Loading

முசுடும் முயலும் – 2 😾😻

அபிமன்யூ தியானம் செய்து முடித்து, அவனது கணீர் குரலில் ,

ஓம் அசதோ மா சத்-கமயா
தமஸோ மா ஜோதிர்-கமயா
ம்ருத்யோர்-மா அமிர்தம் கமயா
ஓம் சாந்திஹ் சாந்திஹ் சாந்திஹ் !

என்று முடித்து கண்கள் திறக்க , அவன் முன் காளியவதாரத்தில் நின்று கொண்டிருந்தார் அபிமன்யூவின் தாய் கெளதமி .

அதை அவன் உதாசீனப்படுத்திக் கொண்டு மெதுவாக அவனது அறையில் சென்று தொழிற்சாலைக்கு செல்ல ரெடியாகினான். வெளியில் அவரது தாய் கையைப் பிசைந்துக் கொண்டிருந்தார்.

ஏனென்றால், அவர் அவரின் மாமியாரிடம் பதில் கூற வேண்டுமே . இவன் வெளியில் தவிப்புடன் நிற்கும் தாயைக் கண்டும் காணாமலும் உணவு மேஜைக்கு சென்று அமைதியாக சாப்பிட்டு விட்டு வெளியில் காலணியை மாட்டி முடித்தவன் வெளியிலிருந்து “அம்மா “என அழைத்தான்.

“சரி ஓகே ! போட்டோ கிடைச்சவுடனே அனுப்புங்க ” என அவர் வந்தவுடன் கூறி விட்டுவிட்டு அவனது மகேந்திரா எஸ்யூவியில் பறந்து விட்டான்.

உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பங்கஜத்திற்கும் (அபியின் பாட்டி) ஆனந்தம் தான். உடனே அதை தனது கணவன் சாரதராஜனிடம் கூறி மகிழ்ந்தார்.

பின்பு, அவன் வேறு எதுவும் மாறாக யோசிக்கும் முன்னர் இவர்கள் மற்ற வேலைகளை பார்க்க சென்றனர்.

அரை மணி நேர பயணத்தில் உயர்ந்து ஓங்கி நிற்கும் அவனது தொழிற்சாலையினுள் நுழைந்தான்.

தனது அப்பாவும், மாமாவும் சேர்ந்து சிறிதாக நடத்திய துணிக்கடையில் சிறிது காலம் பழகிக் கொண்டும், தான் படித்த டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் மூலமும் அவன் உருவாக்கிய தொழிற்சாலையே இத்தகைய துணித் தொழிற்சாலை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான துணியை உற்பத்தி செய்ய, இவனும் அவர்களை போல் அனைவரும் கவருவதற்கு ஏற்றார் போல் பட்டு நூலால் ஆன பட்டு புடவைகள், இளம் பெண்களின் தாவணிகள், சிறுமியர்களின் பட்டு பாவாடைகள், ஆண்கள் பிரிவின் பட்டு சட்டை மற்றும் வேஷ்டிகள் என்று தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்கிறான்.

இப்பொழுது தான் தென் இந்தியாவில் கால் தடம் பதிப்பதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறான். அதற்கான மீட்டிங்கிற்காக தான் அவன் அவசரமாக சென்றான் ஆனால் நிதானத்தோடு.

ஆம், அபிமென்யூ மிகவும் சாந்தமானவன், பொறுமையானவன். எந்நேரத்திலும் , எப்பொழுதிலும் சுயக்கட்டுபாட்டை இழக்காதவன். அவனின் மிகுந்த வெற்றிக்கு காரணமே அத்தகைய கட்டுபாடு தான். கோபத்தைக் கூட கத்தி கூப்பாடு போடாமல் வாயில் மென்று தின்னுவான்.

அவன் அமைதியாக கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தும். அதனாலேயே, அத்தொழிற்சாலையில் அவன் சொல்லி செய்த வேலைகள் எந்த ஒரு திருத்தமும் இல்லாமல் மிக நேர்த்தியாக அங்கு வேலை பார்ப்பவர்கள் முடித்து வைத்திருப்பர்.

இன்றும் அதே போல், அத்தகைய மீட்டிங்கிற்காக கூறிய அனைத்து வேலைகளும் நேரத்திற்கு முடித்திருந்தது. அதனை கண்டு எப்பொழுதும் போல் கர்வம் கொண்டான்.

பின்பு,  அங்கு உள்ள ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து செய்த கணக்கெடுப்பின் மூலம் தந்த ப்ரசண்டேஷனில் அவன் நினைத்தது போன்றே குறிப்பிட்ட பர்சன்டேஜ்ஜில் (சதவீதம்)  லாபம் அடைய வாய்ப்பு உள்ளதை எண்களின் வடிவில் நிறுப்பித்தனர்.

இறுதியில் இன்னும் இரு ஸ்லைட் (பக்கம்) இருக்கும் தருவாயில் அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுக்கு அது புரிந்து என்னவென்று விசாரிக்க, ஒரு பெண் தான் தைரியமாக எழுந்து, அடுத்த ஸ்லைடை நகற்றி “சார் , இதில் உள்ள லாபம் நம்ம இந்த தொழிற்சாலை ஆரம்பச்சதுல இருந்து இப்ப வரைக்குமான லாபம் “

அபி அவளை வினோதமாக பார்க்க, அதனைப் புரிந்துக் கொண்டு “இதை நாம் அடுத்த கட்டத்திற்கு செலுத்தும் பொழுது நன்முறையில் நன்றாகவே இருக்கும். இருந்தும் இதற்கு ஆறுமாத கால அவகாசமே போதுமானது. அதிலிருந்தே நம்முடைய வெற்றி எவ்வளவு தூரம் சென்று இருக்கிறது என்று கணித்து விடலாம். அதனால், ஆறு மாதத்திற்கு பிறகு நல்ல லாபத்தை எட்டினால், நாம் அடுத்த கட்டமாக ஆண்களின் காட்டன் டிசர்ட்டும், சிறார்களின் காட்டன் டிரஸ்ஸும், இளம்பெண்களின் காட்டன் டிரஸ்ஸிற்கான தயாரிப்பைக் காணலாம்”

அபி புருவம் சுருக்கி காண, அவனின் கேள்வி புரிந்ததால் அடுத்த ஸ்லைடை திருப்பி “நாம காட்டனிற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் நாம் பட்டுப்புழு வளர்ப்பதற்கு வைத்திருக்கும் ஆட்கள் போல் விருதுநகரை சேர்ந்தவர்களே காட்டன் உற்பத்தியில் கை தேர்ந்தவர்கள். நாம் பட்டு நூல் உற்பத்திக்கு வைத்திருக்கும் ஆட்களை வைத்தே கணிசமாக பருத்தி உற்பத்தியும் செய்யலாம். அதனை வைத்து, நாம் அடுத்த கட்டத்திற்கும் எவ்வாறு செல்லலாம் என்று கணித்து பின்பு ஆட்களையும் உற்பத்தியையும் பெருக்கலாம்”எனக் கூறிய பெண்ணோடு சுற்றியிருந்தவர்களையும் மெச்சுதலாக பார்த்துக் கொண்டான்.

இவர்கள் மெனக்கெடுவதற்கு முக்கிய காரணம் அவனே. இவர்கள் எல்லாம் இவனின் கல்லூரியில் இவன் துறையில் உள்ள இளையவர்கள் (ஜூனியர்ஸ்) . வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களை ஒன்று சேர்த்து உருவாக்கினான் அவர்களையும், அத்தகைய தொழிற்சாலையையும்.

பின்பு, அனைத்தும் பேசி முதலில் தென் இந்தியாவில் கால் தடம் வைப்பதற்கு அனைத்து அட்டவணையும் இட திட்டம் தீட்டினர். சந்தைப்படுத்தல் குழுவின்( மார்க்கெட்டிங் டீம்) அட்டவணையை அபிமன்யூ தயாரிப்பதற்கு ஒதுக்கினார்கள்.

இருப்பதிலேயே இத்திட்டத்திற்கு முக்கிய துறை அதுவே ஆகும். ஆகையால், அவனிடம் ஒப்படைத்து விட்டனர். அதன் படி உற்பத்தி குழு (ப்ரொடெக்சன் ), கொள்முதல் குழுவிற்கு( பர்சேஸிங்)  வேலை நியமனம் செய்ய திட்டமிட்டனர்.

இத்தகைய மீட்டிங் முடியவே மணி பன்னிரெண்டை எட்டியது. அவன் அனைத்தும் முடிந்து வெளியே வந்தவன் புருவம் சுருக்கி தர்மனைப் பார்த்தான்.

தர்மன் சாரதாராஜனின் பி.ஏ. எப்பொழுதும் எங்கும் சாரதாராஜனுடனே செல்பவர் இங்கு ஏன் நிற்கிறார் என்று யோசனையுடன் அவர் அருகில் செல்ல, வேகமாக அவரது அலைபேசியை நீட்டினார்.

அதில் தெளிவாக சாரதராஜன் சார் காலிங் என்று காண்பித்தது. அட்டெண்ட் செய்து காதில் வைக்க, “என்னப்பா மீட்டிங்க்கா? ” என்று அவர் கேட்டவுடன் தனது பேண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டு அலைபேசியை எடுக்க, அதில் ஒன்பது தவறிய அழைப்பை காண்பித்தது. அது அனைத்தும் சாரதராஜனின் அழைப்பு.

“ஆமா தாத்தா மீட்டிங் தான் ! என்ன விஷயம்? எதுவும் முக்கியமா ? “

“ஆமாம்ப்பா  ! நீ இப்போ வீட்டுக்கு வரலாமா? முடியாதுனு சொல்லாத கண்டிப்பா வாப்பா   “

ஒரு நொடி யோசித்து விட்டு அரை மணி நேரத்தில் வருகின்றேன் என்று கூறி தர்மனையும் அனுப்பி விட்டு, சிறு சிறு வேலைகளை செய்து முடித்து விட்டு சொன்ன நேரத்தில் அங்கு சென்றான் என்று நினைக்க, மெதுவாக முக்கால் மணி நேரம் கழித்து சாரதராஜன் அழைத்த பின், இன்னும் கால் மணி நேரத்தில் வருகிறேன் எனக் கூறிவிட்டு, மிக சாவகாசமாக ஒன்றரை மணி நேரத்திற்கு பின் வீட்டிற்குள் நுழைந்தவனை கெளதமி முறைக்க , அதை தாண்டி அவன் நுழைய கண்கள் விரிந்தது. அதிர்ச்சியோடு அங்கேயே நின்றான் .

😾❤️😻

உத்ராவின் பெற்றோர்கள் யோசிக்க கொடுத்த நேரத்தில் அவளுக்கு வேண்டாம் என ஏன் கூற தோன்றவில்லை என்றே யோசித்துக் கொண்டிருந்தாள்.

வெளிநாட்டிற்கு செல்லுவோம், வெளியூருக்கு செல்லுவோம் வேலை பார்ப்போம் என்ற வேட்கையுடன் (பேஷன்)  சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு முகம் தெரியாதவனை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. அதற்கான காரணம் ஏன் என்று தெரிந்தும் மனம் ஒப்புக் கொள்ளவில்லை.

ஒரு நாள், அவள் வெளியில் அமர்ந்து டீயை பருகி ருசித்துக் கொண்டிருந்த  பொழுது இருவர் வந்து அருகிலிருக்கும் வீட்டைப் பற்றி விசாரிக்க வந்தவர்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணை விசாரிக்க வரவில்லை. இவளை பார்த்து விட்டு செல்லவே வந்தனர்.

முன்பே, பக்கத்து வீட்டு பெண்ணிற்கும் மாப்பிள்ளை பார்ப்பதாக கூறியவர்கள் இந்த இடம்  நல்ல இடம் என்று அம்மாவிடம் கூறிய பொழுது உத்ராவிற்கு அவன் தனக்கில்லை என்று ஒரு ஓரத்தில் ஏக்கம் பிறந்தது. அதற்கான காரணம் தான் தென்படவில்லை . இன்றோ ஆணித்தரமாக அவன் வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அதன் பயனாக வீட்டில் சம்மதம் கூற, அதற்கு மறுநாளே இருவருரின் புகைப்படமும் , ஜாதகமும் பரிமாறிக் கொண்டனர்.

உத்ராவின் அன்னை புகைப்படத்தை காண்பிக்கும் முன்னரே, “இங்க பாரு…. முன்னாடி சொன்னது தான். பையன் நல்ல பையன். தொழில்  வச்சிருக்காரு. நல்ல குடும்பம். ஊரு நமக்கு பக்கத்துல இருக்குற கோயம்பத்தூர். வேற எதையும் யோசிக்காத!”

தனது தாய் கூறுவதை கூர்ந்து கவனிக்க, மைத்ரேயி தலையில் அடித்துக் கொண்டு “ச்சை…… ஏன் மா இப்படி? “

“வேற  என்னடி என்ன பண்ண சொல்லுற?”

“அதுக்கு ? “எனக் கூறி கண்களை மூடி மூச்சு நன்கு இழுத்து விட்டு விட்டு கண்களை நெற்றிக்கண் போல் திறந்து “எனக்கு மூள கோளாறா இல்லை உடம்பு கோளாறா இல்லை அப்பா எதுவும் கல்யாணத்துக்கு செய்ய மாட்டேனு சொன்னாரா ? “

” இதுல உள்ள எல்லா பாயிண்டுமே கோளாறு தான் ” என தென்றல் முணுமுணுக்க , “எதே எதே? ” என உத்ரா பாய்ந்தாள்.

” இங்க பாரு…. பேசி டைம் வேஸ்ட் பண்ணாத …. டக்குனு முடிவ சொல்லு “

“அம்மா நீ ரெண்டு விரல் நீட்டி கேட்டா பரவாயில்லை, நீ காண்பிக்கிறது ஒரு விரல். அதுவும் இம்பார்ட்டண்ட் கொஸ்டின் (முக்கிய கேள்வி ) இதுக்கு எதுக்கு என்ன கேக்கனும் “

” சும்மா ஒரு சடங்கு சம்பிராதயம் தான் ”  என எங்கோ பார்த்துக் கொண்டு தென்றல் கூற, மைத்ரேயி கடினப்பட்டு சிரிப்பை கட்டுபடுத்தினாள்.

“மண்ணாங்கட்டி “எனக் கூறி, இன்னும் மனதில் அம்மாவைத்  அர்சித்துக் கொண்டே புகைப்படத்தை பார்த்தாள்.

அந்த ஆண்டராய்டு போனில் அதுவும் அம்மாவின் போனில், பவர் பட்டனை ஆன் செய்ததும், படக்கென்று வந்த புகைப்படம், பளிச்சுடும் போன், நோட்டிஃபிகே ஷன் சத்தங்கள், உலகம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தது போல் போன் ஹேங் ஆகி நின்றது. மொத்தத்தில் காதல் வந்ததற்குரிய அனைத்து அறிகுறிகளும் வந்தது.

அவள் அவன் முகத்தை பார்த்துக் கொண்டே தலையாட்டி ஆட்டினாள். ஒன்றும் கூறாமல் புகைப்படத்தை தனது அலைபேசிக்கு அனுப்பி வைத்து விட்டு சட்டென்று வீட்டை விட்டு வெளியில் போய் விட்டாள்.

😻❤️😾

அதே நேரம் அபிமன்யூவும் சம்மதமாக தலையாட்டி விட்டு தனது அறைக்கு சென்று விட்டான்.

😾❤️😻

கருவிழியை உருட்டி உருட்டி அவனின் புகைப்படத்தையும் பிள்ளையாரையும் மாற்றி மாற்றி உத்ரா பார்த்து கொண்டிருக்க,

😾❤️😻

கருவிழி கூட அசையாமல் விட்டத்தைப் பார்த்து படுத்திருந்தான்  அபிமன்யூ.

இவர்கள் ஏன்  சம்மதம் கூறினார்கள்? ஏன் சம்மதம் கூறிய பின் யோசனை? அடுத்த அத்தியாத்தில் பார்ப்போம்.

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
32
+1
2
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    7 Comments

    1. கருகரு விழிகளால் என்னைக் கொள்கிறாள் தொலையாமல் என்ன செய்வேன்

      பேக்ல பீஜிஎம் போடுங்க ,😂
      .காசிநாதா உண்மை தெரியாம ஓகே சொல்லிட்டியே டா 😂

      பிள்ளையார் மனநிலை இதுக்கும் இவ எதனா சொல்லி உசுர வாங்குவாளா…

      மனுஷனுக்கு பிரச்சினைனா என்கிட்ட வருவாங்க. இவளால எனக்கே பிரச்சினை நான் எங்க போவேன் 😂😂

      கதை அழகா நகருது க்கா 🤩

      1. Author

        Really really thanks da❤️❤️❤️

    2. உத்ரா அபிமன்யூ இரண்டு பேருக்கும் முன்னாடியே தெரியுமா எப்படி உடனே ஓகே சொன்னாங்க ?

      1. Author

        Wait nd watch mam 😎

      1. Author

        Hooo thanks sis 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    3. உத்ரா அபி முன்னாடியே பார்த்து இருக்காங்களா