Loading

முசுடும் முயலும் – 7 😾😻

இவர்கள் சந்தித்ததை கூறி முடித்து கண்களை சிமிட்டி பாவமாக அமர்ந்திருந்தாள். பாலா அவளை முறைத்துக் பார்த்தாலும் ஒரு வகையில் அவளின் வாழ்க்கை துணையை தேர்ந்து எடுத்து விட்டாள் என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தது.

பாலா முறைப்பதை கண்டு “அதான் சிட்சுவேஷனு சொல்லுறேன். அப்புறம் ஏன்டா இன்னும் முறைச்சுக்கிட்டு இருக்க? ” உத்ரா கேட்க, அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்தான்.

அதில் சற்று நெளிய “என்னனு விஷயத்துக்கு நேரா வா? நீ ஒன்னும் ஹில்டியா ஃபீல் பண்ணி என்கிட்ட சொல்ல வந்திருக்கேனு நான் நம்ப மாட்டேன். “

“டேய் என்னடா…… “என்று கூறி அவளின் தோளில் தட்ட முற்பட, சட்டென்று விலகி “ஹே…… ஹே….. என்ன மேட்டர்? “

“அது…. நேத்து நம்பர்லாம் வாங்குனாருல ? “

“ஏன் இன்னும் பேசலையா? “

” இல்லை இல்லை……. அவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே ஹாய் திஸ் இஸ் மை நம்பர்னு மெசேஜ் பண்ணாரு! நானும் சேவ் பண்ணிக்கிட்டேன் “

அதிலேயே புரிந்தது பாலாவிற்கு அவர் அதற்கு மேல் பேசவில்லை என்று . அதில் தன் தோழி வாடுகிறாள் எனப் புரிந்து ” ஹே…. நம்ம பாக்கும் போது  ஏதோ பேருலாம்  வித்தியாசமா இருந்தது “

“ஹே…. ஆமாண்டா ! நானும் சொல்ல மறந்துட்டேன்! “என அவளும் மற்றதை மறந்து சிரித்துக் கொண்டே கூறினாள்.

“என்னது? “

😾❤️😻

” கடைசியா …. இவ்வளவு விஷயம் நான் கேட்டு சொன்ன? இப்போ நீ ஏதாச்சும் கேட்கலாமே? ” என அபி கேட்டான்.

” உங்க பேரு என்ன? “

“ஹான் …….. “

“இல்லை…. உங்க ஜாதகம் அதுல ஏதோ பேரு இருந்துச்சு. இங்க எல்லாரும் வேற மாதிரி சொல்லுறாங்க …. அதான் “

“என் பேரு அபிமன்யூ…. பட் அது பெட் நேம்…… ஸ்கூல் காலேஜ்ல காசிநாதன் “

“ஓஹோ “என சாதாரணமாக கூறுவது போல் கூறினாலும், மனதிற்குள் அய்யோ என்று இருந்தது.

“ஏன் …. எதுவும் பிரச்சனையா ? “

“ச்சை…. ச்சை ” என வெளியில் சிரித்தாலும், உள்ளுக்குள் நண்பன் படத்தின் இலியானா நிலைமை போல் தான் நாமும் என்று நினைத்துக் கொண்டாள்.

❤️❤️❤️❤️❤️

“உன்னை மரியாதை இல்லாமலா பேசுறாரு ? ” புருவ முடிச்சோடு பாலா கேட்க,

அவனின் சட்டையை திருகிக் கொண்டே “அதான்டா லவ் …… ” என அவள் வெட்கப்பட , சகிக்க மாட்டாமல் நொந்து கொண்டிருந்தான் பாலா.

“இருந்தாலும் …… “

“என்னடா இருந்தாலும் …. “

“பேரு……. ஹா ஹா ஹீ ஹீ…… அய்யோ அய்யோ “என வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ,

“ச்சீ …. போடா ” எனக் கூறி, திரும்பவும் இன்ஸ்டாக்ராமில் அலச, “உன் ஆளு ஐடி சொல்லு….. “

” அத தான்டா நானும் தேடிக்கிட்டு இருக்கேன் “

“அப்படியா …. அப்போ இது யாரு? ” எனக் கூறி அபியின் ஐடியை காண்பித்தான் பாலா.

“எப்பூடி டா? “

“நீ அபினு தேடுனீயாக்கும் ? ” பாலா முகத்தை சுளித்து கொண்டு கேட்க, “ஹீ ஹீ …….. “என சிரித்துக் கொண்டே பார்க்க, அதில் ஏற்கனவே அவளுக்கு விண்ணப்பம் (ரெக்வஸ்டு ) கொடுத்து இருந்தான். அதில் கண்கள் எமோஜியில் உள்ளது போல் இரு கண்களிலும் இதயம் பளிச்சென்று தென்பட்டது போல் ஒரு உணர்வு.

அவள் கவனிக்காமல் இருந்ததுக்கும் பாலாவிடம் இருந்து சில பல திட்டுகளை வாங்கிக் கொண்டு மாலை பொழுதில் நடக்கவிருக்கும் நிச்சயத்திற்கு தயாராக வீட்டிற்கு சென்று விட்டாள்.

விநாயகர் வழக்கம் போல் சிரிப்பது போல் இருந்தது. அதோடு “அனைத்தும் மாயையே…… நீ நினைக்கும் கெட்டவை அனைத்தும் கெட்டதில்லை. அதே போல், நல்லது அனைத்தும் நல்லதில்லை. ” என கூறுவது போல் இருந்தது.

❤️❤️❤️❤️❤️

மாலை 5 மணி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா, அத்தை, பாட்டி , தாத்தா , மாமா, பெரியம்மா, சித்தி, அண்ணன் , தம்பி, அக்கா, தங்கச்சி என அனைத்து சொந்தங்களும் சூழ்ந்து இருந்தது.

ஆண்கள் அனைவரும் வெளியிலும், ஹாலிலும் அமர்ந்து கணக்கிலா காபிகளை உள்ளே இறக்கி கொண்டே மாமனார் வீட்டைப் பற்றியும் , தொழில் சார்ந்த பேச்சுகளையும் பேசிக் கொண்டிருந்தனர்.

வீட்டின் மூத்த பெண்மணிகள் விசேஷத்திற்கு கொண்டு போக வேண்டிய தேங்காய், பழம், ஸ்வீட், காரம், வெத்தலை பாக்கு, மஞ்சள் பிள்ளையார், மாலை, மாப்பிள்ளையை கவுரப்படுத்த துணிமணிகள், நகை என பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர் .

உத்ராவின் சித்தி, பெரியம்மா, அத்தைமார்கள்  அனைவரும் தானும் தயாராகிக் கொண்டே உத்ராவின் ஒப்பனையை (மேக்-அப்) ஒப்பனை கலை நிபுணரிடம் (மேக்-அப் ஆர்டிஸ்ட்)  காசில்லா விமர்சனம் செய்து கொண்டிருந்தனர்.

அதையும் முகம் சுளிக்காமல் அவர்கள் ஏற்றுக் கொண்டு அவளை மெருக்கேற்றினர். அவள் உடல் சற்று பூசிய உடலாக இருந்தும், கருமை நிறமாக இருந்தாலும் அவளின் கலையான முகம் அவளை இன்னும் அழகாக கூட்டியது. வானத்தின் நிறத்தில் தங்க ஜரிகை கொண்ட பட்டு சேலையை கட்டியிருந்தாள். அதற்கு ஏற்றாற் போல் கற்கள் பதித்த அணிகலன்கள் கழுத்திற்கும் , காதிற்கும், கைக்கும் ஒரே மாதிரி அணிந்திருந்தாள். நெற்றியில் சிறிதாக ஒற்றை கல் பொட்டு. அதற்கு மேல் சின்ன கீற்றாக சந்தனம்.

கண்ணிற்கு மட்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்பனைகளை செய்து கவர்ந்திழுக்கும் காந்தமாக மாற்றினாள். உதட்டிற்கு மெலிதாக சாயம் பூசி கொண்டாள்.

ஓரளவு வேலைப்பாடு செய்யப்பட்ட ப்ளவுசும் அணிந்திருந்ததால் தேவதை போல் தெரிந்தது என்று சொல்ல முடியாது. ஆனால், எப்பொழுதும் போல் இல்லாமல் இன்று சற்று கூடுதல் அழகாகவே தெரிந்தாள். அதற்கு காரணம் ஒப்பனையோடு , அவனை காண போகும் ஆவலில் பெண்ணுக்கே உரிய வெட்கமும் சேர்ந்து மெருக்கேற்றியது.

ஆறு மணி ஆனதும் வீட்டின் மூத்தோர்களை வைத்து வீட்டின் சாமிற்கு பூஜை செய்து விட்டு, மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனைவரும் சென்று விட்டனர் உத்ராவை தவிர.

அந்த ஒரு மணி நேர பொழுதும் எவ்வாறு கழிய போகுதோ என்று நொந்துக் கொண்டே வெளியில் சிரித்துக் கொண்டு தனது அலைபேசியை அலச ஆரம்பித்து விட்டாள்.

ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் ஆகியது, இரண்டு மணி நேரம் ஆகியது. “ஏன் இவ்வளவு நேரம் ” என யோசித்துக் கொண்டிருந்தாள். அந்நேரம் வெளியில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. அதில் படப்படப்பு வந்து எழுந்து நிற்க, அவளின் துணைக்கு அமர்ந்திருந்த ஒரு வயதான பாட்டி வந்து ” உள்ளே போ உத்ரா! மாப்பிள்ளை வீட்டாளுங்க வந்திருக்க போறாங்க “என கூறியவுடன் உத்ரா அருகில் இருக்கும் அறைக்கு நுழைந்தாள்.

ஒரு சிறு மணித் துளிகளில் பேச்சின் சத்தம் கேட்டது. யாரென்று எட்டிப் பார்க்க, அவள் கதவை திறக்க , வெளிப் பக்கமும் கதவை திறக்க, திறந்தவுடன் 😱😱😱😱😱😱😱

😾❤️😻

அனைவரும் அபியின் வீட்டில் நுழைந்தவுடன் அவர்கள் தகுந்த மரியாதையுடன் அனைவரையும் வரவேற்றனர். உள்ளே நுழைந்த அனைவரின் பார்வையும் வீட்டை தான் சுற்றியது.

வீட்டை அளந்தாலும் உத்ராவின் பெற்றோர்கள் காரியமே கண்ணாக அனைத்து வேலைகளையும் செய்தனர். பின்பு, உத்ராவின் தந்தையையும், அபியின் தகப்பனையும் ஒன்றாக அமர வைத்து பெரியவர்களின் முன்னே இருவரும் தத்தமது துணைவிமார்களோடு வெற்றிலை பாக்கு மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

பின்பு, மாப்பிள்ளையை அழைக்க, தங்க ஜரிகையில் பட்டு வேஷ்டியுடன் அதே கோல்டன் நிறத்தில் சட்டை அணிந்து தலையை ஜெல் வைத்து வாரி , தாடியை அழகாக டிரிம் செய்து , கையில் ஒரு வெள்ளி காப்பு, மறு கையில் டைட்டான் வாட்ச் என அணிந்து தனது சகோதர சகோதிரிகளுடன் கம்பீரமாக மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

இதைக் காணும் பொழுது இருமணமக்களின் பெற்றோர்கள் உள்ளம் பூரித்தது. அதே மகிழ்ச்சியுடன் அவனை அமர வைத்து சகல சம்பிரதாயங்களுடன் மரியாதை செய்யும் விதமாக துணிமணிகள் , பூ , பழம், அவனுக்கு வைரத்தில் மோதிரம்  என அனைத்தும் வைத்து அவனை மருமகனாக்கிக் கொண்டனர்.

அதன் பின்பு, வழக்கம் போல் உத்ராவின் உறவினர்கள் அனைவரும் அபியின் அருகில் வந்து உத்ராவிற்கும் அவர்களுக்குமான உறவை பற்றி விவரித்துக் கொண்டனர். பின்பு,  அனைத்தும் முடிந்து அனைவரும் சாப்பிட்டு உத்ராவின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.

❤️❤️❤️❤️❤️

உத்ரா கதவைத் திறக்க, அபி வருவான் என்று எதிர்பார்த்த உத்ராவிற்கு, அக்கா வழி சொந்தமான அத்தை சிரித்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தே விட்டாள்.

வந்தவர் அபியின் வீட்டைக் கண்டு கடுப்பில் இருந்தவர், இவளைக் கண்டவுடன் ” உத்ரா மாப்பிள்ளை, மாப்பிள்ளை வீட்டாளுங்க , வீடு எல்லாம் சூப்பரா இருக்கு “

அவளின் அகத்தின் மகிழ்வை முகத்தின் வழியே காண்பிக்க, அதனை பொறுக்க மாட்டாமல் ” என்ன நீ தான் கொஞ்சம் குண்டா இருக்க மாப்பிள்ளையை விட ! மாப்பிள்ளை கருப்பா இருந்தாலும்  ஒல்லியா நல்லா சிக்குனு உடம்ப வச்சிருக்காரு !  நீ வீட்ல தான இருந்த எதுனாச்சும் எக்ஸர்ஸைஸ் (excercise) , அப்புறம் முகத்துக்கு உடம்புக்குலாம் எதுனாச்சும் போட்டு கலராகி இருந்து இருக்கலாம் ” என்று மனதை புண்படுத்தி விட்டே சென்றார்.

அதனை பிரதிபலிக்கும் முன்னரே உத்ராவின் வீட்டார்கள் வரிசையாக உள்ளே நுழைந்தனர். மாப்பிள்ளை வீட்டார்களை கவனிப்பதற்கு ஏதுவாக அனைத்தையும் சரியாக எடுத்து வைத்து விட்டு, தென்றல் தனது மகளைக் காண சென்றார்.

அனைத்தும் அழகாக முடிந்தும், அவளது ஒப்பனையும் அழகாக இருந்தும் முகம் சற்று வாட்டமாக இருந்தது அன்னையான தென்றலுக்கு நன்றாகவே தெரிந்தது. இருந்தும் பொதுவில் எதுவும் கேட்கக் கூடாது என நினைத்து , அவளுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்து விட்டு, மைத்ரேயியையும்  அருகில் நிற்க வைத்து விட்டு தான் சென்றார்.

பிள்ளைகளைக் கண்டவுடன் மனம் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதி அடைந்தது. பின்பு, ஒரு மூத்த பெண்மணி “மாப்பிள்ளை வந்தாச்சு ! உத்ராவை கூட்டிக்கிட்டு வாங்க ! ” எனக் கூறியவுடன் சட்டென்று திரும்பி ஆளுயுரக் கண்ணாடியில் தன்னை திரும்பி பார்த்தாள் . அதில்  சற்று பூசலாகத் தெரியும் தனது உருவம் இப்பொழுது மிகவும் குண்டாக இருப்பதாக தோன்றியது !

ஒரு நிமிடம் நின்று விட்டாள் அறையின் வாயிலில் !

இவளின் இந்த தாழ்வு  மனப்பான்மையை அவன் போக்குவானா இல்லை அவனும் சேர்ந்து இவளை தள்ளி வைப்பானா என்று பார்க்கலாம் !

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
18
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. நல்லா கலகலன்னு இருந்த உத்ராவை இப்படி தாழ்வு மனப்பான்மையில் தள்ளி விட்டீங்களே

      1. Author

        ❤️❤️❤️❤️❤️❤️

    2. மாமி டூ மச். உத்ரா பாவம்