Loading

தனது செங்கதிர்களால் தனது கடல் காதலிக்கு தங்க நிறம் பூசி அழகு பார்த்துக்கொண்டிருந்தான் வெய்யோன்.அவளோ தன் காதலன் செயலால் வெட்கத்தில் இன்னும் மின்ன. இங்கு கடற்கரையில் இக்காதல் பரிமாற்றங்களை ரசித்த படி விடிந்தது இவர்களது காலை.

விழி,மதியன் இருவரின் கண்களும் இந்த காட்சியை வெகுவாய் ரசித்தது. நேற்று இங்கே ஒருவரும் ரசிக்கும் மன நிலையில் இல்லையே. இன்றும் கூட நிறைமதியனின் காயம் நினைவு இருந்தது தான்,ஆனால் எங்கிருந்து கிடைத்ததோ தைரியமோ அவர்களுக்கு?. அந்த மூலிகை பிழிந்த சாற்றை நம்பவில்லை தான் எனினும்  எப்படி அந்த தைரியம், மனதின் குரல் அவன் குணமாகிவிடுவான் என்று உறுதியாய் சின்ன நம்பிக்கை அவர்களுக்கு. அவனை குணப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க முடிய நிலையில் இருந்த கடைசி முயற்சியான அந்த மூலிகையையும் பயன்படுத்தி விட்டு அமர்ந்திருந்தனர்.

இப்போது தான் அந்த தீவை பார்த்தார்கள் நிதானமாக. எத்தனை அழகிய இடம் அது  பரந்து விரிந்த அந்த நீல கடல் கண்ணுக்கு எட்டிய தூரம்  வரை ஒரு நிறமும் அதற்கு தாண்டி வெகு தொலைவில் இருந்து இன்னொரு நிறமும் என கண்களுக்கு வித்தை காட்டிக்கொண்டிருந்தது. அந்த கடற்கரை மணற்பரப்பிலேயே நிறைய இடங்களில் செடிகள் கோடியாய் படர்ந்து அழகூட்டின. 

இங்கிருக்கும் பரப்பை எல்லாம் சற்று தாண்டி கடல் மணலில் அத்தனை பூக்களும் பூக்கும் என்ன? எனும் அளவுக்கு அந்த பூக்களின் எழிலினை காண கண்கள் போதவில்லை. கடலின் நீலம் வேறு கண்களை பறித்தது. இப்படி ஒரு கடற்கரையை கண்டதே இல்லையே இங்கிருந்து செல்லவேண்டுமா என்கிற அளவுக்கு அத்தனை அவர்களை அதிசயித்தது அந்த இடம்.

கடற்கரை மணற்பரப்பை தாண்டி அத்தனையும் மரங்கள், பச்சை நிற உடை அணிந்து வெகு அழகாய் நின்றிடுந்தன. எத்தனை எத்தனை மரங்கள் அங்கே. அந்த அடர்பச்சை நிறத்தை அங்கு எதிர்பார்க்கவே இல்லையே அவர்கள். பூவரசன், புண்ணை, தென்னை போன்ற மரங்கள்.ஞாழல் அல்லது புலிநகக் கொன்றையின் செந்நிற பூக்களும் , பொன்னிற பூக்களும்  குளிர செய்தன கண்களை. அவ்வளவு வனப்பும் செழுமையும் கொட்டி கிடந்தது. 

நிறைமதியன் விழியை தவிர அனைவரும் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தார்கள். ஒரு பக்கத்திலிருந்து மனித பேச்சு குரல்கள் கேட்க ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல அந்த குரல்களின் தூரம் குறைந்துகொண்டே வந்தது. விழியும் கரையின் அருகில் இருக்க இவர்கள் அனைவரும் நன்றாகவே உறங்கி கொண்டிருந்தனர். 

இவர்களின் அரவத்தில் மற்றவர்களுக்கு ஓரளவுக்கு விழிப்பு தட்ட மெதுவாய் கண்களை கசக்கியவாறு எழுந்து அமர்ந்திருந்தனர் ஒவ்வொருவராய். மொழிதான் அவர்களில் கடைசியாக எழுந்தவள்,

மொழி, “ என்ன டயர்ட் டா சாமி தூங்கி கூட கண்ணுலாம் எரியுதே”  என்றவள். கண்கள் கசக்கி மெல்ல திறந்து பார்த்தாள். கண்ணெதிரே கடல் போர்வைக்குள் இருந்து மெல்ல எழவா வேண்டாமா என்று பாதி வரை எட்டி பார்த்து கொண்டிருந்த சூரியனை கண்டவளுக்கு புத்துணர்ச்சியாய் மனதில் சொல்லொண்ணா உவகை. கண்ணெரிச்சல் எல்லாம் பின்னுக்கு சென்றுவிட்டது.

எழுந்தவள் வசதியாய் சம்மணம் இட்டு அமர்ந்து கொண்டாள். சடாரென அவ்விடம் வந்தனர் ஒரு சில மனிதர்கள். அவர்களின் உடைநாகரிகம் தோற்றம் சற்று வித்தியாசமாய் இருந்தது.அவர்களோ நல்ல வாட்ட சாட்டமாய் இருக்க, அவர்களை பார்த்து இவர்கள் மிரண்டு போய் நின்றிருந்தார்கள். மொழியும் அவ்வாறே அசையாமல் அவர்களை பார்த்தபடி நிற்க. இதனை கவனித்த நிறைமதியனும் , வைவிழியும் கூட அவ்விடம் விரைந்தனர். 

அனைவரும் பரபரப்பாய் ஒன்றுகூடி இருக்க , இங்கு ஒரு ஜீவனோ, அவன் வருங்கால துணையோடு அவன் திருமணத்தில் கை கோர்த்து, நடமாடி சந்தோசமாய் அவள் முகம் நோக்கி, இன்னும் அவளை சுற்றி விட்டு நடனமாடி அந்த அழகியின் கையை பிடித்து இழுத்தான். ஐயோ, அவள் கைகள்.. அவள் கைகள் என்ன இத்தனை உறுதியாய் இருக்கிறது. 

“ வாவ். ஸ்டராங் கேர்ள். ஆனா பார்க்க சாப்ட் கேர்ள் அ தெரியுற. செம்ம கியூட் டா செல்லம் நீ” என்று கொஞ்சியவன். மீண்டும் கையை தன் பலம் கொண்டு இழுத்தான். அவன் மீது அவள் சரிந்து விட தள்ளாடி விழுந்தவன் அவளோடு சேர்ந்து நிலைதடுமாறி உருண்டு கொண்டிருந்தான். சற்று திடகாத்திரமாக தோன்றியது அவள் மேனி அவனுக்கு,

எழிலன், “ஏன் டா அம்முக்குட்டி எந்த அரிசி சாப்புடுற?” என்று வினவ 

அடுத்த பக்கமிருந்து புரியாதது போல் பதில் வர, “என்ன டா செல்லம் குரல் ஒரு மாதிரி இருக்கு. தொண்ட கட்டிக்கிச்சா டார்லிங். என்னை கட்டிக்கிட்ட ல இனி பாரு இனி என்னை தவற எதுவுமே உன்னை கட்டிக்காது” என்றவன் வெட்கபட்டுக்கொண்டே அவள் தாடையை பற்றி முத்தம் வைக்க முற்பட அவன் இதழ்களில் முடி குத்தியது. அதில் சிறிதாய் தூக்கம் கலைந்தவன் அரைத்தூக்கத்தில், 

எழிலன்,“முடி இருக்காடா பட்டுக்குட்டி அது ஒண்ணுமில்ல ஹார்மோன் இம்பேலன்ஸ் தான். என் ப்ரெண்டு டாக்டர் தான் அவ கிட்ட சரி பண்ணிக்குவோம் டா”, என்றவன் ஆறுதல் கூறுவதற்காக கண்கள் திறந்து அவள் கண்கள் நோக்க, கண் முன்னே தெரிந்த பெரிய உருவமும் அந்த உருண்டை கண்களையும் பார்த்து அலறி எழுந்தான்.

 “அம்ம்ம்மாஆஆ”, என்று அலறியவாறு எழுந்து கண்களால் சுற்றம் பார்த்து தேடியவன் ஓடி சென்று தன் நண்பன் பின்னால் நின்றுகொண்டான்.

இத்தனை நேரம் அவன் கொஞ்சிக்கொண்டிருந்தது அந்த புதிய ஆஜானுபாக மனிதர்களில் ஒருவனை தான். 

இவர்களை பார்த்ததும் அந்த மனிதர்கள் தங்களுக்குள் எதோ காரசாரமாக பேசிவிட்டு இவர்களிடம் திரும்பினர். அவர்களில் தலைமையாக இருந்த ஒருவன் இவர்களை நோக்கி அவனின் ராட்சத குரலில்,

“ ஒயால கவுத ” (யார் நீங்களெல்லாம்) என்றவன் குரலில் கர்ஜனை,

இவர்களுக்கு அவன் பேசுவது புரியவே இல்லை. என்னடா இது என்பதை ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். இவர்கள் முழிப்பதை பார்த்தவர்கள். இவர்களின் தோற்றத்தையும் உடைகளையும் ஆராய்ந்தனர். அவர்களுக்குள் விவாதித்து கொண்டிருந்தனர். 

அவர்களின் கைகளில் மீன் பிடிக்கும் உபகரணங்கள் வலை போன்றவை இருந்தன. அவர்களோ முழுதும் பருத்தியினால் ஆன வேட்டியை அணிந்திருந்தனர். மேற்சட்டை இல்லை தலையில் பாகை போல் ஒன்றை அணிந்திருந்தனர். இவர்களுக்கு அவர்களை பார்க்க சற்று பயமாக தான் இருந்தது. அவர்களின் முகத்தில் மருந்துக்கும் மென்மை இல்லையே. இவர்களை அவர்களின் எதிரியாக இருக்கலாம் என்பது போல் பார்த்து கொண்டிருந்தனர்.

விழி, “ஹாய், இவருக்கு பாம்பு கடிச்சிருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா ப்ளீஸ்”, என்றாள் நிறைமதியனை காண்பித்து. அவர்களுக்கும் புரியவில்லை. சைகையிலாவது சொல்லியிருக்கலாம் அந்த நேர பதட்டத்தில் தோன்றவே இல்லை அவர்களுக்கு.

அவர்களில் ஒருவனும், “மொனவத கதா கரன்னே ஒயா”*(என்ன பேசுறீங்க நீங்க?”, என்றான்.

அப்படியே சற்று நேரம் இருந்தவர்களின் கண்ணில் பட்டான் காரெழிலன்.

அதன் பிறகு தான் உறங்கி கொண்டிருந்த எழிலனை கண்டனர் அவனோ கனவு கண்டு எதோ வாய்க்குள் எதோ பேசி கொண்டிருந்தான். அவனை எழுப்புவதற்காய் நிறைமதியன் முன்னேற, அந்த கூட்டத்தில் ஒருவன் அவனை கை நீட்டி தடுத்தான். அவனே எழிலனை எழுப்ப முன்னேறி சென்று அவனை தட்ட, அவனோ எதோ பிதற்றியவன் அந்த மனிதரின் கைகளை பிடித்து இழுத்தான் என்ன செய்கிறான் என்று புரியாமல் அனைவரும் அவனை நோக்க, அவனோ மேலும் கடினப்பட்டு இழுத்தவன் அவனுக்கு முத்தம் வேறு பாதிக்க வர,அந்த ஆளோ ,” அனே ! அனே !” (ஐயோ, ஐயோ) என்று கதறினான். அந்த மனிதரோடு சேர்ந்து உருண்டு கொண்டிருந்தான் அந்த கடற்கரை மணலில். 

இங்கு நிறைமதியனுடன் நின்றிருந்தவர்களுக்கோ சிரிப்பதா அழுவதா என்று புரியாமல் வாயை பிளந்து அவனின் செய்கைகளை பார்த்து கொண்டிருந்தனர். அதற்குள் கண்விழித்த அவனும் அதிர்ந்து ஓடிவந்து நிறைமதியனுடன் நின்றுவிட்டான்.

எழிலனை விசித்திரமாக பார்த்த அந்த மனிதர்களோ அவர்கூளுக்குள் முணுமுணுத்துவிட்டு.இவர்களை பற்றி பேசிக்கொண்டனர் தங்களுக்குள்.

“மெயால வெனஸ் ஆகாரயேன் எந்தும் அந்தலானே மே தாக்கல் பலலம நெஹே..மே வகே எந்தும்..பூதயோ வென்ட அதித?”(இவங்க வேற மாதிரி உடையணிஞ்சிருக்காங்களே இது வரைக்கும் இப்படி உடைகளை பார்த்தது இல்லையே. ஒரு வேல பூதங்களா இருக்குமோ)

என்று பேசி கொண்டவர்கள் அவர்களை சுற்றி நின்று ஆராய்ந்தனர. இவர்களை சுற்றி நின்றிருந்தவர்களில் ஒருவன் ஏழினை பார்த்து வெட்க சிரிப்பு உதிர்த்தான். அவன் தான் எழிலன் கட்டி உருண்டு முத்தமிட முனைந்த ஆள். எழிலனுக்கோ அவனை பார்த்து சங்கடமாகி போக அசடு சிரிப்பை உதித்தவன் . அந்த மனிதன் இன்னும் வெட்கப்படவும் பயந்து போனான் எழிலன். அதன் பிறகு அந்த அந்த மனிதனின் புறம் திரும்பவே எழிலன்

இவர்கள் பூதமா என்று இவர்கள் கால்களை பார்த்து கண்டுபிடிக்க முனைந்தனர். அந்நேரம் நிறைமதியனின் கால்களை சோதித்தவர்கள் கண்களில் அவன் கால்களின் வீக்கமும் கால் கட்டும் தென்பட கட்டை பிரித்து பார்த்தவர்கள். அவர்களுக்குள் அதிர்ச்சி பார்வை பார்த்தவர்கள் தங்கள் தலைவனிடம் சொல்ல அவனும் வேகமாய் அவர்கள் முன் வந்தவன்.

“மொகத வுனே”(என்ன ஆச்சு), என்றான் பதட்டமாய் . இவர்களுக்கு புரியவில்லை பொறுமை இழந்தவன்,

“நயெக் தஷ்ட கரலத?”(பாம்பு கடிச்சுதா?)என்றான். இப்போதும் அவர்களுக்கு புரியவில்லை. எழிலனுக்கு இப்பொது சைகையில் புரியவைப்பது என்று தோன்ற அந்த தலைவனிடம் சென்று, அவன் தோலை தட்டி தன்னை பார்க்க செய்தவன், பாம்பு போல கைகளில் சைகை செய்து காண்பித்தான். பின் பாம்பு நடனம் போல் எதோ ஆடி காண்பித்தவன் நிறை கால்களில் கொத்துவது போல் செய்து காண்பித்தான். 

உடனே அந்த தலைவன் அவன் ஆட்களுக்கு கட்டளையிட்டான்,”ஒக்கோமலா என்ட பங்..மெயாலவ கமட்ட எக்ககென யமு..எயாவ உஸ்ச கன்ட..ஹதிஸ்சி எயாவ நயெக் தஷ்ட கரலா வகேய் இக்மனின்”, என்றான்.

(வாங்க டா எல்லாரும் இவங்கள ஊருக்கு கூட்டிட்டு போவோம்.அவரை தூக்கிக்கோங்க. அவசரம் பாம்பு கடிச்சிடுச்சு போல அவரை. சீக்கிரம்.) 

அந்த மனிதர் அப்படி சொல்லி முடிக்கும் தருவாயில் நிறைமதியன் வாந்தி எடுத்துவிட்டான். அதில் விழி , மொழி, ஏழிலன் அனைவரும் பதறிவிட அவனிடம் செல்ல முனைந்தவர்களை தடுத்து தன ஆட்களுக்கு கண்களை கட்டினான் அந்த கூட்டத்தின் தலைவன்.

அவனின் சொல்லிற்கு இணங்க துரிதமாய் நகர்ந்தனர் அவர்கள். நிறைமைதியனை அவர்களின் வலையை விரித்து அவனை அதில் படுக்க வைத்து நால்வர் தூக்கிக்கொள்ள. மரற்றவர்களுக்கு துணையாய் சிலர் நின்றுகொண்டனர். விழி அழுது விட, எழிலனோ தனக்குள் கலங்கினாலும் அவளிடம் தைரியம் கூறினான்.

எழிலன்,” ஐஸ் அவங்க கூட்டிட்டு போறது குணமாக்க தான்னு நெனைக்கிற பயப்படாத.  நம்புவோம், வேண்டிப்போம் . இப்போதைக்கு நமக்கு அது ஒன்னு தான் வழி. நம்ம  எதை ஸ்ட்ராங் ஆஹ் நம்புறோமோ அது கண்டிப்பா நடக்கும் அது தான் நம்ம எண்ணத்தோட பவர். லெட்ஸ் ஹோப் தட் ஹி வில் பெ அல் ரைட். முழு மனசா நம்பு டா. மதிக்கு குணமாகும்”. இவன் பேச பேச இவனையே பார்த்திருந்தாள் மொழி. 

அதை கவனித்த எழிலனோ,” என்ன லூசு மாதிரி பேசுறன்னு தோணுதா”,என்றான். 

அதற்கு மொழியோ,” ஐயோ அப்டிலாம்  இல்லை “, என்க,

எழிலன்,” நீ அப்டி நெனச்சாலும் தப்பில்ல. ஆனா நான் சொன்னது எல்லாம் உண்மை தான்”, என்றுவிட்டு அவளை கடந்து செல்ல இரண்டு நொடி நின்றவள் ஒரு புன்சிரிப்புடன் தலையசைத்து அவனை தொடர்ந்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Super da ❤️❤️ இந்த epila eli thaan highlight 😂😂

    2. Semma da sirichi mudiyala 🤣🤣🤣🤣
      Ezlilan panna velai antha aalu vetka padurathu 😂😂😂