முசுடும்😾 முயலும் 😻- 4
உத்ராவின் வீட்டில் வைரமணி மற்றும் தென்றல் எதுவோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர் உத்ராவும் பாலாவும் உள்ளே நுழையும் பொழுது.
” போச்சு ! புட்டுகிச்சு போல ! அதான் அடுத்த மாப்பிள்ளைக்கு என்ன செய்யனும் பேசுறாங்களோ? “
“வாயை கொஞ்சம் ….. 🙊 “எனக் கூறி சைகை செய்து விட்டு, வீட்டிற்குள் நுழைந்தவுடன் இடப் பக்கவாட்டில் உள்ள அறையில் இருந்து சத்தம் வந்ததில் தனது தமக்கை தான் இருக்கிறாள் எனப் புரிந்து இருவரும் உள்ளே நுழைந்தனர்.
அங்கு மைத்ரேயி இரு பிள்ளைகளையும் வைத்து சிரமப்பட்டு கொண்டிருந்தாள். இவர்கள் இருவரும் வந்தவுடன் அவளின் விழிகள் ஒளியே வந்தது போல் இருந்தது.
“அடக்கடவுளே சிங்க குகைக்குள்ள போக பயந்துட்டு புலி குகைக்கு வந்துட்டோமே ! ” எனப் பாலா உத்ராவின் காதில் கிசுகிசுக்க,
“ச்சீ…… வாய மூடுடா ….. இவன் வேற “என திட்டி, கொட்டி, பிள்ளைகளை அணைத்து கொஞ்சி, அவர்கள் கூறும் ஒரு சில கதைகளை கேட்டு விட்டு, நைசாக மைத்ரேயியின் அருகில் அமர்ந்தாள்.
அவளோ அனைத்தையும் கண்டாலும் காரியமே கண்ணாக துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள். அதற்குள் பாலாவை பிள்ளைகள் படுத்திய பாட்டில் தன் வீட்டிற்கு இருவரையும் அழைத்து சென்று விட்டான் .
இவளும் இப்பொழுது கூறுவாள் அடுத்து கூறுவாள் என்று அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க , அவளோ சட்டென்று முகத்தை திருப்பி அவளிடம் எதுவோ கூற வருவது போல் பார்த்து தலையை தட்டி, இட புறமாக ஆட்டி கொண்டு திரும்பி விடுவாள். இதனை இரு முறை செய்யும் பொழுதே மெலிதாக எரிச்சல் எட்டிப் பார்த்தது. இருந்தும் தன்னை கட்டுபடுத்திக் கொண்டு காத்திருக்க, அடுத்த மூன்று முறை துணிகளை அலமாரிகளில் வைக்க சொல்வதும் , தண்ணீர் எடுத்து வர சொல்லவும், அலைபேசிக்கு சார்ஜர் போட சொல்லுவதுமாக இருந்தாள்.
அதையும் முகம் சுளிக்காமல் பல்லைக் கடித்துக் கொண்டு செய்து முடித்தவள் வந்துப் பார்க்க, மைத்ரேயி அவர்களின் பெற்றோர்களின் அருகில் அமர்ந்து நாக்கை துருத்திக் காண்பித்தாள் .
அதில் வந்த கோபத்தில் உத்ரா சத்தமில்லாமல் அறைக்கு சென்று படுத்துக் கொண்டாள். கண்களை மூடி சிந்தனை செய்ய, கண்ணுக்குள் அவனது முகம், அவளை அறியாமல் அவளாகவே சித்தரித்த இருவரின் மகிழ்வான தருணங்கள், மனம் திக்கென்று ஆகியது. ஒரு வேளை இல்லையென்றால் என்னவாவது என்று மனம் கூக்குரல் இட்டது.
அதனால் அவளின் கண்களின் ஒரத்தில் வந்தது கண்ணீர். அதனை கட்டுபடுத்த முயற்சி செய்தாள். இதற்கு முன் இவளுக்கு பிடித்த மூன்று ஜாதகங்கள் இவளின் தேகத்தில் உள்ள நிறை குறைகளை கூறி இது தான் காரணம் என்று கூறாமல் வேண்டாம் என்று கூறி விட்டனர்.
அதனை அவள் கருத்தில் கூட கொண்டு செல்லவில்லை. ஏனென்றால், அவளுக்கு அப்பொழுது வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்று கொண்டிருந்தது. ஆனால், இவனின் விஷயத்தில் அதுவும் உண்டு என்பது போல் தராசை சரிசமமாக வைத்துக் கொண்டாள்.
ஒருவழியாக அனைத்தையும் மறந்து ஐந்து நிமிடம் கண் அசந்திருப்பாள். “ஏன் டி….. இந்தாடி ….. ” ஏதோ தூரத்தில் இருந்து அழைப்பது போல் இருந்தது. கடினப்பட்டு அவளின் கண்களைத் திறக்க முயற்சி செய்தாள். அதனின் வெற்றியில் திறக்க, அவளின் அம்மா தென்றல் தான் அழைத்துக் கொண்டிருந்தார்.
நன்கு கண்களை கசக்கி திறந்து பார்த்த உத்ராவிற்கு பின்பு தான் தெரிந்தது அவளின் அம்மா முந்தானையால் நெற்றியில் வழியும் வேர்வையை துடைத்துக் கொண்டு படப்படப்புடன் அழைத்துக் கொண்டிருந்தார். அவரின் படப்படப்பில் எதுவோ மாப்பிள்ளை வீட்டாரே வெளியில் நிற்பது போன்று தோன்றி சடாரென்று எழுந்தாள்.
“அம்மா , அம்மா! என்னம்மா என்னாச்சு? ” என அம்மாவிடம் கேட்டாலும் காதில் எதுவும் கூட்டத்தின் சலசலப்பு கேட்கிறதா என்று காதைத் தீட்டிக் கொண்டிருந்தாள். எவ்வளவு முயன்றும் கேட்காததால் தன்னை தானே சமன் செய்யும் பொருட்டு “அதான் படிச்ச குடும்பம்னு பாத்தோமே அதனால அமைதியா நான் வரனும் வெயிட் பண்ணுறாங்க போல ” என அவளே அவளுக்கு கூறிக் கொண்டாள் . ஒரு புறம் மனம் காரி துப்பினாலும் அதனைக் கண்டு கொள்ளாமல் இதனை நினைத்துக் கொண்டு புரியாதது போல் தனது தாயைப் பார்த்தாள்.
அவரோ , “வந்து தொலை ” என்று கூறி வெளியேறி விட்டார். அவளுக்கோ யோசனை தன்னை குனிந்து கீழே பார்த்தாள். நைட் டிரஸ் என்கின்ற பெயரில் டிசர்ட்டும், அரைகால் பேண்ட்டுடன் இருந்தாள். தலை அலங்ககோலமாக இருந்தது. வேகமாக எழுந்து முகம் அலும்பி கொஞ்சம் பெட்டராக இருக்கும் என்று நினைத்து புதிய நைட்டியை எடுத்து அணிந்து தலையை லேசாக வாரி விட்டு, புருவத்திற்கு மெலிதான ஒரு பூசலோடு தன்னை அழகுப்படுத்திக் கொண்டாள்.
அவள் எதுவும் தெரியாதது போல் வந்தாலும், அவளின் கண்ணில் அது நன்றாகவே பிரதிபலித்தது. வெளியில் எட்டிப்பார்க்க , ஒரு நடமாட்டமும் இல்லாமல் வீட்டோடு ரோடும் அமைதியாக இருந்தது.
நிதர்சனம் புரியவே ஐந்து நிமிடம் எடுத்துக் கொண்டது. இருந்தும் படத்தில் வருவது போல் சட்டென்று வருவான் என்கின்ற ஆசையில் சிரித்துக் கொண்டே அப்பா அம்மாவை பார்த்து சிரித்து பேசிக் கொண்டிருந்த பொழுது சட்டென்று அவன் வருவான் என்றெல்லாம் கற்பனை செய்துக் கொண்டிருந்தாள்.
அவளின் தலையில் நன்றாக வலித்த பின்ரே சுயநினைவிற்கு வந்தவள் . அவரின் அம்மா தான் கொட்டி ” ஏன்டி என்னடி அப்ப அப்ப தன்னை மறந்து நிக்கிற ? எவ்வளவு நேரம் கத்துறது சாப்பிட வாடி? “
” என்னது சாப்பிடவா? “
“வேற என்ன பண்ணனும் ? பட்டினியா இருக்கியா ? ” தென்றல் கத்தினார்.
” இதுக்கு எதுக்கு இவ்வளவு கத்தனும் ? ” என உத்ரா முணுமுணுத்தாலும் அனைவரின் செவியை நன்றாகவே எட்டியது.
“ஆமா ! நான் பேசுனா காது கொடுத்து வாங்கனும். நீ உன் மனசுக்குள்ள எதையாச்சும் நினைச்சுக்கிட்டு பேனு நிக்கிற ! அப்போ எப்படி நான் சொன்னது தெரியும் “என இன்னும் நாலைந்து வசனங்கள் பேசிக் கொண்டே சாப்பாடு எடுத்து வைக்க, வேண்டா வெறுப்பாக உத்ரா அமர்ந்து உண்ண ,
“தாத்தா உங்களுக்கு போன் வந்துருக்கு “என மைத்ரேயியின் தவப்புதல்வன் கத்திக் கொண்டே போனை நீட்ட , வைரமணி “வாயை மூடுங்க ரெண்டு பேரும்……. சாப்பிடும் போது பேசாதனு எத்தனை தடவை தான் சொல்லுறது உனக்கு ? ” வைரமணி திட்டிய பின்பே, போனில் பேச வேறு அறைக்கு சென்று விட்டார்.
அதன் பின்பும் தென்றல் அறிவுரை என்கின்ற பெயரில் பாடம் எடுத்து கொண்டு தான் இருந்தார். ஏற்கனவே கடுப்பில் இருந்த உத்ரா “அம்மா வாயை கொஞ்சம் மூடேன்…. எரிச்சலா வருது….. பேசிக்கிட்டே இருக்க ? ” எனக் கூறி அரைகுறையாக சாப்பிட்டு விட்டு எழும் சமயம் ,
” தென்றல் ! தென்றல் ! ஹே தென்றல் ” வைரமணி அழைக்க,
” ஒழுங்கா சாப்பிடு “எனக் கூறி, மகளுக்கு சாதத்தை போட்ட பின்பே ” ஏங்க எதுக்கு கத்துறீங்க ? இங்க தான இருக்கேன் ” எனக் கத்திக் கொண்டேச் சென்றார். அதன் பின் எவ்வித சத்தமும் அவளின் காதுக்கும் கேட்கவில்லை. இவளும் அவளது அலைபேசியில் நல்ல படத்தை பார்த்துக் கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தாள்.
உள்ளே சென்ற தென்றலை “வாயை மூடு” என்று சைகை செய்துக் கொண்டே அப்பக்கம் பேசினார். சிறிது நேரம் “ம்ம்ம்….. ” என்று மட்டுமே கூறினாலும், தென்றலுக்கு எதுவோ புரிந்தது. மனமும் ஏங்கியது இருந்தும் கட்டுபடுத்திக் கொண்டு நின்றார்.
அவரின் பின்னால் இருந்து ஒரு கூக்குரல் ” உன் உணர்ச்சிய அடக்கு, செண்டிமெண்ட கட்டுப்படுத்து ”
பின்னால் திரும்பி மைத்ரேயியை முறைத்தவரின் சிந்தயை கலைக்கும் பொருட்டு வைரமணி போனை வைத்தவர் ” அவங்க பொருத்தமுனு சொல்லிட்டாங்க தென்றல். உங்களுக்கும் சரினா வர்ற வெள்ளிக்கிழமை …… “
“பாக்கட்டும் பா…. அவளும் முகத்தை முகத்தை பாக்குறா” மைத்ரேயி தமக்கையாக யோசித்துக் கூற,
“பாக்குறது மட்டும் இல்லை….. நிச்சயம் பண்ணுவோம்னு சொல்லுறாங்க சிம்பிளா “
“என்னப்பா பேசுறாங்க ? அதுக்கு இன்னும் ரெண்டு நாளுதான் இருக்கு . எப்படி முடியும் “
” இல்லங்க சரினு சொல்லிடுங்க …….. “
“அம்மா….. “
“இல்லடி ….. இதுக்கு மேல நாம என்ன பண்ண முடியும். நல்ல குடும்பம் நல்ல மாப்பிள்ளை , நமக்கு பக்கமும் …… தொழிலும் இருக்கு…. நம்ம இதுக்கு மேல தேடுனாலும் இப்படி ஒரு சம்மந்தம் கிடைக்காது “
இருவருக்கும் தென்றலின் கூற்று சரியெனப்பட , அமைதியாக தலையாட்டினர். பின்பு, ஒரு அரை மணி நேரத்தில் அவர்களுக்கும் சம்மதம் கூறி விட்டனர்.
அதற்குள் அவள் சாப்பிட்டு விட்டு, அறைக்கு சென்று படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள். மெதுவாக உத்ராவின் அருகில் வந்த தென்றல் அவளின் காலில் கை வைக்க, எரிச்சலுடன் “அம்மா ….. ஒரு பத்து நிமிஷம் கழிச்சு நானே டைனிங் டேபிளை கிளின் பண்ணிடுறேன். ப்ளிஸ் இப்போ என்னை விடு ” என கூறிய உத்ராவை ஒரு நொடிக்கும் மேலாக உற்று நோக்கி விட்டு,
“உத்ரா மாப்பிள்ளை வீட்ல ஓகே சொல்லிட்டாங்க”
“என்னது 😱😱😱😱😱😱 ” எனக் கூறி படாரென்று எழுந்தவளை தென்றல் ஒரு நொடி கண்ணீர் சிந்தி கட்டியணைத்தார் .
அதில் அவள் பதறி ” மாதாஜி….. உன் ஃபீலிங்க்லாம் கொஞ்சம் கட்டுப்படுத்து . நான் என்னை கொஞ்சம் மெருகேத்தனும். இப்பவே ஸ்கின் கேர் (சரும பராமரிப்பு) பண்ணா தான் ஒரு வாரத்துல க்ளோ (பொலிவு) கிடைக்கும் . இப்போதைக்கு நான் அந்த ப்யூடிசன் அக்காகிட்ட சொல்லிடுறேன். அங்க போறேன். நீ எதுவும் சொல்ல கூடாது. அவ்ளோ காசு ஆகுது இவ்ளோ ஆகுதுனு ” என அவள் படபடவென பொறிய ,
” எருமைமாடு ஒரு நிமிஷம் சென்டிமென்ட்டா பேசுனா கூட கோ – ஆப்ரேட் பண்ணுறாளா….. பாசமே இல்லாதவ ….. ச்சை… எங்க போகனுமோ போ…. என்ன பண்ணுமோ பண்ணு…. ஆனா விசேஷம் நாளைக்கு மறுநாள் ….. “
“விசேஷமா ! “
“ஆமா…. காலையில நீங்க ரெண்டு பேரும் பாத்துகுறீங்க…… சாயங்காலம் சின்னதா நிச்சயர்த்தார்தம் “
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே பறவையாய் திாிந்தவள்
இறகு போல்
தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்
தொடரும் உன்
நினைவிலே கரைகிறேன்
காற்று நீயாக வீச
என் தேகம் கூச
எதை நான் பேச
கலைந்து போனாயே
கனவுகள் உரச
பறித்து போனாயே
இவளது மனச
இருள் போலே இருந்தேனே
விளக்காக உணா்ந்தேனே
உன்னை நானே
கீர்த்தி ☘️
சூப்பர் 👌👌👌
நன்றி
அடேய் ரைட்டர் பையா… நீங்க சூப்பர் அ கதைய கொண்டு போறீங்க… கீர்த்தி மனநிலைய அழகா படம்பிடிச்சு காட்டுறீங்க…
கண்ணகி பட டயலாக் ஒன்னு இருக்கு “எத்தனை பேர தான் நான் என் புருஷன் ங்குற ஸ்தானத்துல கற்பனை பண்ணி பாக்குறது…”
அரேஞ்ச் மேரியேஜ் ல இது ஒரு டிஸ்அட்வான்டேஜ்…
ஆனாலும் இவ வாய் இருக்கே… பாவம் அம்மாவே ஃபீல் ஆகுறாங்க.. அத மெயின்டெயின் பண்ண விடுறாளா 🤣… சூப்பர் க்கா
நன்றி டா ❤️❤️