Loading

மிழிகளின் மோ(கா)தல்

டீசர் 2

திரவியன் “சரியான ராங்கிக்காரியாய் இருப்பாள் போலவே.! உன்னையே பரிகாசம் செய்து விட்டு செல்கிறாள்”

அந்துவன் “உங்கள் இருவரையும் விடவா அவள் என்னைப் பரிகாசம் செய்கிறாள்.? அதனை விடுங்கள், என்ன நடக்கிறது இங்கே.? உங்கள் இருவரையும் என்னுடன் வருமாறுத்தானே அழைத்தேன், எங்கேயடா சென்றீர்கள்.?”

மாறன் “வயமா, உறுமியச் சப்தம் நின் செவிக்கும் கேட்டதல்லவா.? அறியாது போல் என்னிடம் வினவுகிறாய்.?”

அந்துவன் “அது அறிந்ததால்தான், பூஜைக்கு வருமாறு அழைத்தேன். ஆனால் நீங்கள் இங்கல்லவா விஜயம் செய்திருக்கிறீர். அரிமாவையும், வயமாவையும் குருகுலம் அருகே சில மாணவர்கள் கண்டு, குருவிடமே கூற சென்றார்கள். இறைவன் சித்தம், நான் அவர்களை மடக்கி, பற்பல மாற்றுமொழி கூறி அனுப்பிவிட்டேன். குருவிற்கு தெரிந்திருந்தால் என்னவாயிருக்கும்.?” என்றவன் மொழியில் சிறிது சினம் எட்டிப் பார்த்தது.

…………….

திரவியன் வலுக்கட்டாயமாக அவள் எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு, விஷயத்தைக் கூறத் துவங்கினான்.

“அந்துவா, தண்டராணியத்தின் வடமேற்கு எல்கையில் ஒற்றர்கள் உலாவுவதாக செய்தி வந்தது. அவர்களை அறியவே அரிமாவையும் வயமாவையும் அனுப்பினேன். ஒற்றர்களின் ஓலையை வயமா அளித்தான். அரிமாவை இன்னும் நான் ஆராயவில்லை” என்று ஒரு பார்வை அரிமாவை காண, அவன் பார்வையை அறிந்தவன் தன் பிடரியை சிலுப்பினான். அதிலிருந்து இடைக்காழி நாட்டின் செப்பு நாணயம் வந்து விழுந்தது. அதைக்கண்ட மாறனும், திரவியனும் யோசனையில் ஆழ்ந்தனர்.

…………

வெகு நாட்கள் கழித்து சந்தித்த தோழிகள் மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டனர்.

முத்தழகி “உன்னை வனத்தின் தொடக்கத்தில் தானே காத்திருக்கும்படி சொன்னேன். ஏன் நீ இத்தனை தூரம் வந்தாயடி.?”

துமி “இடைக்காழி நாட்டு இளவரசிக்கு, மலைவேந்தன் இளவரசியைக் காண மிகுந்த ஆவல் எழுந்திருக்கும், அப்படித்தானே இளவரசியாரே.?”

கமழி “அதில்லையடி துமி! அவர்களுக்கு அவரின் மாமாவின் நினைவு வாட்டியிருக்கும். பசலைக் காற்று தாங்காமல் வனாந்திரம் உள்ளே மூலிகை தேடி வந்திருப்பார்” எனக் கூறி சில்லறையாய் சிரித்தாள்.

இவர்கள் செய்யும் பரிகாசத்தில் மீயாள் சினமிகா நாணத்துடன் நின்றாள்.

_______________________

டீசர் எப்படி இருக்குன்னு சொல்லுங்க… நட்புக்களே… ஆகஸ்ட் 22ல் இருந்து கதை வரும். அதுக்கு முன்னாடி ஞாயிரோடு ஆட்சியர் கனவு முடிஞ்சிடும்.

நன்றி…

கமெண்ட் பண்ணிட்டு போங்கப்பா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்