முசுடும் முயலும் – 17 😾❤️😻
“ஏன் மாம்ஸ் நான் உனக்கு என்ன பாவம் பண்ணேன் ? “
“டேய் அபி நம்ம ஆளுடா ! அவன் தப்பாலாம் நினைக்க மாட்டான் “
“யோவ் மாமா நான் லவ் பண்ணுறதே அவங்க வீட்டு பொண்ண தான் “
“என்னடா சொல்லுற ? அப்போ உனக்கு பிரேக்கப் ஆச்சா ? “
அஸ்வந்தின் கேள்வியில் அபியுமே அதிர்ந்து விட்டான்.
“யோவ் என்னய்யா உளருற ? “
“அபி என்ன தப்பா நினைக்காத ! ஒரு நிமிஷம் இரு நான் கிளியர் பண்ணிக்கிறேன் ! ” அஸ்வந்த் அபியிடம் கூறிவிட்டு, பாலாவின் புறம் திரும்பினான்.
அபி அதற்கும் பதில் பேசாமல் அமைதியாக காபியை உறிந்து கொண்டிருந்தான். ஏனென்றால், அவனுக்கும் தெரிய வேண்டுமே!
” டேய் பாலா ! நீ ஸ்கூல் படிக்கிறதுல இருந்து லவ் பண்ணுறதா தான் மைத்ரேயி சொன்ன ? “
“ஸ்கூல்லா ? ” அபி ஆச்சர்யமுடன் கேட்க,
பாலா மனதில் சங்கு சத்தம் ஒலிப்பது போல் இருந்தது.
“ஆமாடா அபி! இப்போ என்னடானா உங்க வீட்டு பிள்ளையை லவ் பண்ணுறேனு சொல்லுறான். அந்த பிள்ளையை கழட்டி விட்டுட்டு உன் கல்யாணத்தை அப்போ கரெக்ட் பண்ணிட்டான் போல “
“அட மாம்ஸ் , உனக்கு ஏன்ய்யா இந்த வேண்டாத வேலை? பர்னிங் பைஃயர்ல இன்னும் ஆயில் ஊத்துற நீ ! 😥😥 ரெண்டுமே ஒரே பிள்ளை தான் ! அதுவே உத்ரா கல்யாணத்துல தான் தெரிஞ்சது “
“ச்சீ ரெண்டும் ஒரே பிள்ளை தானா? நான் கூட நீ ஒரு ஆண்டி ஹீரோவோ இல்லை வில்லனா வருவேனு நினைச்சேன். பாத்தா காமெடி பீஸு ! ” என முகத்தை சுளித்துக் கொண்டு கூறினான்.
” நானாச்சும் காமெடியன் நீ வெறும் கெஸ்ட் ரோல் தான் ! நிறுத்து நீ ” என இருவரும் மாறி மாறி வாரிக் கொள்ள, அபி வேடிக்கை தான் பார்த்தான்.
இறுதியில் பாலாவே “மாம்ஸ் ! நான் உங்களை மாம்ஸ்னு கூப்பிடறது உத்ராகாக மட்டும் இல்லை யமுனாவுக்கும் தான் “
” இன்னும் கொஞ்சம் பெட்டரா பேசி இருந்திருக்கலாம் ” அஸ்வந்த் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு கூற,
“நீங்க பேசாம இருக்கிறதே பெட்டரா இருக்கும் ”
“எது”
“என் வாழ்க்கை ” எரிச்சலுடன் பாலா கூறினான்.
“ப்ரோ அவனுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ண வேணாம். ஒரு அண்ணனா எல்லாம் விசாரிச்சு தான் பண்ணனும். எனக்கு டைம் வேணும்.” அஸ்வந்திடம் பொறுமையாக கூறியவன், முகத்தை கடுகடுவென வைத்து கொண்டு பாலாவைப் பார்த்து ” அது வரைக்கும் நீயும் உன் பிரண்டும் வாயை மூடிட்டு இருங்க ” என அபி கூறினான்.
இதற்கு மேல் பாலா பேசுவானா அபி இந்தளவுக்கு இறங்கி வந்ததே பெரிய விஷயம் என்று நினைத்து வாயை பசை போட்டது போல் அமைதியாகி விட்டான்.
அபிக்கு அழைப்பு வந்தது என்று எழுந்து செல்ல, ” அப்படி என்னடா பண்ண உங்க ரெண்டு பேரு மேல இவ்வளவு கடுப்பா இருக்கான் ? உன் லவ் பத்தி அவனுக்கு எப்படி தெரிஞ்சுச்சு ? “
“அதான் மாம்ஸ் எனக்கும் பயம்! என் மேல கோபமா இருக்கிற மாதிரி தான் உத்ரா மேலையும் கோபமா இருக்காரோனு டவுட்டா இருக்கு “
“மலமாடு இதுல டவுட் வேறயா ! ரெண்டும் சண்டைல தான் இருக்குங்க ! “
” அய்யோ மாமா ! இரு அவர்டையே கேட்டுறேன் “
“டேய்….. டேய் ” அஸ்வந்த் கத்த கத்த காதில் வாங்காமல் எழுந்து பேசிக் கொண்டிருந்த அபியின் அருகில் சென்றான்.
போனில் பேசி முடித்து விட்டு திரும்பிய அபியின் முன் பாலா நின்று கொண்டிருந்தான். அவன் குஷி பட ஜோதிகா போல் கண்கள் மூடி “மாம்ஸ் நான் லவ் பண்ணுறது உத்ராவுக்கு தெரியும் தான். அவ என் ஃபிரண்ட் மாம்ஸ். அவளுக்கு எப்படி தெரியாமா இருக்கும் “
அபி கையை கட்ட, “எனக்கு புரியுது. யமுனா முதல் தடவ பாத்த அப்போ அவளுக்கும் அதிர்ச்சி தான். அதை உங்ககிட்ட சொல்லுறதுக்கு தான் டைம் இல்லை “
அபி புருவம் சுருக்கி பார்க்க “அவ நீங்க பேசலைன்னு ஃபீல் பண்ணிகிட்டு இருந்தாள். இதுல அவளுக்கு இதலாமா ஞாபகம் இருக்கும் ! நீங்க ஏன் மாம்ஸ் பேசவே மாட்டேங்குறீங்க? “
“டேய் ஒரு கப்புள்ல்குள்ள வரக் கூடாதுனு தெரியாதா உனக்கு? “
” மாம்ஸ் அவ என் ப்ரண்டு “
“யமுனா என் தங்கச்சி “
“கரெக்ட்டு யமுனா உங்க தங்கச்சி உத்ரா உங்க மனைவி புரிஞ்சுருச்சு ! இப்போ போவோமா ? “
பின்பு, மூவரும் எழுந்து வீட்டிற்கு சென்று விட்டனர். மதியம் உணவு நேரத்திற்கு கொஞ்சம் நேரம் தான் இருப்பதால் அதே மாநாட்டை இங்கும் வைத்தனர். இதில் அம்மூவரோடு உத்ராவும் மைத்ரேயியும் கலந்து கொண்டனர்.
உத்ரா கூறியதை வைத்து இருவருக்குள்ளும் கணவன் மனைவி உறவு இல்லை என்று மைத்ரேயி தெரிந்து கொண்டாள். ஆனால், பரஸ்பர அன்பாவது இருக்கின்றதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அனைவரும் பேசிக் கொண்டிருக்க அபி யாருக்கும் தெரியாமல் உத்ராவை தான் பார்த்தான். அது தெரியாமல் உத்ராவும் தன் கணவனை கண்களால் களவாட பார்க்க மாட்டி கொண்டாள் அவளின் மன்னவனிடம். இது போல் பல முறை நடக்க, ஒரு ஜோடி கண்களுக்கு இனிமையாகவும் ஒரு ஜோடி கண்களுக்கு மூக்கில் புகை வருவது போலும் இருந்தது.
அவர்கள் யாரென்று நமக்கு தெரியாமல் இல்லை. அது மைத்ரேயி மற்றும் பாலா தான். பாலாவை பார்த்த மைத்ரேயி “ஏன்டா ஏன் உனக்கு ஏன் வேகுது. உனக்கும் ஆள் வந்துருச்சு. அவங்கள பாத்து ஏன் வேகுற ?
” இங்க பாரு அக்கா ! நீ இந்த லிஸ்ட்லையே இல்ல ! பேசாம இரு! “
“நான் காலையிலேயே கவனிச்சேன் டா! உன்ன பத்தி சொன்ன உடனே அபி முகம் மாறுனத ? “
“அப்படியா ” ஒன்றும் தெரியாதது போல் கேட்க,
“இது மட்டும் இல்லை இன்னொன்னும் பாத்தேன். அதுக்கு நீயும் அவளும் குனிஞ்ச தல நிமிராம தின்னுக்கிட்டு இருந்தத ” என முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு கூறினாள்.
அரை நொடி அவளைப் பார்த்த பாலா அஸ்வந்தை சுரண்ட , “என்னடா “
“இல்ல மாம்ஸ் ! இந்த அக்கா கூட எப்படி குடும்பம் நடத்துற ? அதுவும் ரெண்டு குழந்தை ? பாரேன் எப்படி முகத்தை வச்சு இருக்கு “
“ஹப்பா இப்பவாச்சும் என் நிலைம உனக்கு புரிஞ்சதே ! “
“ஆழ்ந்த அனுதாபங்கள் மாம்ஸ் ….. அய்யோ அம்மே ” மைத்ரேயி அடித்த அடியில் கதறினான்.
“ஏன்டா ” உத்ரா அவள் மேல் விழுந்த கடுப்பில் கேட்க ,
“ஏன் கண்ணுலேயே களேபரம் பண்ணிக்கிட்டு இருந்தது டிஸ்டர்ப் ஆகிடுச்சோ “
“எருமை எருமை “எனக் கூறி தனது கணவனை அதிர்ந்து பார்த்தாள். எங்கு தன் நண்பனை தப்பாக நினைத்து விடுவானோ என நினைத்து.
அந்த கேப்பில் மைத்ரேயியின் புறம் திரும்பி,
“அக்கா ….. இது சரியில்லை “
“மூடு டா வெண்ணை “
இருவரும் மாறி மாறி குழாய் அடி சண்டை போல் சண்டையிட்டு கொண்டிருந்தனர். உத்ராவிற்கு தான் சங்கடமாக இருந்தது. அபியை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். அபியோ சிரித்து ரசித்து கொண்டிருந்தான். அதையே சாக்காக வைத்து “பாலா ரொம்ப நல்ல பையன். இப்படி தான் அவன் இருக்கிற இடத்த கலகலனு வச்சுக்குவான்! திறமைசாலி ! ” என இன்னும் நாலைந்து பிட்டுகளை சராமாரியாக வீசினாள்.
பாலா அதிர்வாகவும், அஸ்வந்த் சிரித்துக் கொண்டும், மைத்ரேயி ஆச்சர்யத்துடன் பார்க்க, அபி அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
இப்பொழுது அஸ்வந்த் பாலாவின் வலது புறம் சுரண்டினான். ” உனக்கு யமுனா கிடைக்கிறது டவுட் தான்டா ! ” எனக் கூறி சிரித்தான் அஸ்வந்த் .
“இந்த லூசு ஏன் தான் இப்படி பண்ணுறாளோ ! ஏன் மாம்ஸ் நீ வேற பீதியாக்குற ? “
பாலாவை இடது புறம் சுரண்டிய மைத்ரேயி “இவ என்னடா இது ஒரு புது ப்ராடெக்ட். இதுக்கு அந்த கெப்பாசிட்டி இருக்கு, இந்த வாரண்டி இருக்கு, அந்த கியாரண்டி இருக்கு, இதுக்கு இந்த ஃபேசிலிட்டி இருக்குனு உன்னை வித்துகிட்டு இருக்கா “
” ஆமால்ல” அஸ்வந்த் சிரித்துக் கொண்டே கேட்க,
“ஆமாங்க ” என மைத்ரேயியும் அவனின் கையைப் பிடித்து சிரித்தாள்.
இருவரையும் இருபுறமும் பார்க்க , பின்பு அவர்கள் பிடித்து இருந்த கைகளைப் பார்க்க ” என்ன அடுத்த குழந்தைக்கு ப்ளான் பண்ணுறீங்களா ! ச்சீ…. கைய எடுங்க? “
“கடைசி வரைக்கும் நீ சிங்கிள் தான்டா ” என அவனின் தலையில் அடித்தாள் மைத்ரேயி !
பாலாவைப் பற்றி கூறும் பொழுது ஒரு முறை கூட அபியின் முகத்தை பார்க்கவில்லை. மாற்றி மாற்றி மற்றவர்களின் முகத்தை பார்த்தே கூறிக் கொண்டிருந்தாள். இறுதியாக அவன் முறைப்பதை பார்க்க கப்சிப் என வாயை மூடிக் கொண்டாள்.
” என்ன மாப்பிள்ளை ரெண்டு பேரும் சாப்பிடலையா ? ” எனக் கூறி கொண்டே வைரமணி உள்ளே வந்தார்.
” உங்களுக்கு தான் மாமா வையிட்டிங் ” என இருவரும் ஒன்று போல் கூற ,
தென்றலும் வெளியே வர மதிய உணவு ஏகபோகத்துடன் நடந்தது.
அனைத்தும் முடிந்து “மாப்பிள்ளை கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க….. உத்ரா நீயும் போ……. “தென்றல் கூற, அஸ்வந்தும் ” எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு . என்ன டிஸ்டர்ப் பண்ண வேணாம். பிள்ளைங்களை உள்ள விட்டுறாத ” எனக் கூறி அவனும் லாப்டப்பை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்று விட்டான்.
அபி உத்ராவின் அறைக்கு சென்று விட , கிளம்பும் பாலாவை வாசலுக்கு இழுத்து “என்னடா ஆச்சு ? எதுவும் சொன்னாரா ? “
“ஆமா….. நீயும் அவரும் ஒழுங்கா பேசிக்கிறீங்களா? “
” ஏன் ஏன்! ஏ…..ன்….. இப்போ கூட எங்களை எரிக்கிற மாதிரி பாத்த ? அப்புறம் என்ன ….. கே….ள்வி …. இது ? “
” கணவன் மனைவியா இருக்கீங்களானு அவன் கேட்கிறான் ? “
உத்ரா முழித்தாள். பின்னே இருந்து மைத்ரேயி கைகட்டி அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்குமாறு.
“அக்கா.. “
“யமுனா தான் பாலா லவ்ராம்ல “
எச்சில் முழுங்கினாள்.
கீர்த்தி ☘️
அபிக்கு கோபம் எதற்கு