Loading

மனம் – 4

***க்ர்ர்ரீரீரீங்ங்ங்ங்…….***

***அபான் ஹீயரிங் திஸ் சவுண்ட், ஆல் த எம்ப்ளாயிஸ் ஆர் ரெக்வஸ்ட்டு டூ எவாக்கீவேட் த பிள்டிங் அன்ட் ரீச் த சேப் அசம்ப்ளி பாயிண்ட். கயிண்ட்லி யூஸ் ஸ்டேர் கேஸ் அண்ட் அவாயிட் யூசிங் எலிவேட்டர். திஸ் ஸ் டூ என்சூயர் த எமர்ஜென்சி சிஸ்டம்ஸ் ஆர் வெர்கிங் பைன் பார் திஸ் குவாட்டர்***

அந்த மென் பொருள் அலுவலக கட்டிடத்தில் இருந்த அனைத்து தளங்களிலும் இருந்த ஒலி பெருக்கியில் இருந்து இந்த சத்தம் வந்து கொண்டிருந்தது. அதாவது, ஒவ்வொரு காலாண்டிலும், அவசரகால திட்டங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா பிரச்சனை நேரங்களில் அனைவரும் பாதுகாப்பாக கட்டிடத்தை விட்டு வெளியேற தேவையான வசதி இருக்கிறதா என்பதை சோதிக்க இந்த மாறி செய்வார்கள் அந்த நிறுவனத்தில். அந்த நேரம் பெரும்பாலும் மதியமாகவே இருக்கும். இப்போது நேரமும் மூன்று போல தான் இருக்கும். அனைவரும் உண்ட மயக்கத்தில் ஏனோ தானோ என கடமைக்கு வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் எதிர்வினையாற்றினர்.

“இவங்களுக்கு வேற வேலயே இல்ல” – ஒருவர்

“அய்யோ உடனே நான் இந்த கோட (code) ப்ரெடக்‌ஷனுக்கு போடனும்” – மற்றொருவர்.

“இதெல்லாம் பண்ண முடியாது” என்று யாரோ ஒருவர் சொல்லி விட்டு, தனது நற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

சில சோம்பலில் இருந்தவர்கள் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து, “வாங்க… கொஞ்ச நேரம் போய் நடந்துட்டு வரலாம்” என்று புறப்பட்டு இருந்தார்கள். அப்படி கிளம்பியவர்களில் நம் நாயகன் முகில் நிலவனின் குழுவும் ஒன்று. இவர்கள் நான்காம் தளத்தில் படிகட்டுகளில் மெதுவாக பேசி கொண்டே இறங்க, ஆறாம் தளத்தில் இருந்து இருவர் திபுதிபுவென ஓடி வந்து கொண்டிருந்தனர். இல்லை இல்லை ஒருவள் மற்றொருவளை இழுத்து கொண்டு இறங்கி வந்தாள்.

“அய்யோ… அவசர காலத்துல இப்படி தான் ஆடி அசைஞ்சி போவமா… வேகமா தான் போகனும்… வா சீக்கிரம்” – என்று இழுத்தாள் அவள்.

“ஏன்டி இப்படி கொடும பண்ணற… அமைதியா வேல பாத்துட்டு இருந்தவள இழுத்துட்டு வந்துட்டு பிள்டிங்கே பத்தி எரியுற மாறி பில்டப் வேற” என்று முனங்கினாள் மற்றொருவள்.

“என்னடி நீ??. ஓடுற பாம்ப மிதிக்கிற வயசு இது. இப்படி நடக்கறதுக்கே மொடப்பட்டா எப்படி?? வா சீக்கிரம்” என்று சொல்ல, “சரி சரி வந்து தொல போலாம்” என்று இருவரும் மட மடவென ஓடி முகிலை கடந்தும் போய் விட்டனர்.

முகிலிக்கு அவள் பேச்சு, சிணுங்கல், ஓட்டம், உடை என அனைத்தும் பிடித்து இருந்தது. கேட்டான். பார்த்தான். ரசித்தான். அவளை முழுதாய். இது என்னடா புது உணர்வு என்று புரியாமல் குழம்பியும் போய் இருந்தான்.

அவன் கூட இருந்த அவன் நண்பர்களான சக்தி மற்றும் கணேஷ், “என்னடா நின்னுட்ட??… வா போலாம்” என்று சொன்னவர்கள் பேசி கொண்டே நடக்கவும் செய்தனர்.

“அந்த பொண்ணுங்கள பாரேன். செம்ம ஃபன்ல” – சக்தி

“எந்த ப்ளோர் ஆ இருக்கும்” – கணேஷ்

“ஆமாடா… எந்த ப்ளோர்” – முகில்.

“பார்ரா… முகில் கூட ஆர்வம் காட்டறத” – சக்தி

“அதானே… என்ன மேட்டர்??” – ஆர்வமாக கணேஷ்.

“நானும் ஆண் தானே” – புன் சிரிப்புடன் முகில்.

“அப்படி யாருபா உன்ன உணர வச்சது??” – கேட்டது சக்தி.

“அந்த ஸ்கை ப்ளூ கலர் டிரஸ்” என்றான் முகில்.

“எப்ப இருந்துடா?? யாரு அது?? பேரு என்ன??” அடிக்கடுக்காக கேள்விகள் சக்தி மற்றும் கணேஷிடமிருந்து.

“இப்ப இருந்து தான். இனி தான் கண்டு பிடிக்கனும்” என்று சொல்லி கொண்டே இவர்களும் வேகமாக கீழே இறங்கி வந்தனர்.

முன்னமே தரை தளத்தை வந்தடைந்த இரு பெண்களும், சேவ் அசம்பளி பாயின்ட் (safe assembly point) எங்கே இருக்கிறது என தெரியாமல் நின்று கொண்டிருந்தனர்.

“எந்த பக்கம்டி போறது??” – ஸ்கை ப்ளூ உடை பெண்.

“ஆர்வமா வந்த உனக்கு தான தெரியனும்!!” – அவள் தோழி.

“இங்க பாரேன் ஒரு ஏரோ (Arrow) மார்க் கூட போட்டு வைக்கல. என்ன தான் டெமோ பண்ணறீங்களோ!!!” – மீண்டும் நம் நாயகி சலித்து கொள்ள, அவள் தோழியோ, “இங்க பாரு… நான் பாட்டுக்கு வேல பாத்துட்டு இருந்தேன். என்ன கூட்டிட்டு வந்துட்டு இந்த பக்கம் அந்த பக்கம் கபடி ஆடிட்டு இருந்த அவ்வளவு தான். அங்க போய் நம்ம ஒன்னும் கிழிக்க போறது இல்ல. கீழ வந்ததுக்கு ஸ்னேக்ஸ் சாப்பிட்டு போலாம் வா” என்றாள் தோழி.

“ஏய்…. அபி… ப்ளீஸ்டி… சும்மா போய் பாத்துட்டு வந்துடலாம்… ப்ளீஸ்” என்று கெஞ்சினாள் நாயகி.

“சரி வந்து தொல” என்றவள், “எந்த பக்கம் போகனும்” என்று கேட்டாள்.

“எல்லோரும் கும்பலாக எந்த பக்கம் போறாங்களோ அங்க போலாம்” புன்னகையுடன் சொல்ல, “எனக்கு தெரிஞ்சி எல்லாம் கேன்டீன்க்கு தான் போறாங்க” என்றாள் அபி.

“காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சளா தான் தெரியுமாம்” என்று அவள் சற்று சத்தமாக சொல்ல, “என்னது??” என்று அபி முறைத்து கொண்டே கேட்டாள்.

“ஹீ… ஹீ… சும்மாடி” என்று சமாளித்தவள், எந்த பக்கம் போறது என்று பார்த்தாள்.

மீண்டும் ஏதோ அபி சொல்ல வாயை திறக்கும் போதே, “வேல பாத்துட்டு இருந்தேன்னு ஆரம்பிக்காத… காலைல இருந்து சும்மா இருந்துட்டு இப்ப வேல வேலனு குதிச்ச அவ்வளவு தான்” என்று மிரட்டி விட்டு மீண்டும் நோட்டம் விட ஆரம்பித்தாள்.

இவர்கள் பின்புறம் நின்று அவர்கள் பேச்சு வார்த்தையை கேட்டு கொண்டிருந்த முகில், சக்தி மற்றும் கணேஷிற்கு சிரிப்பாக வந்தது.

உடனே யோசித்த சக்தி, “முகில் சேவ் அசம்பளி பாயிண்ட்க்கு இந்த பக்கம் போகனும்டா” என்று சொல்லி அவர்களை பார்த்து கண்ணடித்தான். அதை புரிந்து கொண்ட மற்றவர்களும் ஒன்றாக நடக்க ஆரம்பித்தனர்.

‘ஆஹா ஆஹா ஒளி வந்து விட்டது’ என்ற எண்ணத்துடன் கேஷூவலாக நடப்பதை போல அவர்கள் பின்னே சென்றார்கள் பெண்கள் இருவரும்…

அங்கே அவசர காலங்களில் அதாவது தீ பிடித்த நேரங்களில், கட்டிடம் இடியும் நேரங்களில் எப்படி எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றிய விளக்கங்கள் கொடுத்து கொண்டு இருந்தனர். அதை எல்லாம் அங்கே இருந்த மிச்ச சொச்ச நபர்கள் கவனமாக கேட்டு கொண்டுருந்தனர்.

எல்லாவற்றையும் செயல் விளக்கம் மற்றும் வாய்மொழி விளக்கம் கொடுத்த பாதுகாப்பு அதிகாரிகள், “எப்பவும் இது ஒன்றை மட்டும் நினைவு வைத்து கொள்ளுங்கள். எதாவது இயற்கை அல்லது செயற்கை இடர்கள் ஏற்படும் போது முதலில் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பின்னரே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தேங்க் யூ ஆல். ஸ்டே சேஃப்” என்று முடிக்க, எல்லோரும் கை தட்டி தங்களது பதில் நன்றியை அவர்களுக்கு தெரிவித்தார்கள்.

“ஆமா… இல்லனா காப்பாத்த வந்த இடத்தில காப்பாத்திட்டீங்க மெமன்ட் ஆகிடும்” என்று கணேஷ் சொல்ல கூட இருந்த அவன் நண்பர்கள் அருகே அதை கேட்ட மற்றவர்களும் சிரித்தார்கள்.

“போதும் போதும் சிரிச்சது. இவன் ஆள மிஸ் பண்ணிட போறோம்… வாங்க அவங்க இரண்டு பேரும் கிளம்பிட்டாங்க” என்று சொன்னான் சக்தி.

“ஆமா ஆமா வாங்க போலாம்.” – முகில்.

“ஆனா அவனை விட நீ தான்டா அவங்கள நல்லா பளோ பண்ணற போல” என்று சிரிப்புடன் கணேஷ் சொல்ல, “மூடிட்டு வாடா” என்று சக்தி அவனை இழுத்து கொண்டு சென்றான்.

அபியின் ஆசைப்படியே, ஸ்னேக்ஸ் சாப்பிட்டு விட்டு, காபியும் குடித்து விட்டு மீண்டும் கட்டிடத்தின் உள்ளே சென்றார்கள் இருவரும்.

கீழே லிப்ட்க்காக காத்திருக்கும் போது, “நல்ல வேள இன்னிக்கு அந்த வீரா பையன் லீவ். வந்து இருந்தான் கொஞ்சமாவது நடங்கடினு இப்பவும் படி ஏற வச்சி கால உடைச்சி இருப்பான்” என்று அபி சொல்ல, “அவன் நம்ம நல்லதுக்கு தான் சொல்லறான்” என்று இவள் சொல்ல, “நீ அவனுக்கு உடனே சொம்பு தூக்கிட்டு வந்துடு” என்று நக்கலாக சொன்னாள் அபி.

“ஆமா நல்ல வேள அவன் வரல…. இல்லனா இவனும் நம்மள படி ஏற வச்சி இருப்பான்” என்று முகிலை காட்டி சக்தியிடம் சொன்னான் கணேஷ்.

அதற்குள் லிப்ட்டும் வந்து விட, இவர்கள் உள்ளே ஏறி 7 என்ற எண்ணை அழுத்தினார்கள். அவர்கள் பின்னே வேகமாக முகிலும் அவன் நண்பர்களும் ஏறி கொண்டார்கள்.

7 தளத்தில் நின்ற லிப்ட்டில் இருந்து அவர்கள் இருவரும் வெளியே செல்ல, முகிலும் அவன் படையும் அவர்கள் பின்னயே சென்று நம் நாயகியின் இடத்தையும் கவனித்து கொண்டார்கள்.

அப்படியே இந்த சக்தி, “அந்த சிவப்பு டிரஸ் எனக்கு” என்றான்.

“தப்பா சொல்லாத பங்காளி… நமக்குனு சொல்லு” என்றான் கணேஷ்.

“மச்சான் போயி பங்காளி… சரி தான் டா எச்சகளைகளா… வந்து தொலைங்க” – முகில் அவர்களின் முதுகில் அடித்து நான்காம் தளத்திற்கு அழைத்து சென்றான்.

“சரி தான பங்காளி” என்று முகிலை கணக்கில் எடுக்காமல் கணேஷ் சக்தியிடம் கேட்க, “ஆமா பங்கு” என்று சொன்னான் சக்தியும்… ஒரே பெண்ணை நோட்டம் விடுவதால்.

“எல்லாம் சரி தான் மச்சி… ஏழாவது ப்ளோர்ல நமக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா??” முகில் யோசனையாக கேட்க, “இருக்கானே நம்ம நரேன்” என்று சக்தி சொன்னான் சிறிது யோசனைக்கு பிறகு.

“யாரு அது??” குழப்பமாக முகில் கேட்க, “நம்ம ஜாயின் பண்ணும் போது தான் அவனும் ஜாயின் பண்ணான். நம்ம பக்கத்தில் கூட உக்காந்து இருந்தானே இன்னாங்குரேஷன் அப்போ” என்றவன், மேலும், “ம்ப்ச்… அடுத்த வாரம் கூட ஒரு மீட்டிங் இருக்கே… அது அவன் கூட தான்” என்று இலகுவாக அடையாளம் காண அதை நினைவுப்படுத்தினான்.

“அட… அவனா??” என்று கண்டு கொண்ட முகில், “அப்போ நம்ம முன்னாடியே ஒரு மீட்டிங்க போட்டுட வேண்டியது தான்” என்று சொல்லி கொண்டே தன் இடத்தில் சென்று அமர்ந்தனர்.

மாறும்…

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே…

நன்றி!!!

இங்ஙனம்
திரா ஆனந்த்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. Super akka ❤️❤️ herione name sonna மாதிரியே இல்லையே name enna saspanse வச்சி இருக்கீங்க 😍❤️❤️

      1. Author

        நன்றி மீரா மா… 😍🥰😍🥰
        அவளுக்கு அப்படி ஸ்பெஷல்லாம் ஒன்னும் இல்ல மா… சும்மா அப்படியே விட்டுட்டேன்…

      2. டேய் முகில் உனக்கு எப்பவுமே அதிரடி தானா. பார்த்த உடனே ஹீரோயின் பின்னாடி சுத்தி அவருடைய டீடைல்ஸ் கலெக்ட் பண்ண ஆரம்பிச்சுட்ட.
        ஆமா ஹீரோயின் பெயர் என்ன ஸ்கை ப்ளூ கலர் டிரஸ் தானா??

        1. Author

          நன்றி கா 😍🥰😍
          அவன் அடங்க மாட்டான்… நினைச்சு நினைச்சு எதாவது பண்ணுவான் கா