Loading

முசுடும் முயலும் – 12 😾❤️😻

“எனக்கு குழந்தையா இருக்குறப்போ ஆப்ரேட் பண்ணாங்க ? “

“எதுக்கு ?  “

“பிலியரி அட்ரேசியா ! இது கேள்வி பட்டு இருக்க மாட்ட ! இது ஒரு ரேர் கேஸ் தான். லிவர்ல உள்ள ப்ஃலோயிங் பைப் ஒல்லியா , லீனா இருக்கும். சோ, அதனால, குடலுக்கு போக வேண்டியது கரெக்ட்டா போகாது ! அதனால, அதுக்கு ஒரு ஆப்ரேஷன் பண்ணாங்க. எனக்கு இன்னும் அதுக்குரிய தழும்பு இன்னும் இருக்கும் “

திருதிருவென முழித்தாள் உத்ரா . என்ன கூறுவது என்று அவளுக்கும் புரியவில்லை. வீட்டில் கூறினால் அனைவரின் நிலை என்ன என்று தெரியவில்லை. அதோடு, தனக்கே புரியாததை எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது என்றும் தெரியவில்லை.

இதை அரை நொடியில் அவள் மனதிற்குள் நினைக்க , அவனோ அவளின் வதனத்தை கண்டு , “தப்பு செய்து விட்டோமோ ” என அவனுக்கு மனதிற்குள் குடைந்தது. முன்பே கூறியிருக்க வேண்டும். வேண்டுமென்றே கூறாதது போல் இருக்கின்றது என்று நினைத்தான்.

அவளோ ” இப்போ ஒன்னும் இல்லைல ! சரி ஆகிடுச்சுல ” என கேட்க, அவள் அதனைப் பற்றி ஏதாவது கேட்பாள் என்று நினைத்தவனுக்கு அவள் முற்றுப்புள்ளி வைத்தது போல் கேட்டது இனிமையாக தான் இருந்தது. இருந்தும் “அதலாம் ஒன்னுமில்லை. ஐ ஆம் நார்மல் ” என கூற, அவள் “ஓகே ஓகே” என கூறி விட்டு வேறு புறம் திரும்பி வேடிக்கைப் பார்த்தாள்.

அவளே பேசட்டும் என்று எதிர்ப்பார்த்தான். தான் வாயைத் திறந்தால் அவளிடம் இதைப் பற்றித் தான் பேச வேண்டும். ஆனால், அவனுக்கோ அதைப் பற்றி பேச விருப்பமில்லை. அதனால் , அவனும் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தான்.

அரை நிமிடம் ஐந்து நிமிடம் ஆகியது. அவள் வாயைத் திறக்கவே இல்லை. பின், “இன்விடேஷன் என்ன பிளான் பண்ணியிருக்கீங்க ? ” என அவளே ஆரம்பித்தாள்.

“ஹான் என்னது? ” இம்முறை அபி திருதிருவென முழித்தான்.

” இல்லை இன்….. விடே……ஷன் ” அவன் கேட்டதை வேறு மாதிரியாக புரிந்துக் கொண்டு கேட்டாள்.

சட்டென்று கட்டியணைத்தவன் “நான் வேணும்னு மறைக்கல உத்ரா ! ஏதோ தடுத்துருச்சு! எங்க இத வச்சு நீ கல்யாணம் நிறுத்துருவியோனு பயம் எனக்கு ? “

அவனின் முதுகை நீவி விட்டாள். ” அதே பயம் தான் எனக்கும் ” எனக் கூறிய நொடி அவளைப் பிரித்துக் புருவ முடிச்சோடு காண , “எங்க வீட்டில சொன்னாலும் ” எனக் கூறியவளை அள்ளி அணைத்து வன்மையாக முத்தமிட தோன்றியது அவனுக்கு . முயன்று கட்டுபடுத்தினான்.

பின்பு, இருவரும் எது எதுவோ பேசி விட்டு மனநிறைவோடு வீட்டிற்கு சென்றான். அதன் பின்பு , இப்பொழுது தான் அவளை அழைக்கின்றான்.

😾❤️😻

அவனின் பக்கத்தில் இருந்து பார்த்தால், அவனின் வேலை அவனை இறுக்கி பிடித்து இழுத்தது. பெரும்பாலான பெரிய வியாபாரிகளை பிடித்து அவனின் முயற்சியை பற்றிக் கூறி அவனின் உற்பத்திகளை விரிவாக்கம் செய்தான். ஆட்களை அதிகமாக நியமத்தான். இரவு நெடு நேரம் கழித்து வந்தாலும் உண்டு முடித்து விட்டு படிப்பான். அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல கடும் தவம் மேற்கொண்டான்.

அவளிடம் பேச வேண்டாம் என்று நினைக்கவில்லை. அவளின் ஞாபகம் வரும் போதெல்லாம்  நிச்சயத்தின் போது அவள் அவனை பார்ப்பது போல் இருக்கும் யமுனா எடுத்த புகைப்படத்தையே பார்த்துக் கொள்வான். பின்பு, தனது வேலையை பார்க்க சென்று விடுவான். ஞாயிற்று கிழமைகளிலும் ஏதாவது படிப்பது போன்றதிலேயே நேரத்தை அதிகம் செலவழிப்பான். அவனின் வயது தான் அவனின் துடிப்பிற்கு காரணம்.

வீட்டில் உள்ளவர்கள் அவனை அகலக்கால் வைக்காதே என்று எதிர்மறையாக பேசுவதிலும் தனது நிலையை , நிதானத்தை வெகுவாக இழக்கின்றான். அதில் இன்னும் வெறியாகி இம் முயற்சில் வெற்றி அடைந்தே தீர வேண்டும் என்று பெரும் போராட்டாமே நடத்திக் கொண்டிருக்கிறான்.

😾❤️😻

ஒரு வழியாக இன்று தான் அழைக்கின்றான். ஆனால், அவளுக்கு உற்சாகமும் இல்லை அதே போல் வருத்தமும் இல்லை. வெறும் விரக்தி மட்டுமே இருந்தது.

அமைதியாக சில நொடிகள் அழைப்பையே பார்த்தவள் , எடுத்தாள் . அவன் எடுத்தவுடன் ” என்ன மேடம் இன்னும் உங்க பர்சேஸ் முடியலையா ? ” அவளின் அமைதியை கண்டுகொள்ளாமல் குறும்புடன் கேட்டான் .

அவளோ அமைதியாக “இல்லை ….. டிரஸ் ஓவர் . கொஞ்சம் அக்சஸ்சரிஸ் (accessories ) வாங்கனும். அதோட இங்க ஒரு ரிலேடிவ் ஃபங்ஷன். அதான் “

“எப்போ ஃபங்ஷன் ? “

” புதன் “

“இப்போ எங்க இருக்க ? “

“கோயம்பத்தூர் “

“ஹே ரியலி! இப்போ மணி மூணு . ஈவ்னிங் ஏதாவது ப்ளான் இருக்கா ? “

லேசாக அவளுக்கும் அவனை காணும் ஆவல் பிறந்தது. ஏனென்றால் அவனைப் பார்த்து பேசி ஒரு மாதம் ஆகி விட்டதே. சக தோழிகளுக்கும் கல்யாணம் முடிவாகி இருந்தது. அவர்களோ அவர்களின் துணையோடு வேறு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

இவளும் வேறு உலகத்தில் இருந்தாள் அதுவும் தனியாக . அதனால், அவன் கேட்டவுடன் சிறு ஆவல் பிறந்தது.

அதனால் “இல்லை ஒரு ப்ளானும் இல்லை”

“ஓகே ….. பைஃன் ….. நான் வரேன்! வெளிய போவோம் ! ரெடியாகி இரு ! ஆறு மணிக்கு வரேன் ! ” எனக் கூறி சில பல விஷயங்கள் பொதுவாக பேசி விட்டு வைத்தனர்.

😾❤️😻

மாலை ஆறு மணி ,

அவனிடம் பேசியதில் இருந்து அவனின் வருகைக்காகவும், ஆறு மணிக்கும் வெகுவாக காத்துக் கொண்டிருந்தாள்.

அம்மாவின் தமக்கை வீட்டிற்கு தான் வந்திருந்தனர். ஞாயிற்று கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் தான் இருந்தனர். இவளும் தயாராகி இருந்தாள்.

வெள்ளை நிறத்தில் ஆரஞ்சு நிற பூக்கள் போட்டிருந்த ஆர்கன்சா துணியில் நைந்த அனார்கலியை அணிந்திருந்தாள். இடது புறத்தில் துப்பாட்டாவை விரித்து விட்டிருந்தாள். தலையை நேர் உச்சி எடுத்து இரு புறத்தில் சிறிதாக முடி எடுத்து அதனை சுருட்டி விட்டு போனி டைல் அணிந்திருந்தாள். நெற்றியில் சிறிதாக கல் பொட்டு . வழக்கம்போல் கண்களுக்கு அழகிய ஒப்பனை செய்து இருந்தாள் .

அவன் உள்ளே வந்தான் . ஆஃப் ஒயிட் நிறத்தில் சைனிஸ் காலரில் கைகளை முட்டி வரைக்கும் மடக்கி , கருப்பு நிற வாட்ச் அணிந்து , கிரே பேண்ட் அணிந்து மேன்லியாக வந்தான். அவனை ரசிக்கும் பொழுதே பின்னிருந்து யமுனாவும் இவர்களின் சித்தி பையன்கள் இருவர் உள்ளே நுழைந்தனர்.

நிச்சயம் பின்பு இப்பொழுது தான் பார்க்கிறாள். அதனால், அவர்களை காணும் பொழுது மகிழ்ச்சியே. ஆனால், ஒரு மாதம் கழித்து பார்க்கிறோம் . தனியாக பேச வேண்டும், செல்ல வேண்டும் என்கின்ற நினைப்பு தனக்கு மட்டும் தான் இருக்கின்றதா அவனுக்கு இல்லையா என்று தோன்றியதில் மனம் வலித்தது.

இருந்தும் தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு வந்தவர்களிடம் இன்முகத்துடன் இருந்து விட்டு , அவர்களுடன் வெளியில் சாப்பிட சென்று விட்டாள் .

ஜூனியர் குப்பனாவிற்கு அனைவரும் செல்ல, சில பல பதார்த்தங்களை ஆர்டர் செய்து விட்டு, யமுனாவும் அவளது தம்பிகளான ராஜ் மற்றும் கிரணும் ஏதேதோ பேசி உத்ராவை சகஜமாக்க முயன்றனர் அவளைப் பற்றி தெரியாமல்.

இவர்களின் முயற்சியையும் தன்னவளின் குணநலத்தையும் அறிந்த அபி கால் மேல் கால் இட்டு சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“அப்புறம் அண்ணி எல்லா பர்சேஸ்ஸும் ஓவரா? “

“இன்னும் கொஞ்சம் இருக்குடா ! டிரஸ்லாம் முடிச்சுட்டேன் . கொஞ்சம் அக்சஸ்சரிஸ் மட்டும் வாங்கனும் “

“அய்யோ அண்ணி அது இல்லை ! கல்யாணத்துக்கு ரெடி பண்ணீட்டிங்களா ? “

“அய்யோ அதை சுத்தமா தொடவே இல்லை ! நாளைக்கு போகும் போது தான் லெஹங்கா கலெக்ஷன்ஸ் பாக்கனும் ! ” என மறைமுகமாக தான் வெளியில் செல்கிறேன் என்று அபிக்கு அறிவுறித்தினாள்.

அபிக்கு அது புரிந்தாலும் வேலையின் காரணமாக கேட்டாள் வரக் கூறுவாள் தடுக்க முடியாது என்று கேட்காதது போல் இருந்துக் கொண்டான்.

உத்ராவிடம் நேரடியாக வேலை இருக்கிறது என்று கூறினால் அவள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளும் ரகமே! ஆனால் அபிக்கு தான் புரியவில்லை.

“சூப்பர் அண்ணி கலர் நீங்க சூஸ் பண்ணாதான் அண்ணாவும் சூட் எடுக்க வசதியா இருக்கும் ! ” என அவர்கள் டிரஸ்ஸிருந்து மேக்- அப் வரை பேசிக் கொண்டே செல்ல, கிரண் பொறுக்க மாட்டாமல் “போதும் நிறுத்துங்க ! சாப்பாடு வந்துருச்சு ! ஏன் அண்ணி நீங்களும் இதைப் பத்தி மட்டும் தான் பேசுவீங்களா ? ” என பாவமாக கேட்க,

“நோ ! நோ ! நீங்க எதாச்சும் உங்கள பத்திக் கூட சொல்லுங்க ! நான் நல்லா கேட்பேன்” என கூறியவளின் பேச்சு சாதாரணமாக எடுத்துக் கொண்டு கிரண் , ராஜ் மற்றும் யமுனாவும் வீட்டைப் பற்றியும் , அபியைப் பற்றியும் கூறினர்.

ஆனால், அவள் கூறியதில் நக்கல் நிறைந்து இருந்தது என அபிக்கு நன்றாகவே தெரிந்தது.

பின்பு, எல்லாம் முடிந்து நேரத்தை பார்க்க மணி பத்து என்று காண்பித்தது. உடனே யமுனா “நாங்க பில் பே பண்ணுறோம். நீ காரை எடு “எனக் கூற , கார்ட்டை எடுத்துக் கொடுத்து விட்டு அவன் பாட்டிற்கு நடந்து செல்ல முயன்றான்.

யமுனா சட்டென்று அவனின் கையைப் பிடித்து “அண்ணியை கூட்டிட்டு போண்ணா ” எனக் கூறிய பின்பு, சாதாரணமாக “வா” என்று கூறினான்.

அனைத்தையும் கண்டவளுக்கு மறுபடியும் அவளுக்கு ஏக்கம் பிறந்தது. அவனோடு கூட நடந்தாள். அவ்வளவு தான். இவன் மொபைலை பார்த்துக் கொண்டே சென்றவன் வெளியில் வந்தததும் இங்கேயே நில் என்று ஒரு இடத்தில் நிற்க விட்டு காரை எடுக்க சென்று விட்டான்.

அவளால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை. இருந்தும் முயல, அவன் வந்தான். இவள் ஏறி அமர்ந்தாள். அவன் சட்டென்று தனது அலைப்பேசியை எடுத்து புகைப்படம் எடுக்க முயல,

“அண்ணா அங்க நிக்கிறான்” என ராஜ் கூறியதும், குனிந்து மொபைலில் எதையோ கண்டவள் திரும்பி அவர்களை பார்த்தாள். திரும்பும் பொழுது அபி புகைப்படம் எடுக்க முயற்சித்ததை கண்டு சட்டென்று திரும்ப, சகோதரர்களை கண்டவுடன் அதனை வைத்து விட்டு காரை எடுத்தான்.

பின்பு, அவளை அவர்கள் வீட்டில் இறக்கி விட , அனைவருக்கும் தலை அசைத்து விடைபெற, சட்டென்று ராஜ் வெளியில் வந்து அபியையும் அழைத்து இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்தான் .

அபியின் செய்கையையும், உத்ராவின் எதிர்வினையையும் கண்டவன் இவ்வாறு செய்ய வேண்டும் என்று முன்பே முடிவெடுத்து விட்டான்.

ராஜால் இவர்களுக்கு அழகான தருணம் புகைப்படமாக கிடைத்தது ! ❤️

கீர்த்தி ☘️

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
17
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அபி உத்ரா கல்யாணம் செய்த பின்பு புரிதல் வரும்