முசுடும் முயலும் – 3 😾😻
சம்மதம் கூறிய பின்பு, நேரடியாக அவள் வந்த இடம் பிள்ளையார் கோவிலுக்கு தான். பிள்ளையாரின் முன்பு அவளின் கவச குண்டலமான போனை தூக்கி அவரின் தொப்பைக்கு கீழே வைத்து விட்டு, கையை கன்னத்தில் வைத்து வராத கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
இதைக் கண்ட விநாயகரின் மனநிலையோ ” இன்னைக்கு என்னன்னு தெரிலயே? ” என்பது போல் பார்த்துக் கொண்டிருந்ததை போல் இருந்தது.
பிறகு போனைத் ஓபன் செய்து, வாட்ஸ் – அப்பில் வந்த அவனது புகைப்படத்தை திறந்தாள். அவள் அறியாமல் அவளின் உதட்டில் புன்னகை, கன்னத்தில் செம்மை, கண்கள் இரண்டும் வெட்கத்தை வெளிப்படுத்தியது. இவை அனைத்தும் அரைநொடிக்குள் நடந்தது.
ஆனால், அவள் அதை உணராமல் “என்ன கணேசா இது? நான் என்ன கேட்டேன் நீ என்ன பண்ணிருக்க? வேலைக்கு போகனும்னு சொன்னேன் ஆனா….. “
பின்பு அவளே “கோயம்பத்தூர்லையும் வேலை கிடைக்கும் தான்….. ஆனா, பெரிய குடும்பம் எப்படி அனுப்புவாங்க….. ஆனா, டீடெயில்ஸ்லாம் பார்த்தேன் குடும்பமே படிச்சிருக்கு. இருந்தாலும் மாப்பிள்ளை ….. நானும் பெரிய ஐஸ் ராய்லாம் இல்லைனு தெரியும் “
“ஐஸ் ராய்யா?” பின்னிருந்து இவளின் பால்ய நண்பனும் பக்கத்து வீட்டு பையனுமான பாலா கேட்டான்.
திரும்பாமலேயே அவன் தான் எனப் புரிந்து ” ஐஸ்வர்யா ராய் டா என் டொமேட்டோ ” என்று கூறி, மறுபடியும் புகைப்படத்தையும் விநாயகரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின்பு பாலா ஃபோனை வாங்கி அபியின் புகைப்படத்தைப் பார்த்து, “பையன் நல்லா தான் இருக்கான். நல்ல லட்சணமா , கருப்பா இருந்தாலும் நல்லா கலையா இருக்காரு. அந்த மீசை, தாடி தான் ஹப்பா எத்தாதண்டி. என்ன பையன் கொஞ்சம் ஒல்லி. உன் பக்கத்துல பாக்கும் போது நல்லாவே ஒல்லியா தெரிவாரு . சோ….. “
“சோ…… ” உத்ராவும் இழுக்க,
“சோ….. அவரு தான் யோசிக்கனும். அதனால அவங்க சைட் ரிலஸ்ட் வரட்டும் .. அதுக்கு அப்புறம் நம்ம பேசிக்கலாம். இப்ப ஃபிரியா விடு ” எனக் கூறி நான்கு அடிகளை வாங்கி கொண்டு தான் நகர்ந்தான் .
பின்பு அதனை பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டேயிருந்தாள் . ” ஒருவேளை இந்த பாலா பய சொன்ன மாதிரி என்ன போட்டோல பாத்துட்டு வேணாம்னு சொல்லிட்டா ….. ஐய்யோ இந்த மாதாஜிக்கிட்ட சொன்னேன். ஜிம் போறேன், பார்லர் போறேன், ஸ்கின் டாக்டர்கிட்ட போறேனு கேட்டுச்சா . இப்போ பாரு அவஸ்த பட வேண்டியதா இருக்கு. என்னத்த சொல்ல ? “என அவள் பாட்டிற்கு புலம்ப, விநாயகருடன் பாலாவிற்கும் ஐயோவென்று இருந்தது .
” என்ன இவன் புலம்ப விட்டுடான் . அய்யோ அய்யோ…… வீட்டுக்கு போனா ரிசல்ட் வந்துருக்குமோ …. ஆனா மாதாஜி கூப்பிடலையே . அப்போ ரிசஸ்ட் வரலையா ….. அய்யோ அய்யோ என்ன புலம்ப விட்டுடானே …… என் கணேசா “
“கணேசா கல்லா இல்லைனா இந்நேரம் காணாம போயிருந்து இருப்பாரு.” எனக் கூறிய பாலாவை முறைக்க ,
” இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஏண்டி ஏன் இவ்வளவு புலம்புற ? வயசாயிடுச்சு இதுக்கு மேல கல்யாணம் ஆகாதுனு நினைக்கிறியா ? “
“வீணாப்போன தெண்டம். எனக்கு இருப்பத்தி மூணு தான் ஆகுது. ஒளவையார் ஆக இன்னும் இருப்பத்தி மூணு வருசம் இருக்கு ” என்று பல்லிடுக்கில் கூறினாள்.
“இதெல்லாம் வக்கனையா பேசு….. ஆனா எதையும் உருப்படியா செய்யாத ” பாலா தனது தோழியின் வாழ்க்கையை நினைத்து கவலைக் கொண்டு கூறினான்.
“ஏன்டா …. நான் என்ன உருப்படியா செய்யல “
“என்ன செஞ்ச? காலேஜ் படிக்கும் போதே ஒன்னு வேலை வாங்கி இருக்கனும் . இல்லையா வீட்டுல சண்டை போட்டு வேலைக்கு போயிருக்கனும். அதையும் விட்டாச்சு. படிக்க போறேனு சொன்ன அதுக்கு வீட்ல நோ சொன்னவுடனே விட்டுட. வரைஞ்ச அதையும் ஹாபி னு சொல்லிட்ட . வீட்ல காசு வாங்கி அதுக்கு கோர்ஸ் பண்ணுனு சொன்னேன் . அதையும் கேக்கல. என்கூட டி என் பி எஸ் சி படிச்ச அதையும் இந்த மாப்பிள்ளை வந்தவுடனே ரெண்டு நாளா படிக்கிறது இல்லை. இப்படி எல்லாத்தையும் அவங்களுக்காக அவங்களுக்காகனு அத்தனையும் தியாகம் பண்ணுற . ஆனா மனசும் ஏத்தாகாம எதாச்சும் பண்ணுற . ஒன்ணு பண்ணாலும் சண்டை போட்டு அதுல நிக்க வேணாமா “
“நான் தான் பேசுனேன்ல ” என இயலாமையுடன் கூறினாள்.
“கிழிச்ச…… ஸ்டார்டிங்லாம் நல்லா தான் இருக்கும். ஃபினிஸிங் தான் ஒழுங்கா இருக்காது. எல்லாம் சொல்லுவ . அவங்க அவங்க பக்கம் நியாயம் பத்தி பேசுன உடனே தியாக செம்மல் மாதிரி விட்டுவ . அவங்களும் நீ அவங்களுக்குகாக தான் விட்டுடனு நினைக்காம உன்னை பிடிவாதம்னு திட்டுவாங்க. அதுக்கும் கத்த மட்டும் செஞ்சுட்டு திரும்பவும் அவங்க சொன்னது தான் செய்வ இப்பவும் அது தான் பண்ணுற ” என கத்தலாக ஆரம்பித்து ஆதங்கத்துடன் முடித்தான் .
அவளும் மறுபடியும் வேலையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த நேரம், சடாரென்று வந்த நோட்டிபிகேஷனில் அவனின் புகைப்படம் பளிச்சென்று தென்பட்டது. மறுபடியும் அவனின் புறம் மனம் வழுக்கி கொண்டு சென்றது. அவளை அறியாமல் புகைப்படத்தை தழுவினாள்.
பாலா தலையை சொறிந்து இடப்பக்கமாக ஆட்டி விட்டு, ” குறைந்தபட்சம் இதுலயாச்சும் பாஸாக பாரு உத்ரா ” எனக் கூறியவுடன், உத்ரா சிரித்துக் கொண்டாள்.
அவளின் சந்தோஷம் இனிமேலாவது கிடைக்க வேண்டும் என்று மனதாராக பிரார்த்தித்தான் பாலா. ஆனாலும் அவனின் தோழி பற்றி தெரியுமல்லவா . அவளின் மனதை புரிந்து அவளின் ஆசைக்கு உறுதுணையாக இருக்கும் ஆண்மகனே அவளின் மணவாளனாக வேண்டும். அப்படி உள்ளவனாக இருந்தால் மட்டுமே இவன் சம்மதம் கூறட்டும் என்று அவசரமாக கணேசருக்கு மனு விடுத்தான் பாலா.
அதையெல்லாம் காதில் வாங்கினார் என்றால் அவர் கடவுள் இல்லையே. பார்ப்போம் செய்வாரா மாட்டாரா என்று ?
😾♥️😻
கருவிழி கூட நகராமல் விட்டத்தில் ஓடும் காற்றாழையை பார்த்துக் கொண்டிருந்தவனை அபியின் தங்கையான யமுனா அழைத்த பின்பு தான் சுயத்திற்கு வந்தான்.
வழக்கம் போல் எந்தவொரு பாவனையும் முகத்தில் காட்டாமல் எழ, “நீ என்ன இவ்வளவு நேரம் தூங்குற ? மணி நாலாச்சு ….. சாப்பிடவும் இல்லை. அம்மா கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க” என அவள் கூறி கொண்டே இருந்தாலும் அவனின் எண்ணம் முழுவதும் காலையில் நடந்தது தான் ஓடியது.
தாத்தா அழைத்ததாக கூறி வீட்டிற்கு தாமதமாக வந்து இலவசமாக சில முறைப்புகளை அன்னையிடம் இருந்து வாங்கி விட்டு உள்ளே நுழைய அதிர்ந்தே விட்டான்.
அங்கு ஒரு படையே சூழ்ந்திருந்தது. தனது தகப்பனின் பெற்றோர்கள், அன்னையின் பெற்றோர்கள், இரு சித்தப்பா (தகப்பனின் உடன் பிறந்தவர்கள்) , அன்னையின் தங்கையான சித்தி என்று ஒரு கூட்டமே அமர்ந்திருக்க, முதல் சித்தப்பாவின் மகன் அருகில் வந்து “அண்ணா பொண்ணு சூப்பர் ணா. நீ ஓகே சொல்லிட்டா எல்லாம் ஓகே “
“ஓகே வா? ” அபி புருவ முடிச்சுடன் கேட்க,
“வேற என்னடா செய்யனும் உனக்கு ? ” முதல் சித்தப்பாவான கிருஷ்ணன் கேட்க,
“அவங்க வீட்ல முடிவு சொல்ல வேணாமா? “
“அவங்க சொல்லிட்டாங்க பா …. அதான் உன்னை சீக்கிரமா வர சொன்னேன் ” சாரதராஜன் வாயைத் திறந்த உடன் அபி தனது வாய்க்கு பூட்டு போட்டுக் கொண்டான்.
யார் கூறினால், பேசினால் அடங்குவான் என்று தெரிந்ததால் வேண்டுமென்றே பங்கஜம் தனது கணவனை சுரண்ட , நினைத்தது போல் அவனும் அமைதியாக அனைவர் முன்பும் அமர வந்தான்.
அதற்குள் அவரது இரண்டாவது சித்தப்பா அன்பு செல்வன் ” டேய் , போய் குளிச்சுட்டு ஃபோட்டோ பாரு…. உங்க அம்மா ஜீஸ் கொண்டு வருவாங்க. உன் முடிவ சொல்லு . வி ஆல் ஆர் வெயிட்டிங் “( நாங்கள் எல்லாரும் காத்துக் கொண்டிருக்கிறோம் ) “
அவன் ஒன்றும் கூறாமல் அவனது அறைக்கு சென்று விட்டான். சொன்னது போல் பத்து நிமிடத்தில் கௌதமி அறைக்கு செல்ல, “அம்மா என்னது இது? இப்படி எல்லாரையும் உட்கார வைச்சு கேள்வி கேக்குறீங்க? ஃபோட்டோ மட்டும் பாத்தா போதுமா ? நான் அந்த பொண்ணுட்ட பேசனும். அதோட என் வாழ்க்கைல நடந்ததையும் சொல்லனும் நீங்களாவது புரிஞ்சுக்கோங்களேன். “
“நீ சொன்னதுக்கு ஏற்பாடு பண்ணுறேன் ஒரு வேளை உனக்கு பொண்ணு பிடிச்சதுனா ? “
அவன் திரும்பவும் முதலில் இருந்து பேசுகிறார்களே என்ற கடுப்புடன் தலையை சொறிய ” டேய் மொத ஃபோட்டோ பாருடா அப்புறம் மத்தது பாத்துகலாம் ” என யமுனாவும் கூற,
ஒரு வழியாக மனம் வந்து வேண்டா வெறுப்பாக புகைப்படத்தை திறந்து பார்க்க , அதில் அழகான தக்காளி பழம் போல் கொழு கொழுவென இருக்கும் உத்ரா பளிச்சென தெரிந்தாள். அவளின் கருமை நிறத்திற்கு போட்டி போடுவது போல் அவளின் கண் மை தீட்டியிருந்தது. உதட்டில் சாயம் இல்லை ஆனால் கீழ் உதடு பிங்க் நிறத்தில் இருந்தது. அழகாக அவளை நேர்த்தியாக காண்பிக்கும் ஷாஃப்டு சில்க்கில் பளிச்சென்று இருக்கும் கடல் நிறத்தில் ஒரு கை அளவு உள்ள வைலட் பார்ட்டரில் பிரகாசமாக இருந்தாள்.
அவளின் நிறத்திற்கு ஏற்ப பொன் நகைகள் அளவாக அணிந்து இருந்தாள். நெற்றியில் குட்டியான பிரவுன் நிற பொட்டு . கைகள் இரண்டையும் பின்னி அழகாக சிரித்திருந்தாள். இதனை அரை நிமிடமாக அவன் அங்குலம் அங்குலமாக பார்க்க, தாயும் சேயும் அர்த்த பார்வை வீசிக் கொண்டனர்.
ஒரு வழியாக அவன் ரசித்துக் முடித்து தொண்டையை செருமி “யோ ….. “
“அய்யயோ அடுத்த பாயாசம் போட போறீயா? ” யமுனா பதற, அபி சிரிக்க , கெளதமிக்கு தான் ஒன்றும் புரியவில்லை.
” இல்லை ….. யோசனைலாம் முன்னாடியே பண்ணிட்டேன். எனக்கு ஒகே தான். பட் நான் அவக்கிட்ட தனியா பேசனும். அதுக்கு அப்புறம் தான் மத்த விஷயம்லாம் ” என கூறியவுடன் கெளதமி யாமினி கூறியதைப் பற்றி கேட்க, அபியும் யாமினியும் சிரிக்க,
“அம்மா இவன் ஒவ்வொரு பொண்ணும் வரும் போது போட்டோவ வாங்கிட்டு போய் தியானம் பண்ணுவான். பாத்தா அடுத்த நாளே அங்க வேணாம்னு சொல்லிடுவாங்க . அதான் யோனு ஆரம்பிச்ச உடனே பதறிட்டேன் “
“என் பிள்ளைங்க ரெண்டும் அரை லூசுங்க தான். ச்சை…. ” எனக் கூறி வீட்டில் அவன் கூறியதை கூற,
பங்கஜம் சட்டென்று வைரமணிக்கு அழைத்து சம்மதம் என்று கூறியதோடு நிச்சயத்திற்கும் நாள் குறித்து கூறி விட்டார்.
யாமினி மற்றும் கெளதமி முழிக்க, அபி திரும்பவும் தனது கனல் பார்வையை வீசினான் தனது தாயின் மீது. அதற்குள் பங்கஜம் வந்து “ஏன்ப்பா நீ ஏதோ பொண்ணுக்கிட்ட பேசனும்னு சொன்னியாம். நீ நிச்சயம் பாக்குற நாள் அப்போ காலையில் பாத்துக்கோ . சரியா. ஆனா அந்த விஷயம்லாம் சொல்ல வேண்டாம்”
அபி முறைத்து ” சொல்லுவேன். சொல்லி அந்த பொண்ணு சம்மதம் சொன்னா தான் மத்ததுலாம் ” என கூறி விட்டு செல்லும் பேரனை கவலையோடு பார்த்தார்.
😾♥️😻
அங்கு உத்ராவோ பியூட்டி பார்லரில் இன்ஸ்டன்ட் டீடான் மற்றும் ஃபேசியல் செய்துக் கொண்டிருந்தாள் .
கீர்த்தி ☘️
காசிநாதா… உனக்காக இங்க ஒருத்தி என்னவாம் பண்ணுறானு பாருடா…. பாவம்டா கணோஷர்… வந்து முதல்ல அவர காப்பாத்துடா 🫣😂…
கணோஷரே காசிநாதர எதிர்பார்க்கும் நிலைமை… எங்காவது நடக்குமா இப்படி 😂
பாலா சொல்றது உண்மை தான்… நமக்கு ஒரு விஷயம் வேணும்னா நாம்தான் ரொம்ப ஸ்ட்ராங் அ இருக்கணும்… பிடிவாதம் திமிரு இப்படி எத்தனை பேர் வேணா சொல்லட்டுமே.. ஆமா நான் அப்படி தான் னு சொல்லிட்டு நமக்கான காரியத்துக்காகப் போராடித் தான் ஆகணும்…
காசிநாதா… உனக்கு என்னப்பா சொல்லணும் 🫣… எதோ பெருசாசாசா இருக்கும் போலவே…
இங்க ஒருத்தி காஞ்சனா வெர்ஷன் போல இதோ கல்யாண பொண்ணு வெர்ஷனுக்கு மாறிட்டா யா …
கதை சூப்பரா போகுது 😍…
Thanks da😂😂😂😂 போக போக அது தான் நிலைமை கணேசருக்கு
அபி உத்ரா பிடிச்சிருச்சு