Loading

விழி, ” நான் சொல்றது போல இருக்கனும். புரிஞ்சுதா “.

” ம்ம் . சரி “, என்றவனுக்கு மருந்துக்கும் உயிர்மேல் பயம் இல்லை. அவள் பயப்படுவதும் புரிந்தது அவனுக்கு. இதிலிருந்து அவள் வெளிவர வேண்டும் அவளாக மனது வைத்தால் மட்டுமே நடக்கும். அந்த மூச்சுத்திணறலால் பாதித்த குழந்தையை இழந்ததிலிருந்தே அவள் எண்ணங்களை நன்றாகவே யூகித்திருந்தான். அவளை அதிலிருந்து வெளிவர உதவ முனைந்தான்.

விழியோ அவன் கண்களுக்கு எதிரே விரல்களை காமித்து,” இது எத்தனை?”என்று மூன்று நான்கு முறை அவன் பதில்களை வாங்கிகொண்டாள்.

விழி, ” தலை சுத்தல் , வாந்தி வரது போல இருக்கா?”

மதியன்,”இல்லை “, என்றவனின் குரலில் கிஞ்சித்தும் பதற்றம் இல்லை. இதை அவன் குரலில் உணர்ந்த விழியோ அவனை என்னவென்று புரியா பாவனையில் பார்த்துவிட்டு மீண்டும் பரிசோதனையை தொடர்ந்தாள்.

“நீங்க ஒருபக்கமா படுத்துகோங்க எங்கயும் நகர வேண்டாம். பயப்படாதீங்க.உங்களுக்கு எதுவும் ஆகா விடமாட்டேன் “.

“வாட்ச் அப்பறம் வேற ஏதும் டயிட்டா  கட்டியிருந்த கழட்டி வெச்சுக்கோங்க. உங்களுக்கு இப்ப பாம்பு  கடிச்ச சைடு மேக்சிமம் அசையாம இருங்க ” என்றவள் எழிலனிடம்,

“எனக்கு இப்ப நாங்க மொழியை தேட போன இடத்துக்கு போகணும் எழில்”

எழிலன்,” இப்ப எப்படி போக முடியும். நல்லாவே இருட்டிடுச்சு”.

விழி,” அங்க போனா தான் இந்த விஷம் பரவாம  கண்ட்ரோல் பண்ண மருந்து கிடைக்கும்”.

எழில்,” அங்க எப்படி ” என்றவனுக்கு விழி தான் அங்கு பார்த்த சில மருத்துவ செடிகளை பற்றி கூற அவனும் இப்பொது அங்கு எப்படி செல்வது சென்றாலும் வெளிச்சம் இல்லாமல் என்ன செய்து விட முடியும் என்ற சிந்தனையில் இருந்தவனை கலைத்தது அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பு. வெளிச்சத்திற்காக நெருப்பு மூட்டி இருந்தனர் இங்கே காத்திருந்த சிலர்.

எழிலன்,” இங்க எப்படி நெருப்பு பத்த வச்சீங்க?”, என்று கேட்டான் அங்கிருந்த ஒருவரிடம். அவரும்,” இங்க ஒருத்தர்ட்ட லைட்டர் இருந்துச்சு சார். நல்லவேளை அவருக்கு சிகிரெட் பழக்கம் இருந்துச்சு இல்லைனா நமக்கு இன்னிக்கு நெருப்பும் இருந்திருக்காது. வெளிச்சமும் கிடைச்சிருக்காது”.

அது அங்கு காய்ந்து கீழே விழுந்து கிடந்த மரக்கிளை கொண்டு மூட்டப்பட்ட தீ . நன்றாகவே எரிந்தது. அவர்களும் அங்கு நன்றாக சுற்றி திரிந்து கொண்டுவந்திருந்தனர் அவைகளை. இன்னும் கொஞ்சம் மரக்குச்சிகளை வைத்திருந்தனர் இன்று இரவு முழுக்க எரிய வைக்கும் அளவுக்கு.

எழிலன்,” கர்ச்சிப், ஷால்ல கொஞ்சம் துணி மாதிரி இருக்கிற துணியெல்லாம் கொஞ்சம் குடுக்க முடியுமா” என்று பொதுவாய் வினவ அனைவரும் தங்களிடம் இருந்தவற்றை அவனிடம் கொடுக்க,அங்கு மீதம் வைத்திருந்த குச்சியகலில் இருந்து எடுத்து தங்களிடம் இருந்த துண்டு துணிகளை ஒரு முனையில் சேர்த்து கட்டி அதை அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் பற்ற வைத்தான்.

எழிலன்,”விழி வா போகலாம்”, என்றவன் மொழியை பார்த்து ” மொழி அவனை பார்த்துக்கோ வந்துடுறோம்” என்று கூறி நகர,

விழி அங்கு அவள் சொன்னது போல் ஒரு பக்கமாய் படுத்திருந்த நிறைமதியனை நோக்கி சென்றவள் அவனிடம்,” பத்திரம் நிறை, எதுவுமே சாப்பிட கூடாது, தண்ணி கூட குடிக்க கூடாது. இங்க எதுவும் இல்லை தான். ஆனா எதுக்கும் நான் சொல்லி வெக்கிறேன். அப்புறம் முக்கியமா தூங்க கூடாது தூங்கிடாதீங்க ப்ளீஸ்”, என்றுவிட்டு எழிலனுடன் சென்றாள்.

எதற்கும் அந்த தீமூட்டியையும் (லைட்டர்) வாங்கி கொண்டான். வேகநடையிட்டு சென்றனர். அந்த நெருப்பு அணைவதற்குள் அவர்கள் திரும்பியாக வேண்டுமே இல்லையெனில் வழியின் நடுவில்  சிக்கிக்கொள்வர்.  போகும் வழியிலே நிறைமதியனின் நிலைப்பற்றி கேட்டு தெரிந்துகொண்டான்.

எழிலன் ,” அவனுக்கு சேரி ஆகிடும்ல”.

விழி,”நம்புவோம் எழில்”.

எழிலன்,” அப்ப இப்ப நம்ம எடுக்க போற மூலிகை அவனை குணமாக்கிடாதா?”

விழி,” அந்த மூலிகை விஷத்தை முறிக்கும் னு நான் எப்ப சொன்னேன் எழில்?”.

எழிலன்,”எனக்கு புரியல அப்பறம் எதுக்கு அங்க போறோம் நம்ம”

விழி,” அதை வெச்சு விஷம் உடம்பு முழுக்க  பரவுறத ஸ்லொ  ஆக்கும் இல்ல கொஞ்சம் நேரம் தடுக்கும் அதுக்காக. ஆனா அதுவும் ப்ராசஸ் பண்ணி எண்ணெயா வெச்சிருந்ததை தான் யூஸ் பண்ணுவாங்க.

எழிலன்,”அப்ப இது ஒர்க் ஆகாதா”

விழி,” எனக்குமே தெரியல ட்ரை தான் பண்றோம் “.

எழிலன்,” என்ன நீ இப்டி சொல்ற”.

விழி,” இப்ப வேற வழி இல்ல. நம்மளால நம்பிக்கை மட்டும் தான் வெக்க முடியும் எழில்”, என்று உரைத்தவளின் குரல் அவள் எவ்வளவு முயன்றும் அழுகையில் தடுமாறியது. அழுகையை அடக்க முயன்றாள், தொண்டை வலித்தது. அவளின் நிலை கண்ட எழிலனுக்கும் அதே நிலை தான் இருந்தும் தன்னை சமாளித்து கொண்டவன்.

எழிலன்,” பார்த்துக்கலாம் கண்டிப்பா அவனை சரி பண்ணிடலாம் னு நம்புவோம்”, என ஆறுதல் உரைத்தவன் மனமும் அது போன்ற ஆறுதலுக்காக ஏங்கியது.

விழி,”இன்னொன்னு எழில். மார்னிங் நாம மனுஷங்களை தான் தேடணும் முதல்ல. இங்க  மனுஷங்க இருகாங்க ஒரு ஊர் இருக்குனா கண்டிப்பா இந்த மாதிரி ஆபத்து இருக்க இடத்துல அவங்களும் ட்ரீட் பண்ணிக்க மருந்தோ மூலிகையோ வெச்சிருப்பாங்க. நம்ம கிட்ட மொபைல் கூட இல்லை. இருந்திருந்தா என்ன இடம்னு கண்டுபிடிச்சிருக்கலாம்”.

விழி,” சோ நாளைக்கு முதல் வேலையா அவங்களை தான் தேடுறோம்” என்றவள் நடையை தொடர்ந்தால் மிக சிரமமாக இருந்தது தான், பகலில் அந்த மூலிகையை கண்டுபிடிப்பதை விட இரவில் கண்டுகொள்வதில் அத்தனை இடராக இருந்தது அந்த இருள் கைகளில் ஏந்தி இருக்கும் பந்தம் மட்டுமே வெளிச்சம். கண்டுகொண்டாள் தேடி வந்ததை அவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் நிறைமதியன் இருக்கும் இடம் விரைந்தார்கள்.

சற்று நேரம் பிடித்தது தான் ஆனால் எப்படியோ நிறைமதியனிடம் வந்து சேர்ந்தனர்.

வந்ததும் நிறைமதியனின் கால்களில் அவள் கொண்டு வந்த மூலிகை இலைகளை நசுக்கி சாற்றை அந்த காயத்தின் மேல் காண்பித்தவள், பிழிந்த இலைகளை அப்படியே அந்த காயத்தின் மீது வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

பாம்பு கடிக்கு பச்சிலை மருந்து அவளை பொருத்தவரை இல்லை. இதுவரை அறிந்து வைத்திருந்ததில் தான் இதை செய்தாள். அதுவும் அந்த இலைகளை வைத்து எண்ணெய் தயார் செய்து அதனை தான் இப்படி விஷம் பரவாமல் தடுக்க உபயோகிப்பர் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். இதுவுமே அவளுக்கு கிடைத்த நட்பு வட்டத்தில் ஒருவருக்கு இப்படி ஒரு விடயம் நடந்திருந்தது. அவனுக்கு கைகளில் பாம்பு கடித்ததும் பொதுவாய் கேள்விப் பட்டவைகளை வைத்து துணியை கொண்டு இறுக்கமாய் கட்டிவிட்டனர். சிகிச்சைக்காய் மருத்துவமனை வந்து சேர்வதற்குள் வெகு நேரம் ஆகி விட சிகிச்சை கொடுத்து உயிரை காப்பாற்றிவிட்டனர் அனால் கட்டப்பட்டிருந்த அந்த பகுதியை நீக்கி ஆகா வேண்டிய நிலைமைக்கு தள்ளபட்டனர். அதனால் அப்போது அறிந்து கொண்ட சில வழிமுறைகளை நிறைமதியனுக்கு செய்து கொண்டிருந்தாள்.

உண்மையில் விஷத்தை இப்போது அவள் கொடுத்த சிகிச்சை பரவாமல் தடுக்குமா என்று தெரியவில்லை. ஆனால் எதோ ஒரு நம்பிக்கை இருந்தது. நம்பிக்கையின் ஆதாரம் தான் இல்லை. நிறைமதியனுடன் இவர்கள் மூவரும் கண் விழித்திருந்தனர்.

நிறைமதியனுக்கோ தூக்கம் கண்களை சுழற்றியது. கால், வீக்கத்தில் வின்வின் என்று வலி வேறு. அவனை பார்த்திருந்த விழிக்கும் தெரிந்துவிட அவனுடன் பேச்சு கொடுக்க முனைந்தாள் அதற்குள் எழிலன்,

” ஏன் மச்சான், மொழியை தேட போறப்ப  உன்னை நான் அங்க நின்னு மெனக்கெட்டு தனியா தானே அனுப்புனேன் நீ எப்படி திரும்ப வரப்ப மட்டும் புட் ஐஸ் கூட வர  டெலிபோர்ட்டிங் ஏதும் பண்ணியோ?”, என்றான்.

மதியன்,”அடிங். பேச்சை பாரு. நம்ம திரும்ப வரப்பவே இருட்டிருந்துச்சு. அதுவும் ஒருத்தங்ககிட்ட இருட்ட ஆரம்பிக்குது போலாம் னு சொன்னாலும் வரல. நான் மட்டும் போலன இன்னொருத்தரையும் தேடி அலைஞ்சிருக்கணும் நம்ப”

” நல்லா சமாளிக்கிறான் டா” என்று மனதில் நினைத்த எழிலன்,” சரி எப்படி பாம்பு கடிச்சிது?”, என்க .

மதியன்,” அது திரும்ப வரப்ப கீழ அதை பாக்கால தெரியாம மிதிச்சிட்டேன்”.

எழிலன்,” நல்லா சொன்ன டா நீ. பாம்பு கடிச்சிருக்குனு நினைக்கிறேனாம். மனுஷனாடா நீ கொஞ்ச கூட பயமே இல்லாம கூலா சொல்ற. அதுக்குள்ள விஷம் பரவி உனக்கு ஏதாச்சுனா நாங்க என்ன பண்ணுவோம் “

மதியன்,”சரி விடுடா  சொல்லிட்டேன் ல ” என்கவும் எழிலனுக்கு கோபம் வந்தது ஆனால் காட்டத்தான் முடியவில்லை.

எழிலன்,”சரி தான் . வேற பேசுவோம்”, என்றவன் நினைவு வந்தவனாய் மொழியிடம் “என்ன ஆச்சு உன்னை கண்டு பிடிச்சப்ப ரொம்ப அழுதாளே விழி யாரையோ இழந்துட்டேன்னுலாம் சொன்னா. ஏன் அவ பிலைட் ல அந்த இன்சிடென்ட்கு அப்புறம் ரொம்ப அமைதி ஆகிட்டா. எனக்கு விழியை பார்க்க யாரோ போல பீல் ஆகுது”, என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம்.

மொழி,” அவளே சொல்லுவாளே, விழி நீ யாரை அப்டி இழந்துட்ட ஏன் அதே போல எனக்கும் ஆகிடும் பயம்னு எழிலன் கேக்குறார்” என்றுவிட்டாள் விழியிடமே அதில் அதிர்ந்த எழிலனோ , “உன் கிட்ட சீக்ரெட்டா தானே கேட்டேன் இப்டி போட்டுவிட்டு வெடிக்க பாக்குற” என்று அவளை கடிந்தவன் விழியிடம்,” ஐயோ நீ சொல்லனும்னு இல்லை ஐஸ். நீ ரொம்ப சோகமா இருக்கறது ஒரு மாதிரி இருந்துச்சு அதான் கேட்டேன்”.

நிறைமதியனுக்கும் அந்த கேள்வி இருந்து கொண்டே தான் இருந்தது. எழிலன் கேட்டிடாவிட்டாலும் தான் அதை தனியே கேட்டிருப்பான்.

மதியன்,” விழி, எனக்கும் தெரிஞ்சிக்கணும் . ஏன் திடீர்னு அவ்ளோ அழுகை. உனக்கு ஓகே னா சொல்லு. இல்லைனா வேண்டாம்” என்றவனுக்கு அவள் சொல்லிவிடமாட்டாளா என்கிற ஏக்கம். இது அவளுக்கு அவன்  “சொல்” என்று  மறைமுகமாக விடுத்த கோரிக்கை.

அவளும் உணர்ந்தாள் அவன் தன்னை பற்றி அறிய முனைகிறான் என்று.

மதியன்,” நீ ஷேர் பண்ணிக்கிட்டா கொஞ்சம் லைட்டா பீல் பண்ணுவ இவ்ளோ அழுத்தம் இருக்காது”, என்க,

இங்கு எழிலனோ மனதிற்குள்,”இவன் என்ன இவ்ளோ ஆர்வமா கேக்குறான். எக்கச்சக்கமா பேசுறான் விழிகிட்ட ” என்று நினைத்துக்கொண்டவன் முகத்தில் அதனை காட்டவே இல்லை.

மதியன் மீண்டும் தொடர்ந்தான் ,” எல்லார்கிட்டயும் சொல்லணும்னு இல்லை என்கிட்ட மட்டுமாச்சு சொல்லமுடியுமா?”

எழிலன் , விடாம நச்சரிக்கிறான் பாரு . இதுல இங்க எக்ஸ்ட்ராவா நான் தான் டா இருக்கேன். மொழிக்கு ஏற்கனவே தெரியும். இவன் சொன்னபடி பார்த்தா அந்த மத்தவங்க நானா அடப்பாவி என்று  நினைத்தவன்.

எழிலன்,” டேய் யாரு மத்தவங்க. நான் தான் ஐஸ் கு முதல்ல பிரெண்டு அவ என்னை அப்டி நெனைக்க மாட்டா”, என்று நிறைமதியனிடம் சண்டைக்கு நின்றவன் விழியை பார்க்க மதியனும் அவளை தான் பார்த்தான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. பேச்சு வாக்குல எலிய யாரோன்னு சொல்லி அசிங்க படுத்திட்டானே🤔🤔 மதிக்கு அவ மேல சம்திங் சம்திங் தான் போல ❤️❤️ super da சீக்கிரம் flashback podu.. வெயிட்டிங் 🤗🤗

    2. விழிக்கு என்ன பிரச்சனைன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா 🙄