இங்கு தன்னை தன் சகோதரன் எழுப்பியதாக நினைத்து திட்டிக்கொண்டே எழுந்தவள் எழிலனை கண்டு அதிர்ச்சியில் அலறியவிட்டாள். அவள் அலறலில் தான் பயந்து போனான் எழிலன்.
எழிலன்,“ம்மா ம்மா மொழி. கத்தாதே கத்தாதே”, என்றான் காதுகளை இரு கைகளால் அடைத்தவாறு.
சத்தம் போட்டும் யாரும் வராததை உணர்ந்தவள் வெடுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் பார்வையில் அனல்.
அவனுக்கோ குழப்பம்,”என்ன இவ லூசு மாதிரி பண்றா. ஒரு வேலை தலையில ஏதும் அடிபட்டு பைத்தியமாகிட்டாளோ. ஐயோ பாவம்” என்று மனதில் நினைத்தவன் பேசுவதற்கு முன் அவள் குரல் ஓங்கி ஒலித்தது.
மொழி, “டேய் மொக்க ஜோக் முள்ளம்பன்றி. எதுக்கு டா என்னை கடத்திட்டு வந்திருக்க”, என்க
அதற்கு அவனோ, “எது முள்ளம்பன்றி யா. நீ தான் டி குள்ள காட்சில்லா”.
மொழி, “எது டி யா. என்ன தைரியம் உனக்கு. நான் யார் தெரியுமா. என் பேக் கிரௌண்ட் தெரியுமா”.
எழிலன், “ இதுக்கு எதுக்கு டி கஷ்ட படனும். எட்டி பார்த்தா உனக்கு பின்னாடி இருக்க கிரௌண்ட் நல்லாவே தெரியுது. வேணும்னா திரும்பி பாரு டி வென்று”.
மொழி, “இன்னும் டி போட்டு கூப்பிப்புட்ற, போடாங் முழு பைத்தியம்”, என்றவளுக்கு,
“இன்னும் கேவலமா மொக்க ஜோக் சொல்றனே ச்சை. பின்னாடி இருக்க நிலத்தை பார்த்து பேக் கிரௌண்ட் ஆம் ச்ச. இவன் கிட்டயா நான் சிக்கணும் நல்ல மூளை வளர்ச்சி உள்ள கடத்தல் காரன் கிட்ட சீக்கிருக்கலாம் போல. சினிமால இப்போலாம் எவ்ளோ அழகா இருகாங்க கடந்தறவங்க” என்று நினைத்து கடவுளிடம் நொந்து கொண்டிருந்தாள்.
எழிலன், “ நீ மட்டும் மரியாதை கொடுத்து கிழிச்சியோ. நீ தான மொத டா போட்டு பேசுனா”.
மொழி, “ நீ ஏன் டா என்னை கடத்திட்டு வந்த?”. கடத்துனவன சார் போட்டு கூப்பிட சொல்றியா டா மோரு”.
எழிலன், “ ஏதேய்ய்ய் கடத்துனேனா. நானா? அதுவும் உன்னையா?”.
மொழி, “பின்ன நானா உன்னை கடத்துனேன். கடத்திட்டு வந்துட்டு நடிப்ப போடறான் பாரு”.
எழிலன், “ தோ டா ஆசைய பாரு. கால் அனா கு பிரயோஜனம் இல்லாத உன்னை எதுக்கு டி கடத்திட்டு வரணும் நான். அப்டியே அழகினு நெனப்பு. இந்த மூஞ்சிய கடத்திட்டு வரது தா எனக்கு தலையாய கடமை போடிங் சிப்ஸு”.
மொழியோ கோபத்தில் மூக்கு சிவக்க, அவனை முறைத்து கொண்டிருந்தாள். சற்று நேரம் மூக்கு சிவக்க முறைத்தவளை ஆழ்ந்து பார்த்தவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.
எழில், “ இந்த விழினால தான் உன்னை தேடி வந்தேன். இல்லனா நான் ஏன் உன்னை தேடணும்”, என்றவனுக்கு தான் தெரியும் எப்படி இருப்பினும் விழியுடன் அவளையும் தான் கண்டிப்பாக தேடி இருப்பான் என்று. அதெப்படி உடன் வந்த பெண்ணை தேடாமல் அப்படியே விட்டுச்செல்ல இயலும். அதுவும் மொழியும் தங்களுடன் இங்கு தான் இருப்பாள் என்பதில் உறுதியாய் அத்தனை நம்பிக்கை இருந்தது.
மொழி, “ எது தேடினியா”, என்றவளுக்கு அப்போது தான் உரைத்தது தாங்கள் விமானத்தில் அல்லவா வந்துகொண்டிருந்தோம். திடீரென்று இங்கு எப்படி அதுவும் இவனுடன் என்று அப்போது தான் மூளையின் நரம்புகள் வேலை செய்து கேள்விகள் எழுப்பின.
அவனோ பேசிகொண்டிருந்ததை நிறுத்தியது போல் தெரியவில்லை.
எழிலன், “ அவ அவ்ளோ பயந்து அழுகலை னா நான் உன்னை தேடியும் வந்திருக்க மாட்டேன். இப்படி அசிங்க பட்ருக்கவும் மாட்டேன். எல்லாம் என் எல்லாம் என் போர் ஹெட் லெட்டர்ஸ்”.
அவன் பேசியது புரியாமல் அவள் பார்க்க, அவனோ, “எல்லாம் என் தலை எழுத்துனு சொன்னேன்”.
அதை கேட்டு அவனை நோக்கி கேவலமான பார்வை ஒன்றை வீசியவள். “இந்த மொக்க முள்ளம்பன்றி திருந்தாது”, என்று மனதோடு நினைத்து கொண்டாள்.
மொழி, “ சரி இப்ப எப்படி இங்க வந்தோம். நம்ம பிலைட்ல தான வந்துட்டு இருந்தோம். இப்ப எப்படி இங்க”.
எழில், “ ம்ம் அது எங்களுக்கும் புரியல. கடைசி ஞாபகம் பிலைட் ல ஒக்காந்து இருந்தது தான். இப்ப நம்ம அவங்கள மீட் பண்ணினா அதை பத்தி கேக்கலாம். எல்லார் கிட்டயும் கேப்போம் யாருக்காச்சும் ஞாபகம் இருக்க வாய்ப்பிருக்கு”, என்றதும் சரியென ஒப்புக்கொண்டாள்.
தனக்கும் அங்கு சென்றாள் தானே நிலைமை புரியும் என்று அமைதியுற்றாள்.
“சரி வாங்க கிளம்புவோம். இருட்ட அரம்பிக்குது” என்கவும் அவனுடன் புறப்பட்டாள். இருந்தும் வழியெங்கும் அவனை மனதில் வருத்து கொண்டே சென்றாள்.
ஏனோ அவனிடம் சண்டைபிடித்து கொண்டே வந்தாள். அதுவே அவர்களை அதிகம் பேச வைத்தது. அந்த பேச்சு ஒருவர் மீது ஒருவருக்கு கோபத்தை தூண்டியது. எங்கே இதற்கு மேல் பேசினால் நடுவில் விட்டுவிட்டு சென்றுவிட்டால் என அவள் அமைதியாய் நடந்தாள்.
சற்று தூரம் நடந்ததும் அவன் கைகளில் சிக்கியது அவன் கால் சராயில் பறித்து வைத்திருந்த பழங்கள். தங்களுக்கு பசித்ததே அப்படி என்றால் இவளுக்கும் பசிக்கும் தானே என்று நினைத்தவன் அவளிடம் அந்த மூன்று பழங்களை நீட்டினான்.
சட்டென்று நடையை நிறுத்தி தன்புறம் திரும்பி கைகளில் நீதியவற்றை பார்த்தவள்,
மொழி, “இந்நேரம் உருளைக்கிழங்க வெச்சிட்டு நான் என்ன பண்றது”என்றதும்,
“ஓஓஓ மேடமுக்கு இந்த வித்யாசம் லா தெரியாதா”என்று மனதில் நினைத்த எழிலன்,
“இது சப்போட்டாங்க மேடோம். லிட்டில் பிரின்சஸ் மேடோம்” என்றான் நக்கலாய்,
மொழி, “ இது எங்க கெடச்சுது. இங்க மரம் லா இருக்கு தான். ஆனா இது மாதிரி ப்ரூட்ஸ் இருந்த போல இல்லையே”.
எழிலன், “ அது உங்களை தேடறப்ப கெடச்சது இங்கே இல்லை வேற இடம். சரி. உங்களுக்கு வேண்டாம் ல என்றவன் தான் உண்டு கொள்வதாய் கூற பதறியவள் வேறு புறம் முகத்தை திருப்பி கொண்டு,
மொழி, “ வேண்டாம் னு நான் சொல்லவே இல்லையே, கொடுங்க”, என்றுவிட்டு இவன் புறம் திரும்பி அவன் கைகளில் இருந்த பழங்களை பறித்து வேகமாய் உண்டாள். ‘எங்கே அவன் மீண்டும் கேட்டுவிட்டால்’ என்பது போல்.
அவள் உண்ட வேகத்தை பார்த்து சிரித்து விட்டான். “இவ்ளோ பசியை வெச்சிக்கிட்டு தேவைதானா அந்த பில்டப்பு” என்றவனுக்கு தன் நண்பன் தான் நினைவுக்கு வந்தான் “சரியான சீன் பார்ட்டிங்க தான் ரெண்டும்” என்று நினைத்துக்கொண்டு அவளுடன் மீண்டும் நடையை தொடர்ந்தான்.
~~~~~~~~
அதே நேரம் இங்கு மொழியை தேடிக் கொண்டு வந்த விழி அவள் நினைவுகளை சிந்தித்துக் கொண்டு கண்களை சுழற்றி தேடியவாறு வெகுதூரம் நடந்திருந்தாள். அவள் வந்த பாதை சரியா என்றெல்லாம் தெரியாது ஆனால் தோழியின் நினைவுகளில் நடந்தாள் அவளை அழைத்தபடி,
“மொழி. மொழி”, என்று, அவள் அழைப்புக்கு பதில் குரலுக்காய் எதிர்பார்த்து இருந்தாள். அவள் குரலில் பயத்தில் நடுக்கம்.
“இன்னும் எவ்வளவு நேரம் அழுதுகிட்டே இருக்கிறதா உத்தேசம்”
அந்த குரலைக் கேட்ட அவளுக்கு ஆசுவாச பெருமூச்சு. குரல் வந்த திசையை திரும்பி பார்த்தாள். ஆம் அவன் தான். நிறைமதியன் தான் வந்திருந்தான்.
மேலும் தொடர்ந்தான், “அழுதுகிட்டோ பயந்துகிட்டோ இல்லாம பொறுமையா தேடுவோம். இப்ப நம்ம எல்லாம் இங்க இருக்கோம்னா அவங்களும் இங்கதான் இருப்பாங்க கண்டிப்பா”
இவனை வேறு திசைக்கல்லவா திருப்பி விட்டிருந்தான் எழிலன். விழி அவனைக் கேள்வியாக பார்க்க,
அவனோ, “ ஆல்ரெடி ஈவினிங் ஆகிட்டு இருக்கு. அப்படி தனியா எல்லாம் விட முடியாது. இன்னொருத்தரையும் தொலைஞ்சிட்டா தேடுறது ரொம்ப கஷ்டம்.அதுக்காக தான் வந்தேன் வாங்க கன்டினியூ பண்ணுவோம் தேட.”,என்றவன் கைகளில் ஒரு மரத்தின் குச்சியை சுழற்றிகொண்டிருந்தான்.அதை பார்த்த விழி,
“ இந்த குச்சி எதுக்கு?”, என்றாள்.
அந்த குச்சியை சுழற்றி அதனை தூக்கி போட்டு லாவகமாக பிடித்தவன்.
“அவசரத்துக்கு தேவைப்படும் னு எடுத்துட்டு வந்தேன். ஒரு வேலை குரங்கு, மாதிரி ஏதாச்சும் வந்தா யூஸ் பண்ணிக்கலாம் னு”, என்று பதிலாளிதான்.
அவளுக்கும் அது சரி என பட மீண்டும் தன் தேடலை தொடர்ந்தாள் நிறைமதியனுடன்.
போகும்பொழுதே சில செடிகளை பார்த்தவள் ஆச்சரியப்பட்டு அருகே சென்று அதன் நிலைகளை இரண்டு நொடிக்கும் அதிகமாய் ஆராய்ந்து விட்டு மீண்டும் தன் தேடலை தொடங்கினாள்.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த மதியனும் என்ன வென வியம்ப
“ அதெல்லாம் ரொம்ப அவசியமான ஹெர்பல் மெடிசின்ஸ். அதான் அதெப்படி இங்க னு பார்த்தேன்”, என்க,
அவனோ சற்று குழம்பியவன், “நீங்க இங்கிலீஷ் மெடிசன்ஸ் அதாவது அலோபதி மெடிசின்ஸ் பத்தி தான படிச்சி இருக்கீங்க. உங்களுக்கு எப்படி இந்த மெடிசினல் செடிகளை பத்தி தெரியும்”.
விழி, “எங்க ப்ரொபசர் ஒருத்தர் எங்களுக்கு இதை பத்தி கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்காரு. ரொம்ப பேசிக் மருத்துவ செடிகளை பத்தி. இத்தனைக்கும் அந்த செடிகளை கைல கூட காமிச்சிருக்காரு”
“ஓஓஓ”, என்றவன் பேச்சை நிறுத்திக் கொண்டான்.
அதற்குள் கொஞ்சம் இருட்ட ஆரம்பித்திருக்க,
மதியன்,“ இதுக்கு மேல தேடுறது ரிஸ்க். வாங்க போவோம்”, என்றான்.
விழி,“இன்னும் மொழி கிடைக்கல”, என்றவள் குரலில் மொழி இல்லாமல் இங்கிருந்து வரமாட்டேன் என்ற உறுதி.
அதன் பிறகு என்ன நினைத்தானோ மீண்டும் அவளுடன் தேடல் பயணத்தை தொடர்ந்தான்.
அவளும் குரல் கொடுத்து கொண்டு தான் இருந்தாள். தொண்டையும் நன்றாக வறண்டிருந்தது. தண்ணீருக்கும் வழியில்லை.
விரைவாய் இருட்டியதை போல் உணர்ந்தாள் விழி . இன்னும் மொழி கிடைக்கவில்லை. இனி தேட நினைத்தாலும் தேட இயலா சூழல் அவளை வாட்டியது.
நிறைமதினுக்கு இவளை புரிந்தாலும் இனி தேடுதலை தொடர்வது பயனற்ற ஒன்று, இந்த இடத்தில இருப்பதும் அத்தனை பாதுகாப்பானது அல்ல என்பதே நிதர்சனம் என உணர்ந்தவன் அவளை சம்மதிக்க வைத்து சமாதானம் சொல்லி மீண்டும் வந்த இடம் அழைத்து சென்றான்.
விழி “நீங்க வேணும்னா போங்களேன் நான் பார்த்துகிறேன்”, என்றவளை வரவைத்து பொறுமையோடு பார்த்தவன்.
மதியன்,”புரிஞ்சிக்கோங்க மா. பிராக்டிகலா இது பாசிபிள் இல்லை. இப்பவச்சும் கொஞ்சமா வெளிச்சம் இருக்கு எதோ எதிர்க்க ஆள் இருக்காங்க னு தெரிஞ்சிக்கிற அளவுக்கு. இன்னும் இருட்டுனா என்னனு தேடுவீங்க . இங்க ஏதும் மிருகம் இருக்க இல்லை விஷ பூச்சிங்க இருக்கானு யாருக்கு தெரியும். கண்ணுக்கும் தெரியாது என்னனு தேட போறீங்க”.
“ம்ம் . புரியுது ஆனா அவ இல்லாம எப்படி?, என்றவளை பார்த்த மதியன் ,
” நம்ம மட்டும் தேடலை . எழிலும் ஒரு பக்கம் தேடிட்டு இருக்கான் அங்க அவங்க கெடைச்சிருந்தா? இங்க நிக்ரத விட அங்க பொய் பார்க்குறது பெட்டர். கிடைக்கலைனாலும் மறுபடியும் வருவோம் நாளைக்கு மார்னிங்கே”.
இத்தனை பாடுபட்டு அவளை அழைத்து சென்றான் மதியன்.
Super da ❤️❤️silent party romba thaan thulluthu paavam eli அவள தேடி vanthu asinga paduraan 😂😂
🤣🤣 அது எலி ஓட விதி டா 😂😂😂 ❤️
எப்படியோ மொழி நல்லபடியா கிடைச்சுட்டா சந்தோசம் 😍😍
அங்கங்க எழுத்துப் பிழைகள் இருக்கு அதெல்லாம் சரி பண்ணுங்க
Thank you sis🤩. Crct paniten