Loading

முசுடும் முயலும் – 😾❤️😻 20

“அண்ணா “

“என்னது அண்ணாவா ? ” என அந்த இடம்  அதிர கேட்டாள் உத்ரா .அனைவரும் அவளை வினோதமாக பார்க்க, கட்டியவனுக்கு மட்டுமே தெரியும் அவள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று. அவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை அவன்.

அனைவரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து “இல்லை ! அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு இப்போ தான் சொன்னாங்க …….. “

அவளை கேள்வியாகப் பார்க்க “ஒன்னுமில்லை ….. ஸாரி ……. ” எனக் கூறி தலை குனிந்து கொண்டே தனது அத்தையின் அருகில் நின்றுக் கொண்டாள்.

அகில் நிலாவே ஆரம்பித்தாள் ” அண்ணா அக்பர வர சொல்லுறாங்க …. பாக்கணும்னு சொல்லுறாங்க “

” சரி வரச் சொல்லு அதுக்கு என்ன?  ” என அவளிடம் கூறி விட்டு, கெளதமியிடம் திரும்பி ” எனக்கு எல்லாமே தெரியும் ! இன்பேஃக்ட்  நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன் “

“உன் தங்கச்சிக்கு இப்படி ஒரு பையனை கல்யாணம் பண்ணி வைப்பியா? ” சாரலா பொங்க,

” அவ லவ் பண்ணுறேனு சொன்னா மொத விசாரிப்போம் ! அப்புறம் தான் மத்தது. எடுத்தோன நான் வேணாம்னு சொல்ல மாட்டேன் . அதோடு நிலா அவனோடேயே நம்மகிட்ட சொல்லாமா போறேனு சொன்னா நான் தான் கல்யாணம் மட்டும் பண்ணுங்க ! வீட்டாளுங்க சம்மதத்தோட போனு சொன்னேன் ! “

” அப்புறம் ஏன்ப்பா இப்போ மாசமா இருக்கேனு வந்து நிக்கிறா ? ” கெளதமி தனது மகனிடம் கேட்க,அவனுக்கே இச்செய்தி புதிது .

அவளை புரியாமல் பார்க்க, உத்ராவிற்கோ அதிர்ச்சி. பங்கஜம் ” இப்படி புதிதாக வந்தவள் முன்பு நம் குடும்பம் நிலை இவ்வாறு இருக்கிறதே. அதற்கு காரணம் இவளே “என மனதினில் அகில் நிலாவை திட்டினார்.

“அண்ணா சாரிண்ணா ! தெரியாமனு பொய் சொல்ல மாட்டேன் ! எங்களுக்கு தப்புனு தோணலை ! இப்பவும் இந்த குழந்தை வந்ததுக்கு நாங்க ரொம்ப சந்தோஷம் தான் படுறோம் ! இதோ இந்த நிரல்யாவுக்கு எல்லாமே தெரியும் “

“அடிப்பாவி அமைதியா இருந்துட்டு என்னடி வேலை பாத்துருக்க ! ஸ்டதெஸ்கோப் பிடிப்பனு பாத்தா விளக்கு பிடிச்சிருக்க ?  ” யமுனா நிரல்யாவின் முதுகின் பின்னிருந்து கேட்க, பின்னாலில் நிற்பவளின் காலை உதைத்து “வாயை மூடுடி குரங்கு! மாமா உறுமுது ” எனக் கூறி பாவமாக  அபியை பார்க்க, “மா….மா…… அது “

“நீயும் யமுனாவும் எவ்வளவு பெரிய கூட்டு களவாணிகனு எல்லாருக்கும் தெரியும் ! நான் அகில கூட ஏத்துக்குவேன் ! உங்களை …… ” சாரதராஜன் கண்களை உருட்டி கூறிவிட்டு , சங்கரனிடம் திரும்பி “அந்த பையனை வெளியில வேற எங்கையாச்சும் வரச் சொல்லி பாப்போம் ! நீ , நான், அபி, அகில், சாரலா போனாப் போதும்  ! “

“இல்லை…. அத்தை …. ” அகிலும், “ஏங்க…. நான் ” பங்கஜம் முந்தி கொண்டு வர,

“கௌதமிக்கு நீ சொல்லுற செய்தி புதுசுனு சொல்லுறத வேறு யாராச்சும் நம்புறாங்கனா நம்பட்டும்! என்கிட்ட சொல்லாத “என கூறிவிட்டு சாரதராஜன் வெளியில் நடக்க, சங்கரனும் மனைவியை பார்த்து விட்டு சென்றார்.

“மாட்டிக்கிச்சே…. மாட்டிக்கிச்சே ” யமுனாவும் , நிரல்யாவும் மெதுவாக கெளதமியின் முன்பு பாட, கெளதமி முறைத்து விட்டு தனது மாமியாரை கண்டார். அவர் வெளியில் செல்லும் கணவனை கண்டு அவரின் அறைக்கு சென்று விட்டார்.

அகிலும் அக்பருக்கு அழைத்து விட்டு வர, சாரலா முகத்தை தூக்கி வைத்து கொண்டு கெளதமி அருகில் வர, “அண்ணி ஆனாலும் இவளுக என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணுறாளுங்க “

“அட நீங்க வேற அண்ணி மாமா என்னை கண்டுபிடிச்சுட்டாருனு எனக்கே பக்குனு ஆச்சு “

உத்ராவிற்கு ஒரு நிமிடம் புரியாமல் பின்பு, சட்டென்று சாரலாவின் தோளில் கைப் போட்டு ” அம்மா ….. சூப்பர் சூப்பர்….. நான் கூட நீங்க வில்லி ரோல்னு நினைச்சேன் !  பாத்தா சிரிப்பு போலீஸு…. சூப்பர் மா…. சூப்பர் “

“உத்ரா….. ” ஒரு சேர அபியும் கௌதமியும் கூப்பிட,

“அண்ணி என் பிள்ளைங்க கூட என்னை கம்மியாதான் பாக்குதுங்க …. உத்ரா தான் பேசி முடிச்சதுல இருந்து வாரத்துக்கு ஒரு தடவ என்கிட்ட பேசுவா….. எல்லாத்தையும் கேட்பா….. நான் மனசு விட்டு பேசுறதே இவக்கிட்ட தான்… அந்த உரிமை பேச்சு தான் இது….. “

அபிக்கோ ஆச்சர்யம் எப்படி இவளால் மட்டும் இப்படி முடிகின்றது என்று. அதே பேச்சோடு கெளதமி கூடப் பிறவாத தமக்கையான தனது நாத்தனாரிடம் ” அண்ணி யமுனாவுக்கு ஒரு ஜாதகம் வந்து இருக்கு ! மாமா பாத்ததுலையும் பொருத்தம் இருக்கு “

யமுனா கண்களில் ஹார்ட் விட, அகில் நிலாவும் நிரல்யாவும் ஆச்சர்யமாக யமுனாவை காண , “பையன் யாரு? என்ன பண்ணுறான் “

“பையன் பேரு பாலா! “

“என்னது ? ” அகில் நெஞ்சில் கை வைத்து ஆச்சர்யமாக கேட்க,

“ஆமா! நம்ம உத்ரா ப்ரெண்டு தான்! உத்ரா கல்யாணத்துல பாத்துட்டு மாமாவும் அபியும் உங்க அண்ணன்கிட்ட (சங்கரன்) பேசிருப்பாங்க போல! விசாரிச்சதுல திருப்தி ! பையன் உள்ளூர்ல தான் வேலைல இருக்காரு ! நல்ல சம்பளம்! உத்ரா அம்மா அப்பாகிட்ட கேட்டதுக்கு திருப்தியா சொல்லிருக்காங்க ! “

“எப்புடி டி இப்படிலாம் ” அகில் ஆச்சர்யமாக கேட்க,

“அதுக்கு பொறுமை வேணும் ! இப்படி  ஆசை வச்சு பிள்ளை வராம இருக்கணும் ! அப்படினா தானா நடக்கும் ! ” யமுனா அகிலை வார, அகில் முறைக்க, நிரல்யா “அப்போ நானும் லவ் பண்ணலாம்ல “

” செருப்பு பிஞ்சிரும் ” அகில் மற்றும் யமுனாவோடு அபியும் சேர்ந்து திட்ட , நிரல்யா கப்பென்று வாயை மூடிக் கொண்டாள்.

“என்னங்கடி மூணு பேரும் கமுக்கமாக பேசிக்கிட்டு இருக்கீங்க ? ” சாரலா சந்தேகத்துடன் பார்க்க, “தாய் கிழவி கண்டுபிடிச்சிருச்சு டி …..” நிரல்யா முணுமுணுக்க ,

“போதும் போங்க …… அகில் அக்பர் என்ன சொன்னான் ? “

“அத்தை அவன் ஈவ்னிங் தான் ஃப்ரியாம் ! “

அபி, “சரி ஆறு மணிக்கு மீட் பண்ணலாம்னு சொல்லு ! அவனால முடிஞ்சா ஹோட்டல புக் பண்ண சொல்லு! இம்ப்ரஸ் பண்ண சொல்லு “

“இம்ப்ரஸ் பண்ணி தான் இப்படி ” என்று கூறிய நிரல்யாவின் தலையில் அடித்து , அபியிடம் “சரி ” என கூறிவிட்டு சென்று விட்டாள் அகில்நிலா .

அடுத்து நிரல்யா பேசுவதற்குள் “போய் வேலையை பாருங்க ரெண்டு பேரும் ” என யமுனா மற்றும் நிரல்யாவிடம் கூறிவிட்டு “நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க ! சாயங்காலம் கோவில் போகணும் ” எனக் அபி மற்றும் உத்ராவிடம் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

😾❤️😻

அறைக்குள் நுழைந்தவுடன் அபி அவளை பின்னிருந்து கட்டியணைக்க , இவள் “ஹாஹா ” என வயிற்றை பிடித்து சிரித்தாள்.

அவளின் சிரிப்பின் அர்த்தம் புரிந்து அவளின் கொழு கொழு இடையை பிடிக்க வர, சட்டென்று தாவி பெட்டில் ஏறி நின்றவள் “யோவ் இது பேரு லவ்வா ….. இத நான் கிரஸ் லிஸ்டுல கூட சேக்க மாட்டேன் “

” அவ மேரேஜ்க்கு அப்புறம் தான் அண்ணானு கூப்பிடுறா? “

“ஆமா…. பின்ன….அகில் புருஷன்  என்ன கேனையா? லவ் பண்ணுறேனு சொன்னதுக்கு அப்புறமும் உன்னை நம்பி விடுறதுக்கு ? ஆமா…. ஏன் உன்னை வேணாம்னு சொன்னா? அக்பர லவ் பண்ணுறதுனாலையா?  “

“ஆமா …. “

“ஹா…. ஹா…. ஹய்யோ ” என அவள் அப்படி இப்படி என குனிந்து நிமிர்ந்து சிரிக்க, அவளின் இடுப்போடு மென்மையும் பளிச்சென்று தெரிய , இவனுக்கு ரத்த நாளங்கள் அனைத்தும் சூடேறியது.

அவன் சிரித்துக் கொண்டே பெட்டின் அருகில் வந்து, அவன் முட்டியால் மேலே ஏற, சட்டென்று மறு பக்கம் கீழே குதித்தவள் “நோ… நோ…. நான் சொன்னது தான்…. எப்பவும் ….. “

“ஹே …. ஹே…. ஆரம்பிக்காதடி …. இப்போ உனக்கு என்ன தெரியணும்? வா வந்து உட்காரு “

அவளும் அவனின் அருகில் நன்றாக சம்மணம் இட்டு கொண்டு “ஹக்கும் …… ” என கண் மூடி செருமியவள் , பட்டென்று கண் திறந்து ” அந்த நாதாரி லவ் பண்ணதுக்கு நம்ம கல்யாணத்தை எதுக்கு நிறுத்த பாத்தீங்க ? “

புருவம் இடுங்க பார்த்தவன் ” நான் எப்போ அப்படி சொன்னேன் ? “

ஒரு நிமிடம் யோசித்தாள் . காதலை சொன்ன அன்று நிறைய விஷயங்கள் மனம் திறந்து பேசினான். மறுநாளே அவன் அழைப்பு கொடுக்க, அவளுக்கே ஆச்சர்யம். அதே மகிழ்ச்சியோடு எடுக்க ” உனக்கு யமுனாவும் பாலாவும் லவ் பண்ணுறது தெரியுமா ? “

“ஹான் ……. “

” ரிலையன்ஸ் மாலுக்கு இப்போவே வா ! “

“நீங்க ஈரோடுக்கு….. “

டப்பென்று போன் வைத்ததற்கு அறிகுறியாக பீப் சத்தம் வந்தது. இவளும் ஏதேதோ வீட்டில் காரணம்  சொல்லி அங்கு செல்ல, யமுனா கண்களில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள். அவனின் நேர் எதிரில் பாலா. இருவருக்கும் நடுவில் கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாக அமர்ந்து இருந்தான் நம் காசிநாதன் (அபிமன்யூ ) !

“என்னங்க “

நிமிர்ந்து அவன் பார்க்க, “எனக்கு லவ் பண்ணுறாங்கனு தெரியும்! ரெண்டு தடவ போனுல பேசிருக்கேன்! ஒரு தடவ நேர ! அஞ்சு தடவை வீடியோ கால் ! ஆனா, நீங்க  என்னதான் பொண்ணு பாக்க வர்றீங்கனு யமுனா சொல்லல ! அந்த ஹோட்டல தான் அவளைப் பார்த்தேன்! பாத்த உடனே ஷாக். கண்ணை உருட்டி வாயை மூட சொல்லிட்டா ! அதோட வீட்டுக்கு போய் பாலாகிட்ட சொன்னேன் ! அப்போ உங்களை பத்தி பேசுனதுனால யமுனாவை லைட்டா திட்டிட்டு மட்டும் விட்டுடான் ! ஏன்னா அவனுக்கும் தெரியாது ! அவன் தெரிஞ்சு வச்சதல நீங்க ஒரு முசுடு! அதான் எனக்காக ரொம்ப பீல் பண்ணான்! ஆனா , எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு! லவ் பண்ணுறேங்க ! “

யமுனாவும் பாலாவும் இப்படி போட்டு உடைக்கிறாளே என்று நினைத்தவர்கள் இறுதியாக காதலை கூறியதில் அதிர்ந்து விட்டனர். அவனோ மூவரையும் அனல் கக்கும் பார்வை பார்த்து “மூனு பேத்துக்குமே இருக்கு! ” எனக் கூறியவன் , யமுனாவிடம் திரும்பி ” இனிமே இப்படி பண்ணா சும்மா இருக்க மாட்டேன் கொன்னுடுவேன் ! வா ” எனக் கூறி தரதரவென இழுத்து சென்றவன் இறுதியில் திருமணத்தில் தான் பார்த்தாள். எத்தனை முறை அழைத்தும் பதில் இல்லை. அதில் தான் பயந்து விட்டாள்.

“நீங்க ஏன் போன் எடுக்கல ? “

“நாங்க எடுத்த புது ப்ராஜெக்ட் நல்ல ரிசல்ட் ! அதுல கான்சன்டரேட் பண்ணேன் ! “

“அஞ்சு நிமிஷம் கூட இல்லையா ? “

” இங்க பாரு உத்ரா ! எனக்கு இந்த பேசுறது கொஞ்சுறது  இருபத்தி நாலு மணி நேரம் உன்னையே நினைக்கிறேனு டையலாக் விடுறதலாம் பிடிக்காது “

அவள் பாவமாக பார்க்க, “அதுக்காக என்னை பழம்னு நினைக்காதடி !  நான்  சொல்ல வர்றது நேரா இருக்கும் போது முகத்தை பாக்கனும் அப்போ ரொமான்ஸ் பண்ணனும் எல்லாமே பண்ணனும் ! அதுக்காக தான் உனக்கு ஒழுங்கா டைம் ஒதுக்கனும்னு இந்த நாலு மாசமும் இராப்பகலா வேலை பாத்தேன் !  இப்போ என் ஸ்டாப்ஸ் பாத்துக்குவாங்க ! நான் முன்னாடி சொன்ன மாதிரி உங்கிட்ட இருக்க தோணலடி ! ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருக்க தோணுது ! நீ எனக்கு பெரிய டிஸ்பர்ன்ஸ் அண்ட் டிஸ்டிராக்சன் “

அவள் அகமகிழ்ந்து அவனையே மெய் மறந்து  பார்க்க “முடியலடி ……. “

“என்னை ஏன் இவ்வளவு பிடிச்சிருக்கு ? குண்டா இருக்கேன் கருப்பா இருக்கேன் பின்ன ஏன் ? “

“காரணம் கிடையாது உத்ரா ! இப்போதான லவ் பண்ணுற போக போக புரியும் ! “

“ஆமா ஆமா சாருக்கு அனுபவம் ஜாஸ்தில ” எனக் கூறி கமுக்கமாக சிரிக்க,

“ஏய் ….. இந்த வாயை குறை டி…. எங்கிட்ட மட்டும் …. இந்த மாதிரி கிட்ட வரும் போது ….. என்னை ரொம்ப மாத்திடடி…. சன்னியாசம் போக நினைச்சவனை எப்படா சம்சாரியாகலாம்னு நினைக்க வச்சுட்ட …. அதுல ஒரு பங்காச்சும் உனக்கு இருக்கானு தெரியதான் முதல பூரா பேசல…. பாத்தா இப்பவும் நீ வாய தொறக்குற மாதிரி தெரில… மனசுல உள்ளதை மனசு விட்டு சொல்லு… எங்கிட்ட முக்கியமா சொல்லு …. இப்போ …. நான் என்ன என்ன பண்ணனும் மட்டும் சொல்லு ….. “எனக் மெதுவாக கூறி  பின்னால் நகர்ந்து சென்றவளின் கைகளைப் பிடித்து, அவளின் காதோரம் அசைந்தாடும் முடிக்கற்களை ஒதுக்கி அவளின் இதழில் வீணை வாசிக்க, கைகள் பல இசைகள் அவளின் மேனியில் வாசித்தது. அங்கு  முசுடு முயலிடம் சரிந்ததா இல்லை முயல் முசுடுவிடம் சரிந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அழகிய கூடல் நடைபெற்றது.

கீர்த்தி ☘️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
20
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

      1. Author

        நன்றி டா 🙏🏻🙏🏻