Loading

மோதும் மேகங்கள் -3

       ஷுட்டிங் ஸ்பார்ட்டிற்கு வெளியில்  வண்டி அருகில் வந்தவுடன் இசையை பிடித்திருந்த ஸ்வேதாவின் கையை தட்டிவிட்டவள், “நீ எதுக்குடி என்ன நடந்ததுனு கூட கேக்காம அவன் கிட்ட சாரி கேட்ட? என்ன ஏன்டி இழுத்துத்து வந்த? நேத்து என்மேல சேத்த அடிச்சுத்து, இன்னிக்கும் என் மேல காபியை கொட்டிட்டு  ஒரு சாரி கூட கேக்கல. திமிருபுடிச்சவன்..” என அவனை வசைப் பாடிக்கொண்டிருந்தாள் இசை. ஸ்வேதா இசையின் வாயை தன் கையால் பொத்தி, அவளே இசையின் வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றாள். போகும் வழியெல்லாம் அவள் விடமால் ஆதியை அர்ச்சித்துக் கொண்டே வந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க மாட்டாது வண்டியை நிறுத்திவிட்டு பின்னால் இருக்கும் இசையை தீயாய் முறைத்து “வீட்டுக்கு போற வரைக்கும் கொஞ்சம் உன் திருவாய்க்கு பூட்டு போடுறியா?” என சொல்லி விட்டு வண்டியை கிளப்பினாள்.

       இசையின் வீட்டிற்கு வந்தடைந்த இருவரும் உள்ளே நுழைந்ததும் திட்டுவது ஸ்வேதாவின் முறை ஆனது.  “ஆதி சாரப் பத்தி குறை சொல்லி திட்டிப் பேசுறீரேயடி ,அதுவும் பப்ளிக்ல. அவரோட பேன்ஸ் யாரவது கேட்டு இருந்த நாம இந்த மாதிரி சேப்ஃஆ  வீட்டுக்கு வந்துருக்க முடியாது”  என இசையை பலமாக திட்டிக் கொண்டே இருந்தாள். இசையோ, “அப்படி யாருடி அவன்? அவன் என்னென்ன நா யாருனு தெரியுமா தெரியுமானு பில்ட் அப் குடுக்குறான். நீ என்னனா அவன சாரு மோருனு கூப்டுகிட்டு அவனுக்கு பேன்ஸ்லாம் இருக்காங்கனு அவனுக்கு மேல பில்ட் அப் குடுக்குற? யாரு தான் அவன்”  என வினவினாள். ஸ்வேதா,  “இதுக்கு தான்டி படம்லாம் பாக்கனும்னு சொல்றது. அட்லீஸ்ட் சோசியல் மீடியாவாது (சமூக வலைத்தளங்கள்) யூஸ் பண்ணனும். நீ

யூ ட்யூப் பக்கம் கூட போக மாட்டுறுக்க. இதுல எதாச்சும் ஒன்ன பண்ணியிருந்தாலும் நீ அவர திட்டி இருக்க  மாட்ட ” எனக் கூறினாள்.

    இசை கடுப்பில் இருந்தவள் இன்னும் கடுப்பாகி ” நா என்ன கேட்டேன்? நீ என்ன சொல்லிட்டு இருக்க?” எனக் கேட்டாள்.

ஸ்வேதா,  “அவரு ஆதி. ட்ரீம்பாய் மிஸ்டர் ஆதித்யன் . அவரு சின்ன வயசுல இருந்தே நடிக்குறாரு. அவர் நடிச்சாலே, ஏன் கெஸ்ட்  அப்பியரன்ஸ்க்கு(guest appearance)  வந்த கூட அந்த படம் ஹிட் ஆய்டும். எவ்ளோ ப்னேஸ்(fans) தெரியுமா அவருக்கு ?  எவ்ளோ பொண்ணுங்களுக்கு அவரு கனவு நாயகன் தெரியுமா? இருபத்தி ஒன்பது வயசிலியே சக்சஸ்புல்லா ஒரு படம் கூட ப்ளாப்  ஆகாம நடிக்குற நடிகன்.  அவருக்கு அசிஸ்டண்ட்டா எனக்கு வேலை

கிடைச்சதே  நா போன ஜென்மத்துல பண்ண புண்ணியம்னு நெனக்கிறேன்..” என அவள் அவனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தாள்

    அப்போது தான் தனது அறையிலிருந்து

மொபைல் போனை நொண்டிக் கொண்டு வந்த முகிலனின் காதில் ஸ்வேதா நடிகர் ஆதிக்கு அசிஸ்டண்ட்டாக வேலை செய்கிறேன் என கூறியது விழுந்தது. ஸ்வேதா சினிமா வட்டாரத்தில் வேலை  செய்கிறாள் என முகிலன் அறிந்திருந்தாலும், ஆதியிடம் வேலை செய்வது அவனிற்க்கு புதிய செய்தியே. அவன் வேகமாக சென்று ஸ்வேதாவை பிடித்துக் கொண்டு “வாவ் அக்கா! என் தலைவர் கூடவா வேலை செய்யுற? ஏன் என்கிட்ட சொல்லல? அக்கா அக்கா ப்ளீஸ், ஒரே ஒரு முறை அவர பாத்து ஒரு செல்பீ மட்டும் எடுத்துக்குறேன்” என கெஞ்சிக் கொண்டிருந்தான்.

 

      “தெரிஞ்சிக்கோ, நா சொன்னது எவ்ளோ உண்மைனு” என்று இசையிடம் கூறிவிட்டு  முகிலனிடம்  “உனக்கு அவரோட  அருமை தெரியுது. ஆனா உன் அக்காவுக்கு தெரிலயே. அவரு கூட இன்னிக்கு ஷுட்டிங் ஸ்பார்ட்ல அப்படி கத்தி சண்டை போட்டுட்டு இருந்தா..”  என ஸ்வேதா கூறி முடிக்கவில்லை அதற்குள் முகிலன்  “இசை! நீ என் அவரு கூட  சண்டைப் போட்ட ? அறிவு இருக்க உனக்கு ? அவரலாம் பாக்க மாட்டோமானு நாங்களாம் ஏங்கிட்டு இருக்கோம் .நீ என்னனா கிடைச்ச வாய்ப்ப வேஸ்ட் பண்ணிட்டு, சண்ட வேற போட்டுட்டு வந்து இருக்க ?” என இசையிடம் எகிறிக் கொண்டிருந்தான்.

      தன் உயிர் தோழியும், உடன் பிறந்தவனும் என்ன நடந்தது என தன் பக்க நியாயத்தைக் கூட கேட்காமல்  யாரோ ஒருவனான ஆதிக்கு பரிந்துப் பேசித் தன்னை திட்டுகிறார்களே என நினைத்து கண்ணில் கண்ணீருடன் தன் அறைக்கு சென்றுவிட்டாள் இசை பிரியா.

          அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் ஸ்வேதாவிற்கு மனம் கணத்தது,  ‘அவளுக்கு பொறுமையாக எடுத்துக் கூறி இருக்களாமோ?’ என யோசித்தாள் . சிறு வயதில் இருந்தே இசையுடன் இருக்கும்  உயிர் தோழி ஆயிற்றே.

       அவள் பின்னால்  செல்ல போனவளை தடுத்த முகிலன், “அக்கா! அவ கெடக்கறா. அதலாம் சரி ஆய்டுவா. நாம போன தான் மூக்க உறிஞ்சிட்டே அழுது புலம்புவா. அவள விடுங்க. என்ன உங்க தம்பியா நெனச்சி ஆதி சார ஒரே ஒரு  முறை மீட் பண்ண வைங்க அக்கா. அவர் கிட்ட ஒரு ஆட்டோகிராப், அப்புறம் ஸ்பேஸ்ல  போட ஒரே ஒரு செல்பீ. இது போதும் அக்கா.ப்ளீஸ்”  என ஸ்வேதாவிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி கொண்டிருந்தான்.

“சரிடா, ஆதி சார மீட் பண்ண வெக்குறேன்” என அவனது தலை முடியை கலைத்தவாறே சிறுபுன்னகையுடன் அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, “அடடா ஸ்வேதா வாமா. இப்போ தான் உனக்கு இந்த வீட்டுடோ அட்ரெஸ் தெரிஞ்சுச்சா?” என கேட்டவாறே கடைகளிலிருந்து வாங்கி வந்த பொருள்களுடன் உள்ளே நுழைந்தார் கவிதா. கவிதாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு அவரிடமிருந்தும் முகிலனிடமிருந்தும் விடைப்பெற்று சென்றாள் ஸ்வேதா.

    

         ஆதியின் அப்பிரம்மாண்ட வீட்டில் ராகுல் தருணிடமும் சாராவிடமும் “ஆதி வரமாட்டானு நெனக்கிறேன். அவன நம்ப வேண்டாம்.நாம கான்சர்ட்க்கு கெளம்பளாம்.அவன் வந்த ஜாய்ன் பண்ணிக்கிட்டும்”  எனக் கூறிக் கொண்டிருந்தான்.

    தருண், “இருடா மச்சான் அவன் வேற கால எடுக்க மாட்றுக்கான்.கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு கிளம்பலாம்”  என கூறினான்.

        சரியாக அந்நேரம் ஆதி வரவே அவனிடம் தருண் “சீக்கிரம் வாடா மச்சான் கான்சர்ட்க்கு லேட்டாயிடுச்சு” எனக் கூறினான் .

     ஆதி அவர்களிடம் “நீங்க போய்ட்டு வாங்க நான் வரல” என கூறினான்.

       “உனக்காக தானே இவ்வளவு நேரம்.. என ராகுல் ஏதோ கூற வர அவனை இடைமறித்த சாரா, “சரி வாங்க நாம கிளம்பலாம்”  என கூறினாள். போகும் வழியெல்லாம் ‘என்னாச்சு ஆதிக்கு இப்படி எல்லாம் பண்ண மாட்டானே’ என யோசித்துக் கொண்டே சென்றாள் சாரா.

     மறுநாள் காலையில் இசைக்கு ஸ்வேதா நியாபகமாகவே இருக்க அவளுக்கு அழைத்தாள். மறுபக்கம் அழைப்பை ஏற்ற ஸ்வேதாவின் தாயார் அவளுக்கு ஆக்சிடென்ட் என கூறியதும் அவள் பதறி அடித்து கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள் இசை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்