Loading

மெல்லினம் 24:

இருவருக்குமான முதல் ஊடல், முதல் கோபம்.

பெரியதாக வெடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த சண்டையை, தன் பேச்சினால் புஸ்வனாமாக்கி விட்டான் கதிர்.

முல்லையின் சீரான மூச்சு சத்தத்தில், அவள் உறங்கி விட்டதை உறுதி செய்த கதிர், அவள் கழுத்தில் இருந்து தனது முகத்தை எடுத்தவன், அவளை பார்க்க ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் பெண்ணவள்.

அழகிய முழு நிலாப் பெண் தான், அவள் உறங்குகையில். 

உறங்கும் அவளை பார்த்திருந்தவனின் இதழ்களில் அழகிய புன்னகை. அவளை காணும் நேரம் எல்லாம், ம்ஹீம்! இல்லை அவளை கண்ட நாள் முதலாய் அவனிடம் ஒட்டி கொள்ளும் வசீகர புன்னகை.

மென்மையான‌ அவள் கன்னத்தை வருடி விட்டவன், எட்டி அத்வியை பார்க்க நிலாவின் அழகிய‌ நட்சத்திரமாய் உறங்கியிருந்தான்.

அவனின் கன்னத்தினையும் வருடி விட்டவன், இருவர் கன்னத்திலும் ஆழ்ந்த இதழ்களை பதித்து முத்தமிட்டவனிற்கு, முல்லையிடம் மேலும் புதைய மனம் அழைப்பு விடுக்க,

“டேய் அடங்குடா‌, இப்போ தான் கொஞ்சமே கொஞ்சம் அவ மனசு உன்னை ஏத்துக்க ஆரம்பிச்சுருக்கு. அதுக்குள்ள ஏதாவது நீ ஏடாகூடாம பண்ணி வச்சிடாதா” என தனக்கு தானே கட்டளை விதித்தவன்,

“சீக்கிரமே என்னை முழுசா ஏத்துக்க முல்லை, ஆல்ரெடி உன் மனசுல நான் வந்துட்டேன்.அதை இன்னமும் உணராம சுத்திட்டு இருக்கியே டி மக்கு முல்லை.” என செல்லமாக அவளுக்கு கடிந்தவன், லேசாக அவள் தலையில் வலிக்காதவாறு குட்டி, பின் அவ்விடத்தில் ஆழ்ந்த முத்தத்தினை பதித்தான்.

மேஜையில் வைத்திருந்த அவனின் கைப்பேசி வைப்ரேட்டாக, அழுங்காது முல்லையை தன் கைவளைவில் இருந்து தள்ளி படுக்க வைத்தவன், மொபைலை எடுத்துப் பார்க்க, கிட்டத்தட்ட ஆறு தவறிய அழைப்புகள் பிரகாஷிடம் இருந்து வந்திருந்தது.

‘என்ன இந்த நேரத்துல இவன் கூப்புட்டுருக்கான்.’ என யோசித்தவன், போனை‌ எடுத்து கொண்டு அந்த ஹோட்டலில் இருந்த நீச்சல் குளத்தின் அருகே சென்றவன், பிரகாஷிற்கு அழைப்பு விடுத்தான்.

“சொல்லு பிரகாஷ்”

“………………….”

“ம்ம்ம போன் சைலண்ட்ல இருந்துச்சு கவனிக்கல எதுவும் முக்கியமான விஷயமா??”

“…………………..”

“யா ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க. டயர்டல தூங்குறாங்க”

“…………………”

“ம்ம்ம் தூங்கணும் அதுக்குள்ள உன் போன் வந்துச்சு. சரி அங்க எல்லாரும்‌ நல்லா இருக்காங்களா??”

“………………….”

“மே பி இன்னும் ஒரு நாள் இல்லையின்னா, ரெண்டு நாள் ஆகலாம் வர்றதுக்கு”

“…………………”

“இல்லை பிரகாஷ், நான் போக முடியாது. அத்வி முல்லைக்கு ஸ்கூல்ல லீவு சொல்லனும். அவுங்கள விட்டுட்டு நா மட்டும் போக முடியாது. ராகேஷ் போகட்டும், ரேஷ்மிய நம்ம பாத்துக்கலாம். முல்லை இருக்காளே, அண்ணி அவன் கூட போகட்டும் மூணு நாள் தான சமாளிச்சுக்கலாம்”

“…..……………….”

“ம்ம்ம சரி நான் பாத்துக்கிறேன். நீயும் உடம்ப பாத்துக்க பாய் வைக்கிறேன்” என பேசி முடித்துவிட்டு, அந்த இரவு நேரத்தில் நீச்சல் குளத்தின் ஈரக்காற்று வீச, அழகான தோட்டத்தின் நடுவே நின்று, மெல்லிய குளிர் காற்றை சுவாசிப்பது இதமாக தான் இருந்தது மனநிலை.

பிரகாஷை நினைக்கையில் புன்முறுவல் தான் கதிரிடம். ஸ்ருதியையும் விட்டு கொடுக்காது, குடும்பத்தையும் விட்டு கொடுக்காது அழகாய் இதுவரை சமாளிப்பவன்.

ஸ்ருதியை நினைக்கையில் அடக்கப்பட்ட சிரிப்பு இவனிடம். ஸ்ருதி அவ்வளவு ஒன்றும் வில்லி இல்லை.‌சுரபியுடன் வாழாமல் போனதால், மட்டுமே அவளிற்கு இவன் மீதுள்ள கோபம். சுரபியின் நம்பிக்கை துரோகம் எதுவும் அவளின் குடும்பத்திற்கு தெரியாது. தெரியவும் அவன் விடவில்லை!

சுரபியின் உண்மை தெரிந்தால், நிச்சயம் ஸ்ருதி கதிரின் பக்கமே வருவாள். அந்த அளவிற்கு நேர்மையானவள் தான்.

ஆனால் கதிர் தான், சுரபிக்கு ஆதரவாக அவள் குடும்பம் மட்டுமாவது கடைசியில் இருக்கட்டுமே, என நினைத்து அனைவரிடமும் இருந்து அதனை மறைத்து வைத்து விட்டான்.

எனவே, தான் ஸ்ருதியின் கோபத்தினை அவன் கணக்கில் எடுக்காது, அவன் பேச்சினால் அவளை தெறிக்க விடுகிறான். இன்னொன்று ஸ்ருதியிடம் சண்டை பிடித்து, அவளை வம்புக்கு இழுப்பது கதிருக்கு சுவாரசியமாக இருக்க, அதனை மாற்ற அவனும் முயற்சிக்கவில்லை.

“என்ன ரொம்ப சந்தோஷமா இருக்கப் போல” என்ற குரல் அந்த அமைதியை கிழித்து கொண்டு வந்ததும், சட்டென அதிர்ந்தவன் திரும்பி பார்க்க சுரபி.

தூக்கம் வராமல் பால்கனியில் உலாத்தி கொண்டிருந்தவள். கீழே தோட்டத்தில் கதிரை கண்டதும், வேறு எது பற்றியும் யோசிக்காது அவனை தேடி வந்து விட்டிருந்தாள்.

“ச்சைக் நீதான??” என்ற பேச்சுடன் கதிர் திரும்பி கொள்ள,

அவனின் அலட்சியத்தில் வெகுண்டவள்,

“பின்ன உன் ஆசை ரெண்டாவது பொண்டாட்டிய எதிர்பாத்தியோ??” என அவளும் பதிலுக்கு வாயாட,

நீ எல்லாம் ஒரு ஆளா என்ற நினைப்பில் கதிர் பதில் கூறாது நிற்க,

“உன் ரெண்டாவது பொண்டாட்டி பொறந்த நாளை பயங்கரமா கொண்டாடியிருக்க போலிருக்கே அவ்ளோ லவ்வா??” என நக்கலாக கேட்க,

அவளை ஒரு பார்வை பார்த்தவன் அங்கிருந்து நகர போக,

சட்டென்று அவனின் வழியை மறைத்தவள், “என்ன? என்ன எங்க போற நா பேசிட்டு இருக்கேன்ல. உன் ரெண்டாவது பொண்டாட்டிய பத்தி பேசுனதும் பொறுக்கலையோ” என்க,

இவள் என்ன லூசா, என்பது போல் பார்த்தவன் அப்போதும் அமைதியாக பிரச்சனை வேண்டாம், என எண்ணி அவளை சுற்றி கொண்டு நகர போக,

பட்டென அவனின் கைகளை பற்றி நிறுத்தியிருந்தாள் சுரபி.

அவள் அவன் கைகளை பற்றியது மட்டும் தான் தெரியும் அடுத்த நொடி கீழே தரையில் விழுந்திருந்தாள். ஒரே உதறலில் அவளை தள்ளி விட்டிருந்தான் கதிர்.

“அறைச்சேன்னு வையி, ராஸ்கல்! யாரு கைய பிடிக்கிற. ச்சீ, எவ்வளவு தைரியம் இருந்த என்ன தொடுவ? என்ன இதுக்கு முன்னாடி வாங்குன அறை எல்லாம் மறந்து போச்சா?? முல்லை மேலயே உன் கை பட கூடாதுன்னு நெனைக்கிறவன் நான்!! என்னை தொடுவியா நீ? அதுக்கான அருகதை துளி கூட இல்லை உனக்கு!! பேசாம போயிடு எப்பவும் இப்புடியே சாஃப்ட்டா பேசிட்டு இருக்க மாட்டேன்.

என்ன வார்த்தைக்கு வார்த்தை ரெண்டாவது பொண்டாட்டின்னு சொல்லுற? என்னை கல்யாணம் பண்ணது வேணும்னா அவ ரெண்டாவதா இருக்கலாம், ஆனா என் மனசளவுல அவ தான் எனக்கு மொத பொண்டாட்டி உனக்கு தெரியாதா என்ன?? என அவளை எச்சரித்தவன் திரும்ப,

“நான், நான் தொடகூடாதா? அப்போ அந்த முல்லை மட்டும் உன்னை கட்டி பிடிக்கலாம் அவளுக்கு அந்த அருகதை இருக்கா…??” என அவள் கத்த,

“ச்சீ, உன் வாயல என் பொண்டாட்டி பேரை கூட சொல்லாத, அதுக்கான தகுதி உனக்கு கொஞ்சம் கூட இல்லை. அவ என் பொண்டாட்டி! இந்த கதிரோட பொண்டாட்டி! அவளோட உரிமை நான்! என்ன என்னவும் செய்ய அவளுக்கு உரிமை இருக்கு”

“ஓஹோ, அவ இப்போ தான் உன் பொண்டாட்டி. அதுக்கு முன்னை நான் தான உனக்கு பொண்டாட்டியா இருந்தேன்.‌ அப்போ மட்டும் உன்னை நெருங்க விட்டியா நீ? ஒரு மனுஷியவாது என்னை மதிச்சியாடா நீ,

எவ்வளவு ஆசை ஆசையா உன்னை நான் கல்யாணம் பண்ணேன். ஒவ்வொரு நாளும் என்னை நீ இப்போ ஏத்துப்ப, அப்போ ஏத்துப்பன்னு, ஏங்கிட்டு இருந்தேன் தெரியுமா???அதை எல்லாம் சுக்கு நூறா‌ நீ உடைச்சுட்ட,

நான் நெனைச்சு எதுவுமே நடக்கல” என அவள் ஆவேசத்தில் கத்த,

“இது எல்லாம் நீயா தான தேடிக்கிட்டது. உன்னை கல்யாணம் பண்ண முன்னாடியே நான் சொன்னேனா இல்லையா? எனக்கு இதுல இஷ்டம் இல்லை, கட்டாயப்படுத்தி என்னை‌ உன்னோட வாழ வைக்க முடியாதுன்னு” என கதிர் இறுகிய குரலில் கேட்க,

“ஆமா சொன்ன, சின்ன வயசுல எவ்ளோ ஒருத்தியை லவ் பண்ணேன். இன்னமும் பண்ணுறேன்னு சொல்லி, இந்த கல்யாணம் வேண்டாம் சொன்ன, ஆனா எனக்கு உன்னை பிடிச்சிருந்ததே. உன்னை விரும்புனனே, உன்னை விட முடியாம தான் சரி கல்யாணம் பண்ணிட்டா, எப்படியாவது உன்னை என் கூட வாழ வச்சிரலாம்ன்ற நம்பிக்கையில் தான், சூசைட் அட்டம்ட் பண்ணி அதை வச்சு உன்னை லாக் பண்ணி கல்யாணமும் பண்ணேன்.

கல்யாணம் ஆன நாளுல இருந்து, என்னை நெருங்க விட்டியா நீ? நானும் எத்தனையோ வழில முயற்சி செஞ்சுதான பார்த்தேன் நீ எதுக்குமே மசியலை”

“ஓ, அதுனால தான் ஹரிஷோட பழகி ரெண்டு தடவையும் அபார்ட் பண்ணியோ? இதுவல்லவா காதல், நீ என் மேல் வச்சியிருந்ததா சொன்ன காதல்” என அவன் குறி பார்த்து அடிக்க,

“பின்னே, நீ என்கூட வாழ மாட்டேன்னு தெரிஞ்சுப்பறமும் நான் உன்னையே நெனைச்சு கிட்டு இருக்க முட்டாள் இல்லையே? எனக்கான லைப்ப நான் ஹரிஷோட அமைச்சுக்கிட்டேன். இதுல என்ன தப்பு, ஒத்து வராதுன்னு தெரிஞ்சப்பறமும் உன்னை தொங்கிட்டு கெஞ்சிட்டு இருக்க சொல்லுறியா??”என அவள் எகத்தாளமாக கேட்க,

“இந்த டேஷ்ஷை தான, நான் முன்னாடியே சொன்னேன். எனக்கு இஷ்டம் இல்லை வேற ஒருத்தனை பாத்து கல்யாணம் பண்ணிக்கோன்னு. இப்போ என்னமோ நல்லவளாட்டாம் வந்து என்னை தப்பு சொல்ற, அதான் புடிச்சியே கல்யாணமாகி குழந்தை இருக்குற ஒருத்தனை, ச்சீ…அதுக்கு பேரு காதல் இல்லை இல்லீகல் ரிலேஷன்சிப்”என கதிர் கூற,

“நீ மட்டும் ஒழுங்கா? நீயும் இப்போ அந்த முல்லையதான கல்யாணம் பண்ணிருக்க. கல்யாணம் ஆகி குழந்தையோட இருக்குறவள விட, நான் எந்த விதத்துல உனக்கு குறைஞ்சு போயிட்டேன். இப்போ அவ கிட்ட காட்டுற நேசத்தை ஏன்‌ நீ என்கிட்ட காட்டல?

கல்யாணம் ஆன அப்பறம், வந்த என் பர்த்டேக்கு ஒரு விஷ் கூட நீ பண்ணல, நானா சொல்லியும் நீ விஷ் பண்ணல, இப்போ அவளுக்கு மட்டும் ஏன் இப்புடி எல்லாம் பண்ணுற. இதையெல்லாம் நீ எனக்கு செஞ்சிருந்தியின்னா நான் ஏன் ஹரிஷை தேடி போக போறேன்.

இவர் என்னோட வாழ மாட்டாராம், ஆனா உங்க குடும்பத்துக்கு மட்டும் நான் நல்ல மருமகளாவும் பொறுப்புள்ள பொண்டாட்டியாவும் இருக்கணுமா? இதுல ஆயிரத்தெட்டு கன்டிஷன் வேற இதை பண்ணாத அதை செய்யாதன்னு இடியாட்டிக்” என்க,

அதுவரை அமைதி காத்தவன் “இதுக்கு மேல என் குடும்பத்தை பத்தி பேசுன, மவளே வாயை எல்லாம் உடைச்சிடுவேன். என்கிட்ட பேசுற தகுதி கூட இல்லை உனக்கு, ச்சீ நகரு” என்றவன் அங்கிருந்து நகர்ந்து விட,

“எனக்கு தகுதி இல்லையா?? அந்த முல்லைக்கு மட்டும் இருக்கோ அவ ஹரிஷோட பொண்டாட்……” என அவள் முடிப்பதற்குள் மின்னல் வேகத்தில் அவள் அருகே வந்து குரல்வளையை பிடித்திருந்தான் கதிர்.

“அடிங்க, நாதாரி யாரு யாரோட பொண்டாட்டி..? முல்லை என்னோட பொண்டாட்டி! எனக்கு மட்டுமே உரிமையானவ.! அவளை இன்னொரு தடவை உன் புருஷனோட சேர்த்து பேசுன, மவளே சங்கு தான் உனக்கு புரியுதா???என் வாழ்க்கைய விட்டு உன்னை எப்பவோ தூக்கி போட்டாச்சு. உன் வழியில நான்‌ என்னைக்கும் வர மாட்டேன். என் வழில நீ வரணும்னு நெனைச்ச” என அனல் தெறிக்க கர்ஜித்தவன் அவள் கண்கள் மேலே சொருகுவதை கண்டு தன் பிடியை விட,

மூச்சு காற்றை இழுத்து சுவாசத்திற்கு போராடியவளை கண்டு கொஞ்சமும் இரக்கம் வரவில்லை அவனிற்கு.

“இப்போ சொல்றது தான் கடைசி உனக்கு. இனி என் வழில வந்த குழி தோண்டி புதைச்சிடுவேன். அத்வி என் பையன், தேன்முல்லை இந்த கதிரோட உரிமை உறவு” என்க,

‘தேன்முல்லை’ என்ற பெயர் சட்டென அவளின் மூளையில் நுழைந்து நினைவுகளை தட்டி எழுப்ப,

“அப்போ….அப்போ….. நீ விரும்புனதா சொன்னது இந்த தேன்முல்லையை தான? அந்த அந்த பொருளுல கூட தேன்முல்லையின்னு தான எழுதியிருந்துச்சு. அந்த திங்க்ஸ் எல்லாம் இவளோடது தான. நீ காதலிச்சது இவளையா??” என அவள் திகைத்து கேட்க,

நக்கலான சிரிப்பை ஒன்றை உதிர்த்தவன் “ஆமான்னு சொன்ன என்ன பண்ணுவ? உன் காதை நல்ல தொறந்து வச்சு கேளு, நான் விரும்புனது, விரும்புறது, இனியும் என் கடைசி வாழ்க்கை வரைக்கும் விரும்ப போறது எல்லாமே என் முல்லைய மட்டும் தான்” என்றவன் அதற்கு மேல் நில்லாது நகர்ந்து விட,

“ச்சீ உனக்கு வெக்கமா இல்லை? அடுத்தவன் பொண்டாட்டிய லவ் பண்ணேன்னு சொல்லுறதுக்கு” என அவள் கத்துவது அவன் காதில் விழ, வந்த சிரிப்பை அடக்கியவன் அவளை திரும்பியும் பாராது சென்று விட,

இங்கே சுரபிக்கு அவளின்‌ தோல்வியை தாங்கவே முடியவில்லை.

“கடைசியில அவன் காதலிச்சவளையே கல்யாணம் பண்ணிட்டானா? இல்லை கண்டிப்பா அவன் சந்தோஷமா இருக்க கூடாது. என்னை அழ வச்சு என் கூட வாழாம அவமானப்படுத்துனவன் இப்போ சந்தோஷமா வாழுவான்னா அவளோட!! விட மாட்டேன். சத்தியமா விட மாட்டேன்” என கருவியவள் தன்னறைக்கு சென்று விட்டாள்.

இத்தனை நேரம் இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த, மூன்றாம் உருவத்தின் நெஞ்சம் கோபத்தில் கொதிக்க, இவர்கள் கிளம்புவது தெரிந்து வேகமாக அந்த இடத்தை விட்டு தன்னறைக்கு சென்று விட்டது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 26

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
30
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. யாரு அது? ஹரீஷா முல்லையா? சின்ன வயசுல இருந்து காதலா? சூப்பர் லவ் ஸ்டோரி இருக்கும் போலயே