
அத்தியாயம் 4
அது திருப்பூரின் முக்கிய பகுதி, வானளான உயர்ந்து நிற்கும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட கண்ணாடி சுவர்களை கொண்ட கட்டிடங்களில் அமைந்து இருந்தது ஏ_டூ வின் தலைமை நிறுவனம்…
வாரத்தில் சனிக்கிழமை அன்று அனைத்து ஸ்பீன்னிங் மில் மேனேஜர், அக்கௌன்ட்டன்ட், அண்ட் சூப்பர்வைசர் என அனைவரையும் வரவழைத்து அந்த வாரத்தில் நடந்த ஏற்றுமதி, இறக்குமதி, நூலின் தன்மை, வேலையாட்களின் நாள் விவரம், குவாலிட்டி செக்கிங், அந்த மாதத்தின் கணக்கு வழக்குகள் அனைத்தையும் சரிப் பார்ப்பது அபியின் வழக்கம்.
இன்று சனிக்கிழமை என்பதால் அனைத்து பணியாளர்களும் தலைமை நிறுவனத்திற்கு வந்திருந்தனர். தொழில் ரீதியாக சிலபல அறிவிப்புகளை பொதுவாக கூறியவன் போன வாரத்தில் தயாரித்த நூலை பார்வையிட்டான்.. அதன் அளவுகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டப்படி வந்தவன் சட்டென அந்த ஃபைபரை கையில் எடுத்து பரிசோதனை செய்தான். பல்லடம் QC ரிபோர்ட் கொடுங்க அழுத்தமாக கேட்டதும் சற்றே தடுமாறிய மேனேஜர் பின் அபியிடம் ரிபோட்டை நீட்டிட, அதை வாங்கி பார்த்தவனின் முகம் கடுகடுப்பைக் கொண்டிருந்தது.
உடனே தன் பின்னாலிருந்த கபோட்டில் சில நூல் கண்டுகளை எடுத்தவன் அவர்களின் முன் வைத்து “இதுக்கும் நம்ம த்ரீட்க்கும் என்ன வித்தியாசம் ஏதாவது தெரியுதா…” கோபமாகவே கேட்டான்.
“இல்லை சார் அது வந்து ரன்னிங்ல மிஸ்டேக் வந்து இருக்கும் நினைக்கிறேன்.அண்ட் ட்ராஃ…” என ஆரம்பிக்கும் முன்பே அவனை கடுமையாக பார்த்தான் அபி…
“சாக்குபோக்கு சொல்லாம கார்டிங், ட்ராங்க், அண்ட் ரோவிங்கோடா மொத்த ரிபோட்ஸையும் கொண்டு வாங்க…” என கட்டளையிட்டவன்
அடுத்தடுத்த பேச்சுக்களுக்கு தாவினான்.
“நாளைக்கு சண்டே மார்னிங் ஷிப்ட் வர சொல்லி இருக்கேன் சார். நாளைக்கு லேபர்ஷுக்கு அமௌண்ட் தரணும் அண்ட் லேபர் ரிபோட்ஸ்…” என அக்கௌன்ட்டன்ட் தன் பேச்சை ஆரம்பித்தார்..
அக்கௌன்ஸ் சரி பார்க்க ஆரம்பித்தவன் “இன்னைக்கு நவம்பர் ஃபைவ்வா” மெல்லிய முனகல் போல் வந்தது வார்த்தைகள்.
மெல்லிய முனகலாக இருந்தாலும் எதிரில் அமர்ந்தவர்களுக்கு அவனின் கேள்வி நன்றாகவே காதில் விழ “எஸ் சார்…” என்றனர். மற்றவர்களின் பேச்சில் தன் நினைவுக்கு வந்தவன் மீதியை சரி பார்த்து விட்டு அருகில் நின்ற ராமிடம் திரும்பி “ராம் மத்த டீட்டைல்ஸ் எல்லாம் செக் பண்ணுங்க…” என்றவன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான்…
மனம் முழுவதும் சொல்ல முடியா வேதனையில் துடிக்க தாங்கள் வாழ்ந்த வீட்டை நோக்கி பயணித்தான். சில மணி
துளிகளில் அவன் வர வேண்டிய இடம் வர, காரை ஓரம் கட்டிவிட்டு அவனைப் பகட்டாக காட்டும் அனைத்தையும் கழட்டி எறிந்துவிட்டு அந்த வீட்டை நோக்கி நடந்தான்…
அன்று அவர்கள் வாழ்ந்த வீட்டை விட்டு சென்றானே தவிர, வீட்டிலிருந்த எந்த பொருட்களையும் அந்த வீட்டிற்கு எடுத்து செல்லவில்லை.
அவனது மனைவி, அவர்களது வாழ்வை விட்டு செல்லும் போது எப்படி இருந்ததோ அப்படியே தான் இப்போது வரை இருந்தது. தினமும் வீட்டை பராமரிக்க ஆட்கள் வைத்திருந்தான். அப்போதைய அபியின் வீடு சொல்லி கொள்ளுமளவிற்கு பெரிய வீடில்லை, சாதாரண நடுத்தர குடும்பம் வாழும் வீடு தான். அதுவே அவர்களின் சிறிய குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தது. கேட்டினைத் திறந்து உள்ளே நடந்தவனின் காதில்
‘இந்த ரோஸ் அழகா இருக்கு…’ வாசலில் வைத்திருந்த ரோஜா செடிகளை பார்த்தபடி கூறியவளின் பிம்பம் இப்போதும் கண் முன்னே வந்து மறைந்தது. அந்த ரோஜா செடிகள் கூட அங்கு தான் இருந்தது அதை வைத்தவள் தான் மண்ணிற்கு உரமாகியிருந்தாள்.
சட்டென கண்ணில் கண்ணீர் மின்னி மறைய வாசலை கடந்து உள்ளே சென்றான். அந்த சிறிய வீட்டின் முற்றத்தில் நின்றவனுக்கு மீண்டும் தன்னவளின் நினைவு வந்து நெஞ்சை முட்டியது.
இவனை கண்டதும் ஹாலில் அமர்ந்திருந்தவள் சட்டென அவன் முன் நின்று ‘மாமா,எனக்கு, இல்லை உனக்கு, எப்படி சொல்றதுன்னு தெரியலயே,இங்க வாயேன்…’ அவனை பக்கத்தில் அழைத்து அவளின் ஆழிலை வயிற்றில் அவன் கரத்தை வைத்தபடி ‘மாமா, உனக்கு ஏதாவது புரியுதா?’ என வெட்கத்துடன் பேசியதும் அதற்கு ‘என்னடி வயிறு வலிக்குதா’ என கேட்டு அவளின் கோபத்திற்கு ஆளாகி போனதும் நினைவு வந்தது அவனுக்கு. அன்று அவள் திட்டிய திட்டும் முறைப்பும் இப்போதும் நினைவு வந்து அவனின் இதழ்களில் புன்னகையை பூக்க செய்தது.
முற்றத்தை ஒட்டி அமைந்துள்ள அவர்களின் அறையை நோக்கி சென்றவனின் நினைவுகள் முழுவதும் அவள் அவள் அவள் மட்டுமே… படுக்கையில் விழுந்தவன் தலையணையில் முகம் புதைத்து தன்னவளின் வாசத்தை தேடி தேடி தோற்று போனவனாக அன்றைய நினைவுகளில் மூழ்கி போனான்…..
**
“மாமா, மாமா…”என இத்தோடு பலமுறை அழைத்திருப்பாள் அவனின் அம்மு….
அவளின் அழைப்புக்கு “சொல்லு அம்மு…” என்றானே தவிர இமைகளைத் திறக்கவில்லை அவன்…
அவன் எழவில்லை என்றதும் உதட்டைப் பிதுக்கி “எழு மாமா” மெல்ல சிணுங்கினாள் பெண்..
“தூங்க விடு அம்மு” இதை கூறும் போது உள்ளுக்குள் நன்றாகவே புன்னகைத்துக் கொண்டான்.
ஆம் இன்று அபியின் பிறந்தநாள். காதலித்த நாள் தொடங்கி இன்றுவரை வருடாவருடம் சரியாக பன்னிரண்டு மணிக்கு தன்னவளின் வாழ்த்து இவனை அடைந்து விடும்.
இதோ இப்பொழுது அதற்காக தான் அழைக்கிறாள் என்று நினைத்தவன் அவளது அழைப்பிற்கு எழுந்துக் கொள்ளாமல் சண்டித்தனம் செய்துக் கொண்டிருக்கிறான்.
சுவர் கடிகாரத்தையும் தன்னவனையும் மாறி மாறி பார்த்தவள் “மாமா, நீ மட்டும் இப்ப எழுந்துக்கல, என்ன நடக்குமுன்னு எனக்கே தெரியாது பார்த்துக்க” சற்றே குரலை உயர்த்தி கத்தினாள் அவனின் மனைவி.
“கத்தி தொலைக்காத டி ராட்சசி, ஹால்ல படுத்துட்டு இருக்கற அம்மாவும், குழந்தைங்களும் எழுந்துக்க போறாங்க” என அவளின் கத்தலில் பதறி எழுந்தப்படியேக் கூறியவனின் பேச்சு அவளின் வன்மையான இதழ் தீண்டலில் முடிந்தது…
அவளின் அதிரடியை சற்றும் எதிர்பாராதவனின் கண்கள் அகலதிற்கும் விரிந்தது… தன்னவளின் இதழ் தந்த தித்திப்பு பித்து பிடிக்க வைத்தது என்றால் அவளின் அடுத்தடுத்த செயல்கள் இவனை வேறு உலகத்திற்கு இழுத்து சென்றது.
மனம் அவளிடம் கிறங்கி நின்றாலும் “ஏய் பாவம் டி நான்… இப்படியெல்லாம் டெம்ப்ட் பண்ணாத. என்னை என்னாலேயே கண்ட்ரோல் பண்ண முடியல, அடுத்த ட்வின்ஸ் வந்துட்டா நம்பனால சமாளிக்க முடியாது டி”என்ற அபியின் அலறல் எல்லாம் அவளின் காதில் துளிக் கூட விழவில்லை. அவனையும், அவனின் மொத்த முத்தத்தையும் வாங்கிய பின் தான் அபியை விட்டுப் பிரிந்தாள்.
தன்னவளின் செய்கையில் முகம் முழுவதும் வெட்க பூக்கள் பூக்க, அதனை இதழ்கள் கடித்து வெட்கத்தை அடக்கியப்படி அவளை பார்த்தவன் “ஃபர்ஸ்ட் டைம் டி நீயா வந்து கிஸ்” அதற்கு மேல் அவனாலும் பேச முடியவில்லை, இதழ்களைக் கடித்து கேசத்தை அழுந்த கோதி எதிரில் இருந்தவளை பார்த்தான்.
பெண்ணின் வெட்கத்தை விட ஆணின் வெட்கம் அழகானது அல்லவா அபியின் வெட்கம் அவனை பேரழகாக காட்டியது… “இப்படி வெட்கப்பட்டு என்னை டெம்ப்ட் பண்ணாத மாமா”எனக் கூறி முகத்தை மூடிக் கொண்டவளை தன் மார்போடு இழுத்தணைத்துக் கொண்டான்.
அவனின் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டவள் “எப்படி”என்றாள் கண் சிமிட்டி.
பாவையின் கேள்வியில் ஏனோ அத்தனை வெட்கம் வந்தது அவனுக்கு. “இப்படியெல்லாம் கூட உனக்கு பேச வருமா டி”என நினைத்தவன் கேசத்தை அழுந்த கோதியப்படி “என்னவாம்…” எனக் கேட்டான். அவனை புருவம் உயர்த்தி குறுகுறுவென பார்த்தாள். பாவையின் பார்வையில் பக்கென சிரித்தவன் அவளை தன் மார்ப்போடு சேர்த்தணைத்து “என்னவாம்” என்றான் மீண்டும்… அவனின் மார்ப்பில் நன்றாக முகம் புதைத்து கொண்டவள்
“ஒன்னுமில்லையாம்,…” என்றாள்.
“அப்படியா…”என ஆர்ப்பாட்டமாக சிரித்தவனிடம் “சொல்லு மாமா…” என சிணுங்கினாள். அவளின் சிணுங்கலை மெல்ல ரசித்தவன் “உன் அதிரடி முத்தத்தில எதுவுமே நான் கவனிக்கல அம்மு…” என கள்ள சிரிப்போடு மெல்லிய குரலில் சொல்லவும், சட்டென அண்ணாந்து அவனை பார்த்தவள்
“கவனிக்காம தான் நான் கிஸ் குடுத்த அடுத்த நிமிஷம் என் லிப்பை சவ்வு மிட்டாய் மாதிரி இழுத்து கடிச்சு வைச்சியாக்கும்…” என நக்கலாகக் கேட்டாள்.
“அச்சோ அப்படியா பண்ணேன். எனக்கு ஞாபகம் இல்லையே டி ஒரே ஒரு நிமிசம் இரு, இப்படியா பண்ணேன்…” என்ற வார்த்தையை முடித்தும் முடிக்காமல் அவளின் கீழ் இதழை மெல்லக் கடித்து தன் இதழ்களுக்குள் அதக்கி கொள்ள, அவளின் கண்கள் சொக்கி தான் போனது அவனின் அதிரடி முத்தத்தில்.
நிமிடத்திற்கு நிமிடம் அவளின் இதழில் வன்மையை கூட்டி கொண்டிருந்தவனின் கைகள் அவள் மேனியில் தன் எல்லையை கடந்தது. அவனின் செய்கையில் சொக்கி நின்றவள் சட்டென நினைவு வந்தவளாய் அவனைத் தன்னிடமிருந்து பிரித்தாள்.
குழந்தையின் கையிலிருக்கும் பொம்மையை வலுக்கட்டாயமாக பிரித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அபியின் முக பாவனை. அவனின் முகம் போன போக்கை பார்த்து கண்ணடித்து சிரித்தாள் அவள்.
“வாடி…” என இதழசைத்து கைகள் இரண்டையும் விரித்து இமைகளை மூடி திறந்து வா என்பதை போல் அழைத்தான். அவனின் ஏக்க பார்வையில் மெல்ல உதட்டைக் குவித்து கண்களை மூடி பறக்கும் முத்தத்தை அனுப்பியவள்
“செகண்ட் இன்னிங்ஸ் எல்லாம் கேக் கட் பண்ணி முடிச்சதும் தான்.” என்றவள் அறைக்கதவை நோக்கி ஓடிட “ஏய் அம்மு நில்லு டி” என கத்தியவன் நிஜத்திலும் கத்திவிட்டான்.
இறந்த காலத்தில் நடந்த அனைத்தும் கண் முன்னே கனவுகளாய் விரிந்திருக்கிறது என்பதை அவன் மனம் ஏற்க முடியாமல் அல்லாடியது. நிஜதிற்கும்,கனவிற்கும் இடையில் சிக்கி தவிக்கும் வேளையில் அவனின் அறைக் கதவு மெல்ல திறந்தது.
கேக்கில் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியின் ஒலியில் தேவதையாய் தெரிந்தாள் அறையினுள் வந்த அவனின் அம்மு. “எங்க டி போன? பயந்துட்டேன் தெரியுமா…” என்ற வாக்கியம் எதிரில் நின்றவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் நிமிடத்தில் தன்னை மீட்டுக் கொண்டவள் கையிலிருந்த கேக்கை அருகில் இருந்த டீபாயில் வைத்தாள்.
ஆனந்தியின் பின்னாலயே வந்த பிள்ளைகள் இருவரும் அறையின் வாயிலில் நின்றபடி “பாட்டி, அப்பா முழிச்சிட்டு தான் இருக்காங்க, சீக்கிரம் வாங்க..” என கத்த
“நீங்க இரண்டு பேரும் முதல்ல இங்க வாங்க, கார்ல இருக்கறதை எடுக்கணும்ல.” என்றதும் இருவரும் சீதாவை நோக்கி ஓடினர்.
அதே நேரம் அறையிலிருந்த அபிக்கு மற்றவர்களின் பேச்சு காதில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை… அவன் மனம் முழுக்க அவனது அம்மு மட்டுமே நிறைந்திருக்க, மற்றவர்கள் அனைவரும் அவுட் ஆப் ஃபோகஸ் தான்.
‘ இப்படி உங்கப்பன் மூஞ்சூறு கிட்ட தனியா விட்டுட்டு போயிட்டீங்களே டா மொசக்குட்டிகளா…’ என நினைத்த ஆனந்தியோ, அபியை அவஸ்தையாக பார்த்துவிட்டு வெளியில் செல்ல எத்தினிக்க, சட்டென எக்கி அவளின் கையை பற்றிக் கொண்டான் அபிநயன்.
“எங்க டி போற நிமிசத்தில என்னை பதற வைச்சுட்ட தெரியுமா..” என்றவன் அடுத்த நிமிடம் அவளுமே எதிர்பாராத வகையில் அவளை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.
“சார் என்ன பண்றீங்க, என்ன விடுங்க…” என்றவளின் குரல் அபியின் செவியை சென்றடையவில்லை…
நிமிடம் செல்ல செல்ல அபியின் பிடியும் உளறல் பேச்சும் கூடிக் கொண்டே போனது. “என்னோட ஒவ்வொரு செல்லும் உன்னை தேடுது அம்மு. என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல. இப்ப இந்த நிமிடம் நீ வேணும் வேணும் சொல்லுது டி…” என்றவன் இனி தன் அம்முவை எங்கும் விட மாட்டேன் என்பது போல தன்னுள் புதைத்துக் கொள்ளுமளவிற்கு இறுக்கிக் கொண்டான்.
ஓர் ஆணின் மொத்த தேகமும் தன் உடலை தீண்டியதில் பெண்ணவளின் தேகம் தீயாய் தகிக்க “சார் என்னை விடுங்க”பற்களை கடித்தபடி கத்தினாள். மங்கையின் கத்தல் அவனுக்கு துளியும் கேட்கவில்லை போலும் கைகளில் மேலும் இறுக்கத்தை கூட்டி ஆனந்தியின் கழுத்து வளைவில் இதழ் பதிக்க, விதிர்விதிர்த்து போனவள் தன் பலம் முழுவதும் திரட்டி அவனை தள்ளி விட்டாள்.
அவளின் எதிர்பாராத தாக்குதலில் நிலை தடுமாறி பின்னால் நகர்ந்தவன் எதிரில் நின்றவளை பார்க்க அவனின் அம்மு நின்ற இடத்தில் ஆனந்தி நின்றாள். நிமிடம் முகம் இறுக எதிரில் நின்றவளை அற்ப பார்வை பார்த்தவன் “இந்த நேரத்துல என் வீட்டுல உனக்கு என்ன வேலை, எதுக்காக இங்க வந்த…” என கர்ஜித்தான்.
நடந்த அனைத்திற்கும் இவள் தான் காரணம் என்பதை போல அவனின் பார்வையும், பேச்சும் இருக்க, துளியும் ஜீரணிக்க முடியவில்லை ஆனந்தியால் “என்ன நினைச்சு இப்படி என்கிட்ட கேட்கறீங்க, ரூமுக்குள்ள வந்ததும் என்கிட்ட தப்பா நடக்க ட்ரை பண்ணது நீங்க…நான் இல்லை” என்றவளின் வார்த்தையில் அனல் பறந்தது.
அவள் கூறியதை துளியும் காதில் வாங்கி கொள்ளாமல் ஓர் அலட்சிய பார்வை பார்த்தபடி “இந்த நேரத்துல என் வீட்டுக்கு வந்தது உன்னோட தப்பு. அதுவும் என் ரூம் வரைக்கும் வந்தது ரொம்ப தப்பு… இந்த நேரத்தில இங்க என்ன வேலை உனக்கு” என அழுத்தமாக கேட்டான். தங்களின் வீட்டில் தங்களின் அறைக்குள் தன் அனுமதியின்றி நுழைந்தது அவளின் தவறு என்பதை போல் தான் பேசினான். அவன் செய்த காரியத்தை இன்ஸ்டன்ட்டாக மறந்து போனான்.
‘ அப்ப,இந்த நேரத்தில உன் பொண்ணு வந்து இருந்தாலும் இப்படி தான் நடந்திருப்பியா…’ சாட்டையாய் வார்த்தைகள் வெளி வரும் நேரம்
“நான் தான் ப்பா கூட்டிட்டு வந்தேன். ரொம்ப நேரமா உன்னையும் காணோம். கால் பண்ணி பார்த்தேன், நீ போன் எடுக்கல… எப்படியும் நீ இங்க தான் இருப்பேன்னு தெரியும். அதான் பசங்களையும், ஆனந்தியையும் கூட்டிட்டு வந்தேன். அது மட்டுமில்லை நாளைக்கு உன் பிறந்த நாள். அவ இருந்தா அப்படியே விட மாட்டா, அதான் பசங்க முன்னாடி மட்டும் கேக் வெட்டி கொண்டாடலாம்ன்னு கேக் வாங்கிட்டு வந்தேன்”அவன் கேட்காத கேள்விக்கும் விடை கூறியவர் பின்னால் திரும்பி “சோழா, குந்தவி…” என அழைக்க
“ஹேப்பி பர்த்டே டாடி…”என்றபடியே அறைக்குள் நுழைந்தவர்களின் கையில் ஒரு பெரிய வெள்ளை காகிதம் இருந்தது.
குழந்தைகளின் ஆர்ப்பாட்டக் குரலில் தற்போது வரை இறுகி இருந்த முகம் நொடியில் மாறி, மெல்லிய புன்னகையுடன் குழந்தைகள் இருவரையும் பார்த்தவன் சட்டென அமர்ந்து இருவரையும் வாரி அணைத்துக் கொண்டான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
30
+1
3
+1
