மனம் – 5
தன் இடத்தில் சென்று அமர்ந்த முகில் உடனே நரேனுக்கு மெசேஜ் செய்தான் அலுவலக செயலியில் இருந்து.
“ஹாய் நரேன். ஷால் வீ மீட் நவ்??”, இப்போது இருவரும் சந்திக்கலாமா என்று மெசேஜ் அனுப்பினான் முகில்.
“ஹாய் முகில் நிலவன். நான் இப்ப வீட்டுக்கு கிளம்பிட்டேன். மண்டே பாக்கலாமா??” என்று கேட்டான் நரேன் இன்று வெள்ளி கிழமை என்பதாலும் வீட்டுக்கு புறப்பட்டு விட்டதாலும்.
வேறு வழி இல்லாமல் முகிலும், “சூயர்” என்று பதில் அனுப்பி விட்டு, இரண்டு நாள் கழிச்சி தான் தெரியுமா… ‘ம்ம்ம்’ என்ற பெருமூச்சு விட்டு கொண்டான்.
அலுவலக நேரம் முடிய நண்பர்களிடம் விடை பெற்று, தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு முக்கால் மணி நேரத்தில் அடையும் தனது வீட்டை கிட்ட தட்ட ஒன்னே கால் மணி நேரம் ஓட்டி, அந்த அலுப்பு கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் உற்சாகமாக பாட்டு பாடி கொண்டே தனது வீட்டினுள் நுழைந்தான் முகில்.
“ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன்
சென்டி மீட்டர் சிரிக்க சொல்லி கேட்டேன்
அவ சிரிச்சா சிரிப்புல நூறு பேரு செத்து போய்ட்டான் ஹய்யோ ஹய்யோ…
பாப்பு பாப்பு பாப்பு…. உஉஉஉஉ” என்று ஊளையிட்டு கொண்டே அங்கே அக்கடா என்று உக்காந்து கொண்டு இருந்த தன் அக்காவின் காதில் கத்தினான் முகில்.
எப்போதும் அவன் அப்படி செய்தால், திரும்பி நாலு சாத்து சாத்தும் அவன் அக்கா நிவேதிதாவோ இன்று அமைதியின் சிகரமாக ஆனால் குரலில் மட்டும் கடுமை ஏற்றி, “ஒழுங்கு மரியாதையா எழுந்திடுச்சி போய்டு… இல்ல கொதறிடுவேன்” என்று கத்த மட்டுமே செய்தாள்.
அதற்கு, “ரைட்டு விடு” என்று அவளை தொந்தரவு செய்யாமல் எழுந்து தன் அன்னையை காண சென்றான்.
“ஏய் ஆத்தா!!! உன் செல்ல மணி குயிலுக்கு என்ன ஆச்சி?? உர்ருனு குரங்காட்டமே உக்காந்து இருக்கா!!” என்று தன் தாய் ருக்குமணியிடம் கேட்டான் அவன்.
அதில் அவனை ஒரு அடி வைத்த அவன் தாய், “அப்படி சொல்லாதடா இன்னிக்கு வளர்ச்சியே போய்டும்” என்று சொன்னார்.
“ஆமா… பொறந்ததுல இருந்து அவ எங்க வளந்தா!! ஒரே ஹையிட்ல தான் இருக்கா… இதுல இன்னிக்கு வளர்ச்சி தான் போய்டுமாம்” என்றான் முகில் நக்கலாக.
“குறும்பு கூடி போச்சிடா உனக்கு… என் மணி குயிலுக்கு என்ன கொறைச்சல்!! அழகிடா அவ” என்று சிலுப்பி கொண்டார் மணி.
“ம்க்கும்… அவள மட்டும் கொஞ்ச வேண்டியது என்ன பாத்தா அடிக்க வேண்டியது” என்று அதற்கும் அவன் நொடித்து கொண்டான்.
“அப்படிலாம் இல்லடா ரெண்டு பேருமே எனக்கு செல்லம் தான்” என்று ருக்மணி சொல்ல, “ஆமாடா… உன்ன கொஞ்சற மாறியா இருக்க நீ?? தடி மாடு மாறி வளந்து இருக்க… இதுல உன்ன இன்னும் இடுப்புல தூக்கி வச்சி கொஞ்சுவாங்க” என்று அவனை வாறி பேசி கொண்டே உள்ளே வந்தாள் நிவி, அவன் அவளை குள்ளம் என்று சொன்னதை கேட்டு இருந்ததால்.
“அதான் தெரியுமே அவங்களுக்கு உன்ன மட்டும் தான புடிக்கும்… அதான் உன்ன மட்டும் கொஞ்சறாங்க” என்று விளையாட்டாக முகில் சொல்ல, “அய்யோ நீ பாத்த ஒரு சோறு கூட எனக்கு புடிச்சது செஞ்சி தர மாட்டீங்கறாங்க… உனக்கு புடிச்சது தான் எல்லாம்… நீ தான் அவங்க செல்லம்” என்று அவனோட சேர்ந்து கொண்டு தன் தாயை சீண்டினாள் நிவி.
“அய்யோ… இரண்டு பேரு எனக்கு ஒன்னு தான்…” என்று ருக்மணி படபடப்பாக சொல்ல, “அதெல்லாம் இல்ல” என்று நிவி சொல்ல, “யாரோ ஒருத்தர தான் சொல்லனும். அதும் உண்மைய அவள தான் புடிக்கும்னு உண்மைய சொல்லு” என்று உண்மையை என்பதை அழுத்தி சொன்னான் முகில்.
“அட போங்க… எப்பயும் இப்படி தான் பண்ணறீங்க… நான் எதும் சொல்லல… நீங்க என்ன வேணா நினைச்சிக்குங்க” என்று தன் வேலையை பார்க்க சென்று விட்டார் ருக்மணி.
இது எப்போதும் நடப்பது தான், அவர்கள் விளையாட்டுக்கு பேசுகிறார்கள் என்று ருக்மணியும், இப்படி பேசினால் தாய் இப்படி தான் எதிர்வினையாற்றுவார் என்று இவர்களுக்கும் தெரிந்தே வைத்திருந்தனர். இருந்தாலும் அடிக்கடி வீட்டில் இப்படி ஒரு அழிச்சாட்டியம் நடத்தப்படும் இவர்கள் இருவரால்.
பின் அவரவர் அறைக்கு சென்று உடை மாற்றி ரிஃப்ரஸ் செய்து விட்டு தன் தாய்க்கு இரவு உணவை சமைக்க மற்றும் வீட்டு வேலைகளில் உதவி செய்தனர் இருவரும்.
முகில் பாத்திரங்கள் விலக்கி வைக்க, நிவி சமைத்து கொண்டிருந்தாள். இரவு தாய்க்கு எப்போதுமே ஒய்வு கொடுத்து விடுவார்கள் இருவரும். அதே போல் பகலில் உதவி செய்வது அரிதிலும் அரிதானது.
“ஏய் நிவி… என்ன சாய்ந்திரம் அப்படி உக்காந்து இருந்த??. எதுனா பிரச்சனையா??” என்று முகில் அக்கறையாக கேட்டான்.
“ஆமா டா… அதே பிரச்சனை தான் பர்சேசிங் டிபார்ட்மென்ட்ல இருக்க பொண்ணு ஆர்டர் போடாம விட்டுட்டா போல… மெடீரியல் இல்லனு லைன்க்கு எது அனுப்ப அப்படினு கேட்டுட்டு இருந்தாங்க. அதான் ஒரே டென்ஷன்” என்று சலிப்பாக சொன்னாள் நிவி.
“அந்த பொண்ணு மேல எதுவும் எஸ்கலேஷன் பண்ணலையா??” என்று முகில் கேட்க, “சும்மா வார்னிங் ஓட விட்டுடறாங்க ஒவ்வொரு முறையும்… ரொம்ப கஷ்டபடற குடும்பத்துல இருந்து வந்தானு ஒரு சாப்ட் கார்னர்” என்று நிவி கடுப்பாக சொன்னாள்.
“அந்த அக்கற அந்த பொண்ணுக்கு இருந்து பொறுப்பா வேல பாக்கனும்ல” என்று முகில் கேட்டான்.
“ம்க்கும் அத நம்ம சொன்னா ஏதோ இரக்கமே இல்லாத கெட்டவ மாறி பாக்கறாங்க பேசறாங்க” மேலும் மேலும் கோபம் தான் ஏறியது நிவிக்கு.
“எப்படி நிவி அத ஒன்னா வச்சே ஓட்டிடறாங்க??” முகில் புரியாமல் கேட்க, “அத பத்தி பேசாதடா கடுப்பா இருக்கு” என்று தட்டி கழித்தாள் நிவி.
“ரைட்டு விடு… பேசாம வேற கம்பெனி மாற பாரேன்” என்று முகில் யோசனை கூறினான்.
“ம்ம்ம்…. பாக்கரேன்டா… ரொம்ப முடியலைனா அது தான் பண்ணனும்… லெட்ஸ் சீ” என்று சொல்லி கொண்டே, அடுப்பை அணைத்தாள் நிவி.
இரவு உணவை அனைவரும் குடும்பமாக அமர்ந்து உண்டனர்.
“அப்பா எப்படி இருக்கு சாப்பாடு??” என்று நிவி கேட்டாள். ஒவ்வொரு முறை இவள் சமைத்த உணவை சாப்பிடும் போதும் கேட்பாள். அதை கேட்டு தெரிந்து கொள்வதில் அலாதி இன்பம் அவளுக்கு.
“நல்லா இருக்கு” என்று கண்ணதாசன் சொல்ல, “ம்க்கும் முக்கால்வாசி சமையல் இங்க தான் நடக்குது. உப்பே இல்ல” என்று முகில் சொல்ல, “உனக்கு பத்தலைனா நீ போட்டு திண்ணுடா. அவ சாப்பாட்ட கொற சொல்லாத” என்று ருக்மணி சொன்னார். ஆனால் நிவியை கிண்டல் பண்ணாமல் முகிலால் இருக்க முடியாது அல்லவா. வீட்டில் இருப்பவர்கள் யாரும் அவன் கூற்றை பெரிதாய் எடுத்து கொள்ள மாட்டார்கள் என்பதை தனியாய் சொல்லவும் தேவை இல்லை.
வெங்கட கணபதியும், “அருமையா இருக்கு” என்று சொன்னார்.
உண்டு முடித்த பின், அவரவர் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து விட்டும் சென்று அவரவர் அறையில் அடைந்து கொண்டனர்.
ருக்மணியோ தனது அறையில், “என்னங்க நிவிக்கு 25 வயசு வந்துடுச்சி. இன்னும் கல்யாணத்துக்கு எதுவும் அமையல. நீங்க பாக்கறீங்களா இல்லையா??” என்று தனது கணவன் கண்ணதாசனிடம் கேட்டார்.
“நானும் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு தான் இருக்கேன். நமக்கு தகுந்த மாறி வந்தா தான பாக்க முடியும்” என்று பதில் சொன்னார் அவர்.
“வரும் வரும்னு சும்மா காத்துட்டு இருக்க முடியாது. நம்ம தான் பாக்கனும்” என்றவர், “என் சித்தி பொண்ணு இருக்கா இல்ல அவ ஒரு மெட்ரிமோனி பத்தி சொன்னா… அதுல பதிவு பண்ணி வைக்கலாம். நல்ல பசங்க நிறைய அதுல இருக்காங்களாம்” என்று ருக்கு சொல்ல, “சரி பண்ணிடலாம்” என்று கண்ணதாசனும், ருக்குதாசனாய் ஒப்பு கொண்டார்.
“இப்ப நைட்… நாளைக்கு சனி கிழமை அப்பவும் வேணாம். ஞாயித்து கிழமை நல்ல நேரம் பாத்துட்டு அதுல பண்ணிக்கலாம்” என்று ருக்மணி சொல்ல அதற்கும் சரி என்று தான் சொன்னார் கண்ணதாசன்.
நிவியோ அவளின் அறையில், வாழ்க்கை தனக்கு என்ன தான் வைத்து இருக்கிறது என்ற யோசனையில் இருந்தாள். தனக்கு என்ன தான் தேவை என்று புரியாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டிருந்த அவளுக்கு, வாழ்வு சுவாரசியமற்றதாய் தோன்றியது. அதனால் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தாள்.
இவளது வாழ்க்கையை சுவாரசியமானதாய் மாற்றி பல வித எண்ணங்களை தோற்றுவிக்கும் நிகழ்வுகள் நடக்க இருக்குகின்றன. அந்த நிகழ்வுகளின் ஆரம்ப புள்ளியை நடத்த இருக்கும் சூத்திரதாரி நம் நாயகன் முகில் நிலவன் தான். அதற்கும் ஆதார புள்ளியாக அமைய போவது இவனின் காதல் தான் என்று உணராமல் குப்புற படுத்து தூங்கி கொண்டிருந்தான் அவன்.
முகிலுக்கு பெரிதாய் இப்போது அவளின் நினைவு கூட வரவில்லை அவனுக்கு. அவளை பார்த்த அந்த நொடியே அவள் தனக்கு வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் அது இது என அவளை பற்றி அறிய முற்பட்டான். ஆனால் அவளில் இருந்து தூரம் வந்ததும், தன் குடும்பத்துடன் பேசவும் கிட்டதட்ட அவளை மறந்தே விட்டான் என்று சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு முறை அவளை பார்க்கும் போதும் அப்படி தான் உணர்வான் என்பதும் அதனால் என்ன என்ன செய்வான் என்பதையும் அந்த காலமே அறியும்.
மாறும்…
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே…
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த்
சூப்பர் அக்கா❤️❤️ இதுங்க ரெண்டும் போடுற சண்டைல பாவம் அம்மா தல தான் உருளுது 😄😄 பொதுவா brothers சிஸ்டர்ஸ் இருக்குற வீட்டுல நடக்கிறத சூப்பரா கதைல கொண்டு வந்திருக்கீங்க, ஏற்கனவே அவன் பண்ணினது என்னன்னு தெரியல இதுல ஃபிளாஷ் பேக்லயும் ஏதோ டுவிஸ்ட் வச்சா என்ன அர்த்தம் 🤔🤔, waiting next epi❤️❤️
ரொம்ப நன்றி மீரா மா 🥰😍🥰😍
முடிந்தளவு சீக்கிரமா எழுத பாக்கறேன் மா
அக்கா தம்பி சண்டை எல்லார் வீட்டிலும் இருக்கிறதா அப்படி ஒரு சண்டை இல்லன்னா அது வீடாவே இருக்காது.
ரொம்ப டிவிஸ்டோடவே கொண்டு போறீங்க அது என்ன??
ரொம்ப நன்றி கா 🥰🥰🥰
சீக்கிரம் சொல்லிடலாம் கா