முசுடும் முயலும் – 13 😾❤️😻
மறுநாள் காலை எழும் பொழுது புதிய உத்ராவாக தான் எழுந்தாள். அவன் இப்படித்தான் அவனை எதிர்ப்பார்க்க கூடாது, எதிர்ப்பார்ப்புகள் மனதை மிகவும் கொல்லும். அதனால், அதனை விடுவிடுத்து விட்டு மகிழ்ச்சியாக திருமணத்திற்கான வேலைகளை செய்தாள்.
நேரில் காணும் பொழுது காட்டும் அன்பில் ஒரு குறையும் இல்லையே என்கின்ற நம்பிக்கையில் இரு நாள்களை கழித்து விட்டு தனது ஊரை நோக்கி பயணம் மேற்கொண்டாள்.
😾❤️😻
இன்னும் ஒரு மாதமே இருக்கின்றது என்ற நிலையில் அவள் வழக்கம் போல் எழுந்து தனது வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, காலையிலேயே அழைத்து இருந்தான்.
எதுவோ காரணமாக தான் அழைக்கின்றான் என்றும் , இவ்வளவு நாட்களில் தன் ஞாபகம் வராதா என்ற கேள்வி மட்டும் மனதில் எழுந்து கொண்டே இருக்கிறது.அவ்வாறு எழும் மனதை மட்டும் தடுக்க முடியவில்லை.
அதே எண்ணத்துடன் தான் அழைப்பை எடுத்தால், வழக்கம் போல் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு அவன் அழைத்ததின் காரணத்தை கூறினான். இன்று அவன் அழைப்பின் காரணம் பத்திரிக்கை !
சிரிப்பு தான் வந்தது. இந்த நான்கு மாதங்களில் அவனின் காதல் பேச்சுக்கள் கூட குறைய ஆரம்பித்து விட்டது. அதனையும் கவனித்தாலும் ஒன்றும் எதிர்வினை காட்டவில்லை இவளும் !
அவனும் அவனின் இளமைப்பருவ துடிப்பை அவனின் உழைப்பிற்கு சமர்ப்பித்தான். இந்த மாதம் நாம் நினைத்த முன்னேற்றம் வரும், அடுத்த மாதம் வரும் என்ற நம்பிக்கையில் தனது நேரத்தை அதில் செலவழித்தான். அவன் நினைத்தது போல் நடக்கவில்லை என்றாலும் ஒவ்வொரு மாதத்திற்கும் குறைந்தபட்ச முன்னேற்றம் இருந்தது. அந்த நம்பிக்கையில் தைரியமும் துடிப்பும் வர, இன்னும் இன்னும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தான்.
அவன் நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய பத்திரிக்கை பற்றி கேட்டான். அவளுக்கு தேவையான எண்ணிக்கைகளை கேட்டவன் ” உனக்கு டிசைன் பண்ணுறவங்க யாராச்சும் தெரியுமா?”
” ஏன்? உங்களுக்கு யாரையும் தெரியாதா ? “
“இல்லை! யோசிச்சு யோசிச்சு பாக்குறேன்! ஒரு ஆளும் ஞாபகத்துக்கு வரல ! “
” அப்படினா வீட்ல பத்திரிக்கை அடிக்க கொடுப்பாங்கல அவங்க கிட்டேயே கொடுக்க வேண்டியது தான ? “
” நோ ! நோ! வேற வேற ? “
புன்னகை வந்தது அவனின் பேச்சில். உடனே “யோவ் என்ன நோ நோ ? அப்படிக்காவும் போகாம இப்படிக்காவும் போகாம நடுவுல நீ நிக்கிறதும் இல்லாம என்னையும் நிக்க வைக்கிறீங்க ! “
அவள் ஒருமையில் பேசியது அவள் உணர்ந்தாளோ இல்லையோ அவன் உணர்ந்தான்.
அவனும் சிரித்துக் கொண்டே ” சரி! அப்போ நீயே யாராச்சும் விசாரிச்சு சொல்லு ! “
” தெரியாதவங்கல பத்தி எங்க விசாரிக்கிறது ? “
“விசாரிச்சு சொல்லுடி ! பிஸியா இருக்கேன்டி ! கேட்டு சொல்லு ! நான் நைட் பேசுறேன் உன்கிட்ட ” எனக் கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்ஸ்டாகிராமில் அலசி ஆராய்ந்து ஒருவரை பிடித்து விசாரித்து விட்டாள். அதனை பற்றி கூற அவனை அழைக்க , அவன் எடுத்த பாடில்லை. இவளும் மூன்று முறைக்கு மேல் அழைத்து விட்டு, அவனாக கூப்பிடட்டும் என்று விட்டு விட்டாள்.
இரண்டு மணி நேரமானது, மூன்று, நான்கு அந்தி சாயும் பொழுதும் வந்தது. அவன் தகவலை பகிருமாறு மெசேஜ் அனுப்பினான் . அவளும் அனைத்து தகவலும் கூற , டிசைன்ஸ் மட்டும் வாங்கி அனுப்பு எனக்கு ….. உனக்கு பிடிச்சத மட்டும் …..”
“நீங்க விசாரிக்கலையா “
“நோ நீட் “எனக் கூறி கண் சிமிட்டும் எமோஜியை அனுப்பி விட, அதில் மெல்லிதாக புன்னகை பூத்தது. பின்பு, அவர்களிடம் கூறி இரு டிசைன்களை அனுப்பியதோடு இருவரையும் கார்டுனிக் இமேஜாக மாற்றியும் அனுப்பியிருந்தாள். அதைப் பார்த்து சிரித்தவன், அவளுக்கு பிடித்ததில் ஒன்றை தேர்வு செய்து அனுப்பி விட்டான்.
அவர்களும் டிஜிட்டலுக்காக ஒன்று, கார்ட்டுகாக ஒன்று என இரு பத்திரிக்கைகளை அனுப்ப, சட்டென்று அவளுக்கு போன் செய்தான். “ஏன்டி உனக்கு பேரு பிடிக்கலைனு வேற பேரு போட்டா எல்லாருக்கும் மாப்பிள்ளை யாருனு தெரியாது “
“ஏன் உங்க கிளோஸ் ப்ரண்ட்ஸுக்கு தான அனுப்ப போறீங்க ! அவங்களுக்கு உங்க பேரு அபி னு தெரியாதா ? “
“ஹா ஹா….. தெரியாது ………. “
“அப்போ எல்லாரும் எப்படி கூப்பிடுவாங்க ” ஒரு ஆர்வத்தில் கேட்டாள் .
” காசி ஆர் நாத் ஆர் நாதன் ஆர் கே. என் …. இப்படி எதாச்சும் “
“ஓஹோ ! அப்போ உங்களுக்கு காசிநாதனு போட சொல்லிடுறேன் ! “
“மேடத்துக்கு அபினு போட போறீங்களாக்கும் ” அவளின் முகப் பாவனைகளை நினைத்து சிரித்துக் கொண்டே கேட்டான்.
“ஆப் கோர்ஸ் ” எனக் கூற, ” சரி கிரியேட் பண்ணுறவங்க நம்பர் தா “
” ஏன்? “
“பேமெண்ட் “
” ஓகே “எனக் கூறி அவனுக்கு அனுப்பி விட்டு, கார்ட் தயார் செய்பவர்களிடமும் மாற்றங்களை கூற, அரை மணி நேரத்தில்
அவர்கள் அனுப்பியதில் மெய் சிலிர்த்து விட்டாள். அனைத்தையும் மாற்றி இருந்தான் கள்ளன்.
ஒரு அழகிய பெண் சற்று பூசினார் போல் உள்ளவள் ஆஃப் ஒயிட் தாவணியில் அழகாக இருந்தாள். அதன் பார்டரில் தங்க நிறத்தில் டிசைகள் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. நீள கூந்தலை விரித்து விட்டு பூவால் பின்னால் இருந்து இறுக்கி இருந்தாள். காதில் சிறு ஜிமிக்கி அதன் பக்கவாட்டில் அழகான செயின் மாட்டல், நெற்றியில் அழகான நெத்தி சுட்டி, கையில் அளவான வளையல்கள். அதற்கு ஈடாக ஒல்லியான தேகம் கொண்ட ஆண்மகன் பட்டு வேட்டி, பெயிஜ் நிற குர்தா, மாலையை தோமாலை போல் போட்டு இருந்தான். அவனின் இரு கைகளை கோர்த்து கொண்டு அவளைப் பார்க்க, அவனின் வலது புற கைகளை பிடித்துக் கொண்டு , நாணம் கொண்டு குனிந்து இருக்க, அவளின் முடிக்கற்கள் தென்றலோடு பேசிக் கொண்டிருந்தது .
இதில் அவர்களின் பெயர், தேதி, நேரம் அனைத்தும் அழகாக அச்சிடப்பட்டு இருந்தது. அதன் பின்பு, ஒரு வீடியோ அனுப்பி இருந்தனர்.
அதை திறக்க, ஏ.ஐ யின் மூலம் அழகான வெள்ளை நிற கவுன் அணிந்து இவளும், கருப்பு நிற சூட் அணிந்த இவனும் எதிர் எதிரே நடந்து வந்து அவளின் இடையைப் பிடித்து அவளை அருகில் அணைத்து அவளின் மென்மை தன் தேகத்தில் படரவும் ரத்தம் சூடாகி அவளின் அதரத்தை சுவைத்தான். அதில் அவள் துவண்டு சரிய, அவளைப் பிடித்து மேலும் மேலும் சுவைத்தான்.
அதில் பின்னிருந்து வண்ணக் கலர்கள் வான வேடிக்கையாக வெடித்தது. அதில் பின்னிருந்து அவர்களின் பெயர் மற்றும் மற்ற தகவல்கள் வந்தது. அதனை கண்டு முகம் செவ்வானமாக சிவந்தது.
அவள் பார்த்து விட்டு அவனுக்கு அனுப்ப, பார்த்து விட்டதுக்கு சாட்சியாக ப்ளு நிறத்தில் இரட்டை டிக் காண்பித்தது. அதில் அவள் விரக்தி புன்னகை தான் வீசினாள்.
ஒவ்வொரு தருணத்திலும் நிகழ்ந்த தனிப்பட்ட சிறந்த நிகழ்வுகளை அனைத்தையும் நினைத்து மகிழ்ந்து கொள்வாள். இப்போதெல்லாம் அவள் தைரியமாக இருந்தாலும் , தென்றலின் வார்த்தை தான் வெகுவாக மனதைத் தாக்குகிறது.
அபியும் உத்ராவும் பெரிதாக எதுவும் பேசவில்லை என்ற வருத்தம் வைரமணிக்கும் இருந்தது. அதை தென்றலிடம் மட்டுமே கூறுவார். ஆனால், தென்றல் முன்பெல்லாம் அமைதியாக கவனித்து மட்டும் கொண்டிருந்தவர் இப்பொழுது நேரடியாகவே அவளின் மொபைலின் ரிங்டோன் சத்தம் கேட்டாலே ” யாருமா பேசுறது ? “என்று கேட்பவர், அபி இல்லாமல் வேறு யாரேனும் பேசுகிறார் என்று கூறினால் அவரின் முகமும் வாடுவது நன்றாகவே தெரிகிறது.
இப்படியே அந்தி பொழுதும் சாய, இரவு தொலைக்காட்சியில் வைரமணி மற்றும் உத்ரா படம் பார்த்துக் கொண்டே சாப்பிட , தென்றல் தோசை வார்த்து கொண்டிருந்தார்.
அவளின் தொலைப்பேசிக்கு அழைப்பு வந்தது. தென்றல் தான் எடுத்தார். எடுத்தவரின் முகம் பிரசாகமானது . ஏனென்றால் அழைத்தது அபி !
அன்னையின் கையில் இருந்து வாங்கியவள் அழைப்பை ஏற்று “சாப்பிடுறேன் ! டென் மினிஸ்ட் கழிச்சு கூப்பிடுறேன் ” எனக் கூறியவள் , பத்து நிமிடத்திற்கு முன்பே அழைத்து விட்டாள் அவனை .
இன்று அவளிடம் பேச வேண்டும் என நினைத்து , வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு இரவு சீக்கிரமே வீட்டிற்கு வந்து , உண்டு முடித்து அவனின் அறைக்குள் வெகு சீக்கிரமே அடைந்து விட்டான்.
இவள் விஷயத்தில் முதன்முறையாக பதட்டம் குடிகொண்டு இருந்தது. ஏன் என்று தெரிந்தாலும், அத்தகைய அவஸ்தையை விரும்பியே ஏற்றான். பத்து நிமிடத்தில் பத்தாயிரம் முறை ஒத்திகைப் பார்த்து விட்டான். அவள் திரும்பி அழைத்ததில் , ஏற்றவன் ” என்ன சாப்பிட்டியா? “
அவனின் பேச்சு வித்தியாசமாக இருந்தது. சிரித்துக் கொண்டே “டயர்டா இருந்தா போய் தூங்கு குங்க…. ஏன் இப்படி பேசுறீங்க? “
மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் , ” ஏண்டி நீ வேற? வீடியோ கால் வர்றீயா ? “
அவளும் வந்தால், அவளை பார்த்தான். தலையை இழுத்து கொண்டை போட்டிருந்தாள். வீட்டில் அணியும் நைட் பேண்ட் மற்றும் நைட் டிரஸ் அணிந்து இருந்தாள். நெற்றியில் சிறிதான பொட்டு . முகத்தில் ஒரு ஒப்பனையும் இல்லை. அவனோ குளித்து ப்ரஷாக இருந்தான்.
அவனைப் பார்த்து விட்டு, தன்னை குனிந்து கீழே பார்த்ததோடு அருகில் உள்ள கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன் சிரித்தான் .
“போதும் ! வீடியோ கால் தான் பண்ண போறீங்கனு தெரிஞ்சு நல்லா ப்ரஷா இருக்கீங்க. நான் மட்டும் இப்படி இருக்கேன் “
“போதும் டி ! இதுலாம் ஒரு மேட்டரா ! மேரேஜ்க்கு அப்புறம் இப்படி தான் உன்னை பாக்க போறேன் . அப்புறம் என்ன ? “
” இருந்தாலும் எங்களுக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்புலாம் இருக்க தான் செய்யும் “
“நல்லா இருக்கட்டும் ! யார் வேணாம்னு சொன்னா? ஆமா உனக்கு யாராச்சும் ப்ரோபோஸ் பண்ணிருக்காங்களா? “
“எல்லாரும் லவ் பண்ணிருக்காங்களானு தான் கேட்பாங்க ! நீங்க என்ன வித்தியாசமா கேட்குறீங்க “
“எல்லாம் முக ராசி தான் ! “
“சார் மட்டும் பத்து பொண்ண டாவடிச்சுட்டு அஞ்சு பொண்ண லவ் பண்ணி ரெண்டு பொண்ண கல்யாணம் பண்ணி இப்போ உங்க பொண்ணு ஸ்கூலுக்கு போகுதாக்கும் “
“ஆமாடி ! நான் அப்படித்தான் “
” சூடம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் நான் நம்ப மாட்டேன் “
“ஏன்”
“லவ் பண்ணுறதுக்கு ….. இல்லை இல்லை…… மொத ஒரு பொண்ணுக்கிட்ட ப்ரண்டா ஆகவே நிறைய பேசணும் அந்த பொண்ணுக்கிட்ட . சோ, பஸ்ட் பாயிண்ட்டே இங்க போயிடுச்சு “
“ரொம்ப டேமேஜ் பண்ணுற “
“எதார்த்தத சொன்னேன் “
” உண்மை தான் ! எனக்கு லவ்லாம் இல்லை ! ஏன் ப்ரண்ட்ஸ் எல்லாமே பசங்க தான். காலேஜ்ல பசங்க கேங் இருக்கும் இல்லையா! அப்படிபட்ட கேங் தான் எனக்கும் ! படிச்சு முடிச்சு வந்தவுடனே தொழில்னு வந்துட்டேன் ! சோ , அந்த டிபார்ட்மெண்ட் இல்லவே இல்லை. ஆனா, உத்ரா நிறையா பொண்ண வேணாம்னு சொன்னேன். உன்னை ஏன் சொல்லைனு எனக்கு இப்போ வரைக்கும் தெரியாது ! ஆனா, இப்போ சொல்லுறேன் ஐ லவ் யூ டி….. ஐ மேட்லி லவ் யூ டி….. எனக்கு நீ வேணும் எல்லாமேவா! “
அவளின் கண்கள் பனித்து விட்டது . அவளின் வார்த்தையில் !
காதல் சொன்ன கணமே…
அது கடவுளைக் கண்ட கணமே…
காற்றாய் பறக்குது மனமே… ஓஓஓ…!
கீர்த்தி ☘️
அபி வாய் திறந்து காதலை சொல்லிட்டான். இனி உத்ராவை கைல பிடிக்க முடியாது 😂😂
அபி அப்படா இப்போதாவது சொன்னானே