைக் கொடுத்து,

“பார்த்து வந்துருக்கலாம்ல” என கூறிக்கொண்டே தூக்கி விட அவளோ,

“மன்னிச்சுருங்க நான் சத்தியமா கவனிக்காம தான் விழுந்தேன். இதுவும் உங்கள மயக்குறதுக்கு நான் பண்ண பிளான்னு நினைச்சுராதிங்க தயவுசெஞ்சு.” என அவன் முகம் பாராமல் கூறிக்கொண்டு உள்ளே சென்றுவள் அவன் அழைத்த ஹனி என்ற அழைப்பை கவனிக்க தவறிவிட்டாள்.

‘தான் கூறிய வார்த்தைகளே தன்னை சாகடிக்கிறதே’ என நினைத்து கண்ணில் நீர் வடிய அவள் போகும் திசையை வெறித்தபடி நின்றான் ராஜா.

இவ்வாறு மலரின் காதலைப் புரியாமல் ரௌத்திரன் ஒரு புறம் இறுக, புரிந்தும் சொல்ல முடியாமல் ராஜா மறுபுறம் உருக, சொல்லியும் புரியவில்லையே என ஹர்ஷு இன்னொரு புறம் மருக ஆளாளுக்கு ஒவ்வொரு இடத்தில் சிந்தனையில் உலாவினர்.

தன் வீட்டிற்கு சென்ற மலரோ தன்னவனின் கை பிடித்த தன் கையைப் பார்த்தபடி மனதில் காதல் கோட்டை கட்டிக்கொண்டிருந்தாள். தன்னால் தான் தன்னவன் கிண்டல் பேசும் அளவிற்கு மாறியுள்ளான் என்பதை அறிந்த கணமே மலருக்குள் தைரியம் பிறந்தது தன் காதலை நிச்சயமாக அவனுக்கு புரியவைத்து விடலாம் என்று.

உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து
கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே
ஐயோ தடுமாறுதே

உன் கன்னம் மேலே
மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசைஅல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள்
தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே

எனும் வரிகளை அலைபேசியில் ஒலிக்கவிட்டவள் ரௌத்திரனின் கைகளை காலமுழுதும் பிடித்து வாழவேண்டும் என மனதில் நினைத்துவிட்டு தன்னவனை நினைத்து ‘லவ் யூ தீரா’ என தனக்குள் இருக்கும் தன்னவனுக்கு கூறிக்கொண்டவள் அவனின் நினைவுகளோடே நிம்மதியாக நித்திரையைத் தழுவினாள்.

மௌனம் எரியும்…

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்