வேகமாய் தூக்கி சென்றனர் அவர்களின் ஊருக்கு. போன வேகத்தில் நேராய் சென்றது வைத்தியரின் குடிசைக்கு தான். முதல் வேலையாக வைத்தியரிடம் அவர்கள் மொழியில் எதோ பேச விழி, மொழி, எழிலன் பார்வையாளர்களாகவே இருக்க முடிந்தது.அவர் நிறைமதியனின் கால்களை பரிசோதித்து கொண்டிருந்தார், அவர் கைகள் பட்ட அழுத்தத்தில் வலி எடுத்தது அவனுக்கு பற்களை கடித்து பொறுத்துக் கொண்டான். அவன் வலியில் லேசாய் முனங்க பதறியது விழி தான். காரெழிலனுக்கோ நண்பனை குணப்படுத்திவிட வேண்டும் என்றெண்ணியவன் அளித்த சிகிச்சையை கூர்ந்து கவனித்தான். விசத்தை வெளியேற்ற அங்கே கூர்மையான கத்திக்கொண்டு கிழித்தார் கால் சதையை. பாவம் அலறிவிட்டான் நிறைமதியன்.
அந்த அலறலை கேட்ட விழியோ அவசரத்தில் அவருக்கு தமிழ் தெரியாது என்பதை மறந்து வைத்தியரிடம்,” ஐயோ. பார்த்துங்க ஐயா”. குணப்படுத்துடலாம் இல்லையா?” என்றுவிட்டாள்.
அவரோ அவள் பேசியது புரிந்தவராய், “சுகமாக்கிடலாம் மா” என்றார்.
இவர்களுக்கோ அதிர்ச்சி இத்தனை நேரம் தங்களுடன் பேசியவர்களுக்கு தமிழ் தெரிந்ததை போல் இல்லை ஆனால் இவர் பேசும் சொற்கள் தமிழ் தான். அவரின் வார்த்தைகள் சிலவும் நடையும் இவர்களை போல் அல்லாமல் வேராக தான் இருந்தாலும் இவர்களுக்கு அவர் பேசுவதை உணர, புரிய எதிர்வினையாற்ற முடிந்தது.
முகம் முழுக்க ஆர்ப்பரித்தது அவர்களின் பிரகாசத்தின் விகசிப்பு. மனதில் அமைதி விரவ அவரிடம் பேசினாள் நிறைமதியன் நிலை பற்றி. அவனுக்கு மருத்துவம் பார்க்க பட்டு அமர்ந்திருந்தான். அவன் இப்போது அபாய கட்டத்தில் இல்லை என்பதே மிக பெரிய உவகையை தந்தது அம்மூவருக்கும்.
அந்த வைத்தியர் நிறைமதியனை கடித்த பாம்பின் வகையையும் கொடுத்த மருந்தை பற்றியும் வைவிழி மற்றும் மொழியிடம் கூறியிருந்தார். அவர் உபயோகித்த மருந்தும் விசம் தான். பாம்பின் விசத்தை முறிக்க வேறு சில பாம்பின் விசங்களை கொண்டு செய்த மருந்தை பதப்படுத்தி வைத்து இருந்தனர்.
நிறைமதியனை காத்துவிட்டதே பெரும் நிம்மதியாக இருக்க. விழியிடம் ஒரு ஆசுவாச பெருமூச்சு. சற்று நேரம் அவளை கவனித்த வைத்தியர் ஒரு புண் சிரிப்பை உதித்தவர்,” இந்த அண்டத்தில உயிர் போறதுக்கு அத்தனைக்கும் நீ காரணமில்லை. போக போற உயிரை காப்பாத்த முயற்சிக்கலாம் சில சமயம் அந்த முயற்சியும் வெற்றி பெறலாம். எல்லா முயற்சிக்கும் வெற்றி மட்டுமே முடிவு இல்லை. விதிக்கப்பட்ட சிலது நடந்தே ஆகும். அதுக்காக முயற்சி பண்ணாமல் இருக்க முடியாது. முயற்சி செய்தும் உன்னால காக்க முடியலை எண்டா அது விதி. முயற்சியே எடுக்கல்ல எண்டா அதுக்கு மொத்தமும் நீ தான் பொறுப்பு. உயிரை காப்பாத்திர இடத்துல இருக்கவங்க ஒருத்தர்கிட்டயே நின்னுட்டா மற்ற உயிர்களை காப்பாத்துறது யாரு. அவங்களுக்காக முயற்சி எடுக்காம விட்டா அந்த பழி அவங்களை சேராதா?”, என்றவர் சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்துவிட்டு எழுந்த வைத்தியர் ,
” நான் கொஞ்ச மூலிகைங்க எடுக்க வேண்டி இருக்கு. எடுத்துட்டு கெதியா வாறன்”, அங்கிருந்து சென்றுவிட்டார்.
அந்த ஊருமே அழகாய் தான் இருந்தது பெரிய பெரிய காளான்கள் முளைத்தது போல இருந்தது அந்த குடிசை வீடுகள். கல், மணல், சுண்ணாம்பு கொண்டு கட்டிய வீடுகள் அவை. சுவரின் தோற்றம் கொஞ்சமே கொஞ்சமாய் தான் வெளியில் தெரிந்தது. முழுதாய் அல்லாமல் முக்கால்வாசி சுவர் குடிசைக்குள் ஒளிந்துகொண்டது அடர்த்தியாய் வேய்ந்திருந்த கூரைக்குள், சூரியனின் வெட்பத்தை காண பயந்து.
இங்கு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க எழிலன் ,”டேய் வெளிய கொஞ்சம் சுத்தி பார்த்துட்டு வரேனே” என்றான் விழியிடம் திரும்பி மொழியோ தானும் எழுந்து நின்றவள், “நானும் வரேன்” என்க. அதற்குள் அங்கு வந்த அந்த ஊரின் ஆள் ஒருவர் இவர்களை வேறு இடத்திற்கு கூட்டிச் சென்றான்.
போகும் வழியிலேயே அந்த ஊரை சுற்றி பார்த்த படி இல்லை இல்லை ரசித்து கொண்டு தான் சென்றனர்.
உணவிற்காய் மண் பண்டங்களும் , மண் அடுப்பும், அம்மிக்கற்கள், ஆட்டுக்கல் போன்றைவைகளை பார்க்க எதோ காலப் பயணம் செய்து காலத்தில் பின்னோக்கி வந்தது போல் பிரம்மை.
இவர்களை தங்க வைப்பதற்காக ஒரு கூடம் கொடுத்தனர். ஆண்களுக்கு ஒரு இடம் பெண்களுக்கு ஒரு இடம் என. ஆனால் தற்போது இவர்கள் ஒரே கூடத்தில் அமர்ந்து கதைக்கலானார்கள் தங்களின் நிலை பற்றி.
அவர்கள் அனைவரும் அங்கே எப்படி வந்தார்கள். இவர்கள் இங்கே பத்து பேர் தான் இருந்தனர் மொத்தமாக அனைவரையும் சேர்த்து. விமானத்தின் மற்ற பயணிகள் எங்கே?.
எழிலன்,” எல்லாரும் ஒரு வாட்டி யோசிச்சு பாருங்க. இந்த இடம் வர முன்னாடி கடைசியா என்ன நடந்துச்சுனு யாருக்கும் ஞாபகம் இருக்கா?
மொழி,”கடைசியா பிலைட்ல கண்ணை மூடி சாஞ்சிருந்தேன் சீட் ல அவ்ளோ தன நினைவு இருக்கு. ஹான் கடைசியா எதோ வெடிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு. அப்றம் அந்த தரைல இருந்து கண் முழிச்சேன் “.
ஒருவன்,”நான் முழிச்சு தான் இருந்தேன் பிலைட்டுல. சத்தம் கேட்டது போல எனக்கு நினைவு இல்ல ப்ரோ”.
எழிலன்,” உங்க பேரு ப்ரோ ?”
ஒருவன், “நீலன்”.
ஒருத்தி,” எனக்கும் ஏதும் சத்தம் கேட்டது போல நினைவு இல்லங்க. என் பேரு சுந்தரி ” என்று முடிக்க
அங்கிருந்த மற்றவர்கள் அனைவரும் அப்படி ஒரு சத்தம் கேட்டிருக்கவில்லை என்க இவர்கள் நால்வருக்கு மட்டும் குழப்பமாய் இருந்தது. அதெப்படி தங்கள் நால்வருக்கு கேட்ட சத்தம் இவர்களுக்கு கேட்காமல் இருக்கும். குழப்பமாய் தான் இருந்தது. அவர்கள் யாரிடமும் கை கடிகாரம் கூட இல்லை. நேற்று விழி, மதியனுக்கு முதலுதவி செய்யும் பொது கைக் கடிகாரத்தை கழட்ட சொல்லவும் தான் நினைவுக்கு வந்து பார்த்தனர் மதியனும் மற்றவர்களும், எவர் கைகளிலும் கைக்கடிகாரம் இல்லை. அப்போது அதை பற்றி ஆராயும் நிலையிலும் இல்லாததால் பெரிதாய் பேசிக்கொள்ளாமல் இருக்க. இப்பொது அந்த சின்ன விடயம் கூட பூதாகரமாக தோன்றியது.
அங்கிருந்த அத்தனை பேரின் குடும்பங்களும் இவர்களை எண்ணி என்னவென்று தவித்திருப்பார்களே. இந்த விமானம் செயலிழந்திருந்தாலோ, விபத்துக்குக்கு உள்ளாகி இருந்தாலோ இந்நேரம் அதனை தேட கூடவா ஆட்கள் வரவில்லை. சட்டென அவனுக்கு நினைவு வந்ததாய் மீண்டும் அவர்களிடம் ஆலோசிக்க ஆரம்பித்தான்,
எழில்,” நான் அந்த கரையில கண்ணு முழிக்கிறப்ப என் ட்ரெஸ் கூட நனையலை. அடியும் படலை என் மேல . ஒரு வேல அக்சிடன்ட் அகியிருந்து அதுல இருந்து உயிர் தப்பிச்சு கரையில இருந்தாலும் ஒன்னு கடல்ல விழுந்ததுக்கு நம்ம ஈரமா இருந்திருக்கணும், இல்லையா அடிபட்ட தடயமாச்சு இருக்கணுமே. அது மாதிரி எதுமே என் கிட்ட பாக்கல. உங்க யாருக்காச்சும் அப்படி அடி பட்ட போல இருந்து முழுசா நனைஞ்சு இருந்தீர்களா”, என்றதும் தான் அங்கிருந்தவர்கள் தங்களின் நினைவுகளை தோண்ட ஆரம்பித்து இருந்தனர்.அவர்கள் யாரும் கூட நனையவில்லை என்பது தான் அவர்களின் பதிலாக இருந்தது. யாருக்குமே அதற்கான விடை கிட்டவில்லை . விமானத்தின் விபத்துக்கான எந்த ஒரு சாத்தியகூறும் இருப்பதாய் தெரியவில்லை. பிறகெப்படி தாங்கள் இங்கு வந்தோம்.
எழில்,” மொபைல், ஸ்மார்ட் வாட்ச்சுனு எதுவுமே இல்லை. எப்படி நம்ம நம்மளோட இடத்தை கண்டுபிடிச்சு திரும்ப போவோம். இது என்ன இடம் கூட தெரியலையே ஓ காட் “
மொழி, “அந்த வைத்தியர் தான் தமிழ் ல பதில் சொன்னாரே அவர்கிட்டயே கேட்டு பாப்போம். இங்க இருந்து போக வழி தெரியலாம்.”
எழில்,”அவரும் இப்ப இங்க இல்லை எப்ப வருவாருனு தெரிலயல. இங்க வேற யாருக்குமே தமிழ்ழும் தெரியலையே” என்றவனுக்கு பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது தங்கள் நிலையை எண்ணி. இதில் பசி வேறு வயிற்றை கிள்ளியது அனைவருக்கும். எங்கிருக்கிறோம் என்று புரியவில்லை இங்கிருந்து எப்படி செல்ல என்றும் தெரியவில்லை. இதுவரையில் ஒரு வண்டியை கூட கண்ணில் காணவில்லை. இங்கு பேருந்து இருப்பது போலும் தெரியவில்லை. எப்படி சிந்தித்தாலும் திரும்ப செல்வதற்கான வழி தென்படவில்லை. கண்களை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அவர்கள் நிலைமை. இதில் பசி வேறு வயிறு என்ற ஒன்று இருப்பதை காட்டியது. இவர்களின் இந்த சிந்தனையை கலைத்தது அங்கு அவர்கள் உணர்ந்த அரவம்.
ஆம் அவர்களை அங்கு அழைத்து வந்த ஆட்கள் இப்பொது உணவு பண்டங்களை கொண்டு வந்தனர். சமைத்த மீன் வகைகள் ,கிழங்கு, திணை சோறு, களி என்று அடுக்கி வைத்தனர். முதலில் கோபமாக இருந்தாலும் இப்பொது அவர்களுக்காக அனைத்தும் செய்தனர் அந்த ஊர் மக்கள்.
மொழி, விழி, மதியன் , எழிலன் , நீலன் , சுந்தரி , என உடன் பசியில் இருந்த அனைவரும் அமிர்தமாய் சுவைத்தது உணவு. பசியினால் மட்டும் அல்லது அந்த உணவின் சுவை அவர்கள் நாவில் ஓடிக்கொண்டிந்தது. எழிலனுக்கு அவன் கட்டி உருண்டை மனிதன் வறுத்த மீன்கள் கொண்டு வந்து வைத்தார் சிரித்துக் கொண்டே, இன்னும் ஒரு சிலவைகளை அவனுக்காக எடுத்து வந்தது போல் அவனுக்கே கொடுக்க இருந்த பசியில் வாங்கி உண்டவன் பிறகு தான், அவன் சேட்டை செய்து வைத்த ஆள் என்பதை கண்டு கொண்டவனுக்கு இப்பொது அவர் தன்னை பார்த்து வெட்கப்பட்டு சிரிப்பதை போல் இருக்க “ஐயையோ” என்றுவிட்டு வேகமாய் உண்டு முடித்தான் . உண்டு முடித்தவர்கள் தாங்கள் சொல்வது புரியாது என்பதால் இரு கைகளை கூப்பி நன்றி வார்தைகளாலும் உள்ளதாலும் தெரிவித்தனர். எழிலனுக்கு வெற்றிலை பாக்கு வேறு அந்த மனிதரிடம் இருந்து வந்தது.
மொழியோ,” என்ன சார். கரெக்ட் பண்ணிடீங்க போலையே”, என்க எழிலனோ அவளை முறைத்தான்.
மொழி ,” ச்ச என்ன கிஸ் சீன் டா. அதென்ன என்ன அரிசி சாப்புட்ற அம்மு குட்டியா” என்று சொன்னவள் அவன் முத்தம் கொடுப்பது போல செய்ததையும் அதே போல் காற்றில் செய்து காண்பிக்க, அதில் கடுப்பானவன் கோபித்துக்கொண்டு நகர்ந்து விட்டான். அவள் அவனை கிண்டலடித்தாலும், அவனிடம் அந்த மனிதரின் அணுகுமுறை இவள் கிண்டலடிப்பதை போல் இல்லை என்று இவளுக்கு தோன்றியது. அவரின் செயல்பாடுகள் அனைத்தும் தன் பொறுப்பில் இருக்கும் ஒரு சிறியவனை நடத்துவது போல தான் இருந்தது அவளுக்கு.
அங்கிருந்த அந்த மனிதனின் நண்பர்களும் என்னவென்று அவரிடம் வினவ,
அவரும் “எயா மகே மல்லி வகே இன்னே எக தமய்”(அவன் ஏன் தம்பி மாதிரி இருக்கான் அதான்) என்றுவிட்டு போகும் போது அவன் தலையை தடவி கொடுத்துவிட்டு சென்றார்.
இங்கு அனைத்து உணவுகளும் காலி செய்யப்பட்டு மீண்டும் அவர்கள் பேசுவதற்காய் அமர அந்நேரம் வீலென்று ஒரு பெண் கதறும் சத்தம்.
Enna da vasaname puriyala😂 ennathu kar paya Avan thambi Mari irukana😂 aama ivangalam eppadi Inga vanthanga🙄🙄
மயாஜால தீவா இருக்குமோ 😹😹😹 நல்லா காமெடி பண்றாங்க…இதுல ஏதோ மர்மம் இருக்கு என்னவா இருக்கும்…