Loading

ஜன்னல் இருக்கையை மீண்டும் கட்டாயப்படுத்தி எழிலனிடம் ஒப்படைத்தவன் தன் உறக்க வேலையை தொடர, “ இவனும் நிம்மதியா இருக்க மாட்டான். கஷ்டப்பட்டு பிரென்ட்டு பிடிச்சவனையும் நிம்மதியா பேச விடமாட்டான் சரியான சைக்கோ “, என்று முனுமுனுத்தவன் கண்களில் தெரிந்தாள் அவள். இந்த கலவரத்தின் நடுவிலும் நிறைமதியனை ரசித்து கொண்டிருந்த வைவிழி.

“அடிப்பாவி. இங்க ஒருத்தன் என்ன பாடுபடுறான். இதெல்லாம் தெரியாம இந்த ரணகளத்துலயும் இப்டி ஒரு சைட்டிங் அவசியம் தானா. கூடவே இருந்ததும் சரியில்ல. புதுசா கூட்டத்துல சேர்த்துகிட்டதும் சரி இல்லை. இதென்னடா எழிலா உனக்கு வந்த சோதனை.” வாய்விட்டே புலம்பியவன் விழியை முறைக்க யாரோ பார்ப்பதாக தோன்றிய உணர்வில் அவள் ரசனையில் இருந்து கலைந்து யாரென தேட எழிலனின் முறைப்பில் பற்கள் மொத்தத்தையும் காட்டி சிரித்தவள்.

“நீ ஏன் எலி அங்க போயிட்ட என்ன ஆச்சு. பேசிட்டு இருக்கப்பவே இப்டி பாதில கண்டுக்காம போற”

எழிலன், “ஏதேய்ய்ய். நான் கண்டுக்காம போனானா?”

விழி, “பின்ன நானா?. இப்டி ஒரு நல்ல பிரென்ட் அ கண்டுக்காம போற. இதெல்லாம் நல்லாவா இருக்கு”.

“எனக்கா? எனக்கா? “, சந்திரமுகியாய் அவனை உணர்ந்த விழி முழிக்க

எழிலன் “‘பே’ னு வாய பொளந்துட்டு அவனை சைட் அடிச்சியே அப்ப மட்டும் நல்லா இருந்துச்சோ. நான் ஒருத்தன் சீட்டுக்கு கதறிட்டு இருந்தேனே அது தெரியுமா.”

‘அவனை சைட் அடிச்சியே அப்ப மட்டும் நல்லா இருந்துச்சோ’ என்றதை கூறும் போது மட்டும் தனது டெசிபிள்களை வெகுவாய் குறைத்து அவளுக்கு மட்டுமே கேட்கும்படி எட்டி அவளிடம் வார்த்தைகளை கிடத்தியிருந்தான்

“அய்யயோ என்ன ஆச்சு எலி”, என்றாள் பாவமாய்

எழிலன், “அடிப்பாவி ஓங்கி ஒதச்சேன்னுக்கு வையேன் மலேசியா போக பதில் மங்கோலியா போய்டுவே”.

திருதிருவென விழித்தவள், “நீ என்ன சொல்ற எலி ஒண்ணுமே புரியல. நீ எதுக்கு கதறுன “, என்க

பேச்சார்வத்தில் அவள் ‘எலி’ என்றழைத்ததை கவனியாமல் இருந்தவன் சிந்தைக்குள் இப்போது மின்னலாய் வெட்டியது அந்த அழைப்பு.

ஹே இரு இரு இப்ப நீ என்ன கூப்பிட்ட?

விழி , “எலி னு”.

எழில் ,”அப்படினா?”.

விழி ,”நீ தான். எழிலன் அ சுருக்கி எலி”.

எழில் ,”உன் மண்டைல ஏதும் மூளைக்கு பதிலா களிமண் வெச்சி பேக் பண்ணிட்டாங்களா?

விழி ,”யாய்ய் என்ன?” என்றவள் முறைக்க,

எழில், “எழிலுக்கு மீனிங் தெரியுமா? மை மம்மி எனக்கு எவ்ளோ அழகா பேரு வெச்சா எலி வலி நிட்டு இருக்க. வாட் நான்சென்ஸ் யூஆர் கூப்பிட்டிங்?”.

விழி,”அது நான் உனக்கு வெச்ச பேரு. அதெல்லாம் மாத்த முடியாது நீ எலி தான் டா”, என்றாள் உறுதியாய் இறுதியாய்.

அதை உணர்ந்தவன் ‘ரய்டு ரா ரய்டுடு ‘ மனதிற்குள் சொல்லியவன்.

“சரி டி புட் ஐஸ் “என்கவும்

“ஏதேய்ய்ய் புட் ஐஸ் அ அப்டினா”,விழி

“வை – புட் , விழி -ஐஸ் உ” என்று விளக்க,

விழி , “இதென்ன டா பால் ஐஸ் கப் ஐஸ் பனு வித்திட்டு இருக்க ஒழுங்கா பேர மாத்து”.

“இது நான் பைனல் அ வெச்ச பேரு அதெல்லாம் மாத்துரத்துக்கில்ல” என்றவன்,

தனது செவிப்பொறியை காதுக்கு கொடுத்து பாடல்கள் கேட்கலானான்.

கோபமாய் முகத்தை திருப்பி கொண்டாள் விழி மொழியின் புறம். திடீரென திரும்பிய தோழியை என்னவென பார்த்த மொழியையும் அவள் முறைக்க, “ இவ எதுக்கு இந்த மொற மொறைக்குறா “ என்றவளுக்கு செவிப்பொறியில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த காரணத்தால் எழிலனுக்குன் விழிக்கும் நடந்த உரையாடல்கள் தெரியாமல் போக, செவிகளில் இருந்து பிரித்து எடுத்தவள் ,

“என்னடி?” என்றாள் விழியிடம்.

“ஒன்னுமில்ல டி” என்றவள் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள,

“ஒன்னுமில்லாம ஏன் இப்டி முஞ்சிய இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வெச்சிருக்கா இவ “, தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

எதற்காக இருக்கும் என்று சிந்தித்தவள் யோசித்து கண்களை சுழற்றி பார்த்துக்கொண்டே மீண்டும் செவிப்பொறியை காதுக்கு கொடுக்க போனவள் கண்களில் பட்டான் வாயிலில் கண்டா மத்திம வயது பெருத்த உடல் கொண்ட அந்த ஆண்.

“ஓஓ ஒரு வேல இதுக்கு தா அம்மணி கோவமா இருக்காங்களோ , என்ன ஆச்சு இவளுக்கு இந்த அங்கிள் அ எல்லாம் பாக்குறா . இப்டி எல்லாமா லவ் வருது?. என் கிட்ட சொல்ல கூட தயங்குறா. ஒருவேளை அந்த ஆளுக்கு கல்யாணம் ஆகிருந்தா என்ன பண்ணுவா.பாவம் “ என மனதில் இவளை சரியாக வெகு தவறாக கணித்தவள் , அவளை அசைத்து எழுப்ப ,

“என்ன டி”, என்று சோர்வில் சலிப்பாய்.

‘கூட வந்த என்னை பார்த்தா சலிப்பை பாரு மேடம் கு’ என்று மனதில் நினைத்தவள் ,” வேணும்னா நீ இங்க வந்து ஒக்காந்துக்கோ டி . இத எந்த நேராவே கேட்ருக்கலாம் நீ நான் என்ன சொல்ல போறேன் “ என்க ,

அவளை புரியாமல் பார்த்த விழி “ போ டி பைத்தியம் எதையாச்சு உளறிக்கிட்டு “ என்றவள் தன் தூக்கத்தை தொடர இடதுபுறம் தலைதிருப்பி இருக்கையில் தலை சாய்க்க அந்நேரம் நிறைமதியன் தன் நண்பனை தாண்டி இருந்த சாளரத்தின் வழியே வான்வெளியை பார்த்துக்கொண்டிருக்க அவனை ரசிக்கலானாள் ரசனை காதலி விழி .

அவன் நண்பனை தவிர மற்றவரிடம் சிடுசிடுவென இருந்த இயல்பை கூட காட்டாத இறுக்கத்தை தத்தெடுத்திருந்த அந்த முகத்தின் மாறுதல்களை மும்முரமாய் கவனித்தாள். எழிலனிடம் ஜன்னல் இருக்கைக்கு சண்டையிட்டபோதும் தீவிரமாய் தான் இருந்தது அவன் வதனம் . சுற்றி இருந்தவர்களுக்கு வேண்டுமானால் நிறைமதியனின் எண்ண அலைகள் புலப்படாமல் இருக்கலாம் அனால் எழிலனின் அவனுடனான உரையாடலில் அந்த தீவிரம் இல்லை எழிலனின் எதிர்வினையில் வெகு தெளிவாய் இவளுக்கு தெரிந்ததுதான்.

கவின் வாய்ந்த அந்த மேக கூட்டம் , அத்தனை அழகாய் காற்றில் மிதந்து அதன் விசைக்கேற்ப நகர்ந்து ஒன்றோடொன்று முட்டி மோதி விளையாடி மகிழ்ந்திருக்கிறது. மேகத்தில் குதித்து அதனை கைகளில் அள்ளி கொள்ளும் ஆசைத்தான் நெஞ்சம் முழுக்க நிரம்பி இருந்தது அவனுக்கு. தனக்கு பறக்கும் திறமை இருந்திருந்தால் எத்தனை நன்றாய் இருந்திருக்கும்?. வேகமாய் மேகக்கூட்டங்களுக்குள் தாவிக்குதித்து விளையாடியிருக்கலாம். கண்ணிமைக்கும் நேரத்தில் தன் மனதின் மாற்றத்தை வியந்தவனின் அதரங்களில் முகிழ்ந்த அந்த கீற்று புன்னைகை, கொள்ளையாய் அழகாய் கொள்ளை கொண்டது வைவிழியை . விழியின் விழி வழியே நிறைவாய் மனதில் நிறைந்தது நிறைமதியனின் மகிழ்முகம்.

நிறையின் மகிழ்வில் கண்ணயர்ந்தாள் வைவிழி. திடீரென உணர்ந்த அதிர்வில் சட்டென விழிவிரிதாள். திடிக்கிட்டு சுற்றி பார்க்க அனைவரின் கண்களிலும் பயம் படர்ந்திருக்க, எழிலனை பார்க்க அவனும் அதே போல் பயம் சேர்ந்த அதிர்ச்சியில் இருந்தான்.

அங்கிருந்து நகர போன அவள் கண்கள் அவளையும் மீறி நிறைமதியனில் படிய சரியாக அவன் கண்களும் அவளை நோக்க மின்னல் பாய்ந்தது விழியின் விழிகளில். ஆனால் அவனோ வெகு சாதாரணமாய் அவள் கண்களை நோக்கி ஆவனது பயத்தையும் சரியாய் அவளுக்கு கிடத்தியிருந்தான். அங்கே அருகில் கேட்ட பேச்சு குரல்களில் இருவரும் சித்தம் தெளிய நடப்பிற்குள் நகர்ந்தனர்.

அவளுக்குள் ஒரு குறுகுறுப்பு நினைவெல்லாம் அவன் கண்களில் தெரிந்த ஒளியில் ‘என்னை பார்த்தான் இல்லை இல்லை என்னிடம் பேசினான் இல்லை இல்லை என்னிடம் கண்களால் பேசினான்’, உணர்ந்தவள் “அய்யயோ நிஜமாவா நிஜமாவா”, மனதின் குரல்களை கட்டுப்படுத்த முடியவில்லை. கிள்ளி பார்த்தாள், சிரித்தாள், நகம் கடித்தாள்.

முகத்தின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை அவளால். தனியாக இறக்கை முளைத்து வானில் பறந்தாள். விமானத்தில் அல்லாது மனதால் மகிழ்ச்சியால் பறந்தாள். வெட்கப்பட்டாள் சிந்தித்தாள் சிரித்தாள். மொழியின் ‘ பன்னி குட்டி ‘ என்ற அழைப்பில் வானில் பறவையாய் பறந்தவள் இறக்கைகள் மறைய தடாரென கீழே விழுந்தவள் நடப்பிற்குள் தோழிமேல் வெறியாய் வந்தாள்.

“ அடிங். என்ன டி நீ தான் சிங்கிள் அ இருக்க கனவுல கூட பிரெண்ட்டு  கமிட் ஆகிற கூடாதே. வந்திருவாளுங்க சட்டிய தூக்கிட்டு கனவ கலைக்க” என்று அவளிடமே பட்டாசாய் பொறிய.

“ஹே பைத்தியம் என்ன உளறுற. இங்க எவ்ளோ கலவரம் நடக்குது. அங்க அந்த பைத்தியக்காரன் பிரென்ட் அ முறைச்சு பாத்துட்டு இருக்க அவனும் உனக்கு இகுவள் அ முறைச்சிட்டு இருக்கான்” என்க.

“எது மொரச்சோமா. நாங்க ரொமான்டிக் அ பார்த்த மாதிரி தான எனக்கு பீல் ஆச்சு இவ என்ன இப்டி சொல்றா. மொழி நீ இந்த ஜென்மத்துல கமிட் ஆக மாட்ட டி எம்மா “ என்று நினைத்தவள்,

“என்ன டி பிரச்சனை” என்றாள்

மொழி,“ பிலைட் ஸ்லிப் ஆச்சு. உனக்கு தெரியல “ என்கவும் தான் கண்ணவிழித்த காரணத்தை உணர்ந்தாள் பயந்தாள்.

சிலர் அந்த விமான ஊழியர்களை அழைக்க. அவர்களும் அது ஒன்றுமில்லையென விளக்க முயன்று தோற்றுகொண்டிருந்தனர். சற்று நேரத்தில் விமானியிடமிருந்து அறிவிப்பு.

“ பயணிகளின் கனிவான கவனத்திற்கு. யாரும் பயப்பட வேண்டாம்.

உங்கள் விமானி பேசுகிறேன் . நாங்கள் எதிர்பாராத சீர்குலைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம், அதனால் விமானம் சிறிது நேரம் நிலைதடுமாற வாய்ப்புள்ளது. தயவுசெய்து அமைதியாகவும், உங்கள் இருக்கையில் பாதுகாப்பு பட்டையை அணிந்துகொண்டு இருக்க கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம், மேலும் நிலைமை குறித்து உங்களுக்கு தொடர்ந்து தகவல் தருகிறோம். உங்கள் பாதுகாப்புக்காக, பாதுகாப்பு விளக்கு அணையும் வரை உங்கள் இருக்கையில் அமர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி. நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம்”.

அறிவிப்பை கேட்டவர்களுக்கு கண்களில் மரண பயம் விரவியிருக்க. வேகமாய் தங்கள் பாதுகாப்பு இருக்கை பட்டையை சரி பார்த்து கொண்டனர். அங்கே விமான ஊழியர்களையும் சரமாரியாய் கேள்விகளில் துளைத்தெடுக்க அங்கே சூழ்நிலை பரபரப்பாயும் அழுதமாகவும் இருந்தது. சிறுவர்கள் இரண்டு மூன்று பேர் பயத்தில் அழ ஆரம்பித்து விட வெகுவாய் மிரண்டு போயினர் அந்த அசாதாரண நிகழ்வுகளில்.

அங்கே என்ன நடக்கிறது என்பது முழுமையாக புரியாவிட்டாலும் அவர்களை சூற்றியிருந்த பெரியவர்களின் கூச்சலும் சத்தமும் இன்னுமே பயம் கொள்ள வைத்தது. ஏற்கனவே நிலைதடுமாறிய விமானம் அச்சத்தை அவர்களிடத்தில் விதைத்திருந்தது. தேம்பி அழுது மூர்ச்சையுற்றனர் இரண்டு சிறுவர்கள்.

அங்கு வந்து சேர்ந்த மொழியின் கண்களுக்கு தென்பட்டது என்னவோ பேச்சு மூச்சற்று படுத்திருந்த அந்த சிறுமி தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    8 Comments

    1. Super daa ❤️❤️ இந்த ranakalaththulaiyum அவளுக்கு romance kekkuthu 😄😄 பாவம் இருக்குற மொத்தமா பறக்க poromnnu தெரியாம pillai rekka katti paranthuttu irukku 😄😄iva ennannu சொல்லுறது

      1. Author

        Rekka katti parakuthama vizhiyoda cycle 😂😂😂
        Athan pathilaye athu vitutale dr mozhi rekkaiya 😂

    2. எலி 🤣🤣🤣 விழி ஏன் தான் அவனை டேமேஜ் பண்ணி வாங்கி கட்டிக்கிறாளோ செம்ம டா..👌👌👌

      1. Author

        Thank u da ❤️. Rendum onnuku onnu salachathila 😂😂😂 damage pannikoonga 😂

    3. Intha moli namma case pola😂😂 super ka♥️ sekiram adutha episode podunga

    4. எலியா.? அடிப்பாவி எங்க ஆளுக்கு காரெழிலனு எவ்ளோ அழகான பேரு.. அதைய போய்…?

      எல்லாரும் பயத்துல முழிச்சா நீ அப்பதான் ரெக்கை கட்டி பறந்துட்டு இருக்கீயா.? கொஞ்ச நேரத்துல ரெக்கை இல்லாமயே பறந்தரலாம்..