Loading

என்னவென்று பேசுவாள் கனவில் நடந்தது போல் இருக்கிறது உண்மையா பொய்யா சொல் என்றா?. விமானத்தில் ஒரு குழந்தை இறந்தது ,திடீர் தீவிற்கு சென்றோம், உன்னை கண்டுபிடித்தோம், நிறைமதியனை பாம்பு கடித்தது. எழிலனுடன் மல்லுக்கு நின்றாய் நீ. நெருப்பு மூட்டினோம் அதனை எடுத்துக்கொண்டு பாம்பு கடிக்கு மருந்து அதுவும் மூலிகை மருந்து தேடினோம். வித்யாசமான நாகரிகம் கொண்ட மனிதர்கள் வந்தார்கள். அவர்களுடன் ஊருக்கு சென்றோம். பாம்பு விஷம் மருந்தாய் தயாரித்து வைத்திருந்தனர். நவீன உபகரணங்கள் நம் யாரிடமும் இல்லை அந்த ஊரில் அப்படி ஒன்றே தெரியவில்லை. அவர்களுக்கு அப்படி ஒன்றே தெரியவில்லை. அவர்களின் உணவு உண்டோம் . ஒரு பெண்ணிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் மருத்துவம் பார்த்து குழந்தை பேற்றுக்கு உதவினோம். கடலுக்கு சென்றான் நிறைமதியனுடன் பேசினேன். கண் திறந்தாள் இங்கிருக்கிறேன் என்றா கூறுவது. முதலில் கூறினால் அவளுக்கு விளங்குமா?. அந்த பெயர்களில் மனிதர்கள் அவளுக்கு நினைவுக்கு வருமா. இங்கு யாருக்குமே தெரியாத நிலையில் யாரிடம் கூறுவாள், என்னவென்று கூறுவாள். தன்னை அவளும் கனவு கண்டதாகவோ அல்லது மனதால் பாதிக்க பட்டதாகவோ கூறிவிட்டால்?. இத்தனை நாட்களும் இதனை சிந்தித்தே நாட்கள் மாதங்கள் ஆயின. இதற்கு மேல் விட்டால் இது என்னவென்று அறியும் மார்க்கமும் அறியப்படாமலே போகும் தானும் அடுத்த என்னவென்றே அறியாமல் வாழ்க்கையின் போக்கில் போக இயலாதே.

இதற்குமேல் தாங்காது என்று உணர்ந்தவள் தன் தோழி மொழியிடம் பேச முடிவு எடுத்தாள். இத்தனை நாட்கள் கனவா நிஜமா போராட்டத்தில். கனவு எனில் எங்கே தான் அவளை குழப்பி விடுவோமோ என்று எண்ணி பேசாமல் தடுத்து கொண்டிருந்தாள் தன்னை தானே. இன்று மொழியிடம் பேசியே தீருவது என முடிவு செய்தவள் . அவளை காணச் சென்றாள்.

மொழியும் மூன்று மாதங்களாய் எதோ போல் தான் இருந்தாள். இவள் இருந்த நிலையில் மொழியை கவனிக்காமல் இருந்து விட்டாள் விழி.

மொழி,” என்ன முக்கியமா பேசணும் னு சொன்ன “

விழி,” அதை சொல்றதுக்கு முன்னாடி”.

விழி, “நீ என்னை லூசுன்னு மட்டும் சொல்லிடாத மொழி மா. நான் செம்ம கன்பியூசன் ல இருக்கேன்.ப்ளீஸ் ஹெல்ப் மீ டா” என்றவள் மலேசியா விமானம் ஏறியது முதல் நடு வழியில் விமானத்தில் நடந்த குளறுபடி, அந்த குழந்தையின் சிகிச்சை ,தீவில் எழுந்தது, பாம்பு கடித்தது ,அந்த ஊருக்கு சென்றது, பிரசவம் பார்த்தது, கடைசியா கடலுக்கு சென்று பேசியது அதன் பின் இங்கு வீட்டில் துயில் கலைந்தது வரை அனைத்தையும் நடந்த ஒன்று விடாமல் அவளுக்கு சொல்லி முடித்தவள். மொழி ஏதோ பேச வர அதனையும் கை நீட்டி தடுத்தவள்.

” கொஞ்சம் இரு டி . இங்க வந்து கண்ணை தொறந்து பார்த்தா வீட்ல இருக்கேன்.இது ஒண்ணுமே புரியல. எனக்கு பைத்தியம் பிடிச்சது போல இருக்கு. எல்லாமே ரியல் ஆஹ் தான் பீல் ஆகுது. அது மட்டும் இல்லாம. நம்ம மலேசியா போன போட்டோஸ் லாம் இருக்கு டா அனா எனக்கு ஒண்ணுமே ஞாபகம் இல்ல”.

அவளை வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்த மொழியின் கண்களில் மின்னல். நிம்மதி பரவியது அவள் மனதில். இத்தனை நேரம் இருந்த கவலைகளில் பாதி  குறைந்துவிட்டிருந்தது போல் இருந்தது . கொஞ்சம் புன்னகை தவழ விழியிடம் பேசவந்தவளின் கண்களில் ஆர்வத்தின் சுவடு.

மொழி, “விழி நானும் இதை எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் டி முழிச்சிகிட்டு இருந்தேன். எனக்கும் எல்லாமே ஞாபகம் இருக்கு. நீ சொல்றப்பவே நடுல நிறுத்த கூப்பிட்டேன் நீ தான் என் வாய அடைச்சு பேச விடாம பண்ணிட்ட. எனக்கு நீ சொன்ன ஒன்னு ஒன்னும் நல்லாவே நெனவு இருக்கு. என்னை தேடி அந்த மொக்க ஜோக் முள்ளம்பன்றி கிட்ட பேசுனதுலாம் கேளேன்” என்றவள்.

அவளுக்கு நினைவில் இருந்த அனைத்தையும் கூறி முடித்தாள். பின் ,” எனக்கு இப்டி இருக்கும் னு நினைக்கவே இல்லை டி. மனசுக்கு நெருக்கமான எதையோ தொலைச்சிட்டது போலவே பீல் ஆகுது” என்று கூற,

விழியோ மனதில்,”இவளுக்கு என்ன ஆச்சு என்னென்னமோ சொல்றா ஒண்ணுமே புரியவே இல்லையே” என்று யோசித்தவள் அவளிடம்,

விழி,” இல்ல புரியல மொழி. என்ன ஆச்சு என்ன ஆகும் னு நினைக்கல நீ ?”.

மொழி,” அங்க இருக்கப்ப பூரா அவன் கூட சண்டை போட்டேனா”

விழி,” எவன் கூட”

மொழி,” அந்த முள்ளம்பன்றி கூட தான்”

விழி,” எந்த முள்ளம்பன்றி”

மொழி,” அந்த கார் தான். காரெழிலன் ” என்று ஒரு மார்க்கமாய் வெட்கப்பட்டு அவன் பெயர் சொன்னவளை பார்த்த விழிக்கு சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டு சிரித்தாள். அதை பார்த்த மொழியோ,

” என்ன டி கலாய்க்கிற ?”, என்க சிரித்து கொண்டே அவள் தோல் பற்றிவள்

விழி,”நீ இப்டி வெட்கப்படுவ அதுவும் என் நண்பனை லவ் பனி வெட்கப்படுவ னு நெனச்சு கூட பாக்கல மொழி” என்றவளுக்கு, இந்த சம்பவங்கள் அவளுக்கும் நினைவிருப்பதால் அது உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்று நினைத்து சந்தோச படுவதா இல்லை. அவர்களை கண்டுபிடிக்க சிறிய துரும்பு கூட தங்கள் கையில் இல்லையென்று நினைத்து வருத்த படுவதா? என்று.

இருவரும் பேசி அவர்களை கண்டுபிடிப்பது என்று முடிவு செய்தார்கள். அனால் அதன் தொடக்கம் எதுவென இவர்கள் அறியவில்லை . அவனுடன் பேசியபோதும் கூட அவனின் வேலையை பற்றியோ அவன் வருமானம், இருக்கும் இடம், படித்த பள்ளி என எதுவும், எதுவுமே அவளுக்கு அப்போது தெரிந்து கொள்ள தோணவில்லையே. தன் மடமையை எண்ணி தன்னையே நிந்தித்து கொண்டாள் விழி. மொழிக்கும் அதே நிலமை தான். சண்டைகள் மட்டுமே போட்டு போட்டு அவனை பற்றி
அறிந்துகொள்ள மறந்தாளே. அவனை விட்டு விலகிய பிறகு தானே தெரிந்தது அவன் மீது உள்ள பிடிப்பு. உடன் இருந்தவரை அப்படி ஒன்றும் தோன்றவில்லையே. இந்த மூன்று மாதம் அவள் பட்ட பாடு அவள் மட்டும் அறிந்த ஒன்றாயிற்றே.

 

அங்கு நிறைமதியனும், காரெழிலனும் கூட அதே உண்மையா, பொய்யா, கனவா போராட்டத்தில் தான் இருந்தனர். ஆனால் அவர்களும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

நிறைமதியன் ஒரு தொழிலதிபன். அவனும் விமானங்கள் வைத்திருக்கும், விமான போக்குவரத்துக்கு ( ஏர் லைன்ஸ்) நடத்தி வருகிறான். அவனுக்கும் ஆரம்ப நாட்களில் குழப்பம் இருந்துகொண்டே தான் இருந்தது. அவன் கால்களில் அந்த பாம்பு கடித்த காயம் இல்லை, அதை கத்தியால் கிழித்த காயமும் தான் அதன் வடு மட்டும் சின்னதாய் இருந்தது .

வெகு நாட்கள் நண்பனிடம் இதை பற்றி பேச தயங்கியவன். உண்மையா பொய்யா என்ற போராட்டத்தில் இருந்தான். தன் காதலை கூற போனது கூட நன்றாக நினைவில் இருக்கிறதே. தன் முத்த பரிமாற்றம். அவளுடனான நினைவுகள் அத்தனையும் உண்மை தான் இன்று கூட அவனால் உணர முடிந்ததே. அதில் பாதி உண்மை வெகு நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கண்டுகொண்டான். ஆம் அவன் கண்டுகொண்டான்.

அவனின் ஏர் லைன்ஸ் விமானத்தில் தானே அவன் பயணித்தான். அங்கே அந்த பெயர் தகவல்களும் அவர்கள் தகவல்களும் கண்டு பிடித்தான். அனால் அதில் ஒரு சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது அவன் கண்ட அன்றைய பயணிகளின் பெயர்களில் இவர்களுடன் அந்த தீவில் இருந்த மற்ற இவரின் பெயரும் இடம் பெற்றிருக்கவில்லை. ஏன் என்று இப்போதும் புரியவில்லை. அது உண்மையில்லையா. இப்போதும் மீண்டும் முதலிலிருந்து கேள்விகள் முளைத்தன.

இதை தொடர்வதை விட இதோடு தன் நண்பனிடம் பேசிவிட முடிவெடுத்திருந்தான். இவன் இந்த பெயர் பதிவில் இருந்து முதலிலேயே விழியின் பெயர், விலாசம் என்று கண்டுகொண்டவன். அவளை தொடர்ந்தான். அவளுக்கு தெரியாமலே. அவளுக்கு நினைவுகள் இருக்கிறதா என்று தெரியாமல் எப்படி அவளிடம் பேசுவது என்று தயக்கம். 

அவளிடம் பேச வேண்டும். அவளிடம் பேச வேண்டும் என்றாள் நண்பனிடம் அந்த தீவின் நினைவுகளை பற்றி பேசி அவனின் நிலையில் அறிய வேண்டும். அவனுக்கு நினைவில் இருந்தால் நிச்சயம் விழிக்கும் தன்னை நினைவு இருக்கும். அன்று அவர்கள் இருவரும் வேலைகள் ஏதும் இல்லை. எழிலனிடம் பேசிவிடலாம் என்று முடிவு செய்த நிறைமதியன் அன்றிரவு அவனுடன் கடற்கரைக்கு சென்றான்.அவன் எழிலனிடம் இத்தனையும் கூறி முடிக்க அவனோ மதியனிடம்,

எழிலன்” அப்ப அட்ரஸ் கெடச்சுதா டா” என்றவன்.

நிறைமதியனின் பார்வையில்,” என்ன டா பார்க்கிற? எனக்கு மொழியோட அட்ரஸ் வேணும் “

மதியன்,” இதென்னடா புது கதையா இருக்கு”

எழிலன், “அவளை பார்க்காம என்னமோ போல இருக்கு டா. இதனை நாள் காண்பியுஷன் ல இருந்தேன் இப்ப உண்மைன்னு தெரிஞ்சிடுச்சு எப்படி சும்மா இருக்குறது?”

மதியன்,” நான் அவங்க வேலை செய்யுற ஹாஸ்பிடல் போய் பார்த்தேன். விழியை பார்க்க போனேன். ஆனா அவ கிட்ட பேசல. அவளை மீட் பண்ணல”

எழிலன்,”அடப்பாவி துரோகி நீ மட்டும் உன் ஆழ பார்க்க போயிருக்க”

மதியன் ,” சரி சரி விட்றா. நாளைக்கு போய் பேசி பார்ப்போம். உனக்கு நினைவு இருக்கு னா கண்டிப்பா அவங்களுக்கும் நினைவு இருக்கும்”, என்றவன் கடலை ரசிக்க முனைய அவனுக்கு தெரிந்தது அனைத்தும் அந்த நிலவு தான்.

 

அதே போன்ற நிலவு வெளிச்சில் தானே அவளிடம் தன் மனம் உரைக்க சென்றான். இதே போன்ற
நிலவொளியில் தானே அவளை பிரிவோமோ என்று அச்சம் கொண்டான். இதே போன்ற நிலவொளியில்தானே அவள் இதழ் ஸ்பரிசிதான். நினைவுகள் அனைத்தும் மீண்டும் கல்லாய் கனக்க செய்தது நெஞ்சத்தை.அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல் புறப்பட நினைத்தவன் நண்பனுடன் புறப்பட்டான்.

 

இவர்கள் அங்கிருந்து கிளம்ப முனைய வேண்டி எழுந்து நிற்க அவர்களின் வலது புறத்தில் அவனை போலவே நிலவினை வெறித்துக்கொண்டிருந்தாள் விழி.

மதியனும் அவளை பார்த்ததும் சற்று தடுமாறியவன் கண்கள் கலக்கமுற்றது. கண்கள் மின்ன அவளை பார்த்து “விழி”, என்றழைத்தான். அவன் குரல் கேட்டு திரும்பியவளுக்கு இன்ப அதிர்ச்சி அவள் கண்களிலும் கண்ணீர். “நிறை”, என்றவள் அவன் அருகே ஓடி சென்று அவன் கைகளை பற்றிக்கொண்டாள். அவளை பார்த்த சந்தோஷத்தில் சிரித்தவன் அவள் தலையில் தன் தலையை கொண்டு முட்டியவன். சற்று நேரம் அப்படியே நின்றிருந்தான்.

பின் அவள் தலைகோதி கன்னம் பற்றி அவள் கண்களை பார்த்துக்கொண்டிருந்தவன்.”லவ் யு விழி.உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன். உண்மையா பொய்யா கனவா னு ரொம்ப திண்டாடி போய்ட்டேன் டா. தெரிஞ்சதும் உன்ன பலோவ் பண்ணினேன் ஆனா உனக்கு என்னை நினைவு இருக்கானு தெரியாம எப்படி பேசுவேன். அணைக்கு கடைசியா பீச் விட்டு கிளம்புறப்பவே என் லவ் ஆஹ் சொல்ல தான் கூப்பிட்டேன் அனா அதுக்குள்ள இப்டி ஆகிருச்சு”, என்று முடித்தவன்.

“ஐ அம் சாரி டா மா அன்னைக்கு உன்னோட விருப்பம் இருக்கா தெரியாம ஒரு வேகத்துல அப்டி கிஸ் பண்ணிட்டேன்.அத வெச்சு தப்பா எடுக்காத. உண்மையவே உன்னை லவ் பண்றேன் மா” என்று நீண்டதொரு விளக்கத்தை கொடுக்க,

விழியோ, ” அப்ப நான் பதிலுக்கு உனக்கு கம்பெனி குடுத்தது தெரியலையா சார். எனக்கு விருப்பம் இல்லைனா அன்னைக்கே ஓங்கி அறஞ்சிருப்பேன்” என்றவள் அன்றைய தினம் உண்மையில் அவன் தூக்கம் கலைக்கவென அறைந்திட வந்ததை கூற , கேட்டுக்கொண்டிருந்தவன் ” அடிப்பாவி” என்று வாயில் கைவைத்தான். இன்னும் இன்னும் அங்கு அவர்களின் உரையாடல்கள் காதலாய் மகிழ்ச்சியாய் தொடர்ந்தது அங்கே .

மொழியை பார்த்த காரெழிலனுக்கும், எழிலனை பார்த்த மொழிக்கும் உவகை ஊற்றாய் பொங்கியது கண்ணீர், ஆனால் அவர்களோ ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை பேச்சும் வரவில்ல. எப்போதுமே ஒருவரோடு ஒருவர் வேண்டுமென்றே வம்பு சண்டை பிடித்துக்கொண்டு இருந்தவர்களின் வாயிலிருந்து பேச்சுக்கு பஞ்சம். அவர்களுக்கே அது அவர்களுக்கு சிரிப்பை கூட தந்தது. அவர்களுக்குள் தோன்றிய புது உணர்வை இருவருமே விரும்பினர். பேச்சுக்களுக்கு பஞ்சாமாய் இருந்தும் அங்கு காதல் பகிர பட்டது மொழியின் மௌனத்தின் மொழியில். ஒருவரின் அருகாமையை இன்னொருவர் வெகுவாய் ரசித்தனர். அவர்களின் இந்த மூன்று மாத பிரிவில் ஒருவரின் இன்மையை மற்றொருவரை வெகுவாய் சோதித்திருந்தது. பார்த்து சிரித்து கொண்டனர். கண்களால் அவர்களுக்கு மட்டுமேயான பரிபாஷை உருவாக்கினர். வார்த்தைகளால் வம்பிழுத்து விளையாடிய அவர்கள் இப்போது வார்த்தைகளே பொறாமை கொள்ளும் அளவிற்கு கண்மொழி பேசினர்.

இவர்களின் வாழ்வின் அந்த மர்ம நிகழ்வுகளை இன்றுமே மர்மங்களாகவே தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. மர்மங்களின் விடையை தேடி தேடி கலைத்தவர்கள். அவை மர்மர்களாகவே இருக்கட்டும் என்று விட்டனர். ஆனால் அதனால் அனுபவித்தவைகள், திருத்தி கொண்டவைகள், என அனைத்தையும் என்றும் மறவாமல் கடைபிடித்தவர்கள் அதன் நினைவுகளை மட்டும் சந்தோசமாய் புரட்டிப்பார்த்தனர். இங்கு நடந்த மர்மங்கள் அனைத்தும் நன்மைகள் பல விளைவித்திருக்க. இங்கிருக்கும் தங்கள் நிஜங்களை மட்டும் தேடி பிடித்துக்கொண்டவர்கள். நிழலா? நிஜமா ? வினாக்களின் விடைகளை தோண்டியெடுக்காமல் தங்கள் வாழ்வின் பகுதிகளை ரசித்து வாழ முடிவு கொண்டு, அந்த மர்மங்கள் தங்களுக்காய் கொடுத்த அன்பின் பரிசை பொக்கிஷமாய் வாழ்க்கை முழுதுக்கும் பாதுகாக்க ஆரம்பித்தனர்.

உள்ளத்திலும், சிந்தையிலும், காட்சிகளில் காட்சிபிழையாய், நினைவுகளில், கனவுகளில் என அவளில் முழுதாய் நிறைவாய் நிறைந்திருந்தான் நிறைமதியன் . நிறைவாய் தங்கள் வாழ்வை வாழ்ந்தனர் நிறையும் விழியும். விழியின் மதி முழுதும் நிறைந்த நிறைமதியன் அவன். மதியின் விழி நிறைந்த வைவழி அவள்.

எப்போதும் எலியும் பூனையுமாய் சண்டைகள் போட்டு சிரித்து மகிழ்ந்து வாழ்வை தொடர்ந்தனர் எழிலனும் மொழி. மொழிக்கு எழில் சேர்க்கும் இலக்கணம் அவன். எழிலுக்கு வடிவம் தரும் புகழ் மொழி இவள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
11
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Super ending da…💞💞💞💞
      வாழ்த்துக்கள் prend..🥰🥰🥰💐💐💐💐💐