அந்த பெண்களின் பார்வைகளுக்கு சொந்தகாரனோ பாவைகளின் பார்வை அம்புகள் தன்னை தீண்டவுமில்லை பாதிக்கவுமில்லை என்பதை நிரூபித்து கொண்டிருந்தான்.
பார்த்த மாத்திரத்திலேயே ஈட்டியை பாய்ச்சும் அவன் விழிங்களுக்கும், அவன் பேச்சில் வீசும் கத்திகளுக்கும் பயந்தே பெரிதாய் அவனை பெண்கள் யாரும் நெருங்க நினைத்ததில்லை. அவனுக்கு பெண் தோழிகள், சகோதரிகள் இருக்குகின்றனர் தான். அவர்கள் இவனிடத்தில் வெகு சரளமாக நன்றாகதான் உரையாடுகிறார்கள். அவர்களுக்கு மட்டும் இவன் ஒரு சிடுமூஞ்சியாக தெரியவில்லையோ?.
அவன் இயல்பே இது தான் என புரிந்தவர்கள் ஏற்றுக்கொண்டவர்கள் அவனின் நெருக்கமானவர்களை தவிர வேறு எவரும் இல்லை. சில பெண்கள் அவனிடம் விருப்பம் கொண்டாலும் அவன் இயல்பை கவனித்த வரையில் ‘ திமிரு பிடிச்சவன் ‘ என்றே அவனை மனதினில் கருவி கொள்வர்.
அதே திமிர் நடையுடன் தங்கள் வரவை பதிவு செய்து காத்திருப்பு அறைக்குள் நுழைந்தான் நிறைமதியன் தன் நண்பனுடன்.
இங்கே தன் தோழி மொழியுடன் வம்பளந்து கொண்டியிருந்தவள் கவனம் சிதறி வாயிலின் வழியே வந்தவர்களில் சிதறியது.
“வாவ்” என்றவள் கண்கள் உற்சாகத்தை தத்தெடுத்து இருந்தது.
“இவ எத பார்த்து இவ்ளோ எஸ்சைட் ஆகுறா” என்று நினைத்தவாறே அவள் கண்கள் செல்லும் திசை நோக்கி மொழியின் கண்களும் நகர முனையும் முன் .
“என்னத்த லூசு பாத்துட்டு இருக்க?” என்று வியம்ப,
தன்னை நிலை படுத்திகொண்டவள் “அங்க ஒரு பாப்பா வந்துச்சு செம்ம கியூட் அதான் பாத்துட்டு இருந்தேன்” என்றாள்.
மொழி அவளை சந்தேகமாய் ஒரு பார்வை பார்த்தவள், “ஹ்ம்ம்” என்று மட்டும் பதிலளித்தவள் மனதில், “நல்லா பே னு வாய பொளந்துட்டு ஏமாத்துது பாரு”, என்று நினைத்தவள் வாயில்புறம் பார்த்தாள்.
மொழி பார்க்கும் முன் அவர்கள் வேறு இடம் நகர்ந்துவிட இவள் கண்களுக்கு தென்பட்டது என்னவோ ஒரு பெரிய உருவம் கொண்ட மந்திம வயது ஆண் தான்.
அதை தவறாக எண்ணியவாளோ, ” ஐய்யய்ய, என்ன இவ இப்டி ஆகிட்டா ” என்று புலம்ப, பாவம் அவள் அருகில் இருந்தவளுக்கு மொழி அவளை பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரிய வாய்ப்பில்லையே.
மொழி, “விழி வா உள்ள போவோம் ” என்று தோழியை இழுத்துக்கொண்டு சென்றாள் விமானத்தில் ஏற.
அங்கே விமானத்தின் உள் அமைப்பு பிரம்மண்டாமாக காட்சியளித்தது எத்தனை பெரிய இடம். தரையில் நின்று கையசைத்து அனுப்பிவைத்த அந்த குட்டியான கோடாய் தெரியும் அந்த விமானத்திற்குள் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கும் அளவுக்கு வசதி உடன் விமான பணி பெண்கள் என தனியாய் அனைவருக்கும் இருக்க அறை, உணவுகள் சேர்த்து வைக்க ஒரு அறை, கழிப்பறை, அது அல்லாது குறைந்தபட்சம் எண்ணூறு பயணிகள் பயணிக்க வசதி என வெகு விஸ்தாரமாய் அமைந்திருந்த உண்மையில் அச்சரியமூட்டியது தான்.
இவர்கள் சாதாரண சிக்கன வகுப்பில் (பொருளாதார வகுப்பு) முன்பதிவு செய்திருக்க அங்கே இருந்த இருக்கைகள் அமைப்பே மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. இடது சன்னல் அருகே இரு இருக்கைகள் நடக்க இடைவெளி நடுவே இரு இருக்கைகள் மீண்டும் நடக்கும் இடைவெளி வலது ஜன்னல் அருகே இரண்டு இருக்கைகள். இப்படியான அமைப்பில் பின்னுக்கு பின் இருக்கைகள் அமைந்திருந்தது.
மொழியும் விழியும் நடுவில் இருக்கும் இரு இருக்கை கிடைதிருந்தது.
“நீ லெப்ட் சைடு நான் ரைட் சைடு” என இருவரும் சண்டையிட்டு ஒருவாரு மொழியை ஏமாற்றி அமந்துவிட்டாள் விழி அவளுக்கு பிடித்த இருக்கையில்.
இவர்களைப் போலவே இன்னும் இரண்டு ஜீவன்கள் ஜன்னல் இருக்கைக்காக அடித்துக் கொண்டிருந்தது. வேறு யாரும் அல்ல நம் காரெழிலனும் அவன் நண்பனும் தான்.
“மச்சான் மச்சான் நான் எத்தனை தடவ பஸ் ல உனக்கு ஜன்னல் சீட்டு விட்டு குடுத்திருக்கேன். உன் நண்பனுக்காக கேவலம் ஒரு ஜன்னல் சீட்டு விட்டுக் கொடுக்க மாட்டியா டா”, காரெழிலன்.
முன்னரே சடுதியாய் ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த நண்பனிடம் வக்கீலாய் வாதாடி கொண்டிருந்தான்.
“டேய் சீட்டு நம்பர் பாத்தியா இந்த ஜன்னல் சீட்டு எந்து டா. ட்ரெயின் மாதிரிலாம் இல்லை. இங்க சீட் மாறி ஒக்காந்தா லேண்ட் ஆகுறப்ப நீ ஜெயிலுக்கு தான் போகணும். “, என்றான் அவன் நண்பன்.
“ஏன் டா ஒரு ஜன்னல் சீட்டுக்கு இந்த அக்கப்போரா. ஒரு நியாயம் வேண்டாவா சீட்டுக்கெல்லாமா ஜெயில் ல போடறாங்க. இருந்தாலும் நீ கொஞ்சம் பார்த்து உருட்டிருக்கலாம் டா. நீயே ஒக்காந்து தொலை.”, காரெழிலன்.
எழிலன் பேசியதற்கு ஒரு முறைப்பை கொடுத்தான் பரிசாய் அவன். அதை கண்ட எழிலனுக்கு பயத்தில் வயற்றில் எதோ ஓடுவது போலிருக்க.
“எனக்கு ஜன்னல் சீட் அல்ர்ஜி மச்சான். அங்க ஒக்காந்தாலே ராஷஸ் வந்துரும். எனக்கு இந்த பாக்க சீட் தா பெஸ்ட். நீ ஒக்கார்ரா ” என்று அவனிடம் உரைத்துவிட்டு,
” நம்மல தான் இப்டி முறைச்சு பார்த்தே ஆப் பண்ணிடறான். கடங்காரன்” என்று தன்னுள் நொந்தபடி அமர்ந்து விட்டான்.
நொந்தபடி அமர்ந்தவன் முகத்தில் இருந்த சோக ரேகைகள் எல்லாம் தற்போது குதூகலமாய் குத்தாட்டம் போட்டது அங்கிருந்த விமான பணிப்பெண்களை பார்த்து.
“ச்ச என்னா அழகு. நல்ல வேலை ஜன்னல் பக்கம் ஒக்காந்திருந்தா அவங்களை பாக்க முடியாம போயிருக்கும். என் நண்பன் எனக்கு நல்லது தான் பண்ணிருக்கான்”. என்று சில்லாகித்தவனின் வலதுபுறம் உள்ள நடுவில் அமைந்திருக்கும் இருவர் இருக்கையிலும் இரு பெண்கள்.
அவன் பக்கம் அமர்ந்திருந்த பெண்ணும் சற்று முன்வரை அவர்களின் இருக்கையை தான் நோட்டம் விட்டு கொண்டிருந்தாள்.
அவர்களிடம் பேச்சு குடுக்க நினைத்தவன்
அவன் பக்கம் அமர்ந்திருந்தவளிடம்,
“ஹாய் ” என்றான்.
அவன் குரலில் தன் கவனத்தை அவன்புறம் திருப்பியவள். “ஹாய் ” என்றாள்.
“நான் காரெழிலன். நீங்க “.
“ஐம் வைவிழி” என்றாள் அழகிய புன்னகையோடு.
“எங்க வெக்கணும்”, காரெழிலன்.
சற்றே குழப்பமுற்றவள், ” சாரி. என்ன புரியல ” என்க
“வை விழி னீங்களா அதான் எங்க வெக்கணும் விழிய னு கேட்டேன் சும்மா ஜோக் ” என்றவன் எதோ பெரிய நகைச்சுவை போல சிரித்து கொண்டிருக்க இவள் தான் ‘அட மலை கொரங்கே ‘ என்ற ரீதியில் அவனை பார்த்து கொண்டிருந்தாள்.
“எங்க நேரா கீழ்பாக்கத்துல இருந்து வரீங்களா” என்றாள் அவனை கலாய்க்கும் பொருட்டு.
“எப்படிங்க கரெக்ட் அ சொல்றீங்க. என் வீடு அங்க தான் இருக்கு.”, காரெழிலன்.
“ஹீஹீ. நீங்க பேசுறத வெச்சு ஈசியா கெஸ் பண்ணிரலாங்க “, விழி.
இப்போது முறைப்பது அவன் முறை ஆகிற்று. பேசிக்கொண்டே இருந்தவர்கள் சற்றுநேரத்தில் நண்பர்கள் போல் பேச துவங்கி விட்டனர். அவர்களுக்குள் உரையாடல்கள் வெகு சரலமாய் நடந்தேறிக் கொண்டிருந்தது. எதோ வெகு நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்ட சிறுவயது நட்பினை மீண்டும் சந்தித்தது போல ஒரு பிணைப்பு.
“வேலை விஷயமாவா மலேசியாக்கு “, எழிலன்.
“இல்லைங்க. ரொம்பவே மைண்ட் ஸ்ட்ரெஸ் ஆகிடுச்சு கொஞ்ச ரிலாக்ஸ் பண்ண ஒரு ஜாலி ட்ரிப். நீங்க “
” நாங்க ஒரு ஒர்க் சம்மந்தமா போறோம். நானும் என் பிரன்ட் நிறைமதியனும். தோ பக்கத்துல இருக்கானே”, என்றான் நிறைமதியனை காண்பித்து.
அவன் கண்களுக்கு மட்டும் திரை அமைத்து சாய்ந்திருந்தான். அவனை பார்த்த எழிலன் கண்ண மூடி தூங்க ஏன்டா அந்த ஜன்னல் சீட்டுக்கு அடிச்சிகிட்ட என்று மனதில் கருவிகொண்டான்.
“தனியா வா வந்தீங்க. ஆனாலும் சோலோ வா ட்ரிப் போறது கூட ஒரு ஜாலி தான் “, காரெழிலன்.
“இல்லை எழிலன். என் பிரன்ட் கூட வந்தேன். பக்கத்துல ஒக்காந்து இருக்காளே அவ தான் பேரு மொழி”, என்றாள்.
அவள் பெயர் உச்சரிப்பை கேட்டதுமே என்னவென திரும்பி பார்த்தாள் மொழி. உரையாடலை உணர்ந்தவள் ஒரு சின்ன தலையசைப்பு எழிலனிடம் கொடுத்துவிட்டு திரும்பிகொண்டாள்.
“வாவ் சூப்பர். பிரென்ட் கூட தான் நல்லா என்ஜோய் பண்ணலாம்.”
“எல்லாத்துக்கும் இதையே சொல்றீங்க”, விழி. இவனிடம் பேசி கொண்டிருந்தாலும் அவள் கண்கள் என்னவோ அவனை தாண்டி அமர்ந்திருக்கும் அவன் நண்பன் மேல் மீண்டும் மீண்டும் படிந்து மீண்டது.
என்னவோ அவளால் அவள் கண்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவள் பார்வை செல்லும் திசையும் காரெழிலன் கண்களில் இருந்து தப்பவில்லை. அதைய அவன் பெரிது படுத்தவும் இல்லை . அவள் பார்வையின் திசை மாறும் பொழுதெல்லாம் கள்ளச்சிரிப்பும் அவன் ஆதரங்களில் முகிழ்ந்துந்தது. அவள் அறியாமல் மறைத்து கொண்டான் எழிலன் வெகு எழிலாய்.
“தனியா வந்திருப்பீங்க போல போர் அடிக்கும் தான் இருந்தாலும். அதை சொன்னா ட்ரிப் வந்த மூட் ஸ்பாயில் ஆகிடும் அதான் எதுனாலும் ஒரு பாசிட்டிவ் அ சொல்லி விடுவோம் ஒரு நல்லெண்ணம் “, காரெழிலன்.
“ஆஹான்” என்றவளின் புன்னகை முத்துக்கள் சிந்தின எழிலனின் நட்பில்.
சட்டென இருக்கையிலிருந்து எழுந்த நிறைமதியன் கண்களை ஒளியிருந்து மறைக்க அணிந்திருந்த உறையை எடுத்துவிட்டு , “நீ ஜன்னல் பக்கமே ஒக்காந்துக்கோ டா.”, என்றான்.
“எவ்ளோ நேரம் கெஞ்சுனேன். இப்போ நீ சொல்றப்ப நான் மாறனுமா போடா” என்றுவிட,
” சரி அப்டியே ஒக்காந்துக்கோ எனக்கென்ன. ஜன்னல் பக்கம் ஒக்காந்தா எனக்கு ஒத்துக்காது வயித்த பெறட்டும் வாமிட் வந்தா உன் மேல தான் எடுப்பேன் “.
“டேய் டேய் ஏன்டா. மாசமா இருக்க பொண்ணு கூட இப்டி வாந்தி எடுக்குமா தெரில டா. ஆனா இப்டியே ஏமாத்திட்டு திரியுற இரு வரும் போது ஜன்னல் சீட் கேட்டு பாரு அப்ப இருக்கு உனக்கு “, காரெழிலன்.
இவர்கள் சண்டை எங்கே விழி கவனித்தாள் கண்கள் இரண்டும் எழிலனோடு சண்டையிட்டு கொண்டிருந்த நிறைமதியன் மேல் தான்.
இவர்கள் சண்டையில் மொழியோ, ஜன்னல் இருக்கைக்காக சண்டையிடும் அதுவும் விமானத்தில் அந்த இருக்கைக்கு சண்டையிடும் இருவரும் வேற்று கிரகவாசி போல் காட்சியிளிதனர். ‘சரியான பைத்தியக்காரனுங்களா இருப்பாங்க போல’ மனதிற்குள் நினைத்துக்கொண்டவள். அவர்களில் இருந்து கவனத்தை தன் செவிப்பொறியில் ஒலித்துகொண்டிருந்த பாடல்களுக்கு திருப்பினாள்.
இருக்கையில் இருந்த பாதுகாப்பு வார்பட்டையை அணிந்து கொண்டனர் விமான பணிப்பெண்ணின் வழிகாட்டுதலின் பெயரில். அவர்களது மின் சாதனங்களும் அணைத்துவைக்க அல்லது விமான முறைமைக்கு மாற்றவோ அவசியமென வலியுறுத்த பட்டு அனைவரும் அதை பின்பற்றவும் அறிவிப்புகள் விமானியிடமிருந்து பயணிகளுக்கு வந்து சேர்ந்தன.
விமானம் புறப்பட அறிவிப்பும் வந்துவிட்டது விமானியிடமிருந்து. அவரவர் இருக்கையில் அமந்துகொள்ள விமானமும் புறப்பட்டது.
பன்னிரண்டாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் சிறிய அசாதாரண ஆட்டம் கொடுக்க பயணிகள் மட்டுமல்ல அங்கே விமானத்தை இயக்கிய விமானியின் மனதை பயம் கவ்விப் பிடித்தது.
விழி எழிலன் பேச்சு சூப்பர் 👌👌
என்னது விமானம் ஆட்டம் காட்டுதா🙄🙄
😍 நன்றி சகோ 😍. இவங்க போட்ட ஆட்டத்துல தான் அதுவும் ஆட்டம் காணுது போல 😂
Dei caruuu ne bayangaramana aalu da… Intha ma vai😂 enna look angutu pothu rytuu nee oru markama than thiriyura.. dei nirai nee en da thidirnu seat marura😂 purinji pochchu di un oolalu😂 wppavi paiyanuku idam kudukama IPO figure vanthathum maruriya.. rascal😂😂 yen? Ethuku? Nalla Thane poitu irunthuchu? En ka flight yum kathaiyum nalla porathu pudikalaiya😂 ippadi break dance Ada vaikuringa😂 akka IPO than ka pathi irukanga😂 adutha ud laiye kathaiya mudichi vitturuvinga polaiye😂 super ka next ud sekiram podunga ♥️
😂 ஆமா நல்லா போனா எப்படி 🤣. நன்றி டா
என்னது ஒரு சன்னல் சீட்டுக்கு ஜெயில்ல போடுவாங்களா.? காரு நம்ம இதைய விட கூடாது.. வாடா சண்டைக்கு போவோம்..
எம்மா வைவிழி எங்கமா விழியை வெக்கறது.? எங்க காருவை பார்த்து நீ எப்படி அப்படி சொல்லலாம்.? நாங்களும் உன்னைய கலாய்ப்போம் பார்த்துக்கோ..
எதே விமானம் ஆட்டம் காட்டுதா.?