முடிவில்லா காதல் நீயே! – அத்தியாயம் 29
கேரளா ஒரு அழகான ஊர்… எங்கும் பச்சை போர்வை போர்த்திய மரங்கள், காடுகள், குளங்கள், அமைதியான மக்கள், அங்கு அங்கே தெளிக்க பட்ட நீர்த்துளிகள் போன்ற வீடுகள் என பார்க்க இரண்டு கண்கள் போதாது. பகலில் அங்கே சுற்றிப்பார்பது பிடித்ததை வாங்குவது, இரவில் தன்னவனின் கை அணைப்பில் என சுகமாக கழிந்தது நாட்கள். இன்னும் நீளாதா இந்த பயணம் என்ற ஏக்கம் இருவரையும் விட்டுவைக்கவில்லை. திகட்ட திகட்ட ஒவ்வொரு மணித்துளிகளையும் காதலாலும், கண்களாலும் பொக்கிஷமாக சேமித்து கொண்டனர் மனப்பெட்டகத்தில். ஒரு புகைப்பட மியூசியம் திறக்கும் அளவுக்கு புகைப்படங்கள் எடுத்து வைத்தனர். எத்தனை காலம் ஆனாலும் அழியாத பொக்கிஷம் அல்லவா.
ஆதி இல்லாததால் அனைத்து வேலையும் கார்த்திக் இடம் வர, பம்பரமாக சுழன்று கொண்டு இருந்தான். நேரம் கிடைக்கும்போது சில குறுஞ்செய்திகள் தன்னவளுக்கு. அவ்வளவே அவனால் முடிந்தது. தினம் ஒரு முறையாவது சென்று தன் ஜிலேபியை பார்த்து வருபவனால் இந்த நேரத்தில் நினைக்க கூட முடியவில்லை.
ஆருத்ரா இவனை காணாமல் ஏக்கத்தோடு சுற்றி கொண்டு இருந்தாள். தேடி வரும்போது எல்லாம் விரட்டிவிட்டு இப்போது இவள் தேடிக்கொண்டு இருக்கிறாள். காத்திருந்து நேரமும் காலமும் கடந்து போனதே மிச்சம். அந்த கள்வன் வந்தபாடு இல்லை.
இப்படியே நாட்கள் கழிய அன்று ஞாயிற்றுக் கிழமை… இன்று விடுமுறை ஆதலால் இன்னும் தூங்கிக்கொண்டு கனவில் காதல் செய்து கொண்டு இருந்தான் கார்த்திக். அவளை இறுக்கி அணைக்க வெட்கத்தில் சிவந்தவளை ரசித்துக்கொண்டே இதழில் கவிபாட நெருங்க… அந்தோ பரிதாபம்… அதற்குள் வீட்டின் காலிங்பெல் அடிக்க கனவு களைந்த கடுப்பில் அப்படியே எழுந்து வந்து கதவை திறந்தவன் உறைந்துவிட்டான். எதிரில் அவனின் ஜிலேபி பார்வையால் அவனை சுட்டு எரிக்க ஒன்று புரியாமல் முழித்து கொண்டு நின்றவனை கடந்து உள்ளே சென்றுவிட்டாள் ஆருத்ரா.
“சார் ரொம்ப பிஸி போல… பார்க்க கூட வரலை… என்ன வேற எதாவது பொண்ணு ஓகே ஆயிடுச்சா…?” என உறைந்து நின்றவனிடம் கேள்வி கேட்க அதில் நடப்பிற்கு வந்தவன்… ‘இருக்கறதையே பிக்கப் பண்ண முடியல… இதுல இன்னொன்னு வேற…’ என மெதுவாக முணுமுணுக்க அவளுக்கு அது கேட்டும்விட்டது. இருந்தாலும் தெரியாதது போல அருகில் வந்து… “என்ன சொன்ன…?” என கேட்க இரண்டு அடி பின்னால் நகர்ந்தவன்… “அதெல்லாம் இல்லை… எனக்கு கொஞ்சம் ஒர்க்… அதான் பிஸி… வேற எதுவும் இல்லை… ” என தயங்கிக்கொண்டே சொல்ல அவளும் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை.
“முதல் தடவை வீட்டிற்கு வந்துருக்கேன்… இப்படி தான் நின்னு வரவேற்பியா…?” என கேட்டு வைக்க அப்போது தான் குனிந்து பார்த்தவன் அதிர்ந்தே போனான். முட்டிவரை ஒரு டிரௌசர்… கை இல்லாத பனியன்… வாராத தலை என இருக்க அதிர்ந்தவன் வெட்கப்பட்டு அங்கே இருந்து ஓடிவிட்டான். ஒரு பக்கம் தன்னவள் தன் வீட்டில் இருக்கிறாள் என நினைக்க சந்தோசம்… இருந்தாலும் எதற்கு வந்துஇருப்பாள் என யோசித்தும் குழப்பம் ஏற்பட வேகமாக தாயாரகி கீழே போக ஆருத்ரா கிட்சேனில் காபி கலந்து கொண்டு இருந்தாள். அவன் கதவிடம் நின்று பார்க்க, கலந்த காபியில் ஒன்றை அவனிடம் கொடுத்துவிட்டு போய் அமர்ந்து கொள்ள அவனும் கொஞ்சம் இடைவேளை விட்டு ஓரமாக அமர்ந்து முதல் முதலாக தனக்காக தன்னவள் போட்ட காபியை ரசித்து குடித்து கொண்டு இருந்தான். எதுவும் பேசவில்லை.
“நான் ஏன் இப்போ வந்தேன்னா… கொஞ்சம் பேசணும்… அதான்…” என இடைவெளி விட அவனும் அவளை நிமிர்ந்து பார்க்க பேச ஆரம்பித்தாள். “நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே… கொடைக்கானல் இருக்க ஒரு ஆசிரமம்… எனக்கு அம்மா அப்பா யாரும் இல்லை… பொண்ணா பொறந்தலா என்னைய குப்பைல வீசிட்டு போய்ட்டாங்க… அப்புறம் அங்க இருக்க ஆசிரமத்துல தான் வளர்ந்தேன்… அங்கையே கஷ்டப்பட்டு படித்து வெளியில் வந்தேன்… சில பேரோட நல்ல மனசால எனக்கு உதவி கிடைக்க மேற்கொண்டு படிக்கச் முடுஞ்சது… எனக்கு சின்ன வயசுலயே போலீஸ் ஆகணும்… அதான் கனவு…. அதனால வெறித்தனமா படித்து தான் இப்போ இந்த நிலைமையில இருக்கேன்… சின்ன வயசுல இருந்து எனக்கும் அன்பு பாசம் எல்லாம் கிடைக்குமானு ஏங்கிருக்கேன்… இதுவரைக்கும் எனக்கு கிடைக்கல… பெருசா ஆண்கள் மேல எனக்கு நம்பிக்கை இல்லை…. அதனாலையே என் வாழ்க்கையில யாரையும் அனுமதிச்சது இல்லை…” என நிறுத்தி விட்டு எழுந்து ஜன்னல் அருகில் நின்று வெறிக்க ஆரம்பித்தாள்.
“என்னைய பத்தி முழுசா இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது… நான் சொன்னதும் இல்லை… உன்னைய முதல் முறை பார்க்கும்போது எனக்குள்ள ஏதோ ஒரு தடுமாற்றம்… உன்னுடைய கண்ணு எனக்கு ரொம்ப பார்த்து பழக்கப்பட்ட கண்ணு மாதிரியே இருந்துச்சு… முதல்ல நானும் இதெல்லாம் ஒரு அட்டரக்ஷன் தான் நினைச்சேன்… போக போக தான் தெரிஞ்சது இது அதுக்கும் மேலனு… இருந்தாலும் என்னால உடனே யாரையும் நம்ப முடியாது… அதனால நான் நீ பேசும்போது பெருசா ரெஸ்பான்ஸ் பண்ணலை… ஆனா எனக்கு உன் காதலை பாக்கும்போது நம்பாம இருக்க முடியலை… இருந்தாலும் ஒருவித தயக்கம்… இப்படி இருக்க இந்த கொஞ்ச நாளா நீ என்னைய பாக்க வரலை… எனக்காகவும் உண்மையா அன்பு காட்ட நீ இருக்கேனு நினைச்சேன்… அது உண்மையானு கேட்டுட்டு போலாம்னு தான் வந்தேன்… என்னைய உனக்கு பிடிக்குமா… எப்பவும் இதே மாதிரி மாறாத காதலோடு, உண்மையான அன்போட என்னைய பாத்துக்குவியா…” என பேசிக்கொண்டு இருக்கும்போதே அவளை இழுத்து தனக்குள் பொத்திக்கொண்டான்.
அவனும் அனாதையாய் இருந்து பல இன்னல்களை தாங்கி இருக்கிறான். அதுவும் பெண்கள் என்றால் எத்தனை கஷ்டம்… தன்னவளும் இந்த வேதனையை சுமந்து இருக்கிறாள் என நினைக்கும்போதே நெஞ்சின் ரணம் இன்னும் கூடியது. அவளை தன் நெஞ்சுக்குள் வைத்து கொண்டவன்… “இனிமேல் உனக்கு நான் இருக்கேன்… எப்பவும் இருப்பேன்… சாகுற வரைக்கும் இப்போ பிடித்த கையை எப்பவும் விடமாட்டேன்… இனிமேல் உனக்கு நான்… எனக்கு நீ… சரியா…” என அவளின் கண்ணை பார்த்து காதல் வசனம் பேசிக்கொண்டு இருக்க, “அப்போ நாங்க வேண்டாமா…?” என ஒரு குரல்… இருவரும் திரும்பி பார்க்க ஆதி, கயல் இருவரும் கோவமாய் நின்று இருக்க வேகமாக விலகி நின்றனர் கார்த்திக், ஆருத்ரா.
“என்ன மச்சி… கேட்ட கேள்விக்கு பதில் வரலையே…” என கை மடிப்பை மடித்துக்கொண்டே கேட்க, கார்த்திக் சரணடைந்துவிட்டான். “மச்சான்… போதும்… முடியலை… நானும் நீயும் ஒன்னு தான் மச்சி… வேற வேற இல்லை… நீ ஏன் பிரிச்சு பாக்குற…” என அப்படியே அந்தர் பல்டி அடிக்க கயல்… அட பாவி அண்ணா… என அதிர்ச்சியின் உச்சத்திக்கே சென்றுவிட, ஆதி அவனை சிரித்து கொண்டே அணைந்து கொண்டான்.
அங்கே ஒரு அறிமுக படலம் முடிய கயல், ஆரு இருவரும் நல்ல தோழிகளாக மாறிவிட்டனர். இருவரை ஒருவருக்கு ஒருவர் இன்னும் பிடித்துவிட பெண்கள் அவர்கள் உலகத்தில் ஒன்றிவிட்டனர். ஆண்கள் தான் இருவரையும் பிரித்து வைத்தனர். ஆதி, “மச்சி… நாங்க கிளம்புறோம்… நீ உன் காதல் கதையை கண்டிநியூ பண்ணுடா…” என சொல்ல இருவரும் வெட்கப்பட்டு சிரிக்க, ஆதி, “ரெண்டுபேருக்கும் சொல்றேன்… உங்களுக்கு நாங்க இருக்கோம்… எப்பவுமே… அதனால யாரும் இல்லைனு நினைக்காதீங்க…” என சொல்ல இருவருக்கும் பேச்சே வரவில்லை… ஆருத்ரா… என் நண்பன் உங்கள லவ் பண்றேன்னு சொன்னதுமே உங்க மொத்த டீடைல்ஸ்ம் எடுத்துட்டேன்… அவன் கிட்ட அதை சொல்லல… முதல்ல நீங்க காதலை உணருங்க அதுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்னு நினைச்சேன்… பரவாயில்ல நீங்களே சொல்லிட்டீங்க… சீக்கிரமா கல்யாண சாப்பாடு போடுங்க…” என சொல்லவிட்டு நண்பனை கட்டி தழுவ அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டது… தன் நண்பன் தனக்காக இத்தனை செய்து இருக்கிறானா என.
கயல் ஆருவை அணைத்து வாழ்த்துக்களை சொல்லிவிட்டு இருவரும் கிளம்ப, கார்த்திக், ஆரு இருவரும் பார்வையால் களவாட தொடங்க… ஆதி, “அப்புறம் மச்சான்… சொல்ல மறந்துட்டேன்… என்கிட்ட எப்பவும் நடித்தே ஏமாத்திருவ தானே… அதையே சிஸ்டர் கிட்டையும் பண்ணிடாதடா… நான் ஆச்சும் பாவம் பாப்பேன்… அவங்க போலீஸ்… லாக்அப் தான் களி தான்… அதனால பாத்து இருந்துக்கோ… அப்புறம் உன் கனவு காதலி கூட கனவுல டூயட் பாடுவியே… அதெல்லாம் இனிமேல் விட்று மச்சான்… சிஸ்டர்க்கு தெரிஞ்சா அவ்வளவு தான்…” என போற போக்குல கொளுத்தி போட்டுவிட்டு அவன் சென்று விட இங்கே பூகம்பம் வெடிக்க தொடங்க அது நீ தாண்டி என் காக்கி ஜிலேபி… என புரியவைப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது.
“ஆதி… ஏன் இப்படி அண்ணாவை கொத்துவிட்டிங்க… பாவம் அவங்க…” என கயல் புலம்ப, முதலில் இருந்து அனைத்தையும் சொன்னான் அவனின் கனவு காதலி யாரு என. கயல் அதிர்ச்சியில் வாயை பிளந்துவிட ஆதிக்கு அவளின் செர்ரி பல உதடுகளை சுவைக்க ஆசை எழ கஷ்டப்பட்டு அடக்க கொண்டான். கயலுக்கு ஒரே ஆச்சர்யம் இப்படிக்கூட இருக்குமா என… இருந்தாலும் அவளுக்கு மகிச்சியே… தன் உடன் பிறவா சகோதரனின் வாழ்வு நலம் பெற… சிரித்து கொண்டே இருவரும் பேசியபடி வீட்டிற்கு செல்ல, கயல் சீதவிடம் கதை அளக்க சென்று விட ஆதி, செல்வா மற்றும் வெண்பா என கதை அளந்து கொண்டு இருந்தான்.
அதன்பிறகு வந்த சில நாட்களில் இருவருக்கும் வரவேற்பு பெரிய நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்ய பட்டு இருக்க, ஆதி… லாவெண்டர் நிற கோர்ட்டும், கயல் அதே நிறத்தில் பெரிய பிராக் அணிந்து இருக்க பார்த்த அனைவர்க்கும் அவர்களின் ஜோடி பொருத்தத்தை புகழாமல் இருக்க முடியவில்லை. தேவா வந்து வாழ்த்திவிட்டு சென்றான்… அன்று நடந்ததற்கு மன்னிப்பும் கேட்டுவிட்டு நிறைவேறாத தன் காதலை அங்கையே விட்டுவிட்டு சென்றுவிட்டான். அவனின் காதலுக்கு ஒரு பெண் வராமலா போயிவிடுவாள்… நிச்சயமாக அவனின் வாழ்க்கை தேடலை நிறைவு செய்ய ஒருத்தி இருப்பாள்.
வரவேற்பும் மிகவும் விமர்சியாக இருக்க, கண்களால் களவாடி கொண்டு இருந்தனர் அந்த காதல் பறவைகள். கார்த்திக் மந்திரித்து விட்டது போல ஆரு பின்னாடியே சுற்றி கொண்டு இருந்தான். என்றும் விறைப்பாக காக்கி உடையில் சுற்றுபவள் இன்று பட்டுபுடவையில், வெட்கம் என்ற அணிகலனை அணிந்து கொண்டு பார்வையால் அவனை திணற வைத்து கொண்டு இருந்தாள். வரவேற்பும் சிறப்பாக முடிய அனைவர்க்கும் ஆனந்தம்.
இப்படியே நாட்கள் கடக்க, கயல் அவளின் தேர்வில் பிஸி ஆகிவிட, கார்த்திக் காதலில் பிஸி ஆகிவிட, ஆதி தனியாக எல்லா வேலையும் செய்து கொண்டு இருந்தான். ‘இந்த கார்த்திக் சும்மாவே போன் பண்ணா எடுக்க மாட்டான்… இப்போ சுத்தம்… என்னடா ஆதி உனக்கு வந்த சோதனை… எல்லாம் தலை எழுத்து…’ என எண்ணிக்கொண்டே வேலையில் மூழ்கி போனான்.
பூவரசிக்கும், வெற்றி மாறனுக்கும் இன்று திருமணம். அவள் மகிழ்ச்சியாகவும், வெற்றி கோவமாகவும் அமர்ந்து இருக்க… அனைவரும் அட்சதை தூவ அவர்களின் திருமணம் இனிதே நடந்தது. மருந்துக்கு கூட வெற்றியின் முகத்தில் சிரிப்பு இல்லை. அவனின் கோவம் எல்லாமே பூவரசிக்கும் புரிய அவளுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்பு…
பூவரசிக்கும், வெற்றிக்கும் திருமணம் செய்ய நல்ல நேரம் கூடி வந்து இருப்பதால் திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு எடுத்து அவனிடம் சொல்ல வெற்றி மறுத்துவிட்டான் விருப்பம் இல்லை என… இருந்தாலும் பெற்றவர்களின் வற்புறுத்தல், பூவரசியின் கண்ணீர்… கதிரின் பேச்சு… என எல்லாமே சேர்ந்து அரை மனதாக ஒத்துக்கொண்டான். தன் உணர்வுகளுக்கு மதிப்பு இல்லையே… என அனைவரிடமும் பேசுவதை குறைத்து விட்டான். போக போக சரி ஆகிவிடும் என அவர்களும் அத்துடன் விட்டுவிட்டனர்.
இதோ திருமணமும் முடிந்துவிட்டது… கடமைக்கு என சடங்குகளில் பங்கு ஏற்றவன் மனம் வெறுமையாக இருந்தது. அவனை உயிராய் சுவாசிப்பவளுக்கு தெரியாதா அவன் மனநிலை. எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என பொறுமை காத்தாள். இரவு சடங்குக்கு ஏற்பாடு செய்யபட்டு இருந்தது. வெற்றிக்கு இதில் துளியும் விருப்பம் இல்லை. அவனை தயாராகி அறையில் காத்திருக்க சொல்ல, அவனும் அங்கே செல்ல அலங்காரங்களால் நிறைந்து இருந்தது. ‘அவளையே இன்னும் முழு மனசா ஏத்துக்க முடியலை… இதுல இந்த கல்யாணம்… இப்போ இதுவேற…’ என அவனின் கோவம் அனைத்தும் இதற்கு எல்லாம் காரணம் பூவரசி என மொத்த கோவமும் அவளின் புறம் திரும்ப… அந்த கோவத்தை கொட்டிவிட அவளுக்காக வெறுப்புடன் காத்திருந்தான்.
அவனின் மனநிலை தெரியாமல் அந்த பிஞ்சு போட்டு, சிங்கத்தின் குகையில் அடி எடுத்து வைத்தது…. இனி என்ன ஆகுமோ….!!!
காதல் தொடரும்.
மீயாழ் நிலா
தங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கபடுகிறது.
கார்த்திக், ஆரு லவ் சக்ஸஸ்… 😍
வெற்றி, அரசி க்கு கல்யாணம் ஆகிடுச்சு … வாழ்த்துக்கள்… 🥰🥰