Loading

மொழியை தேடுவதற்காய் மூவரும் ஒன்றாக நடந்து கொண்டிருந்தனர் மூவரும் தங்கள் கண்களை எல்லாபுறமும் சுழற்றியவாறு.

 

எழிலனோ ஏதோ அசௌகாரியத்தில் முகத்தை சுருக்கி சுருக்கி விரித்தவாறு நடையை தொடர்ந்தான்.

 

விழிக்கோ பசியில் வயிற்றில் குதிரை பந்தயம் நடந்து கொண்டிருந்தது. அவளுக்கோ தோழியை கண்டுபிடித்தே தீர வேண்டும் என ஒரு குரல் உறுதியாய் மனதில் குரலாய் கூறிக்கொண்டிருந்தது. 

 

பசியும் ஒரு பக்கம் அவளை வாட்ட, “ பேசாம நம்மளே வாய விட்டு கேட்ருவோமா” என்று நினைத்தவளுக்கு குற்றவுணர்வு. தன் உயிர் தோழியை காணவில்லை எங்கே என்றும் புரியவில்லை. அறியாத இடத்தில் அவள் எங்கு இருக்கிறாள். கிடைத்துவிடுவாளா கிடைக்க வேண்டும். மனதில் அத்தனையும் போட்டு குழப்பிகொண்டிருந்தாள். 

 

அவளை தேடுவதற்குள் இப்படி தன் வயிற்றுக்கு பசி ஒன்றுதான் அவசியமா என்றெல்லாம் சிந்தனை தறிக்கெட்டு ஓடிகொண்டிருந்தது அதை நிறுத்துவார் தான் யாரும் இல்லை.

 

எப்போது கடைசியாய் உணவு உண்டனர் என்று அவர்களுக்கே தெரியாது. அவர்கள் இங்கே வந்து எத்தனை நேரம் கடந்திருக்கும் என்பதும் கூட தெரியாதே.

 

இது சாதாரண விடயம் தானே. பசி என்பது அனைவருக்கும் வர கூடிய ஒன்று தானே. என்னவென சொல்லிவிட முடியும் வயிற்றை. அவள் கை கால்கள் நடுங்கின. அத்தனை பசி. அந்த நடுகத்தில் நடக்கவும் கடினமாக தான் இருந்தது. இருந்தும் நடந்தாள். 

 

அவள் கண்களிலும் ஏதும் சாப்பிடுவதற்கு எதுவாய் தென்பட்டத்தை போல் நினைவில்லை. நீர் கூட அருந்த கூட வாய்ப்பில்லையே. இதற்காக தானே அவன் சொன்னான் அதிகம் சக்தியை இழக்கும் அளவுக்கு பேசாதீர்கள் என்று. 

 

அவர்களிடமே கேட்டேவிடுவோம் என்று நினைத்தவள் வாய் திறக்க அதற்குள் அவள் கேட்க நினைத்ததை எழிலன் கேட்டிருந்தான். 

 

ஆம், அவனின் அசௌகரியத்திற்கு காரணம் பசி. பசி வயிற்றை கிள்ளியது. சூழ்நிலை பற்றி சிந்தித்தாலும் பசியை அடக்க என்ன செய்துவிட முடியும். தண்ணீர் இருந்தால் அதை குடித்து கொஞ்சம் அடக்கியிருக்கலாம். இப்போது அதுவும் இல்லை. வாய் திறந்து பேசிட முடிவு செய்து சட்டென நின்ற எழிலன், 

 

“எனக்கு ரொம்ப பசிக்குது டா”, என்றான் நிறைமதியனை பார்த்தவாறு, அவன் கேட்ட வார்த்தைகளில் தீயாக எழிலனை முறைத்தான்.

 

எழிலன் கேட்டத்தில் விழி “இவனுக்குமா. நல்ல வேலை கம்பெனி கு ஆள் இருக்கு. நம்மளும் ரெண்டு வார்த்தை சேர்த்து கேப்போம். நடக்க கூட தெம்பில்லையே” என்று நினைத்தவள் மீண்டும் பேச வாய் திறக்க போக,

 

மதியன்,“ஏன்டா. ஒரு பிள்ளையை காணோம் னு தேட வந்திருக்கோம் நினைவு இருக்கா. பொறுப்பே இல்லாம பசிக்குதுங்கிற சின்ன பிள்ளை மாதிரி” என்றதும் விழிக்கு மனதில் ஏதோ உடைந்தது. 

 

எழிலன்,“ஐயோ வயித்துகுள்ள வேற புல்லட் ஓடுதே. இவன் வேற டைம் புரியாம கிளாஸ் எடுக்கிறானே”, என்று அவனை வாய்க்குள் வசை பாடியவன்

 

எழிலன்,“இவனை பார்த்தா அவசரத்துக்கு திட்டகூட வர மாட்டுதே” என்று தன்னையே நொந்து கொண்டான்.

 

பசியில் ஏதோ ஓர் தைரியத்தில், “ மனுஷன்னா பசி எடுக்கிறது சகஜம் டா. எல்லாருக்குமே வரது தானே. அதுக்குனு வயித்துகிட்ட கிட்ட போய் நீ ஏன் பசிக்கிற நாங்க எங்க ப்ரெண்ட தேடி முடிச்சதும் வா னு சொல்லவா முடியும் பசில அப்டியே தேடி மயக்கம் வந்தா என்னடா பண்றது”, என்று ஒரு புறம் தன் பக்க நியாயத்தை நிலைநாட்ட போராடி கொண்டிருக்க,

 

அவர்களின் வாக்குவாதம் ஆரம்பிக்கும் முன்னரே சரியாக அவள் வயிறு சத்தம் கொடுத்து சதி வேலை பார்த்துவிட்டது. 

 

அவள் பசியை வெளிச்சத்தில் காண்பித்துவிட்டது. மதியனின் பேச்சு நினைவுக்கு வர ‘ஐயோ’ என்று பயந்தவள் அவர்களை பார்க்க, இவளுக்குமா பசி என்று திரும்பிய எழிலன்,“போ போய் லைன் ல நில்லு எனக்கு தான் மொத பசிச்சுது அதுக்கே இங்க ஹெல்ப் இன்னும் கிடைக்கல”, என்றவன் தன் வாக்குவாதத்தை தொடர்ந்தான்.

 

அவளுக்கு பயம் தன் உயிர் தோழியை விட தனக்கு உணவு பெரிதோ என்று கேட்டு விட்டால்?. தன்னால் அந்த வார்த்தைகளை தாங்க இயலாதே.

 

எழிலன் விளக்க முற்பட, மதியன் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை அந்த வாக்குவாதங்களை கருத்தில் கொள்ளவும் இல்லை. எழிலன் பேசி கொண்டே இருக்க திடீரென மதியன் ஒரு திசையை காட்டியவன் “அது சப்போட்டா மரம் டா” என்க,

 

எழிலன், “இங்க ஒருத்தன் உயிரை கொடுத்து பேசிட்டு இருக்கேன் இவன் என்ன ஒளறிட்டு இருக்கான் பாரு”, 

 

மதியன், “ டேய் அங்க சப்போட்டா மரம் இருக்கு வாங்க போலாம்” என்று இழுக்காத குறையாக கூட்டிச் சென்றான் எழிலனை. உடன் வைவிழியும் இணைந்து கொண்டாள்.

 

எழிலனுக்கோ “இவன் என்ன லூசா முன்னாடி சண்டை போட்டான் பசிக்குது னு சொன்னதுக்கு இப்ப என்ன சப்போர்ட் பண்ணி சப்போட்டா பழம் சாப்புட சொல்றான். இவன் லூசா நான் லூசா. அந்த சண்டையை கூட முழுசா முடிக்கவிடலையே கிராதகன். எப்பயாச்சும் தான் இப்டி தைரியம் வந்து பேசுவேன். இப்ப என்னை ஈசியா டம்மி ஆக்கி இழுத்துட்டு போறான் பாரு.” என்று மனதிற்குள் பொருமியவன்.

 

“பரவால்ல, இருந்தாலும் பசிக்கு பழம் கிடைக்குது போய் சாப்பிடுவோம்”, என்று நினைத்தவனின் கவனத்தை கலைத்தான் மதியன்.

 

மதியன், “ சாப்பிடுங்க டா ரெண்டு பேரும் ”, என்றவன் எழிலன் பறிக்க கை நீட்டும் முதலே அந்த பழத்தை பறித்து விழியிடம் நீட்டினான். 

 

அங்கிருந்ததிலேயே அந்த கொத்து நான்கைந்து பழங்கள் தான் பெரிதாக பழுத்தது போல் காட்சியளிக்க அதை பறிக்க போவதற்குள் அதனை பறித்து விழியிடம் நீட்டியவனை முறைத்து கொண்டிருந்தான் எழிலன்.

 

எழிலன், “ ஏன் எங்களுக்குலாம் பறிச்சு குடுத்தா ஆகாதா?”.

 

மதியன், “நீ ஹையிட்டா தான இருக்க எடுத்துக்கோ. மேல இன்னும் இருக்கு பாரு”, என்றவன் இன்னும் விழியிடம் பழத்தை நீட்டியப்படிதான் நின்றிருந்தான்.

 

பழத்தை வாங்காமல் அவனையும் பழத்தையும், எழிலையும் மாற்றி மாற்றி வாங்கலாமா வேண்டாமா என்று பாவமாய் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் வயிற்றில் இருந்து மீண்டும் பசியின் ஓசை கேட்க,

 

உடனே எழிலனை நிறைமதியன் முறைக்க,

 

சட்டென விழியை பார்த்தவன், “ஹே வாங்கிக்கோயேன் டி. எப்போ பாரு பாவமா பார்த்துகிட்டு.இப்ப சாப்பிடாம இருந்தா எப்படி நம்ம மொழிய கண்டுபிடிச்சி வீட்டுக்கு போறது. சும்மா பாவமா பார்க்காம வாங்கிக்கோ. நீ வாங்கலை னு என்னை அவன் மொறைக்குற போல இருக்கு எனக்கு”, என்றான்.

 

“நான் எதுக்கு முறைக்கணும் உன்னை”, என்ற மதியன் மீண்டும் அவனை முறைத்தான். அதை பார்த்தும் பார்க்காதது போல் முகத்தை திருப்பி கொண்டான் எழிலன்.

 

மதியன், “அதான் இருக்கு ல வாங்கிக்க என்னவாம்”, என்றவன் நகரும் முன் “ சீக்கிரமா சாப்பிட்டு வாங்க. அந்த பொண்ண தேடணும்”,என்றுவிட்டு அவள் கையில் பழங்களை திணித்துவிட்டு நகர்ந்தான்.

 

அவள் அவனை அணைத்த போதே அவள் வயிற்றில் பசியின் ஓசையை உணர்ந்திருந்தான். கண்களில் ஏதும் தென்பாடுகிறதா என்று பார்த்து கொண்டே தான் நடந்து சென்றான் அவர்களுடன். பார்த்தவுடன் பறித்து கொடுத்துவிட்டான் அவளிடம். 

 

அவளுக்கோ பறித்த மொத்த பழங்களையும் அவளிடம் கொடுப்பதைவிட பகிர்ந்து உண்டுவிட எண்ணம். இவர்கள் இருவரும் என்னவென்றால் அனைத்தையும் தன்னிடம் தருகிறார்கள். 

 

“என்ன பைத்தியம் பாத்துட்டே இருக்கே சாப்பிடு இல்லனா புடுங்கி சாப்பிடுடுவேன்”, என்று மிரட்டிவிட்டு வேறெங்கும் பழங்கள் பெரிதாகி இருக்கிறதா என பார்வையிட்டு கொண்டிருந்தான்.

 

கிடைத்த பழங்களை எழிலனும் விழியும் உண்டுவிட்டு நகர்ந்து நிறைமதியன் நின்றிருந்த இடம் சென்றனர்.

நிறைமதியன், “இங்க பாருங்க இன்னொருத்தர அதுவும் க்ளோஸ் பிரென்ட தொலைச்சிட்டு தேடறது ரொம்பவே கஷ்டம் தான் அதுக்காக பசி அழுகை தாகம் மாதிரியான விஷயங்கல வராம தடுக்கவும் முடியாது. இப்ப உங்க பசியை உங்க ப்ரெண்டுக்கு செய்யுற துரோகமா நெனச்சா அப்ப அதுனால உங்களுக்கு எதும் னா? அவங்கள எப்படி கண்டுபிடிப்பீங்க? இப்ப இங்க அவங்களுக்கு னு நீங்க தான் இருக்கீங்க. சோ உங்கள பார்த்துக்க வேண்டிய பொறுப்பும் உங்க கிட்ட தான்”.

எழிலனும் பசி என்று தானே அவனிடம் சொன்னான் அவனை வேறு விதமாக தானே கையாண்டாய் என்ற பார்வையை அவனிடம் வீசனாள்,

 

அதனை எப்படி புரிந்தானோ, “ அவன் சாதாரண பசியவே தாங்கிக்க மாட்டான். அதான் அவனுக்கு அப்டி சொன்னேன். அவனும் கொஞ்ச பசி தாங்கிக்க கத்துக்கணும் அதான்”, என்றவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அப்படியே அவர்கள் நகர்ந்து தேட ஆரம்பித்தனர்.

 

எழிலன், “ஆல்ரெடி டைம் ஆச்சு ஒண்ணா போக வேண்டாம். பிரிஞ்சு போய் தேடுவோம்”. 

 

விழி,“ஆமா அதுவும் சரி தான்”.

 

எழிலன், “ சரி சொறினுட்டு தூரமா எங்கேயாவது போய் தொலைஞ்சு போய்டாத. பத்திரமா போய்ட்டு வா இங்கயே மீட் பண்ணுவோம்”, என்றுவிட்டு நகர முற்பட,

 

விழி செல்லும் திசையிலேயே நிறைமதியனும் போக பார்க்க,

 

எழிலன், “டேய். நீ எங்க இங்க ஒரே இடத்துல தேட போற”

 

மதியன், “தேட தான்”.

 

எழிலன், “எனக்கு தெரியாது பாரு. அவ கூட ஏண்டா போற”.

 

மதியன், “ தனியா எப்படி அனுப்புறது” என நினைத்தவன் அதனை சொல்ல முற்பட, அதற்குள் 

 

விழி, “ அப்ப நான் தனியாவா போய் தேட”, என்க,

 

எழிலன், “ இப்போதைக்கு தனி தனியா தேடுனா தான் கிடைக்கிறது ஈசி நீ கொஞ்ச தூரம் வரைக்கும் போ. வேணும் னா நாங்க முடிச்சிட்டு பேலன்ஸ் தூரம் தேடிகிறோம். ஆனா ரொம்ப தூரமா எங்கயும் போயிடாத ப்ளீஸ்” என்றவன் மதியனையும் அவள் சென்ற திசைக்கு அருகில் இருந்த வழியில் அனுப்பிவிட்டு தான் ஒரு திசையில் தேடலானான்.

****

 எழிலன் என்னவோ புலம்பிக்கொண்டே தான் சென்றான்.

 

எழிலன், “இவன் என்னடா சப்போட்டா பழம் பறிச்சு தரான். நடுவுல நம்ம எதுக்கு தேவையில்லாம நின்னுட்டு இருக்கோம் தான் எனக்கு புரியல. நமக்கு ஒரு சப்போட்டா கூட தரல”

 

எழிலன், “இவங்களுக்கு மத்தியில நல்லவனா வாழ்றதே ஒரே கஷ்டமப்பா”, என்று புலம்பிக்கொண்டே நடந்தவன் காலில் கல் தட்டுப்பட்டு இடறி விழுந்தான்.

 

“அம்மாமா…. இது வேற இதை எவன்டா குறுக்க வச்சது”, என்று கோவமாக எழ அங்கு ஒருவருமே இல்லை. அந்த கல்லை இவன் இடறி விழ வேண்டும் என்று யார் வைத்திருக்கப் போகிறார்கள்?. இதில் இவனுக்கு கோபம் வேறு. நடந்ததை உணர்ந்தவன்,

 

 

“நல்லவேளை யாரும் பாக்கல.அப்பாடா” என்றெண்ணி, கண்களை எல்லாபுறமும் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களிள் தென்பட்டது சற்று தூரத்தில் யாரோ படுத்திருந்த காட்சி.அவ்விடம் நோக்கி விரைந்தான்.

 

 ஆம். அவள் தான். மொழி. மொழியே தான். கண்டுபிடித்து விட்டான் சட்டென மனதிற்குள் ஆசுவாசம்.

 

அவளை எழுப்ப முயற்சிக்க, அவளோ கும்பகர்ணனுக்கு தங்கையாய் இருப்பாள் போல, எழுவேனா என்றபடி திரும்பி படுத்தாள். மீண்டும் எழுப்ப முயற்சி தான்.

 

“மொழி. மொழி, எழுந்திரிங்க”, என்றான்.

 

அவளோ, “ அம்மா இன்னும் ஒரு 10 மினிட்ஸ்”, என்க,

 

 

எழிலன், “எது அம்மா டென் மினிட்சா. அடேய் நான் பையன் மா உன் அம்மா இல்லை”, என்க 

 

அது அவள் காதில் விழுந்தால் தானே. “அம்மாஆஆஆஆ”, என்று சிணுங்கினாள் தூக்கத்தில். 

 

“ஐயோ இவள இப்ப எப்படி எழுப்புறது”, என்று புலம்பியவன்,

 

“எம்மா பரதேவதை. இது அம்மா இல்லமா” என்றவன் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து விட்டிருந்தான்.

 

“இந்தா மா. எம்மா மொழி”, என்றான் சத்தமாய். அசைவு இல்லை.

 

எழிலன், “எம்மா” என்றவன் அடுத்த வார்த்தை சொல்வதற்குள்,

 

மொழி, “அம்மா. பிச்சைக்காரர் மா அவருக்கு ஏதாச்சும் சாப்பாடு போடு இல்லனா காசு குடுத்துவிடு மா. தூங்க முடில கத்துறார்”, என்றாளே பார்க்கலாம் கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருந்த மொத்த பொறுமையும் இழந்தவன், அவள் அருகில் அமர்ந்து அவள் முகத்தை பற்றி கன்னத்தில் தட்டி எழுப்பினான்.

 

“மொழி. ஹே பொண்ணே மொழி. எழுந்திரு. எழுந்திரு மா என்று தட்ட”, நல்லவேளையாக அவளுக்கு சுரணை வந்துவிட்டது. யாரோ அடித்தது போல் இருக்க படாரென்று பதறி எழுந்து அமர்ந்தாள். 

 

“எந்த எருமை மாடு என்னை அடுச்சது”, அவளுடைய இளைய சகோதரன் என்றெண்ணி அவள் கண்டமேனிக்கு திட்ட ஆரம்பிக்க,

 

அவள் தூங்கும் பொழுதே பேசியவற்றை நினைவுகூர்ந்தவன் அவள் வாயை மூட கைகளை அவளை நோக்கி கொண்டு போனான் . அப்போது தான் அவனை பார்த்தவள், அவன் கைகளை தட்டிவிட்டு “ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ” என்று அலற பயந்துப்போனான் காரெழிலன்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Super ❤️❤️ அதான் பசி வந்தா இவளுக்கு ஒரு ஞாயம் அவனுக்கு ஒரு ஞாயம் இருந்தாலும் இப்போதைக்கு ஏதோ காரனம் சொல்லி தப்பிச்சுட்டான்.. மாறுபடியும் சிக்காமலா போயிடுவான்.. அப்படி ஒருவழியா மொழி கிடைசிட்டா இருந்தாலும் ஹெல்ப் பண்ண வந்த இடத்தில இப்படி அசிங்க படுவான்னு நினைக்கவே இல்ல 😂😂

      1. Author

        அது கார் சும்மாவே பசி னு சொல்லுவானாம் டா 😂😂😂. அதுக்காக விழியை சாப்பிடாத னு சொல்ல முடியாது ல 🙈🤣🤣

    2. கிறுக்கு பய 🤣🤣🤣 அவனுக்கு பசில அவளை தட்டுறான்…எழி பிச்சைகார வேஷத்துல இருந்தனால கத்தி இருப்பா போல சூப்பர் யூடி prend…👌👌

      1. Author

        🤣🤣🤣🤣🤣🤣 avana innum bangama kalaikra prend 🤣🤣🤣