Loading

மெல்லினம் 26:

அந்த மினி டெம்போவில், காதுகுத்திற்கு தேவையான பொருட்கள் எல்லாம் ஏற்றப்பட, அதனை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

சொந்தபந்தங்களை எல்லாம் வேனில் அழைத்து செல்வதாக தான் ஏற்பாடு.

ஆக, கதிரின் வீடு சொந்தங்களால் நிறைந்து வழிந்தது.

இத்தனைக்கும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இங்கு கோவையில். ஞானத்தின் உறவுகள் எல்லாம், அவர்கள் ஊரில் இருக்க அவர்களுக்கு எல்லாம் தனி வேன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோபலாசுவாமியின் மொத்த உறவுகளும், அவர்களின் கிராமமான திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் இருக்க, அங்கே தான் இவர்களும் செல்வதால் பிரச்சனை இல்லை. இல்லையென்றால் தந்தை வழி உறவுகளுக்கு நான்கு பெரிய வேன் பிடிக்க வேண்டும்.

வீடு உறவினர்களால் நிறைந்திருந்ததால் வேலை பெண்டு கழட்டது அனைவருக்கும். ஒருவர் கூட அக்கடாவென ஐந்து நிமிடம் உட்கார முடியவில்லை, தேடி கொண்டு வந்து விடுவர் அது வேண்டும் இது வேண்டும் என.

அதிலும் முல்லை இல்லாவிட்டால் அவ்வளவு தான் “எங்க கதிரு பொண்டாட்டிய காணோம். மொத இருந்தவ தான் சொந்தத்தோட ஒட்ட மாட்டான்னு பாத்தா, இவளும் அப்புடி தான் போலயே” என வந்த நேரமே முல்லை கீழே இல்லாததை பார்த்து, பேச ஆரம்பித்து விட அவ்வளவு தான், அதன் பிறகு முல்லை கீழே இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

இப்படி இருக்கையில் முல்லைக்கு கதிரை பற்றி சிந்திக்க அவகாசம் கொடுக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.

அத்வியை கவனித்து கொண்டு கிளப்பியது எல்லாம் கதிரே. அவனிற்கு தெரியும், வந்திருக்கும் உறவுகளை பற்றி. நல்ல நாளில் சண்டை வேண்டாம் என நினைத்தவன், அவள் கீழயே இருக்கட்டும் என கூறிவிட்டான்.

டெம்போவில் பொருட்களை ஏற்றிய கையோடு உறவினர்களையும் வேனில் ஏற சொல்ல, ஒரு வேனில் வம்பு பிடித்த ஆட்களை எல்லாம் ஏற்றி விட்ட கதிர், பிரகாஷ், சுரபி மற்றும் அவனின் அப்பா அம்மாவையும் அதில் ஏறி கொள்ள சொல்லி விட்டு குழந்தைகளை தன்னுடன் அழைத்து கொண்டான்.

அவனிற்கு தெரியும் உறவுகள் ஸ்ருதியின் முன்னிலையில், அவ்வளவு தைரியமாக வாயை திறந்து விடமாட்டார்கள் என.

இன்னொரு வேனில் மீதியிருந்த ஆட்கள் ஏறி கொள்ள‌ கூட ராகேஷ், சீதா, முல்லை, குழந்தைகள் மற்றும் கதிரும் ஏறி கொண்டனர்.

முல்லையின் பெற்றோர் நாளை வருவதாக சொல்லி விட்டனர்.

கதிர் தன்னருகே தான் வந்து அமருவான் என்பதை உணர்ந்த முல்லை, உஷாராக ரேஷ்மியை அழைத்து ஜன்னல் சீட்டின் அருகே வைத்து கொண்டாள்.

மற்ற மூன்று குழந்தைகளும் முன்னால் ராகேஷிடம் இருந்தனர்.

“ஓய், என்ன இங்க உட்கார்ந்திருக்க எனக்கு இடம் வேண்டாமா ரேஷீ” என அவன் கேட்க,

“நோ, சித்தப்பா நீங்க வேற சீட் உட்காருங்க. நான் தான் சித்தி பக்கத்துல உட்காருவேன். எனக்கு கதை எல்லாம் சொல்லுவாங்க, நா எந்திரிக்கமாட்டேன்” என அவள் முகத்தை தூக்க,

“ப்ச் அவளை ஏன் வம்பு இழுக்குறீங்க உங்களுக்கு இடமா இல்லை” என முல்லை கேட்க,

அவளை உற்று பார்த்தவன் “எங்களுக்கும் அது தெரியும்…” என்றவன், ரேஷ்மியிடம் “ரேஷீ குட்டி என்ன இப்போ உனக்கு சித்தி கிட்ட தான் உட்காரணும், சித்தி மடியிலே உன்னை உட்கார வைக்கிறேன்” என பேசி கொண்டிருந்தவன் சட்டென ரேஷ்மியை தூக்கி, முல்லையின் மடியினில் அமர வைத்தவன், முல்லையை ஜன்னல் அருகே இடித்து தள்ளி விட்டு தான் அமர்ந்து கொண்டான்.

‘அன்று ஏற்காட்டில் இவளை தனியாக படுக்க விட்டதோடு சரி, அதன் பிறகு தெரிந்தோ தெரியாமலேயோ, முல்லையின் விலகலை அவனே அறியாது முறியடித்து கொண்டிருந்தான். இதோ இப்போது போல’

அவனின் செயலில் திடுக்கிட்டவள் ரேஷ்மியை விழாமல் பிடித்து கொண்டவள் அவளை முறைத்து பார்க்க,

“என்ன முறைப்பு? நீ சொன்னா நான் கேட்டுடுவேனா??”

“அப்போ கேட்க மாட்டீங்களா???”

“கேட்பேனே! ஆனா எப்போ தெரியுமா? நீ சொல்றது எனக்கு சாதகமாக இருந்தா மட்டும் தான். எனக்கு பாதகமாக இருந்தா கேட்க மாட்டேன்” என அவன் சிலுப்பிக் கொள்ள,

‘என்னருகில் இவன் உட்கார முடியவில்லை என்றால் அது பாதகமாமே’ என நினைத்தவளிற்கு கன்னங்கள் சூடாக, அதற்கு நேர்மாறாக அவளின் இடுப்பு பகுதிகளில் சில்லென்று உணர என்னவென்று பார்த்தவள் அதிர்ந்து கதிரை பார்த்தாள்.

 ஏனெனில் கதிரின் கைகள் அவள் பின் சென்று புடவையினுள் நுழைந்து, அவள் இடுப்பு பகுதிகளில் அழுந்த படிந்திருந்தன.

இவளின் பார்வையை கண்டு கைகளை அழுந்த பதித்து ஒரே இழுவையில் அவளை தன்னிடம் இழுத்து நெருங்கி அமர வைத்தவன்,

“ரொம்ப சூடா இருக்கப் போலயே” என கிசுகிசுத்தவன் அவளின் வயிற்றை மெல்ல வருட,

குழந்தையை வைத்து கொண்டு என்ன வேலை செய்கிறான், இவன்! என முல்லைக்கு தான் தவிப்பு கூடியது.

“ப்ச் என்ன கதிர், ஒழுங்கா கைய எடுங்க” என மிரட்டியவள் ரேஷ்மி அறியாதவாறு அவன் கைகளை பிரிக்க முயல,

“ச்ச்சு வேஸ்ட்டு முல்லை, டிரை பண்ணாத நானா எடுத்தா தான் உண்டு. பட் இப்போதைக்கு அந்த எண்ணம் எனக்கு இல்லை” என்றவன் ரேஷ்மியிடம் கதைக்க,

முயன்று பார்த்தவள் ஒரு கட்டத்தில் “ச்சீ போ” என விட்டு விட்டாள். அவனின் அருகாமையை அனுபவிக்க முடியாமல் நெருஞ்சி முள்ளாய் அவள் மனதில் அன்று இரவு நடந்தவையே நெருடி கொண்டிருந்தது.

கிட்ட தட்ட மூன்று மணி நேர பயணம்!

கோபலசுவாமி வீடு இருந்த தெருவினில் வேன் நுழைய, ஸ்பீக்கர் சவுண்ட் காதை கிழிந்தது. அவரின் உறவினர்கள் எல்லாவற்றையும் பக்காவாக ஏற்பாடு செய்திருந்தனர்.

வீட்டின் முன் வேன் நின்ற நொடி “கதிர் அண்ணே….கதிர் மாமா…கதிர் மச்சான்” என இளவட்டங்களில் ஆரம்பித்து திருமணம் முடித்த ஆண்கள் வரை, அவனை கத்தி அழைத்து ரகளை செய்ய,

“அடேய் இருக்குடா வர்றேன்” என்றவன் முல்லையிடம் திரும்பி “சீதா அண்ணியோடவே இறங்கு” என வேகமாக கூறியவன் சீதாவிடமும் கண்காட்டி விட்டு கீழிறங்க,

அவனை தரையில் கால் வைக்க கூட விடாது, அனைவரும் சேர்த்து அவனை துக்கியவர்கள் வீட்டிற்குள் நுழையாது, பக்கத்தில் சாமியான பந்தல் போட்டிருந்த இடத்தில் இறங்கி விட,

“அடேய் அராஜகம் பண்றீங்கடா என் பொண்டாட்டி புள்ளைங்க என்ன தேடுவாங்க, விடுங்கடா அயோக்கிய ராஸ்கல்களா! ஏதோ அரிசி மூட்டைய தூக்குற மாதிரி என்னைய தூக்கிட்டு வரீங்க” என அவன் சண்டைக்கு நிற்க,

“பாருடா…பொங்குறத!! அப்புடி எல்லாம் விட முடியாது.முறையின்னு ஒண்ணு இருக்குல. இப்போ என்ன அண்ணியும் பையனும் வேணும், அவ்வளவு தான! டேய் பசங்களா போய் அண்ணணோட ப்ராப்பர்ட்டிய தூக்கினு வாங்கடா” என இளம் வயதுள்ளவன் துள்ள,

அடுத்த நொடி இளவட்டங்கள் முல்லையை நோக்கி படையெடுத்தனர்.

“டேய்…டேய்…நில்லுங்கடா, அப்புடி எல்லாம் செஞ்சுறாதீங்கடா அவ பயந்துடுவா ” என இங்கிருந்தே அவன் எகிற அவனை பிடித்து அடக்கினர்.

கதிருக்கு சற்றே பயமாக இருந்தது முல்லையை நினைத்து. இவர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டத்திலும் மகிழ்ச்சியிலும் செய்கின்றனரே தவிர, அவர்களின் செய்கையில் துளி கூட விஷமமோ கபடமோ இல்லை. இது எல்லாம் அவர்களின் அன்பின் வெளிப்பாடு.

ஏன் சீதாவை கூட பல முறை “அண்ணி” என அழைத்து தூக்கியிருக்கின்றனர் இந்த இளவட்டங்கள்.

இருக்கின்ற‌‌ கூட்டத்தில் தொலைந்து விடாது இருக்க, சீதாவின்‌ பின்னே வால்பிடித்து இறங்கி நின்றிருந்தவளிடம் “அண்ணி வாங்க!! டேய் தூங்குகடா” என்றவாறு அவர்கள் நெருங்க அரண்டு விட்டாள் முல்லை.

அவளின் பயத்தை உணர்ந்த சீதா,

“டேய், அடங்குடா! அவ பயத்துல இருக்கா வந்த மொத நாளே அரண்டு ஓட வச்சுடாதீங்க. தோ அங்க இருக்கான்‌ பாரு, உங்க அண்ணன் பெத்த சிங்கம் போய் அவனை தூங்குகடா” என அவள் அத்வியை கைகாட்ட அவர்களை நோக்கி நகர்ந்தது படை.

சில குறும்புகார அரும்பு மீசைகள்,

“என்ன‌ நடு அண்ணி? சின்ன அண்ணி தான் வரலை நீங்க ரெடியா…” என அவளை தூக்க செல்ல,

பதறி அடித்து ஓடி வந்த ராகேஷ் “டேய் டேய், அவ என் ப்ராப்பர்ட்டி டா! அந்த ப்ராப்பர்ட்டிகுள்ள என்னோட குட்டி ப்ராப்பர்ட்டி இருக்குடா, அவளை விடுங்கடா அடுத்த வருஷம் என் மகன் வந்துடுவான்டா, நீங்க தூக்குறதுக்கு” என அவன் சீதா கர்ப்பமாக இருப்பதை கூறிவிட கொண்டாட்டாம் இரட்டிப்பானது அங்கே.

நேற்று தான் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

“அடுத்த வருஷம் உங்க பையன் வரட்டும் இப்போ உங்க பொண்னை குடுங்க” என்றவாறு முல்லை கையில் இருந்த ரேஷ்மியை தூக்க தாவி கொண்டு சென்றாள்.

அப்போது தான் முல்லை அத்வியை தேட, பிரகாஷிடம் அவன் இருக்க இளவட்டங்கள் எல்லாம், அவனிடம் கெஞ்சாத குறையாக தூக்க முயற்சிக்க முகத்தை திருப்பி கொண்டான் அவன்.

“அடேய் சில்வண்டு, உன் கதிர் அப்பா அங்கதாண்டா இருக்காரு” என ஒருவன் கூற,

கதிர் என்ற பெயரில் அவர்களை பார்த்தவன், உண்மையா என்பது போல் பிராகாஷை பார்க்க, அவன் ஆமாம் என‌ தலையசைத்த நொடி அவர்களிடம் தாவியவன், “அங்கி….கதி..அங்கிட்ட” என கதிர் இருந்த திசையை காட்ட, அவன் அழைப்பு அங்கிருந்தவர்களின் காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளவில்லை.

முல்லைக்கு கதிர் என்ன செய்ய போகிறான், என பார்க்க ஆர்வமாக இருக்க, சீதா அதனையறிந்து அவளை அங்கே அழைத்து சென்றாள்.

கதிரை நடுவில் விட்டு அனைவரும் சுற்றி நிற்க, அதுவரை டக்கின் செய்த உடையில் இருந்தவன் முதல் இரண்டு பட்டன்களையும் அவிழ்த்து, காலரை பின் தள்ளி விட்டிருந்தான்.

 முழுங்கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டு வாயில் கர்சீப்பை கடித்தப்படி நின்றிருக்க,

அடுத்த நொடி,

“அய்யா

ராசா

அவாஸ் உடாத நவாஸ்

தொறடு நோவுதுடா

இதோ வண்டேன்பா!!!”

கடிச்சிக்கினு

ஊத்திக்கினு கடிச்சுக்க வா

கடிச்சிக்கினு ஊத்திக்க வா

போத்திக்கினு படுத்துகலாம்

படுத்துக்கினனும் போத்திக்கலாம்… என்ற குத்து பாடலை போட்டு விட 

இறங்கி குத்தி ஆடியிருந்தான் கதிர்.

காத்தடிக்குது காத்தடிக்குது

காசிமேட்டுக் காத்தடிக்குது

காத்தடிக்குது காத்தடிக்குது

காசிமேட்டுக் காத்தடிக்குது

எங்க திசை பாத்தடிக்குது

ஏழை சனம் கூத்தடிக்குது

ஊத்திக்கினு கடிச்சுக்க வா

கடிச்சிக்கினு ஊத்திக்க வா

போத்திக்கினு படுத்துக்கலாம்

படுத்துக்கினும் போத்திக்கலாம்!!!!

ஏ… வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு

பகலப் போல வெளிச்சம் பாரு

டல்லான ரோட்டு மேல

டாலடிக்கும் ஊடு பாரு

ஊட்டு மேல பல்ப்ப பாரு

பல்பு காட்டும் கலர பாரு

கண்ணு கூசும் காட்சி பாரு

காசு செய்யும் வேல பாரு

கட்டு கட்டா நோட்டடிச்சா

கரண்டு பில்லு கட்டுறாரு

கட்டு கட்டா நோட்டடிச்சா

கரண்டு பில்லு கட்டுறாரு

ஊத்திக்கினு கடிச்சுக்கவா

கடிச்சுக்குனு ஊத்திக்கவா

போத்திக்கினு படுத்து கலாம்

படுத்துக்கினும் போத்திக்கலாம்!!!!”

பாடல் வரிகளை பாடி கொண்டே அதற்கேற்றவாறு, வாயில் கடித்த கர்சீப்புடன் கச்சிதமாக நடன அசைவுகளை போட்டு அவன் ஆட‌, சுற்றியிருந்த கூட்டம் அனைத்துமே அவனை பின்பற்றிட, அங்கே மகிழ்ச்சியில் ஒரு‌ களபரமே நடந்து கொண்டிருந்தது.

இடையில் அத்வி கதிரை தூக்க சொல்லி அவன் தோள்களில் அமர்ந்து கொள்ள, கதிரின் ஆட்டத்தினையும் சுற்றி இருந்தவர்களின் மகிழ்ச்சியினையும் கண்டு குஷியாகியவன், கதிர் வாயில் கர்சீப்பை வைத்திருந்தது போல், முல்லை அவன் சட்டை மேல் குத்தி விட்டிருந்த ஸ்பைடர் மேன் கர்சீப்பினை, அவனும் வாயில் கடித்து கொண்டு அவனிற்கு தெரிந்த வகையில் குதித்து குதித்து கைகால்களை அசைத்து ஆட, மொத்த கூட்டமும் அவனின் ஆட்டத்தில் இன்னமும் மகிழ்ந்தே சுருதியை ஏற்றியிருந்தது.

அனைவரும் இது இயல்பு தான், என்பது போல் சிலர் வீட்டினுள் சென்றிருக்க, கதிரின் இந்த புதிய பரிணாமத்தை கண்ட முல்லை தான் திகைத்து “ஆ..” வென நின்றிருந்தாள்.

அவளால் ஆடி கொண்டிருப்பது கதிரா??என நம்ப முடியவில்லை..

அத்தனை சந்தோஷமும் சிரிப்பும் அவன் முகத்தில். உள்ளத்து மகிழ்ச்சியினை அப்படியே முகத்தில் காட்டி அவன் ஆட முகம் பளிச்சென்று டியூப்லைட்டை போல் மின்னியது.

அவனின் இந்த நொடியை இந்த முகத்தை மிகவும் ரசித்தவள் தனது மனபெட்டகத்துல் சேமித்ததோடு தன் அலைப்பேசியிலும் அவனை சேமிக்க,

அதனை பார்த்த கதிர் அலைப்பேசி வழியாக அவளை பார்த்து கண்ணடித்து

குறும்புடன் சிரிக்க சுற்றியிருந்த கூட்டமும் “ஹோ…ஹோ..” என ஆரவரமிட,

அவனின் சேட்டையில் முகம் சிவந்தவள் விடாது அவனை காணொலியாக்கினாள் தன் அகத்திலும், அலைப்பேசியிலும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 27

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
33
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அய்யோ சோ ஸ்வீட். கதிர் நீ மட்டும் ஆடுனா எப்படி? முல்லையும் கூட சேர்த்துக்கிட்டு ஆடு. 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰