115 views

மிழிகளின் மோ(கா)தல் டீசர் 1❤️

“கம்பங்கூழை ஐயனிடம் தந்துவிட்டு வருவதற்குள்  எங்கேயடி சென்றாய்.? என்று அவள் கேட்க,

“எங்கோ சென்றேன்?” என்று நான் விட்டேத்தியாக பதிலளித்தேன்..!

“காண சென்ற காரியம் கைசேரவில்லை என்று அறிகிறேன்!” என்று என் மனதை அவள் படிக்க,

“கள்வன் அவனை காண சென்றேன் கட்டிக்கொள்ளும் வேலையில் அவனிடம் முட்டிக்கொண்டு வந்துள்ளேன்” என்றேன்.

அப்போது இன்னொருவள் அங்கு வர, “அடியே! உன்னவனின் நாமத்தை கண்டுவிட்டேனடி” என்றிட, ஆயிரம் மகரந்தப்பூச்சிகள் என்னை கொய்து தேனை உறிஞ்சியதாய் ஒரு போதை என்னுள்…

நேத்திரங்கள் மின்ன நான் அதை கேட்க, என் கூட்டாளியோ கூறினாள் விடுகதை ஒன்றை..!

பொன், பொருளின் மறுபெயர் கொண்டவன் நின் கள்வன்..!
மதிமயங்கும் அழகு கொண்டவன்..!
மணம் என்ற சொல்லின் தமிழ்பெயர் கொண்டவன்..!
ஒளவையின் வாக்கில் இவன் பெயர் உண்டாம்..! கண்டு கொள் என் கன்னியே..! என்றாள்.

அவனை கண்ட நாள் முதலே என் உயிர் பறவை அவனோடு சென்று விட்டது… இதில் எங்கு இதற்கு விடை காண..? அறிந்தவர் எனக்கு அறியப்படுத்துங்கள்..!

………………………………………………………….

“மருந்துக்கும் நின் வதனத்தில் சிரிப்பு இல்லை… என்ன அந்த கயல்விழியில் நீயும் தூண்டில் இல்லாமல் விழுந்து விட்டாயாடா.?” என்று என் தோழன் வினவ…

வந்ததே எனக்கு கோபம்… “அவள் நாமம் கூட அறியாத நான் எவ்வாறு அந்த ராங்கிகாரியிடம் வீழ்வேன்.? வாயை மூடிவிட்டு நாளை நடக்கவிருக்கும் அம்மன் திருவிழா பற்றி கலந்துரையாடலாம் என் அறிவாளி நண்பனே!” என்று அவனை நான் இழுக்க,

“மதி கெட்ட என் நண்பா அவளின் நாமம் யான் அறிவேன்”, என்றான் மந்தகாச புன்னகையுடன்…

“என்ன.?” என்று விற்புறுவம் உயர்த்தி நான் கேட்க,

“ராங்கிகாரி ரத்தினப்பெயர் அறிய ஆவலா.?” என அவன் என்னை வம்பிழுக்க,

அவன் முதுகில் நான் ஒன்று வைக்க, என் வினையை தடைசெய்ய வினவினான் ஒரு விடுகதையை…

இரத்தினக்கல்லின் ஒரு வகையிவள் உன் சித்திரக்காரி..!
கயல்கள் உலாவும் அழுவத்தில் கடற்காய் அதில் தோன்றுவது… மூச்சடக்கினால் மட்டுமே கைகளில் சிக்கும் பொருளினை தன் முன்பாதி பெயரில் கொண்டவள்..!
அதை அணிந்துக் கொள்ளும் இவள் கந்தரத்தில் நீ மறல்கொள்ளும் வேளை வனப்பின் மற்றொரு பெயரை தன் பின் பாதியில் கொண்டவள்..! அவளே நின் ராங்கிகாரி… 

………………………………………………………….

நான் தேடி ஏங்கி வதங்கி
தவித்த காதல்…
கை கூடி விட்டது…

எதிர்பார்த்து காத்திருந்து
என் இதயத்தை களவாடி கள்வனை கண்டதும் கட்டி வைத்து வெளுக்க தோன்றவில்லை…

மாறாக அவனை கட்டி தழுவ
தான் பரபரத்தது மனம்…

அவனை கொண்ட நொடி
கழிவிரக்கம் கொண்டேன்
என்னை விட அவன் பேரழகு..

அவன் சீண்டும் போது
முகம் செம்மை பூசிட,
கொஞ்சமே கொஞ்சம் அவன் என்னை தீண்டும் போது
ஏனோ மனது
தறிகெட்டு துடிக்கிறது
அவன் தேக அணைப்பில்..

………………………………………………………….

ஒரு நாள் தனிமை பொழுது…

இருவரின் முதல் காதல் சந்திப்பு..

கண்கள் இரண்டும்
காதல் மொழி பேச..
அவன் நேத்திரங்களின்
வீச்சு தாளாமல்
பார்வை தனை பெண்ணவள்
தாழ்த்தி கொள்ள,

அவனோ அவளின்
நாடியை பற்றி
அவன் மிழிகளை
நோக்க செய்தான்..

இந்த முதல் தொடுகை..
அவளின் மனதில்
ஆயிரத்தெட்டு பூக்கள் மலர,
அவன் அம்பகமோ
அவளின் செம்மை பூசிய கன்னங்களில் தொக்கி நின்றது..

வெளியில் சாரல் மழை..
உள்ளே புயல் காற்று..
என் செய்யும் தேகம்..

இவர்களின் மௌன மொழி இறுதியில் முடிவுக்கு வந்தது..
இடி இடித்த சத்தத்தில்
இச் என்ற முத்தம்
இவன் கன்னத்தில்
அவள் வைத்தாள்…

நேத்திரங்கள் சொருக,
அவளின் கொடியிடை இறுக்கி, பெண்ணவள் சிரசை
தன் நெஞ்சில் தாங்கிட,

காதல் யுத்தம் தொடங்கியது
இருவரின் இதழ் முத்தம்
எனும் போர்க்களத்தில்..

அவள் உமிழ் நீர்
இவன் உமிழ் நீரோடு கலக்க,
இவன் பிடரி முடி அவள் கைகளில் தஞ்சம் கொண்டது என்னை விட்டுவிடாதே என்று…

மேலும் இடை இறுக்கினான்.. பெண்ணவள் மாராப்பு அவனின் கைகளில் கொண்டு…

அச்சம் கொண்ட பாவை,
வேண்டாம் என்க,
சுற்றம் அறிந்து
சூழ்நிலை புரிந்து
அவனும் அவளும்
மீண்டும் ஒரு இதழ் யுத்தம் ஆரம்பித்து எச்சிலில் எச்சரிக்கையாகி எல்லை மீறாமல் காதல் பார்வை கொண்டு
கள்ளம் புகுந்த மனதோடு
மனை திரும்பினர்…

மீண்டும் சந்திக்கும் நொடி பொழுதிற்கு ஏக்கம் கொண்டு…

கதை ஆகஸ்ட் 22ல் இருந்து வரும்…

ஒரு சின்ன முயற்சி… விரைவில்… பெயரை கண்டுபுடிச்சிடுங்க சீக்கிரம்..
உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிட்டு போங்கப்பா… ப்ளீஸ்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *