முசுடும் முயலும் – 8 😾❤️😻
அனைவரின் பார்வையும் மேய, சுற்றம் சுழ சிரிப்புகளுடன் பெரியம்மாவின் கையைப் பிடித்து , தமக்கையின் துணையோடு, மனையில் அமர்ந்திருந்த அபியின் அருகில் அமர்ந்தாள்.
அபியின் பின்புறம் இருந்து வந்ததால் அபி திரும்பி பார்க்கவில்லை. அருகில் அமர்ந்த பின்பும் அவன் பார்க்காதது தான் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
ஏற்கனவே அவளின் பிம்பத்தை கண்டு சற்று மன வாடியிருந்தாள். அதில் மேலும் எண்ணெய்யை ஊற்றியது போல் அவன் செய்கை இருந்தது. அதில் மனம் சற்று கலங்கினாலும், நிமிர்ந்து பார்க்க, அபியின் அன்னை, பாட்டி, சித்திமார்கள் என அனைவரும் அவளைக் கண்டு சிரித்து அவளை ரசித்தனர்.
அதனைக் கண்டபின்பு அவளின் மனப்பாரம் சற்று அல்ல மொத்தமாகவே வடிந்துவிட்டது. அதோடு அபியின் தங்கை தூரத்தில் இருந்து கை காண்பித்து வாயில் “ஹாய் அண்ணி “எனக் சைகையில் கூறியதும், மனதிற்குள் குத்து ஆட்டம் போட்டுக் கொண்டது.
அவனின் துணைவியாக நாம் இப்பொழுதே மாறி விட்டோம் என்று இதயத்தில் ஐஸ் கட்டியை வைத்தது போன்று இருந்தது. அதனோடு அடுத்தடுத்தாக சில சடங்குகள் செய்து இறுதியாக அவளின் கையை மெலிதாக பட்டும் படாமல் பிடித்து மோதிரத்தை அணிவித்து அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அதில் அவளின் மனதில்
உன் விழிகளில்
விழுந்து நான் எழுகிறேன்
எழுந்தும் ஏன்
மறுபடி விழுகிறேன்
உன் பாா்வையில்
தோன்றிட அலைகிறேன்
அலைந்தும் ஏன்
மறுபடி தொலைகிறேன்
ஓா் நொடியும்
உன்னை நான் பிாிந்தால்
போா்க்களத்தை
உணா்வேன்
உயிாில் !
எனப் பாடாலாக அத்தருணத்தை மாற்றிக் கொண்டாள். அவனுக்கு பாடல் தோன்றவில்லை ஆனால் அவளின் பால் மனம் சாய்வது தெரிந்தாலும் அதனை வெளிப்படுத்துவதற்கு தயக்கம் காட்டிக் கொண்டே இருந்தான்.
ஒரு வழியாக அனைத்தும் முடிந்து அனைவரின் கவனிப்புடன் அவளை செம்மையுற செய்து விட்டு, இறுதியாக அபியும் கண்ணால் சென்று வருகிறேன் எனக் கூறி மேலும் வெட்கமடைய செய்து விட்டே சென்றான்.
தான் சற்று பூசலான உடல் வாகாக இருக்கிறோம் என அரை மணி நேரத்திற்கு முன் நினைத்து மனதில் ஒரு பாரத்தை தூக்கி வைத்தாள். ஆனால், இப்பொழுது சிறகு போல் மனதில் பறந்து கொண்டிருந்தாள். அவன் தொட்ட விரலில் இன்னும் அவனின் குறுகுறுப்பு இருந்தது. அவன் அசைத்த கண் அசைவு இன்னும் அவளை இம்சித்தது. அனைத்தையும் நினைத்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு, வந்தவர்களிடம் சிரித்து வழியனுப்பி விட்டு, இவளும் இரவு உடைக்கு மாறி நன்கு முகத்தை கழுவி, தூக்கத்தை தூர விட்டு , அபியின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.
😾❤️😻
அதற்கு நேர்மாறாக உத்ராவின் வீட்டில் இருந்து வந்தவர்கள் வழமையாக உள்ளது போல் பேசி சிரித்து விட்டு, அவரவர் அறைக்கு சென்று விட்டனர்.
அபி படித்து முடித்து ஒரு வருடம் அப்பாவின் தொழில் இருக்கும் வரை அன்னை, அப்பாவுடன் ஒரே அறையில் உறங்கியவன், தனி தொழில் செய்யலாம் என்று முடிவு எடுத்த உடனேயே அவனுக்கு என்று ஒரு தனி அறை எடுத்துக் கொண்டான்.
அதே அறையில் படுத்துக் கொண்டு மேலே ஓடும் விசிறியை பார்த்துக் கொண்டே இருந்தான். ஒன்பது மணிக்கு வந்து படுத்தவன் ஒன்பதரை ஆகியது , பத்தாகியது, பத்தரையும் ஆகியது. ஆனால், அவனிடம் மட்டும் எந்தவொரு சலனமும் இல்லை.
அவனின் மனதோடு பேசிக் கொண்டிருக்கிறான் என்பது அவனின் யோசனை பார்வையே கூறியது.
அவனின் மனக்கண்ணில் அவளின் பிம்பமே நிரம்பி இருந்தது.
அவளை ரெஸ்டாரண்டில் பார்த்து விட்டு வந்ததில் இருந்து அவனுக்கு வேலை பளு அதிகமாக இருந்தது. அதோடு இன்றும் விடுமுறை எடுப்பதால் இன்றைக்குரிய வேலையையும் சேர்த்து பார்த்துக் கொண்டிருந்தான். இரவும் தாமதமாக தான் வந்தான் இன்று காலையிலும் கொஞ்சம் சீக்கிரமே எழும்பி வீட்டில் இருந்தே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதன் பின்பு, சாயங்காலம் ஒவ்வொருவராக வீட்டிற்குள் நுழைய, இவனும் தயாராக சென்று விட்டான். அந்த ஓட்டத்தின் முடிவு இரவு ஒன்பது மணிக்கு தான் முடிந்தது . இவ்விரு நாட்களிலும் அவன் வேலையில் இருந்தாலும் திடீரென்று தோன்றும் அவளின் முகம் அவனை இம்சை செய்தது. ஆனாலும், அதை கண கச்சிதமாக சமன் செய்து வேலையில் கவனத்தை செலுத்தி விட்டான்.
ஆனால், இப்பொழுது விரும்பியே அவளை நினைத்துக் கொண்டிருந்தான். உத்ரா மற்றும் சுற்றாதார்களின் கண்களுக்கு வித்தியாசம் தென்படாதவாறு அவளை அணு அணுவாக ரசித்திருந்தான்.
அவளை முதன் முறை லிப்டின் உள்ளே பார்க்க, அவளின் படப்படக்கும் கண் அவனை மொத்தமாக சாய்தே விட்டது. அதில் அவன் தன்னை மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு ரசிப்பதாகவே இருந்தது. ஆனால், இந்நேரம் அவனுக்கே ஆச்சர்யமாக தோன்றியது. நாம் பார்த்து வளர்ந்து படித்த இடத்தில் உள்ள பெண்களின் அளவில் இருபது சதவீதம் மட்டுமே இருப்பவள் ஏன் தன்னை இவ்வளவு இம்சிக்கிறாள் என்று.
அவளின் நிறம் அவனுக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லை. ஆனால், அவளின் பருமான உடல்வாகு . இவன் யோகா, உடற்பயிற்சி என்று இருப்பவன் . அதனால், அவனிற்கு இவள் மாறினால் நன்றாக இருக்கும். அவளாக மாற வேண்டும் என்று நினைத்து கொண்டான்.
அவளின் எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என நினைத்து கொண்டான் அவளின் மனதை நோகடிக்க போகிறோம் என்று தெரியாமல்.
பின்பு, அலைபேசியில் நோட்டிஃபிகேஷன் சத்தம் வந்ததில் தனது அலைபேசியை காண வழக்கம் போல் அவனின் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து தொழிற்சாலை விஷயமாக வரும் என நினைத்து அவன் சாதாரணமாக காண , அவனின் நோட்டிஃபிகேஷனில் உத்ரா_மணி உங்களை அக்செப்ட் செய்துள்ளார் என்று வந்தது. அதனுடன் அவளும் ரெக்வஸ்ட் கொடுத்தாக இன்ஸ்டாகிராமில் வர , அவள் ரெக்வஸ்ட் கொடுத்ததை ஓரம் தள்ளி அவளின் முகப்பு பக்கத்திற்கு சென்றான்.
அவளின் ஒவ்வொரு புகைப்படத்தையும் அங்குலம் அங்குலமாக பார்த்தான். பின்பு, அவள் கூறிய அவளின் வரைப்பட முகப்பு பக்கத்தை பார்க்க, அவளின் ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் நிறைய இடைவெளி இருக்கின்றதோ என்று முதன்முறையாக சிந்தித்தான்.
அதனால் அதனை பற்றியே யோசித்து விட்டு மணியை பார்க்க, மணி பதினொற்று மணி முப்பது நிமிடம் எனக் காண்பிக்க, அவன் மறுநாள் காலை தொழிற்சாலைக்கு செல்ல வேண்டும் என்ற நினைப்பில் கண் அயர்ந்து விட்டான்.
😾❤️😻
காலை ஏழரை மணி அளவில் வழக்கம் போல் தென்றல் சண்டையிட்டு கொண்டிருந்தார் பாத்திரத்துடன் . அச்சத்ததில் கடினப்பட்டு கண்னை திறக்க முடியாமல் திறந்து மெல்ல எழ, நேற்று நடந்த அனைத்தும் அவளிற்கு அரை நொடியில் நினைவிற்கு வந்தது.
உடனே , சட்டென்று தனது அலைபேசியை திறந்து ஏதேனும் அபி மெசேஜ் செய்திருப்பான் என்ற ஆர்வத்துடன் பார்த்தவளுக்கு, அவளின் ரெக்வஸ்ட்டை கூட அவன் ஏற்கவில்லை என்பது பெரிய ஏமாற்றமாக தோன்றியது. அதனை மனதிற்குள் முயன்று மட்டும் அடக்கி வெளியில் சிரிப்பது போல் சிரித்துக் கொண்டே வந்தாள்.
பிள்ளைகள் டிவி பார்த்துக் கொண்டிருக்க, அப்பாவும் அம்மாவும் தீவிரமாக எதுவோ பேசிக் கொண்டிருந்தனர். அதோடு மைத்ரேயி யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தாள்.
இவர்களை நோட்டம் விட்டுக் கொண்டே பல்லை துலக்கி விட்டு, டீயை சூடு பண்ணி பிள்ளைகளின் அருகில் அமர்வது போல் அமர்ந்து இவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது “ஏங்க ஒரு வாரத்துக்குள்ள எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சுடுலாமா? இல்லைனா கம்மியா செய்யுற மாதிரில இருக்கும். அது மட்டுமா அதை விட்டு நிச்சயதுக்கு நிறைய செய்யனுமே ? அதுலாம் எப்போ செய்யுறது ? “
உத்ராவிற்கு “என்னது ஒரு வாரத்துல நிச்சயமா ? “என அதிர்ந்தாலும், இன்னொரு புறம் “குத்தால அருவியில குளிச்சது போல் இருக்குதா ? ” என்பது போல் மனம் குளு குளு என இருந்தது.
இருந்தும் வெளியில் காட்டாமல் அவர்களின் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்க, ஒரு சில நொடிகளில் வைரமணிக்கு சங்கரனிடம் இருந்து அழைப்பு வந்தது.
😾❤️😻
அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை நிச்சயம் வைத்துக் கொள்ளலாம். அதன் பின்பு, அவர்களின் சொந்ததில் திருமணம் இருப்பதால் உடனே நிச்சயம் வைத்து விட்டு , அத்திருமணம் முடிந்த பின்பு நம் வீட்டு திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி விட்டார்.
அபியின் வீட்டில் பெரியவர்கள் அனைவருக்கும் இதுவே சரியெனப் பட, பெண் வீட்டில் கேட்டார் சங்கரன். வீட்டில் கலந்து பேசி விட்டு சொல்கிறேன் என்று கூறி, வீட்டில் கூறினாலும் வைரமணிக்கு அவர்களின் நிலைமை புரிந்து சங்கரனிடம் சரியெனக் கூறலாம் என்று போனை எடுக்கும் சமயம் அவரே அடித்து விட்டார்.
வைரமணி தங்கள் வீட்டில் சம்மதம் எனக் கூற, அடுத்த இரண்டு மணி நேரத்தில் சங்கரன் மண்டபம், ஐயர் கொடுத்த லிஸ்ட் , பத்தரிக்கை டிசைன் என அனைத்தும் வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டார்.
பின்பு, கெளதமியும் தென்றலுக்கு அழைத்து உத்ராவின் பட்டு , மேக் – அப் என அனைத்தும் பேச, தென்றலும் அபியின் டிரஸ்யையும் பற்றி பேசி முடிவு எடுத்துக் கொண்டனர்.
நாளை மறுநாளே நல்ல நாள் என கூறி அன்றே இருவருக்கும் உடை எடுத்து விடலாம், நிச்சயத்திற்கு நேரமும் பார்த்து விடலாம் எனக் கூறி முடிவு எடுத்து விட்டனர்.
இவ்வளவு நடப்பதையும் வேடிக்கை மற்றுமே பார்த்தாள் உத்ரா . எல்லாம் முடிந்து பதினொன்று மணி அளவில் கெளதமி உத்ராவிற்கு அழைத்தாள். ஒவ்வொரு அழைப்பும் வரும் பொழுதும் அது அபியாக இருக்குமோ என நினைத்து ஏங்கிக் கொண்டே இருந்தாள். கெளதமியின் அழைப்பு மகிழ்வைக் கொடுத்தாலும் ஓரத்தில் ஏமாற்றமும் இருக்கத் தான் செய்தது.
அவரும் அவளுக்கு பிடித்த நிறம் எதுவென கேட்க, அதை கூறி தாங்களே நல்ல விதமாக பார்த்து எடுத்துக் கொள்ளுமாறு கூறி விட்டாள் உத்ரா. அதோடு மேக்கப் – அப்பும் கெளதமிக்கு தெரிந்தவர் இருப்பதாக கூற, அதற்கும் சரியெனக் கூறி விட்டாள்.
பின்பு, உத்ராவும் அவளின் வீட்டிற்கு அருகில் உள்ள ஒப்பனை கலைஞரிடம் ஃபேசியல் செய்வதற்கு கேட்க, அதற்கும் ஒரு நாள் கூற , அன்று வருவதாக கூறி விட்டாள்.
பின்பு, வீட்டிற்கு வந்தவுடன் உத்ராவை உடை எடுக்க அழைக்க, தாங்களே பார்த்து எடுத்துக் கொள்ளுமாறு கூற, நேரம் குறைவாக இருப்பதால், அபியின் வீட்டில் நீங்களே பார்த்து எடுத்து கொள்ளுங்கள் என கூறிவிட , சங்கரன் நாளைக்கே உங்களுக்கு பத்திரிக்கை கொடுத்து விடுகிறேன் என்று கூறி விட்டார்.
இவர்களும் உறவினர்கள் லிஸ்ட் எடுத்து எழுதி, திங்கட்கிழமை ஆரம்பித்து விடலாம் என முடிவு எடுத்து விட்டனர். உத்ராவின் வீட்டில் உத்ராவை தவிர அனைவரும் ஈரோட்டிலேயே நல்ல கடையில் அவர்களின் உடையை தேர்ந்து எடுத்துக் கொண்டனர்.
இவ்வாறு பேசியே சனிக்கிழமை ஓடியது. ஞாயிறு பொழுதும் வந்தது. சனிக்கிழமை இரவாவது அவன் பேசுவான் என்று எதிர்ப்பார்த்து இருந்த உத்ராவிற்கு மறுபடியும் கிடைத்தது ஏமாற்றமே. அது ஏக்கமாக மாறி முகத்தில் பிரதிபலித்தது.அதை அன்னையாக தென்றலும், தமக்கையாக மைத்ரேயியிக்கும் புரிந்தாலும் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் அவளை யோசிக்க விடாமல் பிள்ளைகளை கவனிக்குமாறு கூறி விட்டார்கள்.
ஞாயிறு காலை பத்து மணியளவில் பத்தரிக்கையும் வர இவர்கள் லிஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தனர்.
வெளியே சென்ற வைரமணி வீட்டிற்குள் வந்து இவர்களுடன் அமர்ந்தவர் யோசனையுடன் “ஏப்பா உன் வீட்டில எல்லாரும் அசைவம் சாப்பிட மாட்டாங்க பா?
“என்னது 😱? “
“அம்மா …. எனக்கு ரொம்ப வயசுலாம் ஆகல….. மாப்பிள்ளை சாப்பிட மாட்டாரு ….. வீட்டுல ஆம்பளைங்க சாப்பிட மாட்டாங்க… பொண்ணுங்க சாப்பிடவாங்கனு சொல்லுறதுலாம் நல்லா தான் இருக்கு…. ஆனா எனக்கு பையன் பிறந்தா அவனும் சாப்பிட மாட்டானே ? அப்போ என்ன பண்ணுறது ? அதுனால எனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம் “
முதலில் வந்த ஜாதகத்தை தட்டிக் கழிக்கும் பொழுது உத்ரா சொன்ன வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டது.
கீர்த்தி ☘️
என்ன உத்ராவுக்கு வந்த சோதனை. மாப்பிள்ளை வீட்டில் அசைவம் சாப்பிட மாட்டாங்கன்னு உத்ரா தலையில இடியை இறக்குறீங்களே இது நியாயமா??
❤️❤️❤️❤️❤️
உத்ரா பாவம்