Loading

முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 8

திவ்யா வழி மேல் விழி வைத்து காத்து கொண்டு இருந்தாள். “என்னமா பாப்பா… தனியா இருக்க… நான் வேணும்னா கம்பெனி கொடுக்கவா… ” என்று திடிரென்று கேட்ட குரலில் இது வரை இருந்த மனநிலை மாறி ஒரு வித பயமும் பதட்டமும் தொற்றி கொண்டது.

எதிரே இவளின் கல்லூரியில் படிப்பவர்கள் என்று சொல்லிவிட்டு இருக்கும் அநியாயங்களை எல்லாம் செய்து கொண்டு இருப்பவர்கள் நின்று கொண்டு இருந்தனர். யாரையும் மதிக்காமல் இருப்பது, பெண்களின் உடையில் இருந்து நடை வரை கேவலமாக கமெண்ட் செய்வது, பெண்களிடம் இரட்டை அர்த்தங்களில் பேசுவது, தவறாக சித்தரிப்பது, ஆசை பட்டால் எப்படியும் அவர்களை அடைய நினைப்பது இன்னும் சொல்லக்கூடாத சில விஷயங்கள் செய்வது, பிரச்சனை என்றால் பணத்தை கட்டி தப்பித்து கொள்வது. தன்னை எதிர்ப்பவர்களை அது ஆணோ! பெண்ணோ! அவர்களின் எதிர்காலத்தை அழித்து விட்டு தான் மறுவேலை.

5 நபர்கள் கொண்ட இந்த குழுவின் தலைவன் தான் நரேன். அவன் தான் இப்போது திவ்யாவிடம் வம்பு வளர்த்து கொண்டு இருந்தான். இவர்களின் பண பலமும் ஆள் பலமும் யாரும் இவர்களை எதிர்த்து பேச அனுமதிப்பது இல்லை. கல்லூரியிலும் இவர்களை பற்றி தெரிந்ததால் யாரும் ஏதுவும் சொல்ல மாட்டார்கள். அது இன்னும் வசதியாக போய்விட்டது. திவ்யாவின் கேட்ட நேரமோ என்னவோ என்றும் கல்லூரிக்கு தாமதமாக வருபவர்கள் இன்று சில காரணங்களால் சீக்கிரமாகவே வந்து விட்டனர்.

நரேன் ” என்ன பாப்பா பேசாம இருக்க… பயப்படாத.. நான் ரொம்ப நல்ல பையன்.. இல்லடா…” என்றான். அவன் நண்பர்களும் அதற்கு எப்போதும் போல ஜால்ரா அடித்து கொண்டு இருந்தனர். திவ்யாவும் பயத்தில் சுற்றியும் பார்க்க அங்கு தான் யாரும் இல்லை. கல்லூரிக்கு பின்னாடி தான் மைதானம் இருப்பதால் காலை வேலை இங்கு அதிகமாக யாரும் வரமாட்டார்கள். நரேன், “யாரை பாப்பா தேடுற… யாரும் வர மாட்டாங்க.. அப்படியே வந்தாலும் என்னைய கேட்க எவனுக்கு தைரியம் இருக்கு…” என்று ஆணவமும் கர்வமும் கண்களில் மின்ன சொல்லி கொண்டு இருந்தான்.

“சரி… இதெல்லாம் விடு நீ வா… நாம அப்படி தனியா போய் பேசிட்டு இருப்போம்… பயப்படாத.. வா.. ” என்று கையை பிடித்து இழுக்க ஆரம்பித்து விட்டான். இவளுக்கு உயிரே போய் விட்டது. கண்களில் நிற்காமல் கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டு இருந்தது.. அழுது கொண்டே அவனிடம் கெஞ்சி கொண்டு இருந்தாள்.
“அண்ணா என்னைய விட்ருங்க ப்ளீஸ்… நீங்க நினைக்குற பொண்ணு நான் இல்லை… எனக்கு பயமா இருக்கு விட்ருங்க…” என்று கதற, அந்த மிருகங்களுக்கு தான் இரக்கம் என்பதே இல்லையே.

“என்ன பாப்பா இப்படி அண்ணானு சொல்லி மனச கஷ்டபடுத்துற. அப்படி எல்லாம் இனிமேல் சொல்ல கூடாது சரியா.. அப்புறம் எனக்கு மூட்அவுட் ஆயிடும்…” என்று பேசி கொண்டே இழுத்து சென்றான். இவளும் தப்பித்து ஓட எவ்வளவோ முயற்சி செய்தும் அனைத்தும் வீண் தான். அவனின் உடல் பலம் முன்னால் அவளின் உடல்பலம் செல்லுபடி ஆகவில்லை. அவனின் நண்பர்கள்… அடுத்து நமக்கு தான் என்று நாய் போல நாக்கை தொங்க போட்டு காத்திருக்க நரேன் அவர்களை பார்த்து, “யாரவது வரங்களான்னு பாருங்கடா…” என்று சொல்லி விட்டு அவளை இழுத்து சென்றான்.

திவ்யாவிற்கு, இந்த நிமிடம் உயிர் பிரிந்தால் கூட மகிழ்ச்சியாக இருக்கும் என்று தோன்ற ஒருமுறை தன்னவனை மனதில் நிறுத்தி.. ‘ஐ லவ் யு டா… இதை கடைசி வரைக்கும் உன்கிட்ட சொல்ல முடியாதா… உன்கூட வாழனும்னு அவ்வளவு ஆசைபட்டென்… ஆனா அதெல்லாம் கனவாவே போய்டும் போல… இன்னைக்கு எதாவது நடந்தா கண்டிப்பா நான் உயிரோட இருக்க மாட்டேன்… கடைசியா உன் மடில படுத்து உன்னைய பாத்துட்டு உயிரை விட்டா கூட எனக்கு சந்தோசம் தான்டா… அப்பா உங்க குட்டிமா இல்லைனு வருத்தபடாதிங்க… சிவா உங்கள நல்லா பாத்துப்பான்… என்னையை மன்னிச்சுருங்க பா… மிஸ் யு அப்பா…’ என்று தன்னவனுடனும், தனக்கு உயிரான தந்தையுடனும் கடைசியாக மனதிற்குள்ளே பேசி கொண்டு இருந்தாள். கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் அந்த நாய் அவளை தர தரவென இழுத்து சென்றது.

அவளின் கதறலை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், அவளின் துப்பட்டாவை எடுத்தான். அதை கையில் வைத்து அதன் வாசத்தை இழுத்து கொண்டான். அதன் போதையில் கிறங்கி அவளை ஒரு மார்கமாக மேலிருந்து கீழ் வரை ஆராய அவளுக்கு நெருப்பில் நிற்பது போல இருந்தது. அந்த துப்பட்டாவை அவன் இடுப்பில் கட்டி கொண்டு அவளை நெருங்கினான்….

உடையில் கையை வைக்க போகும் போது அவனை ஒரு கரம் பிடித்தது. இவன் எரிச்சலுடன் திரும்பி பார்க்க எதிரே சிவா ருத்ரமூர்த்தியாய் நின்று கொண்டு இருந்தான். அவனின் கண்களில் உள்ள கோவத்தை பார்த்து இவனுக்கு பயம் வந்தது என்னவோ உண்மை தான். அவன் சுதாரிப்பதற்குள் அவனை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தான் சிவா. இவன் வலி தாங்காமல் கதற அதை கேட்டு அவன் நண்பர்கள் அங்கு வர இருக்கும் கோவத்தில் அவர்களையும் அடித்து துவைத்து விட்டான். அவர்களை சமாளிப்பது கடினமாக இருந்தாலும், தன் உயிர் தோழியை அந்த நிலமையில் பார்த்து தான் வர தாமதம் ஆகி இருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற எண்ணமே அவனை கோவத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

அவர்களை துவைத்து ஓட விட அவர்களும் நரேனும் சிவாவின் மேல் வன்மத்தை வைத்து கொண்டே ஓடி விட்டனர். அவனின் கண்களில் உன்னைய சும்மா விட மாட்டேன். இதுக்கு எல்லாம் சேர்த்து நீ அனுபவிப்ப என்ற பழிவாங்கும் வெறி அதிகமாகவே இருந்தது. தாங்கள் செய்த தவறு அவர்களுக்கு இன்னும் புரியவில்லை. அவர்கள் சென்றதும் இவன் திவ்யாவை தேட அவள் அங்கு ஒரு மறைவில் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள். திடீரென ஒரு கை மேல பட பயத்தில் அவளுக்கு மூச்சே நின்று விட்டது. மறுபடியும் அவன் வந்து விட்டானா என்று. நிமிர்ந்து பார்க்க அவனின் இதயம் கவர்ந்தவன் என்றது தான் மூச்சே சீராக வந்தது.

தாவி அவனை கட்டி கொண்டால், இன்னும் அவளின் நடுக்கம் மட்டும் நிற்கவே இல்லை. அதை புரிந்து அவனும் ஏதும் கேட்க வில்லை. ஆதரவாக அணைத்து கொண்டான். அவளும் இருக்கும் மனபாரத்தை குறைத்து கொண்டு இருந்தாள். அவளை அப்படியே சமாதான படுத்தி அழைத்து வந்து தண்ணீரை கொடுத்தான். அது அவளுக்கு சற்று பெரிதும் ஆறுதலாக இருந்தது. ஆனால் அவனை விட்டு மட்டும் பிரியவில்லை. அவள் அணைப்பு வித்யாசமாக இருந்தாலும் பயத்தில் இப்படி இருக்கிறாள் என்று நினைத்து விட்டான்.

அப்போது தான் கயல் இவர்களை தேடி வந்தாள். வந்ததும் அழுது கொண்டு இருந்த திவ்யாவை பார்த்ததும் பதறி என்ன என்று கேட்க அவள் அழுகை இன்னும் அதிகம் ஆகியது. அதனால் சிவா தான் தனக்கு தெரிந்தவரை சொல்ல தொடங்கினான்…

எப்போதும் போல சிவா போன் பேசி கொண்டே வர அங்கு திவ்யா தான் இல்லை. எங்க போனா இவ.. சீக்கிரமா வர சொன்னா… லேட்டா வேற வந்துட்டோம் அதனால கோவத்துல எங்கையாவது போய்ட்டாளா… என யோசிக்க அவளின் தொலைபேசி தரையில் கிடந்தது… நரேன் பிடித்து இழுக்கும் போது கையில் இருந்த தொலைபேசியை தவற விட்டிருந்தாள். அதை எடுத்து பார்த்து கொண்டு இருக்கும் போதே இவனுக்கு மனதுக்கு ஏனோ நெருடலாக இருந்தது. அவள் தொலைபேசியை எங்கும் வைத்து செல்லும் ரகம் அல்ல. அப்படி இருக்கும் போது இது எப்படி என தோன்ற மெதுவாக அங்கே இருந்த கால் தடங்களை கவனிக்க தொடங்கினான்.

பல கால் தடங்கல் இருக்க அதை பார்த்து கொண்டே செல்ல தூரத்தில் ஒரு பெண்ணின் கதறல் சத்தம் கேட்க அங்கே சென்று பார்த்தான். முதலில் வேறு ஒரு பெண் என்று தான் நினைத்தான். ஆனால் அது தன் தோழியாக இருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. அதன் பிறகு நடந்ததை சொல்ல கயலுக்கு கண்ணீரே வந்து விட்டது. சிறிது தாமதம் ஆகி இருந்தாலும் என்ன நடந்திருக்கும்… நினைக்கவே உடல் ஒரு முறை நடுங்கியது. திவ்யாவை ஆறுதல் படுத்தி என்ன நடந்தது என்று கேட்க அவளும் அழுது கொண்டே சொல்லி முடிக்க சிவாவின் கோவம் தான் இன்னும் குறைய வில்லை.

இதற்கு மேல் வகுப்பிற்கு செல்ல மனம் இல்லாமல் எல்லோரும் திவ்யாவின் வீட்டிற்கு சென்று விட்டனர். அவள் தந்தையிடம் உடல்நிலை சரி இல்லை என்று மட்டும் சொல்லி விட்டு அவளை மேல அழைத்து சென்று ஒரு வழியாக சாப்பிட வைத்தே தூங்க வைத்தனர். சிறிது நேரம் இருந்து விட்டு கல்லூரி முடியும் தருவாயில் எப்போதும் போல சென்று விட்டனர். திவ்யாவிற்கு தான் காலையில் கல்லூரி சென்ற பொது இருந்த சந்தோசம் மொத்தமாக வடிந்து விட்டது.

திவ்யாவும் சில நாட்கள் கழித்து தான் கல்லூரிக்கு வந்தாள். சிவா பிரின்சிபால் இடம் கம்பளைண்ட் கொடுத்தும் ப்ரோயஜனம் இல்லை. இவனை தான் அவர்களிடம் எதற்கு வம்பு இதை இப்படியே விட்டு விடு.. வெளியில் தெரிந்தால் கல்லூரிக்கு தான் அவமானம் என்று இவனை சமாதான படுத்தி அனுப்பி வைத்தார்கள்.
வெளியே வந்த அவனை நரேன் மற்றும் அவன் நண்பர்கள் நின்று ஏகத்தளமாக பார்த்தனர். அது இன்னும் அவன் கோவத்தை தூண்டியது விட்டால் கொலையே செய்து விடுவான் அவர்களை. பற்களை கடித்து பொறுத்து கொண்டான். “என்மேல கையை வெச்சுட்டாலே… உனக்கு இருக்கு… என்ன பண்ண போறேன்னு பாரு… நீ துடிக்கிறத பாத்து அணு அணுவா ரசிக்க போறோம்…” என்று இன்னும் கடுப்பை ஏற்றி விட்டு சென்றனர்.

போகும் அவர்களை கண்களில் கோவம் மின்ன பார்த்து கொண்டு இருந்தான். யாரு யாரு கிட்ட மாட்ட போறாங்கன்னு பொறுத்து இருந்து பாப்போம்….

திவ்யாவிற்கு தான் அதில் இருந்து மீள்வது என்பது பெரும் பாடாக இருந்தது. சிவாவும் கயலும் கொஞ்சம் கொஞ்சம் ஆகா பேசி அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர். மீண்டும் அவள் நெஞ்சில் முழுவதும் காதல் பூக்கள் மட்டுமே குலுங்க ஆரம்பித்து இருந்தது. அதை அவனிடம் சொல்லும் தருணத்திற்காக மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தாள். அதற்கான நேரம் தான் அமைய வில்லை. இப்படியே நாட்களும் கடந்து விட்டது.

இன்று தான் அந்த நேரமும் அமைந்தது. எப்போதும் பேசும் இடம் அவளுக்கு பயத்தை கொடுத்தாலும் அதை ஓரம் கட்டி வைத்து விட்டு சந்தோஷமான நினைவுகளை மட்டும் மனதில் நிறுத்தி கொண்டாள். அப்படி அவள் படித்து கொண்டு இருக்கும் போது தான் சிவா அங்கே வந்தான். எப்போதும் போல இல்லாமல் இன்று நீல நிற சட்டை அணிந்து இருந்தான். அது அவனுக்கு இன்னும் எடுப்பாக இருந்தது. சும்மாவே அவனை வைத்து கண் வாங்காமல் பார்க்கும் அவள் இன்று தின்று விடுவதை போல பார்த்தாள். அவன் அருகே வர சட்டென்று பார்வையை மாற்றி கொண்டாள். தன் தலையில் தானாகவே அடித்து கொண்டால் இப்படியா பார்த்து வைப்ப என்று…

அவனும் வந்தான். இன்னும் கயல் வரவில்லை. “என்னடி போடலங்கா… நிறைய படுச்சுட்டயா… விட்டா புக்கு குள்ளயே போய்டுவ போல…” என அவளை வாரி கொண்டு இருந்தான். அவள் நிமிர்ந்து அவனை பார்த்து விட்டு சட்டு என்று குனிந்து கொண்டாள் அவனின் பார்வையை எதிர்கொள்ள வெட்கபட்டு. அவனுக்கு இவள் செய்கை புதிதாக தான் இருந்தது. இருந்தாலும் ஏதும் யோசிக்காமல் பேசி கொண்டு இருந்தான். அவளும் இவனை ஓர கண்ணால் ரசித்து கொண்டு இருந்தாள்.

அப்போது ஒரு பெண் இவனை பார்த்து வந்து கொண்டு இருந்தது. அருகில் வந்ததும் தான் இருவரும் பார்த்தனர். அந்த பெண் பிரியா. இவர்களின் பக்கத்து கிளாஸ். அடிக்கடி எப்போவாவது பார்ப்பது உண்டு.
திவ்யா தான் ‘இந்த பொண்ணு இங்க எதுக்கு வந்துருக்கு’ என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே அந்த பெண் இவளை கண்டு கொள்ளாமல் சிவாவிடம் “உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்..” என தயங்கி கொண்டே சொல்ல அவனும், “நாங்க கிளோஸ் பிரிஎண்ட்ஸ் தான். எதுவா இருந்தாலும் இங்கையே சொல்லுங்க நோ ப்ரோப்லம்…” என்று சொல்ல, அந்த பெண் சங்கடத்துடன் “இது ரொம்ப பர்சனல் அதான்… ப்ளீஸ்… ஒரு 5 நிமிடம்…” என கேட்க இவனுக்கு ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் எழுந்து சென்றான்.

ஆனால் திவ்யாவிற்கு புரிந்து விட்டது. அவளும் இந்த காதல் என்னும் வலையில் மாட்டி கொண்டு அல்லவா இருக்கிறாள். அதனால் அந்த பெண் எதற்கு வந்தது என்று புரிந்து விட்டது. திடிரென்று இவளுக்கு பயம் பதட்டம் எல்லாமே சேர்ந்து கொண்டது. எங்கே அவன் ஓகே சொல்லிவிடுவானோ என்று. இதுவரை இருந்த ஒரு இதம் தன்னை விட்டு சென்ற உணர்வு. முதல் முறையாக பயம் அவளை சூழ்ந்தது. காதல் கையை விட்டு சென்று விடுமோ??… சென்றால் தன்னால் தாங்க முடியுமோ??… அவனை மறக்க முடியுமா??… அவன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்??… என்ற பல கேள்விக்கு விடை தான் தெரியவில்லை.

தன் இதயத்தை கையில் வைத்து கொண்டே ஒரு வித பயத்துடன் அங்கே பார்த்து கொண்டு இருந்தால்… அங்கே???……

காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Sangusakkara vedi

      Achachooo pothu pothi vacha siva va yaro kothittu poga vanthuttanga …. Pochu…. Yen ma dhivi innum heart ah kaila vachu vedikka Partha epdi… Avala thalli vittu ithu en aalunu kaila irukura heart ah Avan kaila kuduthurma…