அத்தியாயம் 28
தேவித் தன்னுடைய கனவு உண்மையாகி இருக்கு என்றதும், அவனின் கனவு, ஆசை, லட்சியம் எதுவென்று தெரிந்து வைத்திருக்கும் வீரட், கவினுக்கு பெரும் அதிர்வு.
“தேவா…?” அதிர்ச்சியும், கேள்வியுமாக வீரட் தேவித்தின் தோளில் கை வைத்திட,
“அம் சீரியஸ் வீர்” என்றான் தேவித்.
தேவித்தின் விழிகள் பரந்த வான்வெளியில் ஒற்றையாய் தனித்து ஒளிர்ந்த விண்மீனில் ஆழப் பதிந்தது.
“நீ டைம் டிராவல் மெஷின் ஃபெயிலியர் ஆச்சுன்னு தானே சொன்ன… அப்புறம் இதெப்படி?” என்ற கவின், “நீ எதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்க தேவா. முடியவே முடியாத ஒன்னு இது” என்றான்.
தற்போது கவினை நம்ப வைத்திட வேண்டுமென்ற அவசியம் தேவித்திற்கு. அவனால் அவனது நதிக்காக தனித்து போராட முடியும். ஆனால் காலத்தையே வளைத்து கைக்குள் அடக்குவது அத்தனை எளிதல்லவே. அவனுக்கும் துணை வேண்டும். தன்னை நம்பும் ஒரு துணை.
தன்னுடைய அலைபேசியை எடுத்து, தொல்லியல் மியூசியத்தில் எடுக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காணொளியை ஓடவிட்டான்.
முழுதாக பார்த்த கவின், வீரட்,
“இதிலென்ன இருக்கு?” என்று ஒன்றாக வினவினர்.
மகிழ் மேகோன் பற்றி தனக்குத் தெரிந்ததை மேலோட்டமாகக் கூறிய தேவித்,
“அவருடைய காலத்தைக் கடக்கும் ஆற்றல் மூலம் தான் நதி பாஸ்ட்டுக்கு டிராவல் ஆகியிருக்காள்” என்றான்.
“அதெப்படி?” கவினால் நம்புதல் என்பதை தாண்டி, தேவித் சொல்வதை ஏற்கவே முடியவில்லை.
“அங்க போனா தான் எப்படின்னு தெரியும்” என்ற தேவித், காணொளியில் ஒளி பரவி, நைருதி மறையும் கணம் காற்றில் வெண் படலமாக மின்னலாய் தெரிந்து மறைந்த எண்ணுருக்களை பாஸ் (pause) செய்து காண்பித்தான்.
“என்னதிது?” கேட்ட கவினுக்கு வீரட் பதில் கொடுத்தான்.
“லெவன்த் செஞ்சுரிக்கு முன்னர் வரை பயன்படுத்தப்பட்ட தமிழ் எண்ணுருக்கள்… அதாவது நெம்பர்ஸ்” என்றான்.
“அப்போ இது அப்போதைய டேட்டா?”, கவின்.
“எஸ்” என்ற தேவித், “அந்த காலத்துக்குப் போகணும்” என்றான்.
“ருதி ஏன் அங்க போகணும்? இப்பவும் என்னால் நம்ப முடியல. இது ஏதோ ஏ.ஐ கிரியேட் பண்ண வீடியோ மாதிரி இருக்கு” என்ற கவின், “அவ போயிட்டா சரி. நாம எப்படிடா அங்க போறது? அதெப்படி சாத்தியம்?” எனக் கேட்டான்.
“என்னால முடியும் நம்பிக்கை இருக்கு கவின்” என்ற தேவித், “என்னோட கணிப்பு சரிதானான்னும் எனக்குத் தெரியல. ஆனால், என்னோட இன்டியூஷன் எப்பவும் தப்பானது இல்லை” என்றான்.
“என்னென்னவோ சொல்ற. சத்தியமா எனக்கு புரியல. தலை வெடிக்குது” என்ற கவின், “இது உன்னோட அனுமானம் தானே?” என்றான்.
“இதுதான் உண்மைன்னு சொல்றேன்.” தேவித்தின் ஆழ் மனம் அவனுக்கிருக்கும் ஒரு சதவிகித சந்தேகத்தையும் தற்போது துடைதெறிந்தது.
“எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு” என்ற தேவித், அலைபேசியையே வெறித்திருந்தான்.
இதுவரை பலமுறை பார்த்தபோது அவனது கண்களுக்கு சிக்காத ஒன்று, ஓலையிலிருந்த தாலியும், நைருதியின் தாலியும் ஒன்றையொன்று நேர்கொண்டு சந்தித்த கணம், இரண்டிலிருந்தும் வெளிவந்த சுடரொளி இரு முனை ஒற்றை கதிராய் கவ்விப்பிடிக்க, சுழல் புள்ளியில் தொடர்ந்த பாதை நீள, நைருதி வளியின் கரம் பிடித்து கடந்த காலம் நோக்கிச் சென்றிருந்தாள். நிகழ் காலத்தில் தன்னுடைய தடமின்றி மறைந்திருந்தாள்.
இதில் தேவித்திற்கு புரிந்த ஒன்று,
நைருதி அங்கு செல்ல வேண்டுமென்பதால் தான் அனைத்தும், கனவு முதல், தாலி தொடர்ந்து, அவனது லட்சியம் வரை யாவும் எதோ ஒரு காரணத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறது.
புரியாத ஒன்று… ‘எதனால் நைருதி அங்கு செல்ல வேண்டும்?’
இருப்பினும் இதற்கு பின்னால் வலுவான காரண காரியமிருக்கும் என்று உறுதியாக நம்பினான்.
இக்கால அறிவியலை மட்டும் ஆராய்ந்து தன் பணியை மேற்கொண்டிருக்குமாயின் அவனும் தற்போதைய நிகழ்வை கவின் போல் நம்பியிருக்கமாட்டான். ஏன் அக்காட்சியை இவ்வளவு ஆராய்ந்து பார்த்திருக்கவும் மாட்டான்.
ஆனால் தேவித்… கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி என்ற தமிழர்களின் பண்டைய பாரம்பரிய முறையிலான இறையறிவியலையும் கற்றுத் தேர்ந்திருக்க… அறிவியலாலும் சாத்தியப்படாத பலவற்றை, இன்றைய நாகரிக அறிவியல் மூலம் உருவாகிய பல பொருட்களை, நிகழ்வுகளை அப்போதே நம்முடைய ஆதி தலைமுறையினர் கற்கருவிகளாகப் பயன்படுத்தி உள்ளனர் என்பதை தன்னுடைய ஆராய்ச்சிக்காக தேடித்தேடி படித்து அறிந்ததால் நம் முன்னோர்கள் கட்டமைத்து வைத்த இயற்கை தார்பரியத்தில் யாவும் சாத்தியமே… அசாத்தியமானவையும் சாத்தியமானவை என்று அத்தனை அழுத்தமாக நம்புகின்றான்.
இன்றைய அறிவியலின் பல நிகழ்வுகள், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம் தமிழரால் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான சான்றுகளாக இன்றும் நம் தமிழினத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல கல்வெட்டுக்கள், சிற்பங்கள், புத்தகங்கள் உள்ளன.
உலகம் உருண்டை என்பது கணித மற்றும் அறிவியல் வழியாக நம் விஞ்ஞானிகள் கண்டறிந்த விஷயத்தை, சங்க காலத்திலேயே தமிழன் கண்டறிந்திருந்தான்.
சங்க இலக்கியங்களில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான முதுமொழிக் காஞ்சியில், ‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்’ எனும் பாடலில் உலகம் உருண்டை(கோள வடிவம்) என்றும், திருக்குறளில் சுழன்றும் ஏர்பின்னது என்ற குறளின் வாயிலாக உலகம் உருண்டை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகைய சிறு சான்று போதுமே… அறிவியலில் சாத்தியப்படாத பலவற்றை சாத்தியமுள்ளதாக நம் இலக்கியங்களில் காட்டியிருப்பது உண்மை தன்மை வாய்ந்தவை என்று.
அந்நிலையில் மேகோன் கொண்ட ஆராய்ச்சியாகக் குறிப்பிடப்படும் காலம் கடந்த எதிர்கால பயணமும் உண்மையாகத்தானே இருக்கும் என்று தேவித்தினுள் எழுந்த வினாவே நம்ப முடியாதென்று ஒதுக்கி வைக்கும் பலவற்றை ஆழமாக நம்பச் செய்கிறது.
இருவருக்கும் விளக்கம் கொடுக்கும் நிலையில் அவனில்லை. விளக்கம் கொடுக்க நினைத்தால், முற்றுபெறாத விவாதமாகத்தான். உரையாடல்கள் நீளும். பெரும் சர்ச்சைக்குரிய ஆதாரமற்ற ஒன்றாக இருக்கும் போது, அவனால் எங்கனம் விளக்கம் கொடுத்திட முடியும்.
முகத்தினை இரு கரத்தால் அழுந்த தேய்த்து, இடைக்குற்றி நின்றான்.
“நான் சொல்றதுமேல இல்லாத நம்பிக்கை… என்மேல இருக்குல?” தேவித் கேட்க, “உன்னை நம்பாம” என்றான் கவின்.
“அப்போ நான் செய்யுற எதுக்கும் தடைசொல்லாம இரு” என்றான் தேவித்.
“ம்ம்…” என்று மேலும் கீழும் தலையை மெல்ல அசைத்தான் கவின்.
“நீயென்னடா பேசாம இருக்க?” தேவித் வீரட்டிடம் கேட்டான்.
“நீ ஜஸ்ட் தியரியா மூவ் பண்றேன்னு நினைச்சேன். பட், இவ்வளவு சீரியஸா, பிராக்டிக்கலா பண்ணிட்டு இருப்பன்னு நினைக்கல” என்றான்.
“உன்கிட்ட சொல்லாம செய்திட்டு இருக்கேன். கோவப்படுவ நினைச்சேன்” என்று தேவித் சொல்ல,
“நீ ரிசர்ச் அப்படின்னு தொடங்கும் போதே… எப்பவாவது பிரக்டிகலா பண்ண அப்ரூவல் கேட்பேன் நினைச்சேன். இப்படி இல்லீகலா… எக்ஸ்பெக்ட் பண்ணல” என்ற வீரட், “எனக்கு நீ முக்கியம். சோ, நான் எப்பவும் உன் பக்கம். உண்மை தன்மை இல்லாத ஒன்றின் மீது நீ கவனம் செலுத்தமாட்ட. அந்த நம்பிக்கை எனக்கிருக்கு” என்றான்.
ஏதோ ஓர் புள்ளி, தேவித்தை மட்டுமல்ல அவன் செய்யவிருக்கும் செயலையும் இருவரையும் நம்பிக்கைக்கொள்ள வைத்தது.
முன்பு அவன் மீது மட்டும் கொண்டிருந்த நம்பிக்கை, தற்போது அவனது செயல்கள் மீதும் விழுந்தது.
“வாட் நெக்ஸ்ட்?” என்ற வீரட்டை தொடர்ந்து, “ருதி அங்க பாதுகாப்பா இருப்பா தானே?” எனக் கேட்டான் கவின்.
அந்நொடி தேவித்தின் இதயம் ஒலித்தது. அழுந்த பற்றியவன், “கண்டிப்பா ரொம்பவே பத்திரமா இருப்பா” என்ற தேவித், கண்கள் மூடி திறந்தான்.
“நின் நேசம் எம்மை நன் மீதே பொறாமை கொள்ளச் செய்கிறது.” மீசை நுனி உராய்ந்து, கன்னம் ஊர்ந்தது மேகோனின் ஒற்றை விரல்.
“விம்பம் இரண்டாக உள்ளதே… யான் செய்வது யாதோ?” என்ற மேகோன், “நன் வரவை யாமே எதிர்நோக்குகிறோம்” என்று புன்னகைத்தான்.
அந்த புன்னகையின் சாயல் தேவித்தின் வதனத்தில் பிரதிபலித்தது. அவன் மனம் அவனது நதியை நினைத்திருந்தது. காதலாய்.
“எதோ ஒரு வழி கிடைச்சிருக்குதானே… பார்த்துக்கலாம். இப்படியே இருட்டுல நின்னுட்டு இருக்காம, போய் தூங்கு” என்ற கவின், “போலீஸ்கிட்ட ஏன் உண்மையை சொல்லல?” எனக் கேட்டான்.
“மேகோன்… இந்த பெயர் தெரிஞ்சதுக்கே, சோஷியல் மீடியால என்னலாம் கற்பனைகள் வலம் வருது பார்க்கிற தானே?” என்ற மேகோன், “நிஜம் உருவமடையும் வரை, பொய்க்கு சக்தி அதிகம்” என்றான்.
“ம்…” என்ற கவின், “டெல்லி வரட்டுமா நான்” என்றான்.
“மதியோட நீ இருக்க வேண்டாமா?” என்றான் தேவித்.
கவின் அமைதியாக நிற்க,
“எனக்கு எதும் வேணும் அப்படின்னா உன்கிட்ட தான் வருவேன்” என்ற தேவித்தை அணைத்து விடுத்து வீட்டிற்குள் சென்றான் கவின்.
“வாடா… உள்ள போலாம்” என்று தேவித் வீரட்டின் தோளில் கைப்போட,
“உன் உயிருக்கு மத்த கண்ட்ரி ரிசர்ச் சென்டர்ஸ் விலை வச்சிருக்குல?” என்றான் வீரட். கதிரேசன் அவனது ஆராய்ச்சிக் கட்டுரையை விலைப்பேசியதை வைத்து யூகித்திருந்தான்.
தேவித்திடம் வழக்கமான அமைதியான மென் புன்னகை.
“இப்படி ஸ்மைல் பண்ணா என்ன அர்த்தம் தேவா? உயிரை வச்சு ரிஸ்க் எடுக்கிற அளவுக்கு உன் ஆசை அதிகமா?” எனக் கேட்டான்.
“கவின் கேட்ட அதே கேள்வி… அப்போ எனக்கு என் கனவு பெருசா தெரிஞ்சுது. ஆமா சொன்னேன். ஆனால் இப்போ எனக்கு என் நதி பெருசா தெரியுறா. கண்டிப்பா இதை செய்தே ஆகணும். என் நதியை இப்போ இந்த செக் பார்க்கணும்… என் ஹார்ட் பீட் ரைஸ் ஆகுது வீர். பட் அவளை என்னால் பார்க்க முடியாது. பார்க்க முடியாத தூரம்… தூரம் அப்படின்னு சொல்லமுடியாத இடத்துக்கு போயிருக்காள். அவளை பார்க்க, அவகிட்ட பேச, திரும்ப இங்க கூட்டிடுவர நான் அங்க போகணும் வீர்” என்றான்.
வீரட் தேவித்தின் கையில் அழுத்தம் கொடுத்தான்.
“பாஸ்ட் ஓகே… இயர் என்னன்னு தெரியுமா?” வீரட் கேட்க,
“மேகோன் ஆட்சிக்காலம்.”
“அவரே யாருன்னு தெரியல… இதுல அவர் ஆட்சிக்காலம் எப்படிடா தெரியும்?”
தேவித்திற்கும் அக்கேள்வி உள்ளது.
மேகோனைப் பற்றி அவன் அறிந்த வரையில் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் அவன். ஆனால் எதிலிருந்து எதுவரை என்பது தெரியாது. காணொளியில் காட்டப்படும் கால எண்ணுருக்கள் குறிப்பிடப்படுவது அக்காலத்தை தானா என்பதை இனிதான் தேடிப் பார்க்க வேண்டும்.
நிச்சயம் நைருதி, மேகோன் காலத்திற்குத்தான் சென்றிருக்கிறாள் என்பது, மேகோன் மட்டுமே எதிர்காலம் நோக்கி பயணம் செய்யும் ஆற்றல் உடையவர் என்பதாலே… அதுமட்டுமில்லாது அவரைப்பற்றிய குறிப்பிலிருந்து வெளிவந்த ஒளி அதன் சுழலுக்குள் நைருதியை இட்டுச் சென்றதாலே… மேகோன் பற்றிய பேச்சுக்கள் தங்கள் இருவருக்குள் ஆழமாக இருந்ததாலே… ஒரு அனுமானத்தில் கணித்திருந்தான்.
மீண்டும் காணொளியை ஓட்டிப் பார்த்து… அதில் தெரியும் எண்களை கவனமாகக் கூர்ந்து நோக்கியவன்,
“ஏடி 817” என்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
23
+1
1
+1