Loading

மனம் – 3

மூன்றாம் தளத்தில் இருந்த நிவேதாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான் முகில் நிலவன்.

அப்போது தான் எல்லோரும் அமர்ந்து காலை உணவை உண்டு கொண்டிருந்தனர். சுமதியும், சசியும் உண்டு முடித்திருந்தார்கள்.

நிவேதா நகர போக, “நீ இரு மா… நான் போய் பாக்கறேன்” என்று சுமதி போய் கதவை திறந்தார்.

வெளியே முகில்… பார்த்தவர் அதிர்ச்சி அடைந்து விட்டு பின் நிதானித்து, “வா பா உள்ள” என்று வரவேற்று விட்டு, “எப்படி இருக்க?? எப்ப வந்த ஊருக்கு??” என்று விசாரித்து கொண்டே உள்ளே வந்தார்கள்.

“நல்ல இருக்கேன் அத்த. இன்னிக்கு காலைல தான் வந்தேன். நீங்க எல்லாம் எப்டி இருக்கீங்க??” என்று முகில் சுமதி மற்றும் சசியை பார்த்து கேட்டான்.

“நல்லா இருக்கோம்… வா பா… வந்து உக்காரு” என்று சசியும் வரவேற்று நலம் விசாரித்தார்.

அவனை பார்த்தும் நிலா, “மாமா” என்று கத்தி கொண்டு போய் அவனை அணைத்து கொண்டாள். அவனும் அவளை வாரி தூக்கி கொண்டே மற்றவர்களிடம் பேசி கொண்டே சோபாவில் அமர்ந்தான்.

காலை எழுந்ததில் இருந்தே, “மாமா எங்க?? மாமா எங்க??” என்று கேட்டு கொண்டு இருந்த நிலாவை சமாளித்து வைத்து இருந்தாள் நிவேதா. யார்கிட்டயும், அவனை பற்றி கேக்காமல் பேசாமல் இருக்குவும் பதில் சொல்லி சமாளித்து வைத்து இருந்தாள். ஆனால் நிவேதாவுக்கு தெரியாது நிலாவை சமாளித்ததில் பெரும் பங்கு, முகிலின் மனம் கவர்ந்தவளுக்கே உள்ளது என்று.

“மாமா வந்தது உனக்கும் எனக்குமான சீக்ரெட். யார்ட்டயும் சொல்ல கூடாது. ஒகே???” என்று சொன்னாள் அவன் வந்ததை அறிந்திருந்த அவன் காதலி.

நிலாவும் சமத்து குழந்தையாக, “சரி அத்த” என்றிருந்தது அதற்கு.

“அய்யோ… என் அழகி” என்று பதிலுக்கு கொஞ்சியும் வைத்திருந்தாள் நிலாவை.

தற்போது, “வா முகில்… எப்படி இருக்க??” என்று நிவேதிதாவின் கணவன் பிரகதீபன் வரவேற்று கேட்டான்.

“நல்லா இருக்கேன் மாமா” – புன்னகையுடன் முகில் பதிலளித்து பிரகதீபனையும் நலம் விசாரித்தான்.

இவன் திரும்ப இங்க எதுக்கு வந்தான் என்று மனதிற்க்குள் யோசித்த நிவேதாவும் நம்மளும் எல்லோர் மாறியும் கேட்டு வைப்போம்… எதுக்கு வம்பு என்று எண்ணி, சாப்பிட்டு கொண்டு இருந்தவள் எழுந்து அவன் அருகே சென்று, “டேய்… முகில்… எப்படா வந்த?? எப்படி இருக்க??” என்று அக்கறையாக கேட்டாள்.

அதை கேட்ட பிரகதீபனின் தங்கையோ, ‘அய்யோ ட்ராமா குயினு’ என்று நினைத்தாள்.

“இன்னிக்கு தான் அக்கா” என்று புதிதாக சொல்பவனை போல் சொன்னான் முகில்.

மீண்டும் அதை கேட்டவளோ, ‘அய்யய்யோ ஆக்டிங் கிங்’ என்று எண்ணி கொண்டாள்.

“நடிகர் திலகம் இல்லனு நீ கவல படாத

நல்லா நடிக்க பொண்ணு பொறந்து இருக்க மறந்து விடாத” என்று மனதுக்குள் அவர்கள் இருவரையும் கிண்டலடித்து பாடி கொண்டும், ஆனால் வெளியே எந்த முக மாற்றமும் இல்லாமல் இருந்தாள்.

“சரிடா… போய் ப்ரெஸ் ஆகிட்டு சீக்கிரமா வா… சாப்பிடலாம்” என்று பிரகதீபன் சொல்ல, எல்லோரும் அதையே சொன்னார்கள்.

சரி என்ற முகிலும், அந்த வீட்டில் இருந்த குளியல் அறைக்கு சென்று தன் காலை கடன்களை முடித்து விட்டு வந்தான்.

அதற்குள் சாப்பிட்டு முடித்து வந்த நிவேதா அங்கே வந்து, “இந்தா மாமாவோட டீ ஷர்ட் ஷாட்ஸ். குளிச்சிட்டு இத போட்டுக்கோ” என்று முகிலிடம் கொடுத்தவள், அப்படியே புது ப்ரஸ், சோப் என எடுத்து கொடுத்து விட்டு போனாள்.

அவன் குளித்து விட்டு வந்தும், நிலாவும் அவள் அத்தையும் இன்னும் சாப்பிட்டு முடித்த பாடு இல்லை. நிலா விளையாடி கொண்டு மெதுவாக சாப்பிட, அவள் அத்தையோ ஒரு ஒரு வாய் சாப்பாட்டையும், நசுக்கி பிசைந்து குழைத்து மென்று என நேரத்தை கடத்தி கொண்டு இருந்தாள். அவனுடன் சேர்ந்து உண்ண தான்.

அவனும் வந்து உணவு மேசையில் அமர, நிவேதா வந்து அவனுக்கும் ஒரு தட்டை வைத்து தேவையானவற்றை அதில் பரிமாறினாள். “சாப்பிடுடா” என்று சொல்லி கொண்டே ஒரு தம்ளாரில் தண்ணீர் ஊற்றி வைத்தாள்.

நிவேதா அங்கிருந்து நகர்ந்த பின், இருவரும் ஓர கண்ணால் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே உண்டு கொண்டு இருந்தனர். அவர்களுக்கு பேசிவதற்கு எந்த தடையோ, அய்யோ மூன்று வருடம் ஆச்சே என்ற தயக்கமோ எதுவுமே இல்ல. இந்த மூன்று வருடங்கள் இவர்கள் பார்க்காமலும் இல்லை. இதே ஓரபார்வை தான். நிலாவுடன் பேசும் போதும் இவள் இ்ருப்பாள். ஏன் வீட்டினர் எல்லோரிடமும் தான் பேசுவான். அதில் விதி விலக்கு இவளும் அவன் தந்தை கண்ணதாசனும் தான். கண்ணதாசன் சின்ன கோபத்தில் இருப்பதால் பேசுவதில்லை ஆனால் அவன் நலனை யாரோ ஒருவரிடமாவது கேட்டு தெரிந்து கொள்வார். ஆனால் இவர்களுக்கு அப்படி எதுவும் சண்டை இல்லை என்றாலும் ஏனோ பேச தோன்றவுமில்லை. அவசியமாகவும் இல்லை அது.

“தம்பி… என்ன நீங்க மட்டும் வந்து இருக்கீங்க?? கண்ணன் மணிமா அப்பறம் அப்பா யாரும் வரலையா??” என்று கேட்டார் சசி.

“ஆமா டா எங்க??. அம்மா என்கிட்ட கூட எதுவும் சொல்லல நீ வரனு” என்று நிவியும் கேட்டாள்.

“இல்ல மாமா. நான் வரதே அவங்களுக்கு தெரியாது. இங்க வந்துட்டு தான் அம்மாவுக்கு போன் பண்ணி சொன்னேன்” என்று சாப்பிட்டு கொண்டே சாதாரணமாக சொன்னான் முகில்.

முகிலிடம் நிறைய பேருக்கு பிடிக்காத குணம் இது தான். எதையும் தடாலடியாக பண்ணி விடுவான். அதனால் எந்த செயலுக்கும் தயக்கம் என்பதே அவனுக்கு இருக்காது. சில நேரம் சாதகமாய் இருந்தாலும் பல நேரங்களில் பாதகமாய் தான் அமைந்து இருக்கிறது. இதோ இந்த மூன்று வருட பிரிவு போல.

பிரகதீபன், “இது சரி இல்ல முகில்” என்று மட்டும் தான் சொன்னான்.

“இல்ல மாமா… முன்னாடி இங்க வந்துட்டு அப்பறம் அங்க போலாம் இருந்தேன்” என்று முகில் சொன்னாலும், காரணம் எல்லோருக்கும் தெரிந்தது தான்.

மேலும் அதை பற்றி அலசி ஆராயாமல், “சரி… அத்த கிட்ட சொல்லிட்டல… விடு… எப்படியும் அவங்க இங்க தான் வந்துட்டு இருப்பாங்க” என்றவன், “நிவி…. அவங்களுக்கும் சேர்த்து மதிய சாப்பாடு பண்ணிடு” என்று தன் மனைவிடம் முடித்தான் பிரகதீபன்.

இவன் எப்போதும் இப்படி தான், மாமன் மச்சானுக்கிடையே உள்ள உறவு மிகவும் அழகானது. சில சமயங்களில் சில சூழ்நிலைகளில் பேசப்படும் சின்ன சின்ன வார்த்தைகளில் அது கெட்டு விடும். மற்ற உறவுகளை போல் அவ்வளவு சீக்கிரம் அது சரி ஆகி விடாது. எனவே அதை மிகவும் பக்குவமாக கையாளுகிறான் பிரகதீபன்.

எல்லோரும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். பெண்கள் மூவரும் மதிய சமையலுக்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தனர், அவர்களும் பேச்சில் கலந்தவாறே. சிறிது நேரத்தில் எல்லோரும் டிவி பார்ப்பதில் முழ்கி விட, சுமதியும் நிவியும் கூட சமைக்க சென்று விட்டனர்.

நிலாவோ, ஒவ்வொரு பேச்சின் இடையேயும் மாமா மாமா என்று ராகம் போட்டு பேசி கொண்டுருக்க பொருக்குமா முகிலின் காதலிக்கு.

“அடியேய்… குட்டி பூசணி… என்னடி ரொம்ப தான் மாமா மாமானு கொஞ்சிட்டு இருக்க!!! இத்தன நாள் என் கூட சுத்திட்டு இருந்துட்டு இப்ப மாமாவாம் மாமா. அப்படியே பாக்காதவ பேசாதவ மாறி தான்” என்றாள் அவள்.

“ஏன்?? நீயும் தான் கொஞ்சறது??” பட்டென முகில் சொல்ல திகைத்தாள் அவள். அதை பார்த்து ரசித்தவன், “அப்டி கேளு மயிலி!!” என்று நிலாவிடம் சொன்னான். ஆனால் பார்வை அவளிடம் தான். அதில் திரும்பி பிரகாவை அவள் பார்க்க, “மெதுவா தான்டி சொன்னேன் அவருக்கு கேட்டு இருக்காது. அப்படியே கேட்டாலும் பிரச்சனை இல்ல” என்று சொன்னான் முகில்.

அவள் முறைப்புடன் அவனை பார்க்க, “ஏய்!!! கிறுக்கி அத்த!!! இப்ப எதுக்கு கத்திட்டு இருக்க” என்றாள் நிலா.

“ஏய்… குட்டி பூசணி… இன்னிக்கு உன்ன உடைக்காம விட மாட்டேன்” என்று இவள் எகிறி கொண்டு போக, முகில் நிலாவை அணைத்து கொள்ள, இவர்கள் சத்தத்தில் திரும்பிய பிரகா இவளை தடுத்தான். அதற்கு நிலா இவளை பார்த்து பழித்து காட்ட, அதில் கடுப்பானவள் அப்படியே திரும்பி தன் அண்ணணின் கையில் நறுக்கென கிள்ளி வைத்தான்.

“எல்லாம் உன்னால தான்டா குண்டு பூசணி” என்ற சொல்ல, “கிறுக்கி… எதுக்குடி கிள்ளுன??” என்று கத்திய பிரகா, அவள் கிள்ளிய இடத்தை தேய்த்து விட்டு கொண்டான்.

வெளியே வந்து எட்டி பார்த்த நிவேதாவும், சுமதியுமே கூட இது எப்போதும் நடப்பது என்ற தோரனையுடன் மீண்டும் உள்ளே சென்று விட்டனர். நிவியும் முகிலும் போடாத சண்டைகளா!! என்ற எண்ணம் வேறு நிவேதாவுக்கு. மேலும், திருமனம் ஆன முதல் வருடத்தில் என்றால் மிகவுமே கோபம் கொண்டு இருப்பாள். இப்போது நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்பதால் சாதாரணமாக கடந்து விட்டாள்.

“டைனோசரஸ்க்கு பொறந்தது டாங்கி ஆகுமா!!!” என்று எப்போதும் போல சொல்லி விட்டு, “உன்னால தான்டா உன்ன மாறியே உன் புள்ளயும் என்ன கிறுக்கினு சொல்லுறா!!!” என்று அவள் சொல்லி கொண்டிருக்க, முகிலுக்கும் பிரகாவுக்குமே புன்னகை எட்டி பார்த்தது.

சரியாக அந்த நேரம் உள்ளே வந்த கண்ணதாசன் என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று கவனிக்காமல் ‘சத்தம்’ ஏதோ பிரச்சனை கண்டிப்பா இவனால தான் இருக்கும் என்று எண்ணி, முகிலை தாக்கி பேசினார்.

“எனக்கு தெரியும் இவன் எங்க போனாலும் பிரச்சனை பண்ணாம இருக்க மாட்டான்” என்று கண்ணதாசன் வந்ததும் வராததுமாக சொன்னார்.

“டேய்… என்னனு தெரியாம லபோ திபோனு கத்தாதடா” என்று வெங்கட கணபதி சொல்ல, “அப்ப இருந்து இப்ப வரைக்கும் இவனால எல்லாருக்கும் பிரச்சனை தான்” என்று தன் நிலையிலே நின்றார் கண்ணதாசன்.

எப்ப இருந்து?? அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

மாறும்…

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே…
 
நன்றி!!!
 
இங்ஙனம்
திரா ஆனந்த்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    5 Comments

    1. இதுங்க ரெண்டும் panra acting thaangala ❤️❤️❤️super akka ❤️

      1. Author

        நன்றி மீரா மா 🥰😍🥰
        உடன் பிறப்புகள்ல விட்டு கொடுப்பாங்களா??

    2. அக்காவும் தம்பியும் நடிப்புல சிவாஜி கணேசன் சாவித்திரிய மிஞ்சி விடுவார்கள் போல 😂😂

      1. Author

        நன்றி கா 🥰🥰
        இது கூட இல்லனா எப்படி கா இவங்கள சமாளிக்கறது?? 😁🫣