அத்தியாயம் 36
விலங்கின் தோலினால் செய்யப்பட்ட பை அது.
“எந்த அனிமலோட ஸ்கின்ல செய்த லெதர்டா இது? இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கு” என்ற வீரட், தேவித் கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த பையினை வாங்கி திறக்க முயன்றான்.
திருப்பி திருப்பி பார்த்தவன்,
“வெயிட் இல்லை. சோ, புதையல் எதுவும் இருக்க சான்ஸ் இல்லை” என்றான்.
“அவ்வளவுக்கு திங்க் பண்ணியா நீ?” என்ற தேவித், “ஓபன் எந்தப்பக்கமும் இருக்க மாதிரி தெரியலையே” என்றான்.
“ம்ம்… இது வெறும் லெதர். இன்சைட் எதுவும் இருக்க மாதிரியும் தெரியல. உங்க தமிழ் பரம்பரையில் எல்லாம் வழி வழியா ஏதோ ஒரு பொருளை வம்ச அடையாளம் மாதிரி பாதுகாத்து வைப்பீங்களே! அதே மாதிரி இந்த தோலை பாதுகாத்து வச்சிருக்கீங்க தோணுது” என்ற வீரட்டை யோசனையாக பார்த்த தேவித்துக்கு, அவன் சொல்வதைப் போலிருக்குமோ என்ற எண்ணம் தான்.
“இந்த தோலா உன்னோட இவ்வளவு பெரிய பிரச்சனையை சரி பண்ணும்?” என்று கேட்டான் வீரட்.
பை நிறம் மங்கியிருந்தாலும் தூய்மையாக இருந்தது.
தேவித்தின் விழிகள் பையின் மீதே ஆழமாக அழுத்தமாக பதிந்திருக்க… அதனுள் அவனை கட்டியிழுக்கும் உணர்வு. மனதின் கூக்குரல் செவியை தீண்டாது சதிராடியது.
குருதியின் ஓட்டம் வேகமெடுக்க, இதயத்தின் துடுப்பு அதிகரித்தது. கண்களின் கருவிழிகள் ஊசலாடியது. இதயத்தை மெல்ல அழுத்திவிட்டவனின் உடல் இறுகியது. உடலின் தளர்வு தானாக விறைத்தது.
நொடியில் நிற்கும் தோரணையில் மாற்றம் கூடியது. பார்வையின் கம்பீரம், உடலின் மிடுக்கை இன்னும் கூட்டியது.
“மாமன்னர் மகிழ் மேகோன்.” பல குரல்கள் ஒன்றாய் ஒலிக்க,
“மகிழ்” எனும் இதயத்தின் வழியாய் அவனின் மூளையை அடைந்த அவனது நதியின் காதலான விளிப்பில் இமைக்கும் கணத்தில் இயல்பு மீண்டிருந்தான். உடலில் திடுக்கிடல். கண்களின் அசைவில் மென் அதிர்வு. உடல் தள்ளாடி நிலை கொண்டது.
பையை திறப்பதற்கு எதுவும் வழியிருக்குமா என்று ஆராய்ந்து கொண்டிருந்த வீரட் நண்பனின் நிலை அறியவில்லை.
அவனும் நைருதியின் குரலில் தான் தேவித்தை நிமிர்ந்து பார்த்தான்.
சில நொடிகள் அனைத்தும் உறைந்து நின்றது போன்று என்ன நடந்ததென புரியாது, தேவித் நெற்றியை அழுந்த தேய்த்தான்.
“என்னடா?” வீரட், தேவித்தின் தோள் தொட்டு வினவினான்.
“நதி…” என்ற தேவித், நெற்றியை தேய்த்த கையில் கட்டியிருக்கும் சங்கிலியின் இதயம் முகத்திற்கு நேராக அசைந்தாடியது.
அவ்விதயத்தை கண்ணோடு அழுத்திக் கொண்டவனின் மனம் முழுக்க அவனது நதி… அன்பின் வழி கரைந்து கொண்டிருந்தாள்.
“ருதி அங்க போயிட்டான்னு நாம கண்டுபிடிச்சிட்டோம் என்பதை அவகிட்ட இது மூலமா சொல்ல முடியுமாடா?” என்றான் வீரட்.
நண்பனின் வருத்தம் சகியாது, தனக்குள் தோன்றிய யோசனையைக் கூறினான்.
மெல்ல கரம் விலக்கி கண்கள் திறந்த தேவித், இதயத்தை அழுத்தி பிடித்தான்.
“இது AI டெக்னாலஜி மூலமா நதியே கிரியேட் பண்ணது. இதோட ஃபங்ஷன் எப்படின்னு நான் நோட் பண்ணலடா. பட் உலகத்துல எங்க இருந்தாலும், இதோட ரிஃப்லெக்ட் எனக்கு வரும் சொன்னா… முழுசா செக் பண்ணா எதும் பண்ண முடியுமான்னு தெரியும்” என்றான்.
“சூப்பர் டா. அப்போ கழட்டி ஆராய்ச்சி பண்ணிட வேண்டியது தான்” என்ற வீரட்,
“இதை அப்படி ஓரமா வச்சிட்டு, அது என்னன்னு பாரு” என்றவன் அந்த பையினை அங்கிருந்த மேசையில் வைத்தான்.
“நதி பாஸ்ட்டுக்கு போயிட்டோம்னு தெரிஞ்சிக்கிட்டாளா என்னன்னு தெரியல. அவகிட்ட கம்யூனிகேட் பண்ண முடிஞ்சா… அட்லீஸ்ட் நம்மளோட மெசேஜ் பாஸ் பண்ண முடிஞ்சா கூட ஓகே” என்ற தேவித், தன்னுடைய கையில் கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்து, இதயத்தை பிரித்து எடுத்தான்.
வீரட் அவனையே பார்த்திருக்க…
“என்னோட தீசீஸ் படிச்சிருக்க தானே? நான் என்ன மிஸ்டேக் பண்ணியிருக்கேன் எதும் உனக்கு பிடிபடுதான்னு பாரு” என்று தன்னுடைய ஆராய்ச்சியின் பக்கம் வீரட்டை தள்ளிவிட்டான்.
“இந்த கண்டுபிடிக்கிற மண்டை குடைச்சலே கொஞ்ச நாளைக்கு வேணாம்னு தான்டா, டாக்ஸ் வெரிஃபை டீமில் உட்கார்ந்திருக்கேன். இப்போ நீ அந்த வேலையையே கொடுத்தா நான் என்னடா பண்றது?” என்று அலுத்துக் கொண்டாலும் வீரட் தேவித்திற்காக டைம் வீல் இயந்திரங்களுக்கு நடுவில் சென்று நின்று அதனை பார்வையிடத் தொடங்கினான்.
மிகச் சிறிய அளவில் தங்கத்தினாலான இதயத்தை உள்ளங்கையில் வைத்து பார்த்த தேவித், விரல்களை குவித்து மூடி தன்னுடைய இதயத்தில் வைத்தான்.
“என்னை நீ மறக்காம இருக்கத்தான் இந்த இதயம் மாமா.” அதனை அவனிடம் கொடுக்கும் போது நைருதி சொல்லியது. அக்கணமும் அந்நிகழ்வும் எண்ணத்தில் உதிக்க நெஞ்சம் கனத்தது.
“இந்த இதயம் முழுக்க உன் நினைவு தான் நதிம்மா. உன்னை நினைக்க மட்டுமே என் இதயம் பழகியிருக்குன்னு உன்கிட்ட சொல்லணும். இதை சொன்னா நதி மகிழை நம்புவாங்களா?” வாய்விட்டே காதலாய் பிதற்றினான்.
பிதற்றலில் கொட்டிக் கிடக்கும் கொள்ளை காதல், நேசம் சுமக்கும் நெஞ்சங்களுக்கு மட்டுமே உரித்தானவை.
ஆத்மார்த்த அன்புக்கள் யாவும் அகத்தின் வழி உயிரில் நிறைவு கொள்ளும். நெஞ்சத்தில் பொத்தி வைத்திருக்கும் தேவித்தின் காதல் போன்று.
“ஃபீல் பண்ணிட்டு இருந்தா பாஸ்ட்டுக்கு தானா போயிடலாமா மச்சான்.” வீரட் தேவித்தை திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே கேட்டது தான்… அதனை புரிந்து தேவித்தும் மென் சிரிப்போடு அங்கிருக்கும் கணினியின் முன்பு சென்றமர்ந்தான்.
முதலில் அவ்விதயத்தில் எந்தவகை செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவதற்காக அதனை மிஷன்ஸ் ஸ்கேனரில் பொருத்தி, கணினியின் திரை தெரியும் அதனது உள்ளமைப்புகள் ஒவ்வொன்றையும் கூர்ந்து ஆராய்ந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பின்பு அதனை முழுதாக அலசி ஆராய்ந்து அங்கிருந்து எழுந்தான்.
“என்னடா என்ன சொல்லுது உன் பிரைன்?” எனக் கேட்டான் வீரட்.
“ஒரு சின்ன செட்டப் பண்ணா போதும் வீர். என்னோட வாய்ஸ் நதிக்கு கேட்க வைக்கலாம்” என்ற தேவித்தின் விழிகளில் மூன்று தினங்களாக காணாத சிறு ஆசுவாசம்.
“சூப்பர் மச்சான்” என்ற வீர், “வொர்க் ஆகுமாடா?” என்றான்.
“ட்ரை பண்ணாதாண்டா தெரியும்” என்ற தேவித், “உனக்கு எதுவும் மாட்டுச்சா?” என்று வினவினான்.
“இதுக்கு முழு காரணம் நீ. உனக்கே தெரியல, முடியலன்னா என்னால எப்படிடா?” என்ற வீர், “நீ லாஸ்ட் டைம் பண்ண மிஸ்டேக்கை சரி பண்ணுடா” என்றான்.
“பைனல் ஸ்டெப் மட்டும் சொதப்புதுடா. இதுதான் மிஸ்டேக்ன்னு கண்டுபிடிச்சாலும், அதை எப்படி சரி பண்றது தெரியல. ரெண்டு வழி ஃபைன்ட் பண்ணியிருக்கேன். கிளிக் ஆகுதா பார்ப்போம்” என்ற தேவித், தளர்வாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, நின்று கொண்டிருந்த வீரட்டின் புஜத்தில் தலை சாய்த்தான்.
“என்னடா… இதுக்கே டயர்ட் ஆகிட்ட. தேவான்னா பயங்கர என்த்தூன்னு நினைச்சிட்டு இருக்கோம். இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கே” என்ற வீர், நண்பனின் முதுகில் கரமிட்டு மற்றொரு கையால் மெல்ல தட்டிக் கொடுத்தான்.
“அவ மேல லவ் வந்த பிறகும், அவ நினைப்பே இல்லாம இருந்திருக்கேன். ஆனால் இப்போ, சத்தியமா முடியலடா. அவளை பார்த்திடனும்கிற எண்ணமே அவ்ளோ டயர்ட் ஃபீல் கொடுக்குது. மைண்ட் ரிலாக்ஸ் ஆகமாட்டேங்குதுடா” என்றான்.
“நீ ருதியை அளவுக்கு அதிகமா லவ் பண்றன்னு புரியுதுடா… பட் சோர்ந்து உட்கார இது நேரமில்லை. அங்க ருதி எந்த நிலையில் இருக்கான்னு நமக்குத் தெரியல. அங்க அவளுக்கு தவறா எதுவும் நடக்காதுன்னு நம்பிக்கை இருந்தாலும், என்ன வேணாலும் நடக்கலாம் அப்படிங்கிறது தான் உண்மை. உனக்கு உன் நதியை பார்க்கனும்னா, நீதான் என்னவும் செய்யணும். என்னவும் என்ன? அதான் என்ன செய்யணும் தெரியுமே! கொஞ்ச நேரம் தூங்கி மைண்ட் ஃப்ரீ பண்ணிக்கோ. அப்புறம் என்ன செய்யணுமோ செய்” என்றான். தேவித்தின் முதுகை தட்டிக் கொடுத்த கரம், தற்போது அவனது சிகையை வருடிக் கொண்டிருந்தது.
கவினிடமிருந்து வீரட்டிற்கு அழைப்பு வர,
“நீ பேசு” என்று விலகிய தேவித், ஆராய்ச்சின் போது அவ்வப்போது ஏற்படும் சோர்வு நீக்குவதற்காக, ஓய்வு எடுப்பதற்கு அங்கேயே ஒற்றை படுக்கை ஒன்றை போட்டிருக்க, அதில் சென்று படுத்துக் கொண்டான்.
வீரட்டும் நண்பனை பார்த்துக்கொண்டே ஆராய்ச்சிக் கூடம் விட்டு மேலேறி வந்தான்.
“சொல்லுங்க கவின்.”
அழைப்பை ஏற்ற வீரட்டிற்கு கவின் எதுவும் கேட்டால் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் கவின், வீரட் பயந்ததற்கு மாறாகக் கேட்டிருந்தான்.
“தேவா எப்படியிருக்கான் வீர்?” என்று கேட்ட கவின், “ருதி முக்கியம் தான்… அதுக்காக அவனை வருத்திக்கணும் அவசியமில்லை. வேலைன்னு இறங்கிட்டா, ஒழுங்கா சாப்பிடமாட்டான். தூங்கமாட்டான். பக்கத்திலிருந்து பார்த்துக்கோங்க” என்றவனின் குரல் வெகுவாக கலங்கி ஒலித்தது.
“கவின்…” அவனது வருத்தம் வீரட்டிற்கு என்னவோ போலிருந்தது.
காணாமல் போயிருப்பது அவன் உடன்பிறந்த தங்கை. அவள் தொலைந்து போயிருப்பதாக தேவித் கூறுவதை அறிவியலில் இயற்பியல் ஆராய்ச்சியாளனான அவனாலே நம்புவது கடினமாக உள்ளது. தேவித் என்பவனுக்காக மட்டுமே, அந்த நம்பிக்கை. ஆனால் கவின்? தங்கையை விடுத்து, அவளின் நிலைபற்றிய நிலையான தகவல் எதுவும் அறியாது, இந்த நேரத்திலும் நண்பனின் நலன் குறித்து கவலைக்கொள்கிறான்.
கவினின் குரல் வைத்தே அங்கு யாரும் இயல்பாக இல்லை என்பதை புரிந்துகொண்ட கவினுக்கு தற்போது தேவித் இடத்திலிருந்து அவர்களை தேற்றுவது தன்னுடைய கடமையாக நினைத்துப் பேசினான்.
“தேவாவை மட்டும் நம்புங்க கவின். அவன் மேல உங்களுக்கு அதீத நம்பிக்கை இருக்குன்னு தெரியும். அந்த நம்பிக்கை எந்த சூழலிலும் குறையைக் கூடாதுங்கிறது தான் நான் சொல்லவரேன்” என்றான்.
“அவனைத் தவிர எங்களுக்கு வேறெதுவும் தெரியாது வீர். எங்க கண்ணு முன்ன இருக்க அவனுக்காவது எதுவும் ஆகக்கூடாதுங்கிறது தான் எங்களோட எண்ணம். ஏற்கனவே ருதிக்கு என்னாச்சுன்னு தெரியாம கலங்கிப் போயிருக்கவங்க, தேவா உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதுலேர்ந்து பிரம்மை பிடிச்ச மாதிரி நடமாடிட்டு இருக்காங்க” என்றவன் “தேவா எவ்வளவு பிசியா இருந்தாலும் தினமும் ஒருமுறையாவது எல்லார்கிட்டவும் பேச வச்சிடுங்க வீர்” என்றான். முற்றிலும் உடைந்துபோன குரல்.
“கவின்…”
“முடியல வீர்” என்ற கவின், “மதிக்கு நெக்ஸ்ட் வீக் டேட் சொல்லியிருக்காங்க. குழந்தை பிறந்ததும் நான் அங்க வந்திடுவேன்” என்ற கவினுக்கு தன் மகவை பார்ப்பதற்கு இங்கிருக்கமாட்டோம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பல எதிர்பாராத நிகழ்வுகளுக்கு பின்னர் தான் தன்னுடைய குழந்தையை கையிலேந்த இருக்கின்றான்.
“நின் வருகையில் தான் எம் மனம் கொண்ட குற்றவுணர்வு தணிய இருக்கின்றது நயனா. உம்மை ஆரத் தழுவிடும் ஒற்றை சந்தர்ப்பம் போதும். யான் இழைத்த பெரும் பிழை சீர்பெற்றிட உமது வருகை அவசியமாகிறது.”
ஆளுயர ஓவியத்தின் முன் நின்று பேசிக் கொண்டிருந்த மேகோன், தனக்கு பின்னால் ஒலித்த காலடி ஓசையில் கரத்தில் நீண்டு தொங்கும் வஸ்திரம் பரந்து விரிய தோரணையாகத் திரும்பினான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
25
+1
+1