சுரீரென்று வெய்யோனால் கிடத்தப்பட்ட கதிர்வீச்சில் கண்கள் கூச , வின் வின் என்று தலைமுதல் கால் வரை உணர்ந்த வலியும் உடல் களைப்பும் , அவள் கண்களை திறவ முயற்சித்தும் அவளுக்கு உதவவில்லை .
என்ன தான் நடந்தது என்று நினைவுகளை கொண்டுவர இயலாமல், தான் எங்கு இருக்கிறோம், ஏன் இந்த பொறுக்க முடியா வலி என ஒன்றும் புரியாது மனதில் உருப்போட்டு கொண்டிருந்தவளது கண்கள் தற்போது மெல்ல மெல்ல திறக்க முற்பட்டது .
வெளிச்சத்தின் காரணியால் கண்கள் கூச கரங்களால் இமைகளுக்கு அரண் அமைத்து மெதுவாக பார்த்தவளுக்கு புலப்பட்டது என்னவோ பரந்து விரிந்த அந்த கடல் தான்.
ஆழியிடம் ஆழ்ந்த காதல் கொண்டவள் தான் . ஆனால் அவள் மனதுக்கு அமைதி கொடுக்கும் அந்த கடல் இன்று புதிய அச்சத்தை தோற்றுவித்தது.
சற்று பொறுமையாய் சிந்தித்தவளுக்கு ஒன்றும் புலப்படாமல் போனது . அவள் அன்று வீட்டிலிருந்து புறப்பட்டது மட்டுமே நினைவில் வர பின் நடந்த நிகழ்வுகள் ஒன்றும் நினைவடுக்கில் இல்லை.
” நாம இப்ப எங்க இருக்கோம் “, என்று தனக்குள்ளாக நினைத்தவாறு அந்த இடத்தை சுற்றி திரிந்தாள்.
கடைகள் , மனிதர்கள் , விலங்குகள் என எதுவுமே அங்கு தென்படவில்லை. கிடைக்காத பாதையை தேடி களைத்து அந்த கடற்கரையின் வெள்ளை மணற்பரப்பில் அமர்ந்தவளுக்கு தன் முன்னே பிரம்மாண்டமாய் பறந்து விரிந்த அந்த கடல் மட்டுமே துணை.
வழக்கமாக அவளின் வருத்தங்களுக்கும் மனக்குமுறள்களுக்கும் அலைகளால் அவள் கால்கள் நனைத்து ஆறுதல் அளிக்கும் ஆழி, அவள் உவகைகளுக்கு ஆர்ப்பரிக்கும் ஆனந்த அலைகளால் அவள் கால்களை நனைத்து அவள் இன்பங்களை பகிர்ந்து கொள்ளும் இந்த அரி (கடல்), அவள் வாழ்வில் அனைத்திலுமே அவளை அரவணைத்த கடலிடமே மீண்டும் அடைக்கலம் நாடி நின்றாள்.
அத்தனை பயம் அவள் நெஞ்சினில் இருந்தும் அது அவள் கண்களிலிலோ உடல் மொழியிலோ வெளிப்படவில்லை அவள் அருகில் யாரும் இருந்தால் கூட அவள் மனவோட்டங்களை கண்டிருக்க இயலாது. அத்தனை அழுத்தமான கூரிய விழிகள் அவை.
ஆனால் எப்படி அவனை கண்ட நொடியில் மட்டும் அத்தனை அழுத்தமும் காணாமல் போய் அவள் மனம் அவன்பால் சாய்ந்திருந்தது. அவளுக்கே ஆச்சர்யம் தான். எதோ கல்லூரி மாணவி போல் மனம் கவலைகள் கலைந்து பட்டாம்பூச்சியாய் அவனை மட்டுமே சுற்றி கொண்டிருந்தது.
மனம் மட்டுமா?, கண்கள் மட்டும் என்ன இவள் பேச்சை கேட்கவே மாட்டேன் என்றால்லவா அவனையே தொடர்ந்துகொண்டு இருந்தது . அவன் அருகில் இருந்த மூன்றாமவன் இவள் பார்த்த பார்வையில் இவளை குறுகுறுவென பார்த்து வெட்கப்பட்டு வேறு சிரித்து கொண்டிருந்தான். அவன் என்ன நினைத்தனோ அவனுக்கு மட்டுமே வெளிச்சம். இவள் பார்த்தது அந்த மூன்றாமவன் இல்லையே இவளை கவர்ந்தவனுக்கு இவள் பார்த்தது தெரியுமோ தெரியாதோ!.
திடீரென நினைவுகளில் இருந்து வெளிவந்தவள் கலக்கமுற்றாள். அவளுடன் தானே வந்துகொண்டிருந்தான் என்ன நேர்ந்தந்திருக்கும் அவனுக்கு தான் மட்டும் இங்கே இருக்க மற்றவர்கள் என்ன ஆனார்கள். அவனை கண்டதே அந்த பயணத்தில் தானே இப்படி தொலைத்து விட்டோமே. எந்த நிலையில் எப்படி இருப்பான். அத்தனை தவிப்பு.
அவள் சிந்தையை கவர்ந்தது தூரத்தில் கேட்ட அந்த குரல்,
” யாரவது இருக்கீங்களா ” என்றது அந்த ஆண் குரல்.
குரல் கேட்ட திசை நோக்கி நடையை தொடர்ந்தவளுக்கு புலப்பட்டதென்னவோ அந்த பெரிய பாறை. குரல் வந்தேன்னவோ பாறையின் பின்னிருந்து தான்.
” அப்பாடா மனுஷங்க இருகாங்க ” என்று தனக்கு ஆறுதல் கூறிகொண்டவள் அந்த ஆணின் குரல் கேட்ட திசை நோக்கி நடக்க. இன்னும் சில குரல்களும் கேட்டன ” நெறைய பேர் இருக்காங்க போலயே. நான் தான் ரொம்ப பயந்துட்டேன் போல ” என்று தனக்குள் பேசியவாறே நடந்தாள் அவள்.
****
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம்.
தமிழகத்தின் முதன்முதலில் கட்டப்பட்ட பெரிய விமான நிலையம் இந்த மீனம்பாக்கம் விமான நிலையம்.
இந்தியாவின் நான்காவது ஓய்வில்லா விமான நிலையம். அதற்கேற்றார் போல் பரபரப்பாகவும் ஆங்காங்கே மக்கள் நின்று தங்கள் குடும்பத்தையோ குடும்பத்தின் அங்கத்தயோ வழியனுப்ப நின்று அவர்களுக்கு ஆறுதல் அளித்து கொண்டு இருந்தனர். ஒரு பக்கம் அழுகை, ஒரு பக்கம் சண்டை, ஒரு பக்கம் இன்பம் என பல உணர்ச்சிகளோடு மனிதர்களின் முகங்கள்.
ஊருலிருந்து பிறந்தகம் மீண்டும் வரும் பிள்ளையை, கணவனை, தோழியை,மனைவியை, நண்பனை, தந்தையை, தாயை என தங்களுக்கு நெருக்கமானவர்களை வரவேற்க வந்தவர்கள் அவ்வளவு பேருவகையுடனும், வழியனுப்ப வந்தவர்கள் மனதாங்களுடனும் நின்றிருந்தனர். இவ்வன்பு அத்தனையையும் தன்னுள் அரவணைத்து கொண்டு கம்பீரமாய் நின்றிருந்தது அந்த கட்டமைப்பு. எத்தனை பெரிய அகக்கட்டமைப்பு அது. உண்மையில் வியக்க தான் வேண்டும்.
அயல்நாட்டுக்கு (பன்னாடு) பயணிகளுக்கு மூன்றாம் மற்றும் நான்காம் எண் முனையங்களும் உள்நாட்டில் பயணிப்பவருக்கு என்று வேறு முனையம்.சரக்கு ஏற்றி செல்வதற்கு வேறு முனையம்.
இப்படி அவரவர் வேலைகளில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்க அதற்கு சற்றும் குறையாத பதட்டத்தில் ஒருத்தி கைபேசியில் இணைக்க யாருக்கோ தொடர்ந்து முயற்சித்து கொண்டிருந்தாள்.
மறுமுனையில் இந்த அழைப்பை ஏற்கவேண்டியவளோ அவள் கண்களுக்கு மை தீட்டிக் கொண்டிருந்தாள். அந்த அலைபேசிக்கே அலைச்சளாய் போய் விட்டது இவள் ஏற்காமல் போனது. நான்கு அழைப்பாவது அடித்து ஓய்ந்திருக்கும்.
ஐந்தாம் அழைப்பை ஏற்றவள் காதுகளை துளைக்கும் ஊசியாய் அவள் செவிப்பறையை கிழித்தது அவள் தோழி மொழியின் குரல்.
மொழி, “அடியே எருமை எங்க இருக்க. உன்னை டிபார்ட்சர் கு ஒன்றை மணிநேரம் முன்னாடி வர சொன்னேன். இன்னும் என்ன பன்னிட்டு இருக்க ” என்க
இவளோ அறக்க பறக்க வீட்டிலிருந்து அந்த சக்கரங்கள் பொறுத்த பட்ட பயணப்பெட்டியை அவசரகதியில் தள்ளிக்கொண்டு செயலியில் முன்பதிவு செய்த அந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டே,
“மொழி கிட்ட வந்துட்டேன் டி இன்னும் பத்தே நிமிஷத்துல வந்துருவேன் பாரேன் நீ டென்ஷன் ஆகாத பேபி ” என தோழிக்கு சமாதானம் உரைக்க,அதற்கு மொழியும்,
” உண்மைய சொல்லு நீ இப்ப தான மூஞ்சிக்கு மேக் அப் போடற இல்லை இப்பதான் குளிக்க போறியா “, என்க.
இவள் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் விதமாய் அந்நேரம் பார்த்து ஆட்டோ ஓட்டுநர் ” மா ஓ.டி.பி சொல்லுங்க மா ” என்றார்.
இது வேறு அங்கு பேசி கொண்டிருந்த மொழி காதினில் கேட்டு விட,
” நான் தான் சொன்னேன் ல. இப்ப தான் கிளம்புறேன் னு சொல்றவனை கூட நம்பிடலாம். கிட்ட வந்துட்டேன் னு சொல்றவனை நம்பவே கூடாது னு ” என்று ஒரு பக்கம் பட்டாசாய் வெடிக்க ஆரம்பித்து விட, இவள் வெடிப்பதை கேட்க தான் அங்கு அவள் இல்லையே அலைபேசியை செவியில் வைக்காமல் கைகளில் ஏந்தி கொண்டிருந்தாள் புண்ணியவதி.
அவள் வெடித்து முடிந்தபின் அலைபேசியை காதுக்கு கொடுத்தவள்,
“வந்துருவேன் டி கவலை பாடாத “
மொழி, ” யாரு கவலைப்பட்டா?, நீ மட்டும் சரியான நேரத்துக்கு வரலையோ நான் பாட்டுக்கு தனியா ஜாலியா கிளம்பி போயிட்டே இருப்பேன் மலேசியாவுக்கு. யாருகிட்ட?” என்றாள் படுநக்கலாய்.
நக்கலாய் அவளிடம் இருந்து பதில் வர அதில் கடுப்புறவள், ” நீ ஒரு மனித வெடிகுண்டுனு சொல்லி போன் பண்ணி சொல்லுவன்டி என் வென்று. விட்டுட்டு போயிடுவ நீ?”.
இப்படியே இவர்கள் சண்டை வாய்க்கால் தகரராக மாற்றம் பெற்றிருக்க அந்த ஆட்டோ ஓட்டுநறுக்கு தான் காதிலருந்து புகையாய் வந்தது இவர்கள் பேசிய பேச்சில்.
எப்படியோ சரியாக ஒரு மணி நேரம் இருக்க சரியான நேரத்தில் வந்து சேர்ந்தாள் அவள். அவளை முறைத்து கொண்டே அவளோடு ‘போர்டிங் பாஸ்’ எனப்படும் நுழைவு சீட்டை வாங்க வரிசையில் நின்று ஒரு வழியாக அந்த நுழைவு சீட்டை பெற்றுக்கொண்டு காத்திருப்பு அறைக்குள் நுழைந்து விட்டனர் தோழிகள்.
அவர்களது துணி மற்றும் பொருட்கள் இருக்கும் பெட்டி மற்றும் பைகளை வேறுபக்கம் கொண்டுச் சென்றுவிட்டனர்.இவர்களும் காத்திருப்பு அறைக்குள் நுழைந்தவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே சுற்றிக்கொன்று இருந்தனர்.
****
அந்த பிராமண்டைமான விமான நிலையத்தின் வளாகத்தினுள் நுழைந்தனர் அந்த இரு ஆடவர்கள். அதில் ஒருவன்,
” காதல் யானை வருகிற ரெமோ
முதத்தாந்ததில் முத்துவான் ரெமோ
ராம்ப் வாக் ரெமோ “,
என வாய்க்குள் வந்த வார்த்தைகளை எல்லாம் வரிகளாய் போட்டு பாடி கொண்டு படு சினிமா பாணியில் கண்களில் கருப்பு கண்ணாடி அணிந்து அத்தனை நேர்த்தியாய் தனக்கேயான செருக்கோடு நடந்து வந்த கொண்டிருந்தான். அங்கிருந்த இளம்பெண்களின் கண்கள் அவனை மொய்த்து கொண்டிருந்து. அப்படி தான் அவன் நினைத்து கொண்டிருந்தான்.
ஆனால் அவ்விளம் பெண்களின் கவனத்தை ஈர்த்ததென்னவோ அவனுடன் தொடர்ந்து நடந்து வரும் அந்த ஆறடி ஆண்மகன் தான். முன் நடந்து வந்தவனும் இவனுக்கு சலைத்தவன் அல்ல, அவனும் ஆறடி ஆண் தான். ஆனால் ஏனோ சட்டென கவர்ந்து விட்டான் அவன் உடன் வந்தவன். அத்தனை கூர்மையான பார்வை பார்ப்பவரை ஒரு அடி தள்ளி நிற்கவைக்கும் பார்வை அது. யாரையும் அருகே நெருங்க விடாது தன்னை எப்போதும் ஒரு தனிகாட்டிலேயே வைத்திருப்பவன் அவன். அந்த தன்மையும் பார்வையும் கூட அவனிடம் அடுத்தவர் சுலபமாய் ஈர்த்துவிடும் போல.
பாவம் இங்கு இவை அனைத்தும் தனக்கு நடப்பதாய் எண்ணி கொண்டிருக்கும் அந்த உயிரின் பெயர் காரெழிலன். அவன் உண்மையில் அழகன் தான் பெயருக்கேற்றார் போல். தனது கால் சராயின் பையினில் கைகளை நுழைத்தவாறு தன் அலகினால் குமிழி உருவாக்கி(பப்பிள்கம்) உடைத்து விளையாடி கொண்டு வந்தான்.
அவனின் நேர்த்தியான வரிசை பற்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு இருந்தது அந்த குமிழிபசை.
முகத்தினில் எப்போதும் ஒட்ட வைத்தே இருக்கும் அந்த குறும்பு புன்னகை சட்டென ஒவ்வொருவரையும், ஈர்க்கும் புன்னகை அது. அத்தனை வசீகரமானது.
நம் தமிழ் நாட்டு நிறம் கொண்டு பிறந்தவன். அது தான் அவனுக்கு அழகும் கூட அவன் நினைத்த அந்த எண்ணத்தில் அவ்வளவு உறுதி. அதில் இந்த காரெழிலனுக்கு கர்வம் வேறு. யார் அவனிடம் சொல்வது பெண்கள் பார்ப்பது உன் நண்பனை தான் உன்னை அல்லவென்று.
அவன் கைகளிலும் அந்த குமிழிப்பசையின் சிறுகட்டு. அதனை தன் நண்பனிடம் நீட்டியவன், ” மச்சி, சுவிங்கம் ” என்க,
இவனை ஏறிட்டு பார்த்தவன் முறைத்துவிட்டு மீண்டும் நடையை தொடர,அதில் தனக்கேதும் பாதிப்பில்லை என்பது போல் தன் முகபாவனையை மாற்றியவன்,
” வேண்டாம் னா போடா முறைக்குறான் பாரு பொறாமை பிடிச்சவன். கேர்ள்ஸ் லா என்னை சைட் அடிச்சதும் வயித்துக்குள்ள பையர் அச்சிடேன்ட் ஆனவன் மாதிரி ஒரு பார்வை. கருகுன வாசம் இங்க வரை வருது டா “, என்று தன் நாசியின் முன் விரல்களை அலைத்து காண்பிக்க. இவனை ஏறிட்டு பார்த்துவிட்டு திமிர் சிரிப்பொன்றை உதிர்த்து சென்றான் அந்த கவனத்தை ஈர்த்தவன்.
Super chellam, அவ எப்படி இந்த இடத்துக்கு வந்துருப்பா?🤔🤔 இவளுக்கு friend aa இருக்குற பாவத்துக்கு ennalaam sollura 😄😄waiting for next epi chellam ❤️❤️
நன்றி டியர். ❤️❤️. ஆமா பிரண்ட்னாளே பாவப்பட்ட ஜீவன் tha😂😂😂
ஆரம்பம் சூப்பர் அக்கா😍 அங்க ஒருத்தி என்ன டான்னா கிளம்பி வர்றதுக்கு இந்த அக்கபோரு பண்றா.. இவன் ரெமோ கணக்குல ஒருத்தன வெறுப்பேத்திட்டு இருக்கான்.. டேய் காரு.. ஓவர் லொள்ளு தான் டா உனக்கு.. ஆமா அங்க எவ டா அது தனியா தொலைஞ்சு போய் இருக்குறது… 🤔🤔 அடுத்த episodekku waiting அக்கா ♥️
Thank u mahi ma❤️😍.🤣🤣🤣
அவ எப்படி தனியா அந்த கடற்கரைக்கு வந்து மாற்றினார் இப்ப இந்த பிளைட்ல போறவங்க தான் அந்த கடற்கரையில இருக்கவங்களா ஹீரோ பேரு சொல்லாமையே விட்டுட்டீங்க.
நல்லா ஆரம்பம் சூப்பர் 👌👌
Thank u sis❤️😍. Adutha ud la varum sis🤩.
யாருமா நீனு… யாரத்தேடுற… பாரு பேரு கூட குடுக்காம உன்ன அலைய விடுறாங்க இந்த பிரதீ அக்கா… உன்னப்போலவே பாவம் ஒருத்தன் இருக்கியா இருக்கியானு கதறுறான் பாரு… துணைக்கு ஆள் இருக்கு… நீ நிம்மதியா இருடா தங்கம்…
மேக்கப் போடுறது தப்பில்ல… டைமுக்கு முடிக்கலனா அதுதான் தப்பு… அது எப்படி டா ஃப்ரெண்ட்ஸ் அ வாய்க்குறதுல ஒருத்தி மேக்கப் ராணியாவும் ஒருத்தி டைம் பஞ்சுவல் ராணியாவுமே இருக்காங்க 😂
பட் அந்த மொழியோட டயலாக்… இப்ப தான் கிளம்புறேன் னு சொல்றவன நம்பலாம்… கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன்னு சொல்றவன நம்பவே கூடாது… கம்ப்ளீட்லி கரெக்ட்… மொழியோட ஃப்ரெண்ட் நேம் ஜொல்லுங்க ரைட்டரே 🫣😁…
எனக்கு அந்த காதல் ரெமோ பாட்டு பாடுறவன குடுத்துடுங்க க்கா… எவ்வளவு சோகத்துலயும் இவன் நம்மள சந்தோஷமா மாத்திடுவான் போல இருக்கு. அதுக்கு அடுத்த கரடுமுரடு தனிக்காட்டு ராஜாவோட உலகத்துக்குப் போக ரொம்ப ஒர்க் ஹார்ட்லாம் நம்மால் முடியும் ஆத்தா
கதை தொடக்கம் நல்லா இருக்கு க்கா 😍…
🤣🤣🤣 frnds na apdi tha oruthar crct ah irukanum inorthan oposite ah irukanum. 😂😂. Atha pathu punctual sigamani venthu nonthu poganum
Peru thana solluvom enga poiruvanunga 😂
Thank u sill ma😍❤️.
Starting ah super dr. Waiting for next epis
நன்றி டியர் 😍❤️
கதை தொடக்கம் அருமை டியர்.. நம்ம காருக்கு ஓவர் confidence than pola.. Pavam paiyan unmaiya therincha thaanguvana🤣😂