Loading

கார்மேகம் கலைந்தது போல
உன் மெளனமும் கலைந்தது
இடிமின்னல் ஆரவாரமின்றி
சாரல் மழை போல்
சிறு துளி மாற்றமாய்
உன்னிடமிருந்தான
தொலைபேசி அழைப்பு

மனமெங்கும் மத்தாப்பூ பூக்க
விழியிரண்டும் துள்ளித் தெறிக்க
விரல்கள் ஆர்வமாய் அழைப்பை ஏற்க
காதினில் பாய்ந்தது தேனாய் உன் குரல்

உன் மேல் தோன்றிய கோபங்களும்
கரைந்து போயின உன் பேச்சில்
உன்னுடனான என் மௌனங்களும்
கலைந்து போயின உன் காதலால்

மாறிய வானிலையுடன்
மாறியது என் மனநிலையும்
வானவில் வண்ணங்கள் போல
வண்ணமாகியது வாழ்க்கையும்

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அழகான கவிதை. அருமையான வரிகள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்