Loading

மோதும் மேகங்கள்-6

        படப்பிடிப்பிற்கு நேரமானதால் ஆதி இசையை ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டான். அக்காட்சியில் ஆதி நன்றாக நடித்தான். மதிய உணவு நேரம் வரவே இசைக்கு அப்போது தான் தான் உணவு கொண்டு வராதது ஞாபகம் வந்தது. ‘காலையிலேயே அம்மா சொன்னாங்களே நான் தான் அவசர அவசரமாக கிளம்பி வந்துட்டேன்’  என தன்னை தானே நொந்து கொண்டு அருகில் ஹோட்டல் ஏதாவது இருக்கா என தனது கைப்பேசியில் கூகுள் மேப்பில் தேடினாள். “வரும்போது ஒரு ஹோட்டலும் கண்ணுல படல. தேடினாலும் கிடைக்க மாட்டேங்குது, பசிக்குது”  என அவளால் புலம்ப மட்டும் தான் முடிந்தது.

         ஆதிக்கு படப்பிடிப்பு குழுவினரை உணவை அளித்தனர். அவன் இசையை அவனது அசிஸ்டென்டாக அறிமுகம் செய்யாததால் உணவை கொடுப்பவருக்கும் இசை இருப்பது தெரியாமல் போனது. ஆதி அமர்ந்து சிக்கனை சுவைத்துக் கொண்டிருக்க இசை அங்கிருந்து சென்று விட்டாள்.

     “எப்படி சாப்பிடுறான் பாரு. மனசாட்சி இல்லாத மனித குரங்கு. பக்கத்துல ஒருத்தி இருக்காளே அவளுக்கு வேணுமான்னு கேக்க கூட  தோணல. வேளா வேளைக்கு ஜூஸ், காபினு குடிச்சிட்டு இப்ப நல்ல பிரியாணிய வேற கொட்டிக்கிட்டு இருக்கான்”  என அவனை வாய்க்குள்ளே திட்டிக் கொண்டிருந்தாள்.

         அப்போது அவள் அருகே வந்த அபினாஷ் “ஹாய்”  என புன்னகைத்துக் கொண்டே கூறினான்.

         அவளும் “ஹாய்,நீங்க?” என அவன் யாரென்று தெரியாததால் அவனை வினவினாள்.

         “நான் அபி, அபினாஷ். இந்த படத்துல ஆதி சாரோ பிரண்ட் ரோல் பண்றேன்.நீங்க யாரு? உங்கள நான் இதுக்கு முன்னாடி செட்டில பார்த்ததே இல்லையே ”  என பதிலுக்கு அவளை வினவினான்.

         “உங்க ஆதி சாருக்கு அசிஸ்டன்ட்டா மாட்டிகினு தத்தளிக்கும் ஜீவன்” என  தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

        அபி சிரித்து விட்டு “ஓ! வேற ஒருத்தர் தான இருந்தாங்க”  என அவன் வினவ “அவ என் ஃப்ரெண்டு தான். அவளுக்கு கொஞ்சம் உடம்பு முடியல. சோ நான் தான் கொஞ்ச நாளைக்கு அவளோட வேலை செய்யப் போறேன்” என இசை கூறினாள்.

        அபி “ஓ சரிங்க. நீங்க சாப்டீங்களா?”  என்ன வினவினான்.

           ‘பேசி அஞ்சு நிமிஷம் கூட ஆகல. அதுக்குள்ள சாப்டீங்களா எவ்வளவு அக்கறையா கேட்கிறான். மனுஷனா இவன மாதிரி இருக்கனும். அந்த ஆதி குரங்கும் இருக்கே’  என மனதில் நினைத்துக் கொண்டு “இல்லை”  என தலையாட்டினாள்.

           அபி அவனுக்காக கொடுக்கப்பட்ட உணவை இசைக்கு அளிக்க அவளோ வேண்டாம் என மறுத்து விட்டாள். எனக்கு இருக்குங்க. நீங்க சாப்பிடுங்க”  என வற்புறுத்தவே, அவள் வயிறு பசியால் அழும் சத்தத்தைக் கேட்டும் அபி கொடுத்த உணவை வாங்கிக் கொண்டாள் இசை.

        இசையும் அபியும் ஒன்றாக அமர்ந்து உண்டனர். “நீங்க இன்னும் உங்க பேர சொல்லலையே”  என அபி வினவ “அட ஆமால்ல”  என சிரித்துக் கொண்டே “இசைப்பிரியா” எனக் கூறினாள்.

        “இசை ..நல்ல பேருல”  என அவன் கூற, இசைப்பிரியாவிற்கு காலையில் ஆதி அவளின் பெயரை இசை நொசை என்று கலாய்த்தது தான் ஞாபகம் வந்தது.

        ஆதி இசை தேட  அபி அவளுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை கண்டவன் “என்ன டென்ஷன் பண்ணி விட்டுட்டு, நீ மட்டும் சிரிச்சிட்டு இருக்கியா?”  என நினைத்துக் கொண்டு அவனே சென்று இசையை அழைத்தான்.

         சாப்பிட்டுக் கொண்டிருந்த அபி ஆதியை கண்டவுடன் எழுந்து நின்றுவிட்டான். ஆனால் இசையோ எழாமல் அமர்ந்து ருசித்து உண்டு கொண்டிருந்தாள்.

         “பச் அபி உட்காரு. சாப்பிடும் போது எழுந்துக்க கூடாது” என  இசை கூற ஆதி முறைக்க அபிக்கு தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான்.

          இசையை ரசித்து ருசித்து உண்டு கொண்டிருப்பதையும் அபியுடன் சிரித்து பேசி கொண்டு இருந்ததையும் எண்ணி ஆதி அவளை முறைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தான். இசையோ ஆதி என்று ஒருவன் நின்று கொண்டிருப்பதாகவே கருதாமல் அவள் பாட்டிற்கு உண்டு கொண்டே இருந்தாள்.

         ஆதி அவளை முறைத்துவிட்டு அவன் இடத்திற்கு சென்று விட்டான். அவன் சென்றதும் அபி  இசை அருகில் அமர்ந்து “ஹேய் இசை! நீ அவருக்கு உண்மையிலேயே அசிஸ்டன்ட் தானா? காலையிலிருந்து நானும் அவருக்கு நீ ஹெல்ப் பண்ணி பார்க்கவே இல்லையே. அப்புறம் இப்போ இப்படி நடத்துகிற”  என ஆச்சரியப்பட்டு வினவினான்.

     “அவனுக்கெல்லாம் இந்த மரியாதையை போதும். சரி நான் போய் அவன் ஷுட்டுக்கு ரெடியாகறானானு பார்க்கிறேன். பாய் அபி. அப்புறம் பார்க்கலாம். அண்ட் தேங்க்ஸ் பார் லஞ்ச்”  எனக் கூறிவிட்டு அபி சொல்ல வருவதை கூட கேளாமல் தன் கடமையை செய்ய ஓடிவிட்டாள் இசைப்பிரியா.

         அங்கே ஆதி கோபமாக அமர்ந்து இருந்தான். அவனை கண்ட இசை “அதான் வயிறு ஃபுல்லா கொட்டிக்கிட்டல்ல. கொடுக்குற சம்பளத்திக்கு கொஞ்சமாவது  வேலைய பாரு. ஷுட்டுக்கு ரெடி ஆகு”  என பணிவாக கூறாமல் கட்டளை போல் கூறினாள் .

           கோபமாக இருந்தவன் இசையின் பேச்சால் மேலும் கோபமாகி  “ஹேய் நீ யாரு எனக்கு கட்டளை போடுறதுக்கு? நீ எனக்கு அசிஸ்டென்டா? இல்ல அபினாஷ்க்கூ அசிஸ்டென்டா?”  என வினவினான்.

           “என் விதி, கூட இருக்கிறவ சாப்பிட்டாளானு கூட கேட்காத உனக்கு அசிஸ்டென்டா தான் இருக்கனும்னு எழுதி இருக்கு”  என சலித்துக் கொண்டே கூறினாள் இசை.

          “எனக்கு அசிஸ்டென்டா இருக்க எத்தனை பேர் காத்துட்டு இருக்காங்க தெரியுமா? உனக்கு போய் வேலையை கொடுத்த பாரு. அண்ட் நான் சாப்பிட்டேனா , ஷூட்டுக்கு கரெக்ட் டைமுக்கு வரைனா இதெல்லாம் பார்க்கிறது தான் உன்னோட வேலை. உனக்கு என்னால பார்த்துட்டு இருக்க முடியாது”  என ஆதி கூற இசை அவனுக்கு பதிலடி கூற  வாய் எடுக்க அதற்குள் மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து “சார் உங்க ஷுட்டுக்கு டைம் ஆயிடுச்சு. அதான் வந்தேன்” என கூற “இதோ வரேன்” என ஆதி சென்று விட்டான்.

        ஆதி நடித்துக் கொண்டிருக்க இசைக்கு தான் போர் அடித்துக்கொண்டு இருந்தது. இசை படங்களைப் பார்த்து பழக்கம் இல்லாததால் அவளுக்கு படப்பிடிப்பை பார்ப்பதிலும் ஆர்வம் இல்லை. அபினாஷ்க்கு  எந்த காட்சியும் இல்லாததால் அவன் இசை அருகில் வந்து  “ஹே இசை”  என கூற  “ஹாய் அபி. உனக்கு ஷூட் இல்லையா?”  என வினவினாள் இசை.

       ” எனக்கு இப்போ இல்ல. நானும் ஆதி சாரும்  சிங்கிள் டேக்கிலேயே நடிச்சதுனால எனக்கு இப்போ இருந்த சீன் லஞ்சுக்கு முன்னாடி எடுத்துட்டாங்க”  எனக் கூறினான் அபி.

        “ஓ அப்படியா” என இசை கேட்க “ஆமா” என அபி கூற அவர்களின் உரையாடல் நீண்டு கொண்டே போனது. ஆதி நடித்துக் கொண்டிருக்கும் போது எதர்சயாக இசையை காண அவள் இம்முறையும் அபினாஷ் உடன் சிரித்து  பேசிக் கொண்டிருக்க அவனை அறியாமலே கோபம் வந்தது.

       அவன் நடித்துக் கொண்டிருந்த காட்சியில் அவன் கொடுக்க வேண்டிய முக பாவனைகளை சரியாக கொடுத்து நடித்துக் கொண்டிருந்தாலும் நடிப்பில் உயிரோட்டம் இல்லை. இதை கண்ட இயக்குநர்  “கட்”  என கூறி விட்டார்.

      ஆதி அதே காட்சியை மறுபடியும் நடிக்க இம்முறையும் அவனது நடிப்பில் உயிரோட்டம் இல்லை. இப்படியே இரண்டு மூன்று தடவை நடக்கவே டைரக்டர் கடுப்பில் “பேக்கப். நாளைக்கு பாத்துக்கலாம்” என கூறிவிட்டார்.

        ஆதி இசையிடம் கூறாமலே   சென்றுவிட்டான்.இசையோ ஆதியின் பின்னாலேயே “ஆதி ஆதி”  என கத்திக் கொண்டே ஓடினாள். ஆதித்தியனோ அதையெல்லாம் காதிலேயே வாங்காமல் தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.

             

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்