Loading

அவளின் கடந்த காலத்தை யாரிடமும் பகிர்ந்ததில்லை, மொழியை தவிர. மொழி இவளுடன் கல்லூரியில் தான் நட்பாகியிருந்தாலும் அவள்  தான் விழி சற்று அழுத்தத்தை குறைத்தாள். அதை மொழி குறையவைத்தாள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். வீட்டில் அன்னை தந்தையிடம் கூட தோழியின் இழப்பில் உண்டான தன் உணர்வுகளை பகிர்ந்ததில்லை. ஏனோ அவர்களையும் இந்த குற்ற உணர்வில் தள்ளிவிடுவோமோ என்ற அச்சம். 

இதில் அவளின் தவறு இல்லை என்று எத்தனை முறை மொழி கூறியும் அவளை முழுதாய் அதிலிருந்து வெளிக் கொண்டுவர இயலவில்லை. விழியாய் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறாள் . தோழிக்கு உதவ முடியாமல் போனதும் அவள் தவறல்லவே, அவளுக்கு நாயின் முடி ஒவ்வாமை ஆனது அவள் தவறு அல்லவே, விமானத்தில் அந்த பிள்ளைக்கு கொடுக்கபட வேண்டிய மருந்து காலாவதியானது அவள் தவறல்லவே, நிறைமதியனின் நிலைக்கும் அவள் காரணமல்லவே. இவற்றை புரியவைக்க முனைந்து முடியாமல் போனது மொழியின் தவறல்ல. இவை அனைத்தும் புரியும் நேரமும் , மாறும் காலமும் விரைவில் வந்துவிட வேண்டுமே என்று தோழிக்காய் சிந்தித்து கொண்டிருந்தாள் மொழி. 

அவனின் அமைதியான நிலையை, கண்களில் தூக்கம் வருவதை கண்ட விழிக்கோ பயம் சூழ்ந்துகொள்ள என்ன செய்வது என்று சிந்திக்க சட்டென தோன்றிய யோசனையை நிறைவேற்ற நிறைமதியன் அருகில் சென்றாள். தன்னருகே வந்தவளை அவன் ஏறிட்டு பார்க்க அவனை பளாரென அறைந்திருந்தாள். ஒரே அறையில் அவன் கன்னம்  செங்கிழங்காய் (பீட்ரூட்) சிவந்திருந்தது . அவளுக்கே பாவமாய் தான் இருந்தது. வேறு வழி இல்லையே இது போல் எதாவது அதிர்ச்சி கொடுத்தால் தானே அவன் கண் விழிக்க முடியும் 

இதை பார்த்த எழிலனோ அடக்கமாட்டமல் வயிற்றை பிடித்துக்கொண்டு கீழே அமர்ந்து சிரித்தான். நிறைமதியன் அவனை முறைத்த முறைப்பில் சட்டென வாயை பொத்திக் கொண்டான்.

நிறைமதியானோ அதிர்ச்சி குறையாமல் அவளை பார்க்க அவளுக்கு நடுங்க ஆரம்பித்தது அவன் கோபமுகம் கண்டு. அவன் கண்களோ கோபத்தில் சிவந்து பற்கள் நெரிய நின்றிருந்தவன், ஒரே எட்டில் அவளை நெருங்கி அவள் தாடையை இறுகப் பற்றியிருந்தான். 

அவளுக்கு என்ன செய்வதேன்றே புரியவில்லை, என்ன இவன் இப்படி நடந்துக் கொள்கிறான் என்று தோன்றியது. சட்டென நினைவு கலைந்து சுயம் பெற்றவள் “அம்மாடி. இவன காப்பாத்த போனா எனக்கு கன்னம் பழுக்கும் போலயே. சரியான ஆங்கிரி பர்ட் அ இருக்கானே”.

சுற்றி பார்த்தாள் நிறைமதியன் அதே இடத்தில் அதே போல் தான் அமர்ந்திருந்தான். அருகே செல்வோமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்தி செல்வோமென முடிவெடுத்தாள்.

தன் தாடையை ஒரு முறை தடவி பார்த்தாள். இன்னுமே தாடை வலிப்பதை போன்று பிரம்மை. இப்பொதுமே நிறைமதியன் உறங்கும் நிலையில் தன்னை கட்டுப்படுத்தி கொண்டிருந்தான். அவனிடம் செல்வோமா என்று யோசித்தவள் என்ன இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் இப்போது அந்த அதிர்ச்சியை கொடுத்தால் தான் அவன் கண் விழிக்க முடியும் என்று அவனை அறைய முடிவெடுத்து அவனிடம் சென்றாள்.

உயிரை நினைத்து இப்போது பயம் சூழ ஆரம்பித்தது. வாழ, அவளுடன் வாழ ஆசை கொண்டான். பாதியிலேயே பிரிந்துவிடுவோம் என்று தெரிந்த பின் தான் ஆசை பண்மடங்கானது. 

அவனும் எழுந்து நின்றுகொண்டான். தன் தூக்கத்தை கலைக்கும் பொருட்டு. அவன் அருகில் சென்ற விழி, “நிறை, ஆர் யூ ஒகே ?”, என்க,

“ம்ம்” என்றவனின் குரல் சரியில்லை என்று அவள் உணர்ந்தாள். அவனோ பிரிவை எண்ணி உணர்வின் பிடியில் இருந்தான். கண்ணீரும் வடிக்க முடியவில்லை. அவளிடம் ஆசையாய் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லையே. 

ஆசையாய் என்ன எழிலன் அளவுக்கு கூட அவளிடம் சகஜமாய், சரலமாய் கூட பேசியது இல்லையே. ஒரு வேலை தான் இல்லாமல் போய்விட்டால். தன்னை அவள் மறக்க நேருமோ?. இப்படி ஒரு ஆள் இருந்ததாக கூட நினைவில் இருக்கதோ?. நினைக்கவே நெஞ்சம் கசந்தது. இருக்கும் கொஞ்ச நேரத்திலாவது அவளுடன் நேரம் கடத்த வேண்டும். தங்களுக்கே ஆன நேரம் வேண்டும். அது போதுமே அவனுக்கு. அதுவே அவன் ஆன்மாவிற்கும் மனதுக்கும் நிம்மதி கொடுக்குமே.

அவள் அழைத்ததும் சில நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன் சட்டென அவள் கைகளை பற்றி இழுத்திருந்தான். என்ன நடக்கிறது என்று அவள் சுதாரிக்கும் முன்னதாக அவள் இதழ்களில் அவன் இதழ்கள் பொறுத்த பட்டிருந்தது . அழுதான். ஆம் அழுதான். அவனின் துன்பங்களை பகிர்ந்தான் ஆனால் வார்த்தைகளாய் அல்ல. 

 அவன் இவ்வுலகில் இல்லவே இல்லை. எதையும். எதையுமே சிந்திக்கும் நிலையை கடந்து விட்டான். ஆரம்பித்தவனுக்கு நிறுத்ததான் திராணி இல்லை. இதோ விட்டால் அவள் தன்னை பிரிந்து விடுவாள். ஆம். பிரிந்து விடுவோம்.பிரிந்து விடுவாள் அவள் தன்னை விட்டு பிரிந்திடுவாள் என்ற அய்யம். அது தானே அவன் இப்படி நடந்து கொள்ள காரணம். அவள் இடையில் கைக் கொடுத்து மென்மையாக பட்டும் படாமலும் தன்னுடன் இணைத்து பிடித்திருந்தான். இந்த திடீர் செயலை எதிர்பார்த்திடாத அவளோ என்ன நேர்ந்தது இவனுக்கு என்று அதிர்ந்தாள். 

அந்த முத்தத்தை முதலில் ஏற்க யோசித்தவள், என்ன உணர்ந்தாளோ? உண்மையில் அவன் எண்ணங்கள் உணர்வுகள் இவளுக்கு கிடைத்த பட்டதோ? அவனுக்கு அனுமதி வழங்கியது போல் அவனுக்கு இசைந்து கொடுத்தாள். அவன் ஆரம்பித்த பரிமாற்றத்தை இவளும் கைகளில் எடுத்துக்கொண்டு அந்த செயலில் ஒன்றினால். இதில் பொதுவாய் இதழ் அணைப்பில் வெளிபடும் உணர்வுகள் அங்கே கிளர்ந்தெழவே இல்லை. மாறாக இருவரின் கண்களிலும் கோடாய் உருவான கண்ணீர் மழையென தொடர்ந்தது. ஏன் இத்தனை அழுகையோ? அவர்கள் பேசிக்கொள்ளவில்லை . வாய் திறந்து உள்ளம் பகிரவில்லை ஆனால் இருவரின் மனதை பிணைத்த ஒன்று அவர்களை இணைந்திருந்தது. 

அங்கு ஒரு பக்கம் மொழி உறங்கி கொண்டு இருக்க அவள் அருகில் இருந்த எழிலன் கண்களில் இந்த காட்சி பட அதிர்ந்து வாயை பொத்தி கொண்ட அவனோ, “அடேய் நண்பா என்னடா பண்ற அங்க நல்லவன்னு அக்மார்க் முத்திரைலாம் குத்தினேனே டா அய்யயோ” என்று எட்டி அவர்களை பார்த்து புலம்ப. 

அருகில் படுத்திருந்த மொழியோ அவன் புலம்பலில் அவனை முறைத்துவிட்டு அவன் வாயை பொத்தினால். அவன் தலையில் கொட்டிவிட்டு, 

மொழி,“எல்லாம் தெரியும், நான் தான் தூங்குறது போல நடிக்கிறேன் ல பார்க்காம. மூடிட்டு அப்டி போய் படு டா வென்று. எப்படி எட்டி பார்குறான் பாரு எருமை” என்று திட்டிவிட்டு அவனுக்கு எதிர்புறம் திரும்பி படுத்துகொண்டாள். 

இவனோ அவள் கொட்டியதிலும் பேசிய பேச்சிலும் 

எழிலன்,” என்னைய தான் டா ஈஸியா அசிங்க படுத்திறீங்க”,என்று புகைந்தவன் மூக்கை உறுஞ்சியவாறு   அவளுக்கு சற்று தள்ளி அவளை போலவே அவளுக்கு முது காட்டி படுத்துக் கொண்டான். ” எனக்கும் முது காட்டி படுக்க தெரியும். நல்ல வேலை மத்த எல்லாரும் தூங்கிட்டாங்க ” என்று கூறி பெருமூச்சொன்றை விட்டவனுக்கு பாவம் பதில் தர தான் அங்கே ஆள் இல்லை.

முத்தமிட நிச்சயமாய் நினைக்கவில்லை ஆனால் அத்தனை யோசனை என மனம் தடுமாறி எதோ ஒரு உந்துதலில் கொடுத்துவிட்டான். அவளை கண்களால் பார்த்து, ரசித்து , தன் இளமையின் உணர்வுகளின் வேகத்தில் தடுமாறி  பகிரப்பட்டது அல்லவே அந்த இதழணைப்பு. அவன் துன்பத்தை இவளை விட்டு பிரியப்போகும் துக்கத்தை பகிர்ந்திருந்தான். 

அவன் கண்ணீர் துளி பட்டு சுற்றம் உணர்ந்தாள் விழி. அந்த செயலின் வேகத்தை வீரியத்தை இப்போது உணரந்தனர் இருவரும். விழிக்கும் அவன் முகத்தை காண முடியவில்லை அவனுக்கும் அதே நிலை தான்.அவனை காண முடியமால் வேகமாய் சென்று கடல் அலைகளில் கால் நனைத்தபடி நின்றுகொண்டாள். 

அவனுக்கும் அவளை காணமுடியாமல் தான் போனது. இப்போது தான் அவன் அறிவுக்கு எட்டியது அவள் உணரும் முன் தான் அவளை அணைத்தை. இல்லை. இல்லை. இதழணைத்ததை. சுற்றம் மறந்துவிட்டான் அவனின் பயமும் சிந்தனைகளும் அவன் சிந்தையை இழக்க செய்தது. அவனுக்கு மட்டும் விருப்பம் இருந்தால் போதுமா. அவளின் விருப்பம் அவசியம் இல்லையா. தன்னின் எண்ணங்களை மட்டும் பிரதானமாக நினைத்திவிட்டோமோ . அவள் எப்படி ஏற்றுக்கொள்வாள். 

மனதை கூட உரைக்காத தன்னின் முத்தத்தை என்னவென்று எண்ணும் அவள் மனம். எத்தனை வலித்திருக்கும் . ஒருவேளை தன் மேல் அவளுக்கு வெறும் ஈர்ப்பை தவிர வேறேதும் இல்லையெனில் இது எத்தனை பெரிய குற்றம். அவள் விருப்பு இல்லாமல் எப்படி இதை செய்ய துணிந்தேன்.

 “அப்படி என்ன உனக்கு அவசியம்?மடத்தனம் செய்துவிட்டாயடா முட்டாள்”என்றது மனம். இப்படி சிந்தித்தவன் பாவம் அவளும் பதில் வழங்கியதை மறந்துபோனான் அவனின் உணர்வுகளை,எண்ணங்களை அவள் உள்வாங்கிக்கொண்டதை நினைவுபடுத்தவில்லை அவன் மூளை.

அவள் சென்ற திசை திரும்பி பார்த்தவன் அவளை நெருங்க தயங்கினான். எத்தனை திமிர் உனக்கு என்று கேட்டு அறைந்துவிட்டாள் என்ன செய்வான்.

 

“ஐயோ பைத்தியக்காரதனம் பண்ணிட்டியே. பாவம் அவ மனுஷனே இல்ல டா நீ. எந்த மூஞ்சிய வெச்சிட்டு பேசுவ?”, தன்னை தானே திட்டிக் கொண்டான். 

“ பரவாயில்லை. நீ பண்ணுனதுக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்” என்றது மனம்.

அவன் செயலுக்கு என்னவென்று காரணம் கூறி மன்னிப்பு கேட்பான். “தான் மனா குழப்பத்தில் இருந்ததால் எதோ ஒரு வேகத்தில் நடந்துவிட்டதென்றா? இது ஒரு விபத்தென்று நினைத்து மறந்து விடு என்றா ? அத்தனையும்  தன் அறிவற்ற செயல் “இதில் அவளை மறக்க வேறு சொல்வாயா?” என்று தன்னை தானே கேட்டு கொண்டான்.

அவன் மனம் கொண்ட ஆசையே வேறு ஒன்றுக்கு தானே.ஆம் அவன் ஆசை இதழனைப்பு இல்லவே இல்லை. கை கோர்க்க வேண்டும். சிறிது நேரம் கைகோர்த்து கதை பேசவேண்டும். 

ஆனால் அது நடக்க வாய்ப்பே இல்லை என்று அவன் மனம் அடித்து கூறியது.

அங்கு விழியோ கடல் அலைகளில் கால் நினைத்தவாறு தான் என்ன முடிவில் அங்கு சென்றோம் என்ன நடந்தது என அசைபோட்டபடி நின்றிருந்தாள். அவனை அறைய முடிவு செய்து அவனிடம் சென்றவளுக்கு அவனை அறைய தான் மனம் வரவில்லை. அவள் அதை நிறைவேற்ற தயங்கிய கனத்தில் சட்டென்று இதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை அவனிடம். அதுவும் அவன் தன்னிடம் இதுவரை முகம் கொடுத்து நட்பாய் கூட பேசியது இல்லை. இங்கே வந்தும் கூட மொழியை தேடியபோது பரிதாப பட்டு  தானே பேசிருப்பான். 

ஆனால் அவன் கொடுத்த இதழனைப்பில் அவள் உணர்ந்ததே வேறல்லவா. அவன் உயிர் பயம் கொண்டு மனதை குழப்பி கொள்கிறானோ என்று தான் தோன்றியது. அவளுக்கு அவள் நிலைமை தான் இன்னும் புரியாத புதிராக இருந்தது. தான் எப்படி அவன் கொடுத்த முத்தத்திற்கு இசைந்தோம். இப்படியே யோசித்திருந்தவள் சற்று நேரம் கழித்து கடல் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டாள். 

அவளுக்கு பின்னே சற்று தள்ளி நின்று அவளையே பார்த்து கொண்டிருந்தான் நிறைமதியன். பிரிந்துவிடுவோம் , உயிர் பிரிந்தால் அவளையும் பிரிந்துவிடுவோம் என்ற எண்ணம் எல்லாம் அவனுக்கு பின்னே சென்றுவிட்டது இப்போது அவன் எண்ணமெல்லாம் அவள் நிலை என்ன? தான் அவளை காயப்படுத்திவிட்டோமோ? என்று மட்டும் தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அங்கங்க கொஞ்சம் எழுத்து பிழை சரி பண்ணுங்க